குமரகுரு பொறியியல் கல்லூரி கணினித்துறைத் தலைவர் முனைவர் ஆ. முத்துக்குமார் அவர்கள் நிரலாக்க மொழிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நிரலாக்கம் என்றால் என்ன?
நிரலாக்கத்தின் தொடக்க நிலையைச் சுட்டினார்.
உலக அளவில் ஆசிரியர்கள் ஒன்றுகூடி ஒரு இதழ் தொடங்கவேண்டும் என்று கூறினார்.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் க.இரவிசங்கர் அவர்கள் பேச்சொலியியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பேச்சொலிகள் என்றால் என்ன? உயிரொலிகள், மெய்யொலிகள், ஓருயிர்கள், ஈருயிர்கள் தோன்றும் விதம் பற்றி விளக்கினார்.
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, (புதுச்சேரி)தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இணையம் என்றால் என்ன்? அதன் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இணையம் தோற்றம் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய வெளிநாட்டு அறிஞ்சர்களின் பங்களிப்பு என விளக்கம் தந்தார். பிறகு வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் நாம் எவ்வாறு வலைப்பூவை உருவாக்குவது என்று கூறினார்.
இறுதியாக விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளை எழுதிய தகவலுழகன்(ரெ.லோகநாதன்)விக்கிப்பீடியாவைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்.
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.
ஒருங்கிணைப்பாளர் இல.சுந்தரம் மற்றும் பேராசிரியர்கள்.
ஐயா இல.சுந்தரம் அவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தும் உடல் நலக் குறவின் காரணாமாகவும் குடும்பச் சூழல்களின் காரணமாகவும் கலந்துகொள்ள இயலாமற் போனமை குறித்துப் பெரிதும் வருநுகின்றேன் நிகழ்வுகள் குறிதத குறுந்தகடுகள் கிடைக்கக்கூடும் என்ற நபிக்கையில் காத்திருக்கின்றேன்.அன்றன்று இரவு ஐயாமணிகண்டனின் பதிவுகள் மூலம் நிகழ்வுகளின் பாங்கினைப்த் தெரிந்து கொள்கின்ற்றேன் . அவருக்கு நன்றியும் வணக்கமும்.