/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, May 31, 2021

கணினித்தமிழின் தந்தை பேரா.மு.அணந்தகிருஷ்ணன் அவர்களுக்குப் புகழஞ்சலி

|0 comments






பத்மஶ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். கான்பூர் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், .நா. அறிவியல் துறை, அமெரிக்காவில் இந்தியத் தூதரகம், இந்திய உயர்கல்வித்துறை என்று அவர் தடம்பதித்த இடங்கள் மிக உயர்ந்தவை.

 வாணியம்பாடியில் பிறந்த அவரது மாபெரும் சாதனைகளை இந்தியாவின் தாமரைத்திரு (பத்மஸ்ரீ), பிரேசில் நாட்டு அதிபர் விருது, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக விருது, இந்திய பொறியிலாளர்கள், அறிவியலாளர்கள் அமைப்புகளின் சிறப்பு உறுப்பியம் என்ற பல்வேறு விருதுகளின் உலகெங்குமுள்ள அறிவுலகம் மூலம் போற்றியது.


சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கிண்டி பொறியியற்கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக்கல்லூரி, மதராசு தொழில்நுட்பக்கழகம் ஆகியவற்றைப் பிரித்து அறிஞர் அண்ணாவின் பெயரால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி அதை ஒரு முன்னணிப் பல்கலைக்கழகமாக மாற்றிய முன்னோடிகளில் பேரா. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.

இந்திய மாநிலங்களில் 1997 இல் முதன்முறையாகத் தமிழ்நாடு தகவல்தொழில்நுட்பத்துக்கு என்று ஓர் அரசுத்துறை அமைத்தபோது முதலமைச்சரின் அறிவுரைக்குழுவில் ஆனந்தகிருஷ்ணன் இணைந்தார். அப்போதே கணித்தமிழுக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்ற அடிப்படையில் இயங்கத் தொடங்கினார்.

கணித்தமிழுக்கென்று முதல் மாநாடு சிங்கப்பூரில் 1997 இல் நடந்த பிறகு அடுத்த மாநாடு 1999 இல் சென்னையில் நடக்கத் திட்டமிட்டு அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கணினித் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருந்த உலகளாவிய தமிழர்களைக் கலந்து பேசித் திட்டமிடத் தொடங்கிய அமைப்பில் முதன்மை வகித்தார்.


தமிழிணையம் 1999 மாநாட்டில் கணினியில் தமிழை இடுவதற்கான 8-பிட்டுக் குறியீடுகள், விசைப்பலகை, மென்பொருள்கள், கலைச்சொற்கள் போன்றவற்றைத் தரப்படுத்துதல், கணித்தமிழ் மென் பொருளாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, பயிற்சி அமைப்பு, தமிழக அரசில் கணித்தமிழைப் பரவலாக்குவதற்கான திட்டமிடல், உலகளாவிய மென்பொருள் நிறுவனங்கள் எழுதிய மென்பொருள்களில் தமிழைக் கொண்டுவருதல், உலகத்தரமாக அமைந்து கொண்டிருந்த யூனிக்கோடு அமைப்பில் இணைந்து தமிழ்க்குறியீடு பற்றிய தரப்பாட்டுக் கூட்டங்களில் பங்கேற்றல் போன்ற முயற்சிகளில் அவரது பங்கு அளப்பரியது.

இரண்டு தமிழர்கள் கூடினால் அங்கே மூன்று முரண்பட்ட கருத்துகள் இருக்கும்என்று நகைச்சுவையாகச் சொல்லுவார்கள். தமிழ் இணையம் 1999 மாநாட்டிலும் அப்படிப் பட்டகருத்து வேறுபாடுகள் மாநாட்டு நிறைவு விழாவுக்குள் முதலமைச்சர் அறிவிக்க முடியாத அளவுக்கு முரண்பட்டிருந்த போது, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு தரப்பாட்டைக் கொண்டுவருவதில் பேரா. ஆனந்தகிருஷ்ணனின் பெருமுயற்சி இன்றும் பேசப்படுகிறது.

கணித்தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை நிறுவித் தமிழ்நாட்டின் கணித்தமிழ் வல்லுநர்களை ஒருங்கிணைத்தார். அந்த மாநாட்டில்தான் உலகளாவிய தமிழர்கள் வலைவழியே தமிழைக் கற்று முனைவர் பட்டம் வரை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார்கள். கூடவே கணித்தமிழ் தரப்பாடு, கலைச்சொல்லாக்கம் போன்றவற்றுக்கும் த... பொறுப்பேற்றுக் கொண்டது. தமிழ் இணையக் கல்விக்கழகம் இன்றும் அந்தப் பணிகளைத் தொடர்கிறது. அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் பேராசிரியர். ஆனந்தகிருஷ்ணன்.

பேரா. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் – International Forum for Information Technology – INFITT) என்ற அமைப்பு சிங்கப்பூரில் 2000இல் நடந்த இணைய மாநாட்டில் உருவானது. அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு தமிழ் இணைய மாநாட்டிலும் பேரா. ஆனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டு வழிநடத்தினார். முதலமைச்சர்களோடு பேசி அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அலுவலர்களுக்கும் கணித்தமிழின் தேவைகளை எடுத்துச் சொல்வதில் பேராசிரியர்கள் ஆனந்தகிருஷ்ணனும், வா. செ. குழந்தைசாமியும் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது.

பேரா. ஆனந்தகிருஷ்ணன் எட்டி நின்று தலைமை தாங்கியவரல்லர். யூனிக்கோடு நுட்பக்குழு கூட்டங்களிலும், உத்தமம் நுட்பக்குழுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். தொழில்நுட்பச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு அரசுக்குப் பரிந்துரை செய்வதில் வல்லவர். தம்மோடு முரண்பட்ட கருத்துகளையும் பொறுமையுடன் கேட்பார். .நா. அமைப்பில் பணிபுரிந்த பட்டறிவைக் கொண்டு முரண்களைக் களைந்து இணைந்து முன்னேறும் பாதை அமைப்பதில் வல்லவராக இருந்தார் பேரா. ஆனந்தகிருஷ்ணன். அவரது மறைவு கணித்தமிழ் உலகுக்குப் பேரிழப்பு

நன்றி - நீயூஸ்18.


 

Sunday, May 30, 2021

Machine Translation – Lecture:4 - இயந்திர மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும்-பேராசிரியர் உமாராஜ் உரை

|0 comments



இயந்திர மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும்-பேராசிரியர் உமாராஜ் உரை


 

Friday, May 28, 2021

இணைந்ததமிழ்ப் பயிலரங்கம்

|0 comments


 

Machine Translation – Lecture:1 ||| இயந்திர மொழிபெயர்ப்பு அறிமுகம்||| umaraj ||| உமாராஜ்

|0 comments



தமிழ் இணையக் கழகத்தின் 23- 05- 2021 இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப்பேராசிரியரும் தமிழ் இணையக் கழகத்தின் பொருளாளருமான முனைவர் க. உமாராஜ் அவர்கள் " இயந்திர மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் வழங்கிய உரை - 1 இயந்திர மொழிபெயர்ப்பு அறிமுகம்.



 

Tuesday, May 25, 2021

மின்நூல் உருவாக்க கலந்துரையாடல் நிகழ்வு

|0 comments


 

மின்நூல் உருவாக்க கலந்துரையாடல்   நிகழ்வின் இறுதியாக பேரா.உமாராஜ், பேரா.சிதம்பரம், பேரா.குணசீலன், மென்பொருளாளர்கள் இரா.அகிலன், யாழ்பாவானன்  கேட்ட வினாவிற்குப் பதில் வழங்கிய காணொலி.



Sunday, May 23, 2021

அமேசானில் ராயல்டி பெறுவது எப்படி? என்பது குறித்த பயிற்சியை என்,சொக்கன் வழங்கியுள்ளார்

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 67 - ஆம் நிகழ்வில் தேதி: 16- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் பெங்களூரில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் திரு. என். சொக்கன் அவர்கள் " தமிழில் மின்னூல்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையின் காணொலி - 5



How get more views to your ebook? - நீங்கள் வெளியிட்டுள்ள மின் நூல்களை எவ்வாறு விளம்பரப்படுத்துவது?

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 67 - ஆம் நிகழ்வில் தேதி: 16- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் பெங்களூரில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் திரு. என். சொக்கன் அவர்கள் " தமிழில் மின்னூல்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையின் காணொலி - 4

நீங்கள் வெளியிட்டுள்ள மின் நூல்களை எவ்வாறு விளம்பரப்படுத்துவது?


Friday, May 21, 2021

உங்கள் நூல்களை மின்நூல்களாக மாற்ற ஐந்து வழிமுறைகள்

|0 comments

 



தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 67 - ஆம் நிகழ்வில் தேதி: 16- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் பெங்களூரில்   தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் திரு. என். சொக்கன்  அவர்கள்  " தமிழில் மின்னூல்கள்என்ற தலைப்பில்  வழங்கிய உரையின் காணொலி - 3



Thursday, May 20, 2021

இலவச மின்னூல்களை எவ்வாறு படிப்பது?

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 67 - ஆம் நிகழ்வில் தேதி: 16- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் பெங்களூரில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் திரு. என். சொக்கன் அவர்கள் " தமிழில் மின்னூல்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையின் காணொலி - 2

இலவச மின்னூல்களை எவ்வாறு படிப்பது? மின்னூல்கள் தோன்றிய வரலாறு? பாரதியார், பாரதிதாசன், சேக்ஸபியர் நூல்களை இலவசமாகப் படிக்கலாம்


Wednesday, May 19, 2021

what is ebook? ||| how to create an ebook for free ||| manivanathi ||| என்.சொக்கன்

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 67 - ஆம் நிகழ்வில் 
தேதி: 16- 05- 2021 அன்று ஞாயிறு 
மாலை 6. 30 மணிக்குப் பெங்களூரில்   தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும்
திரு. என். சொக்கன்
 அவர்கள்
 " தமிழில் மின்னூல்கள்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரையின் முதல் பாகம்

what is ebook?, ebook video, அமேசான் கிண்டிலில் புக், amazon,  மின்புத்தகம், மணிவானதி, google books, ebook reader, ebook reader, தமிழ் இணையக் கழகம், tamil internet academy, Duraimani, Duraimanikandan, n.sokkan, சொக்கன், how to create an ebook for free,  manivanathi,


Saturday, May 15, 2021

இணையத்தமிழ் முன்னோடிகள் உரையில் கலந்துகொண்டவர்களின் கருத்துரைகள்

|0 comments

 தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 66 - ஆம் நிகழ்வில் 09- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் " இணையத்தமிழ் முன்னோடிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையின் கருத்துரையாளர்களின் கருத்துகள்


Friday, May 14, 2021

Internet Tamil pioneers||| இணையத்தமிழ் முன்னோடிகள் - 3 ||| மணிவானதி

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 66 - ஆம் நிகழ்வில் 09- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் " இணையத்தமிழ் முன்னோடிகள்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை - 3 e kalappai, முகுந்தராஜ், http://thamizha.org/, கட்டற்ற மென்பொருள், தகடூர் கோபி, கணினித்தமிழ் கோபி, கணினித்தமிழ், கணித்தமிழ், மயூரநாதன், கார்த்திக் ராமசாமி, fisrt blogspot in tamil, காசி ஆறுமுகம், தமிழ்மணம் திரட்டி, இணையத்தமிழ், மணிவானதி, தமிழ் இணையக்கழகம், மணிகண்டன், tamil internet academy, manivanathi, தமிழ் விசைப்பலகை, tamil keyboard, தமிழ் லேசர், ஆதமி, ஆதவி, சரஸ்வதி, வானவில், நளினம், துணைவன், vanavil avvaiyar tamil font, ekalappai


Thursday, May 13, 2021

Internet Tamil pioneers ||| இணையத்தமிழ் முன்னோடிகள் ||| மணிவானதி

|0 comments


 

முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் " இணையத்தமிழ் முன்னோடிகள்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை - 2


Wednesday, May 12, 2021

இணையத்தமிழ் முன்னோடிகள் - 1

|0 comments



தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 66 - ஆம் நிகழ்வில் 09- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் " இணையத்தமிழ் முன்னோடிகள்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை


 

Wednesday, April 28, 2021

மாயனூர் மீன்

|0 comments


மாயனூர் மீன்



 

Monday, April 26, 2021

How To Use Firefox Voice - மொசில்லா தமிழ்ப் பொதுகுரல் திட்டப் பங்களிப்பு

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 65 - ஆம் நிகழ்வில் தேதி: 25- 04- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றும் திரு. பரதன் தியாகலிங்கம் அவர்கள் " மொசில்லா தமிழ்ப் பொதுகுரல் திட்டப் பங்களிப்பு” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரையின் காணொலி.


Monday, April 19, 2021

Anna university - புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதாலாம்.

|0 comments







 

Sunday, April 18, 2021

What are the types of tamil machine learning - இயந்திரவழிக் கற்றலில் தமிழ்க் கருவிகள்

|0 comments




அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 62 - ஆம் நிகழ்வில் 28- 03- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குத் தமிழக அரசின் கணினித்தமிழ் விருது பெற்ற மென்பொறியாளர் நீச்சல்காரன் அவர்கள் "இயந்திரவழிக் கற்றல் - தமிழ்க் கருவிகள் “ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் வழங்கிய உரையை உலகத்தமிழ் உறவுகளின் பார்வைக்கு


 

Saturday, April 17, 2021

"இணையவழி நூலகங்களின் பயன்பாடுகள் “

|0 comments

" இணையவழி நூலகங்களின் பயன்பாடுகள் “



 

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு 61 நிகழ்வு 21- 03- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 க்கு ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி நூலகர் திரு. வெ. சிங்காரவேலு அவர்கள் "இணையவழி நூலகங்களின் பயன்பாடுகள் “ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்கிய காணொலி

Monday, April 5, 2021

covid-19 - AI FOR COVID-19 - Applications of AI for covid-19

|0 comments




திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் கணினித்துறை தலைவர் முனைவர் s. செல்லம்மாள் அவர்கள் "கோவிட்19 க்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் ?“ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் வழங்கிய உரை

covid-19,AI FOR COVID-19,Applications of AI for covid-19,manivanathi,Dr.S.sellma,மணிவானதி

 

தொல்காப்பியம் – பொருளதிகாரம் 16LCCLT15 - வினா -

|0 comments

 

அரசு கலை அறிவியல் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு

 ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-27

    பருவம் முன் மாதிரி தேர்வு  - 2021

தாள்:  தொல்காப்பியம் – பொருளதிகாரம் 16LCCLT15

காலம்; 3 மணி                                                                    மதிப்பெண்: 75

ஓரிரு வரிகளில் விடை அளிக்க                                                          10 * 2= 20

1. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் இருவரை குறிப்பிடுக

2. உரிப்பொருள் என்றால் என்ன?

3. "இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்"- இதில் இருவகை பிரிவு எது?

4. பாடாண்திணை எத்திணைக்குக புறமாக அமைந்துள்ளது?

5. படை இயங்கு அரவம் என்றால் என்ன?

6. கற்பு என்றால் என்ன? விளக்குக.

7.தலைவனும் தலைவியும் சந்திக்கும் குரு இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

8. இளமைப் பெயர்களை குறிப்பிடுக.

9. உவம உருபுகள் எவை? எவை?

10. மெய்ப்பாடுகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                            5 * 5 =25

11. பாடாண் திணையின் உட்பிரிவு துறைகளை விளக்குக.

அல்லது

பிரிவில் தலைமகன் கூற்று நிகழும் இடங்களை சுட்டுக.

12. ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் அதன் பாகுபாடுகளையும் எடுத்துரைக்க.

அல்லது

உரிப்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.

13. களவு காலத்தில் தோழியின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

அல்லது

கற்புக் காலத்தில் தலைவியின் செயல்பாடுகளைத் தொகுத்துரைக்க.

14. உள்ளுறை உவமம் என்றால் என்ன? அதன் வகைகளை கூறி விளக்குக.

அல்லது

முதல் அவத்தை மெய்ப்பாடுகளின் பண்புகளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது யாது?

15. உவம உறுப்புகளின் நிலை கலன்களை கூறி விளக்குக.

அல்லது

பெண்பாற் பெயர்களின் வகைகளைக் கூறி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வையேனும் மூன்று வினாக்களுக்கு கட்டுரை வடிவில் விடையளிக்க                      3 * 10 = 30

16. புறத்திணையில் கூறப்பட்ட போர் மரபுகளை எடுத்துரைக்க.

17. அகத்திணையில் உணரப்படும் பண்டைய பண்பாடுகளைத் தக்கச் சான்றுடன் நிறுவுக.

18. தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகை மெய்ப்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

19. பரிணாம வளர்ச்சியிக்கு மரபியல் கூறும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

20. தமிழ் மரபிற்கு ஏற்ப களவியல், கற்பியல் அமைந்திருக்கின்றனவா? என்பதை ஆய்க.

 

 

Sunday, April 4, 2021

How the Amazon Kindle Works? - கிண்டில் மென்பொருள் வழியாக தமிழ் மின்னூல் உருவாக்குதல்

|0 comments




பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் "கிண்டில் மென்பொருள் வழியாக தமிழ் மின்னூல் உருவாக்குதல் “ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் வழங்கிய உரை

 

Saturday, April 3, 2021

How to Wakelets used in the classroom? - கற்றல் கற்பித்தல் வளங்களை wakelet மூலம் எவ்வாறு தொகுப்பது

|0 comments




ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் வளங்களை wakelet மூலம் எவ்வாறு தொகுப்பது? என்ற நோக்கில் ஆசிரியர் ப. கருணைதாஸ் அவர்கள் வழங்கிய காணொலி.


 

Friday, April 2, 2021

தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் - Computer Tamil Book

|0 comments

தமிழில் வெளிவந்துள்ள கணினித்தமிழ் நூல்களின் பட்டியல் தொகுப்பு


 இன்டர்நெட்,இணையமும் தமிழும்,இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்,தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்,வீரநாதன்,இரா.குணசீலன்,மணிவானதி,manivanathi,tamil internet academy,internet tamil,computer tamil,computer tamil book

தமிழ் இலக்கிய வரலாறு - வினா

|0 comments

 

அரசு கலை அறிவியல் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு

 ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-27

    பருவம் முன் மாதிரி தேர்வு  - 2021

தாள்:  தமிழ் இலக்கிய வரலாறு  16LACLT2

காலம்; 3 மணி                                                                    மதிப்பெண்: 75

ஓரிரு வரிகளில் விடை அளிக்க                                                          10 * 2= 20

1. சங்கங்கள் இருந்ததற்கான சான்றுகள் இரண்டினை தருக.

2. தொல்காப்பியம் யாருடைய அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகநூல்கள் எத்தனை?

4. திரிகடுகம் எத்தனை மருந்து பொருள்களால் ஆனது?

5. பக்தி இலக்கிய காலத்தை யாருடைய காலமாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்?

6. மாணிக்கவாசகர் பாடிய நூல்கள் எவை? எவை?

7. நன்னூல் எந்த மொழிக்கான இலக்கண நூலாக விளங்குகிறது?

8. ஐஞ்சிறு காப்பியங்கள் எவை?

9. தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?

10. புதுமைப்பித்தன் சிறுகதைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                            5 * 5 =25

11. மூன்று சங்கங்கள் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகளைக் குறிப்பிடுக.

அல்லது

தொல்காப்பிய அமைப்பு முறையை குறிப்பிடுக

12. திருக்குறளின் தனித்தன்மையை விவரிக்க

அல்லது

பழமொழி நானூறு சிறப்புகளை எடுத்துரைக்க.

13. சைவ மதத்தின் பண்புகளைக் குறிப்பிடுக

அல்லது

வைணவ மதத்தின் மாண்புகளை எடுத்துரைக்க.

14. முக்கூடற்பள்ளு குறிப்பிடும் நெல் வகைகளை கூறுக.

அல்லது

திரு.வி.க.வின் தமிழ்த் தொண்டு குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

15. பாரதியாரின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்க.

அல்லது

பாரதிதாசனின் தமிழ்ப் பற்றை ஆய்க.

வையேனும் மூன்று வினாக்களுக்கு கட்டுரை வடிவில் விடையளிக்க                      3 * 10 = 30

16. தமிழ்மொழியின் சிறப்பியல்புகளை விவரிக்க.

17. சங்ககாலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலமே என்பதை நிறுவுக.

18. தமிழர்கள் அறக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கியபோக்கை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழி ஆய்க.

19. சைவசமய குறவர்களின் பக்தி திரத்தை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

20. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஒரு கட்டுரை வரைக

Friday, January 15, 2021

இந்திய மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு ”

|0 comments

 

தமிழ் இணையக் கழகம் சார்பாக 10-01-2021 அன்று மாலை 6 மணிக்கு வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவில் அண்ணா பல்கலைக்கழகம், கே.பி.சந்திரசேகர் ஆராய்ச்சி மையம் எம்.ஐ.டி வளாகத்தில் ஆராய்ச்சித் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் எல். ஷோபா அவர்கள் இந்திய மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் விரிவாக தமிழில் வழங்கிய உரையின் காணொலி

How to machine translation, How to machine translation for indan language, machine translation, How to machine translation in tamil, How to machine translation in malayalam,

How to machine translation in hindi, How to machine translation in telugu, மணிகண்டன், மணிவானதி, Dr. L. Sobha, Dr. Sobha,  Dr.Durai, Dr.manikanadan,  tamil internet academy,


Thursday, December 17, 2020

தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றி

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு51  வது உரை 13 -12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00  மணிக்குத் திருமதி ம.பார்கவி அவர்கள்  தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றிஎன்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.  இதில் எருத்துரு, விசைப்பலகை, குறியேற்ற மாற்றி மூன்றும் வெவ்வேறானவை என்றும் இனி அனைவரும் ஒருங்குறி எழுத்துருவைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் விவரித்தார்


தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை, தமிழ் குறியேற்ற மாற்றிகள், மணிவானதி, பார்கவி, அகிலன், மணிகண்டன்,  tamil font, Tamil keyboards, how to use tamil keyboards in 99,how to use tamil font, tamil encoding converter, how to use tamil encoding converter,  பார்கவி, அகிலன்


Wednesday, December 16, 2020

பெரியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கான தேர்வுகள் தொடக்கம்

|0 comments




 

Monday, December 7, 2020

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவரா?

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு 50  வது உரை 06-12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00  மணிக்குத் தமிழ்நாட்டைச் சேரந்த  கணிப்பொறி பயிலும் மாணவர் திரு .பிரதாப் அவர்கள்மின்னாளுகையின் நோக்கமும் குறைந்தபட்ச பயன்பாடும்என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது நாம் கவனிக்கவேண்டிய விடயங்களை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்

social media awareness in tamil, how to use social media, how to use social media in tamil? தமிழ், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவரா?, social media, how to awareness in social media, சோசியல்மீடியாவைப் பயன்படுத்துவது எவ்வாறு?, சோசியல்மீடியாவைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எவ்வாறு?, social media, dijital minimalizm in tamil, dijital minimalism, மணிவானதி, மணிகண்டன், மணிvanathi, maniவானதி, பிரதாப், தமிழ் இணையக் கழகம், tamil internet academy, minimalism, 



Saturday, December 5, 2020

Tamil typography, tamil lettering, tamilcalligiraphy, how to create in tamil unicode font,

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 49 வது உரை 29-11-2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00 இலங்கையைச் சேரந்த தமிழ் எழுத்துரு வடிவமைப்பாளர், தமிழ்க்கணிமையாளர் திரு. தாரிக் அஸீஸ் அவர்கள் ’தமிழ் எழுத்துரு உருவாக்கமும் பண்மைத்துவமும் பரிமாணமமும்என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார். குறிப்பாக தமி.ழ் ஒருங்குறி எழுத்துக்களை வெவ்வேறு வடிவமைப்பில் உருவாக்கி வெளியிட்டுள்ளார். எழுத்துரு என்பது ஒருவருடைய எண்ணத்தையும், கருத்தையும் வெளிப்படுத்தும் கண்ணாடி என்றார்