தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரக்ளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழ்கம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின் மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.
துணை இயக்குநர் ஜோதி அவர்களுடன் கல்லூரிப் பேராசிரியர்கள்
இதில் சேலம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜோதி அவர்களின் தலைமையில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் 19-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது. இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும், தமிழில் குறிப்பாக ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலம், தமிழ்த்துறைத் தலைவர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தமிழ்த்துறை மாணவிகளும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியில் கலந்துகொண்ட அரசு அலுவளர்கள் மற்றும் மாணவிகள்
0 comments:
Post a Comment