/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, April 5, 2021

தொல்காப்பியம் – பொருளதிகாரம் 16LCCLT15 - வினா -

 

அரசு கலை அறிவியல் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு

 ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-27

    பருவம் முன் மாதிரி தேர்வு  - 2021

தாள்:  தொல்காப்பியம் – பொருளதிகாரம் 16LCCLT15

காலம்; 3 மணி                                                                    மதிப்பெண்: 75

ஓரிரு வரிகளில் விடை அளிக்க                                                          10 * 2= 20

1. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் இருவரை குறிப்பிடுக

2. உரிப்பொருள் என்றால் என்ன?

3. "இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்"- இதில் இருவகை பிரிவு எது?

4. பாடாண்திணை எத்திணைக்குக புறமாக அமைந்துள்ளது?

5. படை இயங்கு அரவம் என்றால் என்ன?

6. கற்பு என்றால் என்ன? விளக்குக.

7.தலைவனும் தலைவியும் சந்திக்கும் குரு இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

8. இளமைப் பெயர்களை குறிப்பிடுக.

9. உவம உருபுகள் எவை? எவை?

10. மெய்ப்பாடுகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                            5 * 5 =25

11. பாடாண் திணையின் உட்பிரிவு துறைகளை விளக்குக.

அல்லது

பிரிவில் தலைமகன் கூற்று நிகழும் இடங்களை சுட்டுக.

12. ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் அதன் பாகுபாடுகளையும் எடுத்துரைக்க.

அல்லது

உரிப்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.

13. களவு காலத்தில் தோழியின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

அல்லது

கற்புக் காலத்தில் தலைவியின் செயல்பாடுகளைத் தொகுத்துரைக்க.

14. உள்ளுறை உவமம் என்றால் என்ன? அதன் வகைகளை கூறி விளக்குக.

அல்லது

முதல் அவத்தை மெய்ப்பாடுகளின் பண்புகளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது யாது?

15. உவம உறுப்புகளின் நிலை கலன்களை கூறி விளக்குக.

அல்லது

பெண்பாற் பெயர்களின் வகைகளைக் கூறி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வையேனும் மூன்று வினாக்களுக்கு கட்டுரை வடிவில் விடையளிக்க                      3 * 10 = 30

16. புறத்திணையில் கூறப்பட்ட போர் மரபுகளை எடுத்துரைக்க.

17. அகத்திணையில் உணரப்படும் பண்டைய பண்பாடுகளைத் தக்கச் சான்றுடன் நிறுவுக.

18. தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகை மெய்ப்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

19. பரிணாம வளர்ச்சியிக்கு மரபியல் கூறும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

20. தமிழ் மரபிற்கு ஏற்ப களவியல், கற்பியல் அமைந்திருக்கின்றனவா? என்பதை ஆய்க.

 

 

0 comments: