Srm பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இனிதே 20-01-2012 அன்று முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களாளும்,நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தின் தலைவர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களாலும் srm பல்கலைக்கழக வேந்தர் திரு.பச்சமுத்து தலைமையில் தொடங்கியது.
21-01-2012 சனிக்கிழமைக் காலையில் குறியாக்கம் என்ற தலைப்பில் மேனாள் கணினித்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ப.செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தமிழ்க் குறியீட்டுமுறைகளின் தோற்றம் அதன் வளர்ச்சி, இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்க் குறியீடுகள் எவ்வாறு உள்ளன. யூனிகோடு எழுத்துருவின் தோற்றம் அதில் தமிழ்மொழி இடம்பிடித்தச் சூழல் என அழகாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறினார்.
அடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள் மொழித்தரவுத் தொகுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மொழித்தரவுகள் என்றால் என்ன? மொழித்தரவுகள் முதன்முதலில் 1987 ல் தொடங்கப்பட்டது என்று கூறினார்.
ஆங்கிலத்தில் 4000 மில்லியன் கோடி மொழித்தரவுத் தொக்குப்புகள் செய்துள்ளனர்.தமிழ்மொழியிலும் 500 மில்லியன் தமிழ் சொற்கள் தொகுத்து வெளியிடவேண்டும் என்று கூறினார்.இறுதியாக மொழித்தரவுகளின் பயன்பாடுகளைப் பற்றியும் எடுத்து விளக்கினார்.
மதியம் தொடங்கிய அமர்வில் முனைவர் ந.நடராசபிள்ளை அவர்கள் சொல்வகை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொல்காப்பியர் குறிப்பிடும் சொல்வகையைக் கொண்டு மொழியியல் கோட்பாடுகளோடு விளக்கினார். மேலும் கணிப்பொறிக்கு எவ்வாறு சொற்களை உள்ளீடு செய்வது அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதும் அவற்றைப் போக்க என்ன வழிமுறைகளைக் கையாள்வது என்ற விளக்கத்தையும் தெளிவுப்படுத்தினார்.
இறுதியாக முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் இலக்கணம், மொழியியல் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் மொழியியலின் தேவையையும் விளக்கினார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வாளர்களில் ஒரு பகுதி
அஞ்சல் மூலம் கடிததை எதிர்பார்த்திருந்தது ஒரு காலம். மின்னஞ்சல் மூலம் விரல் சொடுக்கிய நிலையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது ஒரு காலம். இருந்த் இடத்திலிருந்துகொண்டே உலகின் எந்த மூலையில் நிகழும் நிகழ்ச்சிகளையும் கண்டறியும் காலம் ஒரு காலம்.SRM கல்லூரியில் நிகழும் கணித் தமிழ்ப்பயன்பாடு பயிலரங்கைப் புதிய தலைமுறை மூலம் எல்லோரும் உடனுக்குடனே காணும் வாய்ப்பினைத் தந்திருந்தால் பங்கேற்க வாய்ப்பில்லா உள்ளங்க்கள் மகிழ்ந்திருக்கும். உடனுக்குடன் பார்த்திட இயலாவிடினும் SRM கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயன்பாடு பயிலரங்கை நடந்த இரவே இரத்தினச் சுருக்கமாக அறிந்து கொள்ள வாய்ப்புத் தந்த ஐயா மணிகண்டனுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.
நன்றி திரு சீராசை சேதுபால.அந்த பயிலரங்கில் நானும் கலந்துகொண்டுள்ளேன்.
அன்புடன்
முனைவர் மு.முத்தையா