/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 17, 2020

தினக்குரல் பத்திரிக்கை ஊடகத்தில் இணையத்தமிழ்ப் பயிற்சி - யாழ்ப்பாணம்



 அம்மா மென்பொருளை நான் கொடுக்க தினக்குரல் பத்திரிக்கையின் இயக்குநர் திரு.பீ.கேசவராஜா பெற்றுக்கொள்கிறார். அருகில் பேராசிர்யர் க.உமாராஜ், மற்றும் தமிழறிதம் அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் மற்றும் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன்.

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 08-03 2020 யாழ்ப்பாண செய்தி ஊடகத்தில் தனக்கான இடத்தைப் பெற்று வளர்ந்து வரும் தினக்குரல் பத்திரிக்கை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு எவ்வாறு ஒருங்குறியைப் பயன்படுத்தி பத்திரிக்கைத் துறையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் கருத்துரை மற்றும் பயிற்சிகள் அங்கு பணியாற்றும் சுமார் 20 நபர்களுக்கு வழங்கப்பட்டது.  எங்கள் அன்பிற்கினிய அன்பர், நண்பர் தினக்குரல் பத்திரிக்கையின் தலைமை நிர்வாகி திரு.பீ.கேசவராஜா (இயக்குநர்)  அவர்களின் அன்பு கட்டளையால் எங்கள் பணியாளர்களுக்கும் இந்தத் தமிழ் தொழில்நுட்பஙகளைக் கற்றுக்கொடுங்கள் பேராசிரியரே என்றார். 
                         பயிற்சியில் கலந்துகொண்ட பத்திரிக்கை ஊழியர்கள்கள்

அதன் விளைவாக தமிழறிதம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் அனுமதியுடன் இப்பயிற்சி வழங்கப்பட்டது.இதில் பத்திரிக்கைத் துறையில் அங்கு வானவில் மற்றும் ஸ்ரீரிலீப்பி எழுத்துருவைப் பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் ஒருங்குறியில் இயங்கும் எழுத்துருவை இனி பயன்படுத்துங்கள் என்று விளக்கினோம். அங்கு பேசினாலே தமிழில் தட்டச்சு செய்யும் மென்பொருளையும் அறிமுக செய்து பேசினேன்.


குறிப்பாக பேராசிரியர் ந,தெய்வசுந்தரம் அவர்களின் அம்மா தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்து அதில் உள்ள நல்ல பல தகவல்களை வழங்கினேன். நான் கையில் வைத்திருந்த ஒரு அம்மா மென்பொருளை இயக்குநர் அவர்களிடம் கொடுத்து உடனே அவர்களது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்திக் காட்டினேன். பலருக்கும் மகிழ்ச்சி. இப்படி ஒரு தமிழ் மென்பொருளா என்று என்னிடம் வினாவினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் தினக்குரல் ஆசிரியர்கள் ரொஷான் நாகலிங்கம், நெடுந்தீவு ஜெயபாலன் மற்றும் தமிழறிதம் அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன் பேராசிரியர் க.உமாராஜ், போன்றோர் கலந்துகொண்டனர்.






0 comments: