தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரகளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின் மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.
திருமதி சிதரா, ஆசிரியர் மாயகிருஷ்ணன், தமிழ்மாமணி விருது பெற்றவர்.
இதில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி சித்தரா அவர்களின் தலைமையில் பெரம்பலூ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது.
செல்வன் பிரதாப்
இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும் பேசினேன். மேலும் தமிழில் ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இறுதியாக தமிழ் இணையக் கழகம் அமைப்பின் உறுபினர் பிரதாப் விரிதிரை (POWER POINT) உருவாக்கம் குறித்தும் பேசினார்.
0 comments:
Post a Comment