/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 17, 2020

யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் சந்திப்பு

|4 comments

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் - தமிழறிதம் உறுப்பினர் திரு யாழ்பாவாணன், பேராசிரியர் க.உமாராஜ், செயலாளர் திரு.சரவணபவானந்தன், துரை.மணிகண்டன்.

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 07-03 2020 அன்று யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுடான சந்திப்பு காலை 10 மணிக்கு நடந்தது. இச்சந்திப்பில் தமிழ்மொழி இணையத்தில் கடந்துவந்த வரலாற்று நிகழ்வுகளையும் இன்னும் இது கடந்து செல்ல வேண்டிய வழிமுறைகளையும் எடுத்து விளக்கினோம். இனிவரும் காலங்களில் தமிழ்மொழியைத் தகவல் தொழில்நுட்பங்களில் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினோம். மேலும் புதிய தமிழ் மென்பொருள்கள் அதிகம் உருவாக வேண்டும். அப்படி உருவாக்கியதை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினோம்.
ஊடக சந்திப்பு நிகழ்வில் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் மற்றும் அதன் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன், பேராசிரியர் க.உமாராஜ், பேராசிரியர் துரை.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Monday, March 16, 2020

தமிழறிதம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் சந்திப்பு

|2 comments

                       

கலந்துரையாடளில் முனைவர் துரை.மணிகண்டன், பேராசிரியர் கலாநிதி தபோதரன், பேராசிரியர் க.உமாராஜ், தமிழறிதம் அமைப்பின் பொருளாளர் க.விக்னேஸ்வரானந்தன்,  செயலாளர் திரு.சரவணபவானந்தன், பதிவாளர் கலாநிதி வி. காண்டீபன்.

         தமிழறிதம் நிருவாகிகள் அன்று  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் மொழியியல்துறை, கணினித்துறைப் பேராசிரியர்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராசிரியர்கள் ஆகியோரிடையேயான சந்திப்பு - 06-03-2020, தமிழறிதம் அமைப்பின் சார்பாக 06-03-2020 அன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். இந்த சந்திப்பில் மொழியியல் துறைப் பேராசிரியர்  கலாநிதி சுபதினி ரமேஸ் மற்றும் கணினி அறிவியல்த்துறைப் பேராசிரியர் கலாநிதி  தபோதரன் ஆகியோருடன் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. வி.காண்டீபன் அவர்களுடன் கலந்துகொண்டு ரையாடினோம். 
இக் கலந்துரையாடலில் பேராசிரியர் தபோதரன் அவர்களிடம் தமிழறிதம் அமைப்புடன் இணைந்து பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்க் கணினிப் பயிலரங்கு நிகழ்வை ஒழுங்குபடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு அவரும் சில பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டுக் கூறுவதாகக் கூறினார்கள். தொடர்ந்து  கலாநிதி சுபதினி அவர்களுடனும் லந்துரையாடினோம். அவர்களும் தமிழறிதம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை, மொழியியல்துறை, கணினி அறிவியல் துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புவதாகக் கருத்துக் கூறினார்கள். மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல்துறை பேராசிரியர் .உமாராஜ் அவர்கள் இரண்டு பல்கலைக் கழகத்திலிருக்கும் மொழியியல்துறை இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று தனது கருத்தாக முன்வைத்தார்.
 
தமிழறிதம் அமைப்பின் பொருளார் திரு. க.விக்னேஸ்வரானந்தன் பலகலைக்கழகத் துறைகளுடன் மேற்கோண்ட விடயங்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாக பல்கலைக்கழகத்தின் வெளியே ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது பொருத்தமாக இருக்குமென்று கூறினார். இதனை அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

பல்கலைக் கழகம் சார்ந்த துறையினரையும் செயற்திட்டத்துடன் ஆர்வமுடைய ஒரு சில நிபுணர்களையும் ஆர்வலர்களையும் தமிழறிதம் இணைப்புச்செய்து கலந்துரையாடலை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறப்பானது என்று கருத்துக் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும். என்று முடிவு எட்டப்பட்டது..

Saturday, March 14, 2020

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இலங்கை.

|1 comments

                       தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இலங்கை.




05,06 - 03- 2020 அன்று  இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பானது யாழ்ப்பாணத்தில் ”உலக இணையத்தமிழ் மற்றும் அதன் பயன்பாடுகள்- பயிலரங்கம்”  BCAS Campus தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் 05, 06 - 03 -2020 இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடத்தியது.   இப்பயிலரங்கில் பயிற்சியாளர்களாகப் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர் முனைவர் க.உமாராஜ் இருவரும் பயிற்சி வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சி வழங்கினர்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவி ஒருவருக்குச் சான்றிதழ் வழங்குகிறார் பேராசிரியர் க.உமாராஜ், அருகில் திரு. மயூரநாதன், தமிழறிதம் தலைவர் திரு.நகுலேஸ்வரன், செயலாளர் திரு.சரவணபவானந்தன், துரை.மணிகண்டன், திரு.ரசாக் அகமது.

முதல் நாள் நிகழ்வின் தொடக்கமாக மாணவர் ஒருவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  BCAS முகாமையாளர் திரு. எஸ். றஸாத் அகமத் சிறப்புரையாக இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியை நாம் பயன்படுத்த வேண்டும் அதற்கு இந்த இரண்டு வளவாளார்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ளார்கள். அனைவரும் பயன்பெற வேண்டுகின்றேன் என்றார். அடுத்து தமிழ் அறிதநுட்பியல் உலகாயத்தின் (தமிழறிதம்) தலைவர் திரு.இ.நகுலேஸ்வர ராஜா அவர்கள் தமிழ்மொழியின் சிறப்பை பாரதிதாசன் மற்றும் பலரது கவிதைகள் மூலம் எடுத்துக்காட்டி இன்றைய தொழில்நுட்ப அறிவையும் எடுத்து விளக்கினார். தொடர்ச்சியாக தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) நிறுவனத்தின் செயலாளர் திரு சரவணபவானந்தன் அவர்கள் பயிலரங்க குறிக்கோள்களாக கருத்து வழங்கினார். அதில் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அது தமிழ்மொழியின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இணையவழியே நம் மொழியை கொண்டு செல்ல வேண்டும் அதற்கு தமிழறிதம் அமைப்பானது முழுமையாக பாடுபடும் என்று கூறினார். மேலும் இலங்கையில் இதற்கு முன்னமே மூன்று பயிற்சிகளை (தமிழ் விக்கிப்பீடியா எழுதுவது தொடர்பாக) வழங்கியுள்ளதாகவும் இந்த அமைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

 அமர்வின் தொடக்கமாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ் வரலாறு குறித்தச் செய்திகளை எடுத்து வழங்கினார். அமெரிக்காவில் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட இணையம் பின் நாட்களில் ஆராய்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. இது உலக அளவில் இன்று மிக முக்கிய இடத்தைப் பிடித்து வளர்ந்து வந்துள்ளது. மேலும் இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடுகள் 1984 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்றும் அதற்காக  கலாநிதி சீனிவாசன், ஜார்ஜ்.எல்.ஹார்ட், முத்துநெடுமாறன், பாலாப்பிள்ளை போன்றோர்களின் பங்களிப்பையும்ம் எடுத்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் இணையம் வளர்வதற்கு உலகளாவிய அளவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்ட கருத்துரு குறித்தும் எடுத்துரைத்தார்.

அடுத்த அமர்வில் தமிழ்த்தட்டச்சு குறித்து விரிவான வரலாற்றைக் குறிப்பிட்டார். மேலும் எவ்வாறு தமிழ்த்தட்டச்சு செயலியை தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்வது என்று மாணவர்களுக்குப் பயிற்சியின் மூலம் காட்டினார்.  மாணவர்கள் அதனை உடனடியாக தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பயன்பெற்றனர். தொடர்ந்து தமிழ் வலைப்பூக்களின் வரலாற்றையும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் முடிவாக ஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவைத் தமிழில் உருவாக்கி தமிழில் தட்டச்சு செய்து செய்திகளை வெளியிட்டனர். 

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையை எழுதுவது எப்படி என்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் தமிழ் முகப்பு பக்கத்தை உருவாக்கியவர் இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் என்றதும் அனைவரும் பரவசம் அடைந்தனர். திரு.மயூரநாதன் நிறைவுவிழாவிற்கு வருகை தருகிறார் என்றதும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  வலைப்பதிவை உருவாக்காத மாணவர்கள் அடுத்தநாள் பயிற்சியில் கலந்துகொள்ளும்போது அவரவர் ஒரு வலைப்பதிவை உருவாக்கி வரவேண்டும் என்று கூறினேன்.

முதல் நாள் நிகழ்வில் பேராசிரியர் முனைவர் க.உமாராஜ் அவர்கள் கணினி மொழியில் என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் இயந்திர மொழிபெயர்ப்பும், பேச்சுமொழித் தொழில்நுட்பம் குறித்து உரை வழங்கினார். இதில் பயிற்சியாக கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை விளக்கி அதனைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். பேச்சுத்தொழில் நுட்பத்தில் உரையிலிருந்து பேச்சுவழக்கிற்கும், பேச்சுவழக்கிலிருந்து உரை வழக்கிற்கும் இதுவரை கடந்துவந்த மென்பொருள்களின் பயன்பாடுகளை விளக்கினார்.


06-03-2020 அன்று அதன் தொடர்ச்சியாக காலை 9.30 மணிக்குப் பயிற்சி தொடங்கியது. பயிற்சித் தொடங்கிய உடனே முதல்நாள் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் பயிற்சியில் வலைப்பதிவை உருவாக்காதவர்கள் வீட்டில்  வலைப்பூக்களை உருவாக்கி வந்திருந்தார்கள். அதில் தமிழில் தட்டச்சு செய்து தமிழ்ச்சாரல் வலைப்பதிவு திரட்டியில் இணைத்தும் வந்து காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பை பெறும் வழிகள் குறித்து விளக்கினேன். எவ்வாறு முகநூலில் சின்ன, சின்னப் படங்களை இணைத்து பணம் பெறுவது காணொளியில் எவ்வாறு புதிய காணொளி பக்கத்தை உருவாக்கி அதில் நல்ல செய்திகளை வெளியிட்டு நல்ல வருமானம் பெறுவது என்றும் பயிற்சி வழங்கினேன். மேலும் சமூக ஊடகங்களை எவ்வாறு நாம் கையாள்வது என்பது பற்றியும் தெரிவித்தேன்.
                                      பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள்

அடுத்து தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவதின் பயன்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக் கூறினேன். பயிற்சியின் நிறைவாக மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் இனி தமிழில் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினர். அடுத்து பல புதிய காணொளிகளை உருவாக்கி யாழ்ப்பாணத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த தயாராகிவிட்டதாகவும் கூறினார்கள். அடுத்து இனி தகவல் தொழில்நுடபங்களைத் தமிழில்தான் பயன்படுத்துவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 நிறைவு விழாவில் தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தை உருவாக்கிய இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் அவர்கள் கலந்து மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார். அதில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டுமின்றி விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்கிப்பயணம், விக்கிசெய்தி, விக்கிமேற்கோள், விக்கிநூல்கள், பொதுவகம் போன்ற பல தலைப்புகளிலும் விக்கிப்பீடியா பயனளிக்கின்றது என்று விவரித்தார்.
திரு.மயூரநாதன் அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவருக்குச் சான்றிதழ் வழங்குதல்

நிகழ்வில் தமிழறிதம் நிறுவனத்தின் தலைவர் திரு.இ.நகுலேஸ்வரராஜா மற்றும் செயலாளர் திரு.சரவணபவானந்தன் உறுப்பினர்கள் யாழ்பாவாணன், தமிழறிதம்  பொருளார் திரு. க.விக்னேஸ்வரானந்தனும் நிகழ்வில் பங்கேற்றார்.


                       BCAS முகாமையாளர் திரு. எஸ். றஸாத் அகமத் 



Friday, February 28, 2020

“தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” - பெரம்பலூர்

|0 comments

தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரகளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின்  மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.


                     திருமதி சிதரா, ஆசிரியர் மாயகிருஷ்ணன், தமிழ்மாமணி விருது பெற்றவர்.

இதில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி  சித்தரா அவர்களின் தலைமையில் பெரம்பலூ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது. 
                                                                           செல்வன் பிரதாப்

இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும் பேசினேன். மேலும் தமிழில்  ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இறுதியாக தமிழ் இணையக் கழகம் அமைப்பின் உறுபினர் பிரதாப் விரிதிரை (POWER POINT) உருவாக்கம் குறித்தும் பேசினார். 



Thursday, February 27, 2020

தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் - திருச்சிராப்பள்ளி

|4 comments
                                     திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கணினித் தமிழ்ப் பயிற்சி


    மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன் , துணை இயக்குநர் ம.சி.தியாகராஜன்.
                                          
2019-2020 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கொள்ளும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் சிறப்பாக  அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை 20-3-2020 ஆம் நாளுக்குள் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அனுப்பிய குறிப்பாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
                      உதவியாளர் திருமதி சி.சுகன்யா, மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 20-02-2020 முதல் 26-02-2020 வரையிலான காலத்திற்கு ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 20-2-2020 பிற்பகல் 02.00 மணி முதல் 05-00 மணி வரை  நடைபெற்றது. 

இந்த பயிற்சியில்அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகியோர்களுக்குத் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கினேன்.

மேலும்  தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல், தமிழில் விரிதிரை பயிற்சி மற்றும்  ஆட்சிமொழி குறித்துப் பயிற்சியை வழங்கினேன்.


Saturday, February 22, 2020

நவீன் உலகில் கணினித்தமிழின் இன்றையப் பயன்பாடுகள்- சேலம்

|0 comments
கல்லூரி முதல்வர் பேராசிரியர் வ.மதன்குமார் அவர்கள் எமக்குச் சிறப்புச்செய்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னையும் இணைந்து நடத்திய ஒரு நாள் கணினித்தமிழ் பயிற்சி சிறப்பாக 11-02-2020 அன்று கல்லூரி  முதல்வர் வ.மதன்குமார் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
                                     நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய பேரா.துர்காதேவி

நிகழ்வின் தொடக்கமாக  நிகழ்வின்  ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர் செல்வி துர்க்காதேவி வரவேற்புரை வழங்கினார்.
                             பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்

பயிற்சியில் சிறப்புரையாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ்க் குறித்த வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார். பிறகு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு ஒருங்குறியில் தட்டச்சு செய்வது எப்படி என்று பயிற்சி மூலம் விள்க்கினார். மேலும் பேசினாலே தட்டச்சு செய்யும்  https://speechnotes.co/  இணையப்பக்கத்தையும் எடுத்துக்காட்டி அதில் மாணவர்களைப் பேசவைத்து தட்டச்சு இடுவதை செயல்முறையில் விளக்கம் அளித்தேன்.



அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் வலைப்பதிவை உருவாக்கிக் கொடுத்து அதில் தமிழில் எழுதவைத்து பயிற்சி வழங்கினேன். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியா,  தமிழ் மென்பொருள்கள், சமூக ஊடங்களைப் பயன்படுத்தும் நெறிமுறைகள், இணையத்தில் வேலை வாய்ப்பை பெறுவது எவ்வாறு என்றும் எடுத்து விளக்கினேன்.






இணையத்தமிழ்ப் பயிற்சி - தமிழ் வளர்ச்சித்துறை- சேலம்.

|0 comments




                                                  துணை இயக்குநர் திருமதி ஜோதி
தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரக்ளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழ்கம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின்  மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.
துணை இயக்குநர் ஜோதி அவர்களுடன் கல்லூரிப் பேராசிரியர்கள்

இதில் சேலம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜோதி அவர்களின் தலைமையில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் 19-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது. இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும்,  தமிழில் குறிப்பாக ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலம், தமிழ்த்துறைத் தலைவர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.



நிகழ்வில் தமிழ்த்துறை மாணவிகளும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் கலந்துகொண்ட அரசு அலுவளர்கள் மற்றும் மாணவிகள்


இணையத்தமிழ்ப் பயிலரங்கம் - வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி

|0 comments
                                                        நிகழ்வின் தொடக்கம்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஒருநாள் இணையத்தமிழ்ப் பயிலரங்கம் 16-02-2020 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்விக் கழகம் சார்பாக இணையத்தமிழின் அவசியத்தை தமிழ்நாட்டில் உள்ள மக்களும், மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தலா 25000 வழங்கி இந்தச் சிறப்பு பயிலரங்கை கடந்த 2019 ஆண்டிலிருந்து தமிழ்கத்தில் பல்வேறு கல்லூரிகளில் நடத்தி வருகிறது.
அவற்றில் ஒன்றாக வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் சிறப்பாக நடைபெற்றது.
                                                   பேராசிரியர் வ.தனலெட்சுமி
  இந்தப் பயிலரங்கில்  முதல் அமர்வில் பேராசிரியர் வ.தனலெட்சுமி  இணையத்தமிழ் வரலாறும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார்கள். இந்தப் பயிற்சியில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் வலைப்பதிவை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அடுத்த அமர்வில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழில் தட்டச்சுப் பயிற்சியை வழங்கினார்.
                                                     முனைவர் துரை.மணிகண்டன்
தமிழ் எழுத்துரு உருவாகிய வரலாறும் அது கடந்துவந்த பாதையையும் தெளிவுபடுத்தினார். சுரதா எழுத்துருவில் தொடங்கி, முரசு, அஞ்சல், அழகி, NHM , இன்று பேசினாலே தமிழில் தட்டச்சு செய்யும் வரை எடுத்துரைத்தார்.

அடுத்து திரு.செல்வமுரளி தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவது எப்படி என்றும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
                                                                  திரு,செல்வமுரளி
மேலும் இணையத்துறையில்  மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பை பெறமுடியும் என்ற நோக்கிலும் தன் சிறப்புரையை வழங்கினார்.

இறுதியாக திரு.நாணா அவர்கள் மாணவர்கள் எவ்வாறு இணையத்துறையிலும், திரைப்படத்துறையிலும் எழுத்துருவைப் பயன்படுத்தி  வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்பதை தனது 25 ஆண்டுகால பத்திரிக்கைத்துறையின் அனுபவங்களை மாணவர்க்ளுக்கு எடுத்து விளக்கினார்.
                    திரு நாணா அவர்கள் மாணவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்.

இந்த நிகழ்வைத் தமிழ்த்துறையின் பேராசிரியர் முஷிப் ரகுமான் ஆவர்கள் ஒருங்கமைத்தார். மிகச்சிறந்த பண்பாளர். வந்தவர்களை உபசரிக்கும் பண்பாளர். நானும் இதுவரை எத்தனையோ கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்குச் சென்று வந்துள்ளேன். சில குறிப்பிட்ட கல்லூரிகளில் இந்தக் கல்லூரி பேராசிரியரின் விருந்தோம்பல் வெகு சிறப்பாக இருந்தது.
பேராசிரியர் வ.தனலெட்சுமி, முனைவர் துரை.மணிகண்டன் நிகழ்வின் கதாநாயகன் பேராசிரியர் முஷிப் ரகுமான்.

நிறைவாக பயிர்ச்சி வழங்க வந்த நால்வரும் ஒன்றாக இணைந்து அடுத்தக்கட்டமாக நாம் இணையத்தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினோம்.
நிகழ்வில் கலந்துரையாடியபொது தமிழ்த்துறைத் தலைவர் சிவராஜ், திரு நாணா.

Friday, January 31, 2020

செல்வம் கலை அறிவியல் கல்லூரி நாமக்கல்.- தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்வழி கல்வி.

|1 comments

தமிழ்த்துறைத் தலைவர் க,சக்திவேல், முனைவர் துரை.மணிகண்டன், தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு.தினேஸ்குமார்

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் புதுமையான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் “செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் 29/01/2020 புதன்கிழமை ”தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்வழி கல்வி” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிற்சி வழங்கிச் சிறப்புரையாற்றினேன்.
நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ந. இராஜவேல் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சக்திவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.


நிகழ்வில் ஒரு மணிநேரம் தகவல் தொழில்நுட்பத்தின் வரலாற்றை எடுத்து விளக்கினேன். பிறகு இணையம்சார்ந்த செய்திகளையும் தமிழ்மொழி இந்த இணையத்தில் எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்றும் நாம் என்ன செய்யவேண்டும் என்ற பொருளிலும் உரை முதல் அமர்வில் இருந்தது.
இரண்டாவது அமர்வில் தமிழ் எழுத்துருவின் தோற்றம்,  வளர்ச்சி. இன்றைய நிலை குறித்து விளக்கினேன். தமிழ்த்தட்டச்சு தொடங்கிப் பேசினாலே தட்டச்சு செய்யும் வளர்நிலையை மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி மூலம் விளக்கிக்காட்டினேன். பல மாணவர்கள் நல்ல முறையில் தமிழில் தட்டச்சு செய்து பழகிக்கொண்டனர்.

அடுத்துத் தமிழ் மென்பொருள்களின் வளர்நிலையையும் எடுத்து விளக்கினேன். பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் அம்மா மென்பொருள் மற்றும் நீச்சல்காரனின் சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி, பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மென்பொருள், வினோத் ராஜனின் அவலோகிதம் போன்ற தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் குறித்து நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் you tube வழி மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற பொருண்மையிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. எந்தத் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் அதனைத் தமிழில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினேன்.

நிகழ்வில் 250 தமிழ் இளங்கலை,(BA) இலக்கியவியல் இளைஞர்,(B.LIT) முதுகலை (MA) மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வினை ஒருங்கமைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் தினேஷ்குமார் அவர்களுக்கு நன்றி…


Saturday, January 25, 2020

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணையத்தமிழ்...

|0 comments