கலந்துரையாடளில் முனைவர் துரை.மணிகண்டன், பேராசிரியர் கலாநிதி தபோதரன், பேராசிரியர் க.உமாராஜ், தமிழறிதம் அமைப்பின் பொருளாளர் க.விக்னேஸ்வரானந்தன், செயலாளர் திரு.சரவணபவானந்தன், பதிவாளர் கலாநிதி வி. காண்டீபன்.
தமிழறிதம் நிருவாகிகள் அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் மொழியியல்துறை, கணினித்துறைப் பேராசிரியர்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராசிரியர்கள் ஆகியோரிடையேயான சந்திப்பு - 06-03-2020, தமிழறிதம்
அமைப்பின் சார்பாக 06-03-2020 அன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். இந்த சந்திப்பில் மொழியியல் துறைப் பேராசிரியர்
கலாநிதி சுபதினி ரமேஸ் மற்றும் கணினி அறிவியல்த்துறைப் பேராசிரியர் கலாநிதி தபோதரன்
ஆகியோருடன்
பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. வி.காண்டீபன் அவர்களுடன் கலந்துகொண்டு உரையாடினோம்.
இக்
கலந்துரையாடலில்
பேராசிரியர் தபோதரன் அவர்களிடம் தமிழறிதம் அமைப்புடன் இணைந்து பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்க் கணினிப் பயிலரங்கு நிகழ்வை ஒழுங்குபடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு அவரும் சில பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டுக் கூறுவதாகக் கூறினார்கள். தொடர்ந்து கலாநிதி
சுபதினி அவர்களுடனும் கலந்துரையாடினோம். அவர்களும் தமிழறிதம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை, மொழியியல்துறை, கணினி அறிவியல் துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புவதாகக் கருத்துக் கூறினார்கள். மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல்துறை பேராசிரியர் க.உமாராஜ் அவர்கள் இரண்டு பல்கலைக் கழகத்திலிருக்கும் மொழியியல்துறை இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று தனது கருத்தாக முன்வைத்தார்.
தமிழறிதம்
அமைப்பின் பொருளாளர் திரு. க.விக்னேஸ்வரானந்தன்
பலகலைக்கழகத் துறைகளுடன் மேற்கோண்ட விடயங்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாக பல்கலைக்கழகத்தின் வெளியே ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது பொருத்தமாக இருக்குமென்று கூறினார். இதனை அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பல்கலைக் கழகம்
சார்ந்த துறையினரையும் செயற்திட்டத்துடன் ஆர்வமுடைய ஒரு சில நிபுணர்களையும் ஆர்வலர்களையும்
தமிழறிதம் இணைப்புச்செய்து கலந்துரையாடலை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறப்பானது
என்று கருத்துக் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களிடம் ஒப்புதல்
பெறவேண்டும். என்று முடிவு எட்டப்பட்டது..
தாங்கள் குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ள தமிழறிதம் முன்நிற்கும்.
எமது ஒத்துழைப்பு என்றும் தங்களுக்கு உண்டு.
நன்றி யாழ்பாவணன்