/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Latest Post

Saturday, March 23, 2019

“இணையமும் தமிழும்” புதுக்கோட்டை

|0 comments

புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (தன்னாட்சி) 22-3-2019 அன்று நடைபெற்ற “இணையமும் தமிழும்” எனும் தலைப்பிலான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கல்லூரி அரங்கத்தில் இனிதே காலை தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி,.சேதுராமன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர்  முனைவர் ஜெ.சுகந்தி தலைமையுரை வழங்கினார்கள். வாழ்த்துரையாக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழு உறுப்பினர் முனைவர் அ.சி.நாகேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


தேனி சுப்பிரமணி, முனைவர் நாகேஸ்வரன், முதல்வர்  ஜெ.சுகந்தி, தமிழ்த்துறைத் தலைவர் சேதுராமன், உதவிப்பேராசிரியர் பாலமுருகன்.

நிகழ்வின் தொடக்கமாக தமிழ் மின்னிதழ்கள் என்னும் தலைப்பில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி.மு.சுப்பிரமணி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். இதழ்களின் தோற்றம் பிறகு இணைய இதழ்களின் வளர்ச்சி குறித்து விரிவாக விளக்கிக் கூறினார்.


அடுத்து இன்றையத் தேவையின் கருத்தை உணர்ந்து இணையவழியில் தேர்வு எழுதுவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்த தகவல்களுடன் இணையவழித் தேர்வுகள் என்ற தலைப்பில் முனைவர் துரை,மணிகண்டன் சிறப்புரை வழங்கினார்.  தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவர்கள் இணையவழித் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அடிப்படையான கணினி அறிவுத் தேவை என்பதை பயிற்சிமூலம் வழங்கினார். இந்திய தொடர்வண்டி பணிகளில் நாம் வெற்றிபெற என்ன என்ன வழிகளைப் பின்பற்றினால் வெற்றியடையலாம் என்ற கருத்தையும் விளக்கிக் கூறினார்.


முனைவார் சேதுராமன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மாதவன், பேராசிரியர் பாலமுருகன்.

அதனைத்தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் நோக்கில் தமிழ் இணையதளங்கள் என்ற தலைப்பில் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இதில் தமிழ் மின் வளமைக் குறித்த செய்திகளை தொகுத்துச் செறிவாக வழங்கினார்.
முனைவர் துரை.மணிகண்டன், சி.சிதம்பரம், தேனி மு.சுப்பிரமணியன்.

இந்த நிகழ்வில் திரளான பிற கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை இன்றையத் தமிழ்மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பு பல தமிழ்த்துறைக்கு உள்ளது. எனவே இதுபோன்ற பல இணையத்தமிழ் குறித்த பயிர்ச்சிகளை  பிற கல்லூரிகளில்  நடத்த அன்புடன் வேண்டுகின்றேன். 

தலைவர் சேதுராமன், உதவிப்பேராசிரியர் செல்வராஜ், துரை, சிதம்பரம், தேனி மு.சுப்பிரமணி.

https://www.facebook.com/madhavan.subramanian.98/videos/2311750539097020/

Friday, February 22, 2019

.உலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்

|0 commentsதேனித் தமிழ்ச் சங்கம், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் இணைந்து ‘இணையத்தில் தமிழ்’ எனும் தலைப்பிலான தேசியப் பயிலரங்கத்தைத் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது. உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நடத்தப் பெற்ற இப்பயிலரங்க நிகழ்விற்குக் கல்லூரித் தலைவர் செ.ல. ஜவஹர்லால் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஜா.ஜ. கலைவாணி அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி அவர்களும் முன்னிலை வகித்தனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா, துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா, பெ. பிரேம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உள்தர உத்தரவாத மையத்தின் இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன் அவர்கள் பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். திருச்சி, இணையத் தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள், ‘தமிழ் எழுத்துருக்கள்’ எனும் தலைப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள், ‘தமிழ் வலைப்பூக்கள்’ எனும் தலைப்பிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணி அவர்கள், ‘தமிழ் மின்னிதழ்கள்’ எனும் தலைப்பிலும், காந்திகிராமப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள், ‘தமிழ் மின்னூல்கள்’ எனும் தலைப்பிலும் பயிற்சியளித்தனர்.
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். முன்னதாகக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நாகேந்திரன் வரவேற்றார். முடிவில் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு. ரேணுகாதேவி நன்றியுரையாற்றினார்.

Wednesday, January 23, 2019

முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்....

|0 comments

இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கு வெகு சிறப்பாக 22/01/2019 செவ்வாய்க்கிழமை காலை இனிதே நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தைக்  கல்லூரி முதல்வர் திருமதி.கு.ஹேமலதா அவர்கள்  தலைமையேற்று சிறப்பாகத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார். 

நிகழ்வின் தொடக்கமாக  நான் இணையம் கடந்து வந்த வரலாற்றையும் அதில் தமிழ்மொழியின் செல்வாக்கையும் தமிழ் எழுத்துரு உருவாக்கி வளர்ந்த போக்கையும் இன்றைய ஒருங்குறியின் பயன்பாட்டையும் எடுத்து விளக்கினேன்.  பிறகு தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்றும் தமிழ்  எழுத்துருவை எவ்வாறு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து காட்டினேன்.
அடுத்துத் தமிழில் வலைப்பதிவை  எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று  செயல்முறையில்  மாணவர்களுக்கு விளக்கம் அளித்தேன். பல மாணவர்கள் வலைப்பதிவைத் தமிழில் உருவாக்கிப்  பயன்படுத்தினார்கள்.
 அடுத்து முகநூலை எவ்வாறு கையாள்வது என்றும், சமூக ஊடகங்களின் இன்றைய நிலையையும் விளக்கினேன். இணையத்தில் எவ்வாறு  நாம் வருமானம் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தையும் மாணவர்களிடம் எடுத்துக்கூறினேன்.கல்லூரி முதல்வர் கு, ஹேமலதா அவர்கள் சிறப்பு செய்தபோது.


நிகழ்வில் முனைவர் துரை.மணிகண்டன் சிறப்புரை.


சிறப்புரை முனைவர் துரை


நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகள்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிக்குப் பரிசு வழங்கியபோது.


இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனியசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

Monday, December 24, 2018

பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள்.

|0 comments
தமிழ்ப்பல்கலைகழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும்  கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியும் செந்தமிழ் அறக்கட்டளை திருவில்லிப்புத்தூர் இணைந்த நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம் பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 29/12/2018 அன்று கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. .
29/12/2018 இந்த ஆண்டின் இறுதி நிகழ்வாக நான் கலந்துகொண்டு பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்புரை வழங்கினேன் நிகழ்வைத் திறம்பட நடத்திய கல்லூரிக்கும், செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனத்தாருக்கும் , தமிழ்பபல்கலைக்கழக அறிவியில் துறைக்கும் நன்றிகள்.நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு  கல்வியியல்  கல்லூரி மாணவர்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி , முனைவர் ஆ.ராஜேஸ்வரி, முனைவர் க.சிவநேசன், ஆசி.முத்துசாமி, கவிஞர் சுரா, முனைவர் ப.ராஜேஸ், முனைவர் ச.கவிதா.

Sunday, December 16, 2018

USAGE OF INTERNET TAMIL

|0 comments
இணையத்தில் தமிழ் பயன்பாடுகள்
வருகிற 18-12-2018, செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து நடத்தவிருக்கும் ‘இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்’.நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள திராவ்விடமணி தமிழ்த்துறைத் தலைவர் திடவிடராணி , பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழ் அநிதம் நிறுவனத்தில் தலைவர் சுகந்திநாடார். முனைவர் துரை,  மாணவன் பிரதாப்.


                                                           நிகழ்வில் தேனி எம்.சுபிரமணி.
                                                 நிகழ்வில் திருமதி சுகந்திநாடார் உரை.

Tuesday, November 20, 2018

Tamil Language and Computer Use.- இணையத்தமிழ் பயிலரங்கம்

|0 comments

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் 14-11-2018  காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்து துறைத் தலைவர் ஹெப்சி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நயினார் அவர்கள்  ஆய்வு நோக்கியதாக இருந்தது. முகநூலில் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதை நாம் தவிற்க வேண்டிய வழிமுறைகளையும் நயமாக எடுத்து விளக்கினார்கள்.  பயிற்சியின் தொடக்கமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றி வரும் முனைவர் அகிலன் அவர்கள் தமிழ் மொழிக்கான  இயற்கை மொழி ஆய்வைப் பற்றி மிக விரிவாக எடுத்து விளக்கினார். மதியம் அமர்வில் பேராசிரியர் காமாட்சி  மொழித் தொழில்நுட்பவழி கணினித்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

 இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் வலைப்பக்கம் உருவாக்குவது எப்படி என்ற பொருண்மயில் மாணவர்களுக்குப் பயிற்சிமூலம் செய்துகாட்டி பல மாணவர்களுக்கு வலைப்பூவை  உருவாக்கிக் கொடுத்து பயிற்சி வழங்கினார். 

நிகழ்வில் பேராசிரியர் குமர செல்வா அவர்கள் தனது மாணவர்களுடன் பயிற்சிக்கு வந்திருந்தார்.

பயிற்சியில் கேரளாவில் பயிலும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
  
இணையத்தமிழ் பயிற்சியில் பங்குபெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வியல் மாணவிகள்.

தமிழ்த்துறைத் தலைவர் ஹெப்சி , முனைவர் துரை.மணிகண்டன்,  பேராசிரியர் குமரசெல்வா,  பேராசிரியர் நயினார், பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், முனைவர் அகிலன். கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவிலுள்ள Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பில் எனது மாணவர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். நீண்டகாலத்திற்குப்பின் சந்தித்த பேரா.காமாட்சி, பேராசிரிய நண்பர்கள் துரைமணிகண்டன், நயினார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். தமிழ்த்துறைத்தலைவர் பேரா. ஹெப்சி நிகழ்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

                                                                   பேராசிரியர் நண்பர்களுடன்
இயற்கைமொழி ஆய்வு குற்த்து உரை வழ்ங்கிய முனைவர் அகிலன்.     வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்த உரை வழங்கிய முனைவர் துரை.மணிகண்டன்.இணையத்தமிழ்ப் பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவி..                                        பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவர்.
சான்றிதழ் பெறும் மாணவன்.