/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, October 12, 2012

NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி

|5 comments
NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வில் சாகித்திய அகாதெமியின் சார்பில் பல இந்திய சிறுகதை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள். 



செவ்வாய்க்கிழமைப் பேராசிரியர் கு.ஞானசம்ந்தம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.


மூன்றாம் நிகழ்வில் திங்கள் கிழமை முனைவர் ஆனந்தகுமார், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் இருவரும் சிறப்புரை வழங்கினார்கள். இந்திய மொழிகளில் பல நூல்களை நாம் மொழிபெயற்க வேண்டும். என்ற தலைப்பில் இருவரும் உரை நிகழ்த்தினார்கள்.





புதன்கிழமை உலகம் சுற்றும் வாலிபன் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உலக இலக்கியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



வியாழன் அன்று பேராசிரியர் கி.சேகர் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் ச.நீலகண்டன் உரை நிகழ்த்தினார்.




தலைப்பில் உரைநிகழ்த்தினார். வெள்ளி அன்று பேராசிரியர் அப்தூல் சயித் அவர்கள் நயம்பட உரை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



இந்த நிகழ்வை தலைமைப்பொறுப்புடன் கவனித்த NBT யின் உறுப்பினர் திரு. மதன்ராஜ் ஆவார்.

Saturday, October 6, 2012

TRAINING CUM WORKSHOP ON ITEM WRITING

|0 comments
இந்திய தேசியத் தேர்வுப்பணி  (NATIONAL TESTING SERVICE- INDIA) மைசூர், திருச்சிராப்பள்ளி மண்டலக்களப்பணி மையம் நடத்திய பயிற்சிப்பட்டறை இனிதே 03-10-2012 காலை திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரி குளிர்மை அரங்கில் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு பிரபு அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது.

 விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலை நிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் இரா.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  NTS –  ல் இருந்து வந்திருந்த முனைவர்  வ. இளங்கோ அவர்கள் பயிற்சியில் பங்குபெற்ற பல கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு வினாக்களை எடுப்பதற்கானப் பயிற்சியை வழங்கினார்.

இன்றையப் போட்டித்தேர்வுகளுக்கான  வினா அமைப்பு முறைகளை முற்றிலும் மாற்றி புதிய அமைப்புமுறையில் வினாக்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தில் தமது கருத்தை முன்வைத்துப் பேசினார்.






NTS  சின் இளநிலை ஆய்வறிஞர் வ. இளங்கோ உரை நிகழத்த முனைவர் இரா.பாஸ்கரன், திரு.பிரபு முதல்வர் பொறுப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.இராசரத்தினம். 






பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்.


திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.இராசரத்தினம் அவர்கள் இத்திட்டத்தின் பயன்பாட்டை எடுத்து விளக்கினார்.

நிகழ்வில் முனைவர் சேதுபாண்டியன் அவர்கள் மொழியில் நோக்கில் எவ்வாறு வினாக்களை எடுக்கவேண்டும் என்ற அமைப்பில் உரை நிகழ்த்தினார்.

 அடுத்த நாள் முனைவர் வீரப்பன் அவர்கள் தேசிய அளவில் வினாக்களை எடுக்க இங்கு வந்திருக்கும் பேராசிரியர்கள் கவணிக்க வேண்டிய கருத்துக்களை வெளியிட்டு பேசினார்கள்.

மூன்றாம் நாள் காலை பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து பேராசிரியர்களும் வினாவை எடுத்துக்கொடுத்தனர். அதனைச் சரியான முறையில் திருத்தி பேராசிரியர்களிடம் கொடுத்து சில வழிமுறைகளையும் கூறி எழுதச்சொன்னார். மீண்டும் ஒருமுறை வினாவினை எடுக்கச்சொல்லி பயிற்சியைக் கொடுத்தார்.


பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.





Tuesday, October 2, 2012

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்.

|7 comments
அன்புள்ள எமது வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த 2011- ஆம் ஆண்டு எழுதிய இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் என்ற நூல் தற்பொழுது கவுதம் பதிப்பகத்தாரால் 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி மீனா அவர்களுக்கும், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. சிவாபிள்ளை அவர்களுக்கும் நமது நன்றி.

மேலும் எம்மை பற்றிய அறிமுக உரையாக புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ள அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர், தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகருமான  திரு. ஆல்பட் பெர்ணான்டோ அவர்களுக்கும் என நன்றி.

இந்த நூல் பலரின் கருத்துக்களைக் கேட்டும், மற்றும் ஆலோசனைப்படியும், தமிழின் இன்றைய தேவையை உணைர்ந்து எழுதபட்டவையாகும். ஆய்வு உலகம் இந்த நூலை வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகின்றேன்.

அன்புடன்

முனைவர் துரை.மணிகண்டன்

அலைபேசி: 9486265886

முனைவர் கோ.மீனா, துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

இணையத்தில் தமிழ்த் தரவுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள், தமிழ்மரபு அறக்கட்டளையின் பங்களிப்பு, தமிழ் எழுத்துரு மாற்றிகள், மின் - மொழிபெயர்ப்பின் அவசியம், மின் - குழுமத்தின் இன்றைய தேவைகள் எனத் தெளிவாகவும், சுருக்கமாகவும் இந்நூலில் ஆசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் எடுத்து விளக்கியுள்ளார். இந்நூல் இன்றைய ஆய்வுலகிற்கு மிக முக்கியப் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

முனைவர் கோ.மீனா



சிவா பிள்ளை, லண்டன் ஐஇ(UK)

இணையத்தில் தமிழ்த்தரவு தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணத்து முனைவர் துரைமணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார்.

தரவுத் தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத் தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்தநூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாராட்டுகள். தமிழல் தரவு தளங்கள் பற்றிய வளக்கங்கள் தந்திருந்தாலும் இடைக்கிடை தலைப்புக்களுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் காணப்படுகிறது.

மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

தமிழ் மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும் பிறமொழிக் கலப்பின்றி புது சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக இந்நூலில் காட்டப்பட்டுள்ளது. பலரிடம் புழக்கத்தில் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்மொழிபெயர்ப்பு, மின்குழுமம் ஆகினவற்றின் அவசியம் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உத்தமம்- உலகத்தழிர் தகவல் தொழில்நுட்ப மன்றம், செம்மொழி தரவு தரங்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.

இங்ஙனம்,

சிவா பிள்ளை




தமிழுக்கும் கணி (கம்ப்யூட்டர்)க்கும் இடையே தவமிருந்து தமிழ் தூவும் தங்கத் தமிழர் இவர்!

தமிழாசிரியர்கள், தமிழறிஞர்கள், "கணி" நமக்கு எட்டாத தூரம் என்று எட்டி நிற்கும்

வேளையில் இவர் கணியோடு  ஒட்டி உறவாடுவது  தமிழ் பேராசிரியர்களுக்கு பெருமிதமன்றோ!

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தி கணிக்கு உண்டு என்கிற சூட்சுமம் அறிந்ததால் உலகளாவிய

இணைய இதழ்களில் எல்லாம் மலர்ந்து மணம் பரப்புகிறார்.

காலத்தின்  தேவையை உணர்ந்து ஏற்றமிகு இணையத்தை நன்கு தமிழ் மொழியில் நூல்களாகத் தந்து கொண்டிருக்கும் தகைசால் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன்.  இவர் தஞ்சை மாவட்டம் கச்சமங்கலம் சிற்றூரில் பிறந்தவர். தனது இளங்கலை,முதுகலை மற்றும் ஆய்வியல் பட்டப்படிப்புகளைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்றவர். முனைவர் பட்டத்தைத் தேசியக்கல்லூரியில் நிறைவுசெய்தவர்.

இதுவரை இணையம் தொடர்பாக இணையத்தில் தமிழ், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற இரு நூல்களை எழுதியுள்ளார்.  இணையத்தில்  தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நலப்பணியும் மற்றும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையமும் இணைந்து முதல் பரிசை அளித்து கெளரவித்துள்ளது.

ஆசிரியர் இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்புகளில் மதுரைப் பல்கலைக்கழகத்திலும்,திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்திலும் சிறப்புரையாற்றியுள்ளார்.

இருபதுக்கும் மேலான கல்லூரிகளிலும் மற்றும்,தமிழ்ச்சங்கங்கள், அரசு தலைமைக்கூடங்களிலும் கணிப்பொறியும் தமிழும், இணையத்தில் தமிழின் பயன்பாடுகள் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.இதுவரை இணையம் தொடர்பாக 25 ஆய்வுக் கட்டுரைகளைத் திண்ணை ,பதிவுகள், முத்துக்கமலம், வார்ப்பு இணைய இதழ்களில் வெளியிட்டு

உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்றவர்.

மதுரை ஆட்சியர் திரு.சகாயம்,இ.ஆ.ப., அவர்களின் "தொடுவானம்" என்ற அற்புதமான திட்டத்துக்காக கிராமப் பஞ்சாயத்துகளில்  இருந்து ஆட்சியரைப் பார்க்காமலேயே "கணி" மூலம் மனுக்கொடுக்கும் திட்டத்துக்கு கிராம தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தானுண்டு தன் கல்லூரி உண்டு என்ற சின்னச் சிமிழுக்குள் தன் சிறகைச் சிக்க வைத்துக்கொள்ளாமல் தன் சிந்தனைச் சிறகுகளை இணையம் மூலமாக இந்தப் பூமிப் பந்தில் விரித்து தமிழார்வலர்களை  ஈர்க்கிற திறனுள்ள இளம் தமிழ்ப் பேராசிரியர் இவர்!

தனது பட்டறிவைத் தானும் தனது சமுதாயமும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் தனது பங்களிப்பைப் பற்றிக் கவலையே படாத பலருக்கு மத்தியில் சமூக அக்கறையோடு கணினியில் தமிழைத் தட்டச்சு  செய்வது எப்படி? வலைப்பூக்களை இணையத்தில் மலரவிடுவது எப்படி? என்று கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கி கற்பிக்கிற பாங்கு இவர் ஒரு கடமை உணர்வாளராக, உலாப்போகிறவராக அடையாளம் காணப்படுகிறார்.

இவரது இணையத் தமிழ் பணி சிறக்க அன்புடன் வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,
ஆல்பர்ட்  ஃ பெர்ணான்டோ,
ஆலோசகர்,
தமிழ் உலகம் அறக்கட்டளை,
அமெரிக்கா.


நூல் தேவைபடுவோர் : http://www.gowthampathippagam.com



Friday, September 28, 2012

பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012

|0 comments

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 நடக்கவிருக்கிறதுஎன்னும் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வுகொள்கிறோம்.  உத்தம நிறுவனம்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.
கணினிஇணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும்மிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது என்னும் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.. உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்காசிங்கப்பூர்மலேசியாஜெர்மனிஆகிய நாடுகளில்முன்னனிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும்தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ்த்தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் திசம்பர் 28 முதல் 30 வரை உலகத் தமிழ் இணைய மாநாடு 2012”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.  அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல்பேராசிரியர் மாகணேசன் அவர்கள்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார்.  உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திருஇளந்தமிழ் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்குகண்காட்சிமக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் திசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது.  கண்காட்சியும்  மக்கள் கூடமும் திசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்கண்காட்சியிலும்,சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.
கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.  மாநாட்டின் கருத்தரங்குக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன்,கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும்இவ்வாண்டின் கருத்தரங்குக்கு செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.  இது தவிரகணினி சார் மொழியியல்திறவூற்று மென்பொருள் ஆய்வுகள்மின்வணிக முறைகள்கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல்மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல்கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சிமற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை ஊர்ப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இதுஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எண்ணுகிறோம்.
தமிழ்நாடெங்கும் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் இம்மாநாட்டின் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது.  கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருவள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார். 
இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின்வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல்பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல்கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறுமுறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம்.கணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல்மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் முஇளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள்  நவம்பர் 3- 2012 ஆகும்மாநாட்டுக் குழுஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத்தேர்ந்தெடுக்கும்தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 10 நவம்பர் 2012-க்குள் தகவல்தெரிவிக்கப்படும்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது:
·         செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில்முக்கியமாக ..எஸ்ஆண்டிராய்டுதளங்களில் தமிழைப் படித்தல்தமிழில் எழுதுதல்.
·         மின் புத்தகங்கள்மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவரஉதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
·         திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள்தன்மொழியாக்கல்.
·         இயன்மொழிப் பகுப்பாய்வுபிழைதிருத்திதமிழ் எழுத்துரு பகுப்பிஒலி உணர்தல்,தேடுபொறிகள்இயந்திர மொழிமாற்றம்தகவல் அகழ்தல் போன்றவை.
·         தமிழ் இணையத்தின் தற்போதைய நிலைவலைப்பதிவுசமூக வலைத்தளங்கள்,விக்கிப்பீடியாகுரல் வலை போன்றவை.
·         தமிழ் தரவுத்தளங்கள்.
·         கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
·         தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
·         கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றியஆய்வுகள்

கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும்ஆய்வுச் சுருக்கங்களும்இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும்இவைஉரைக் கோப்புகளாகஎச்.டி.எம்.எல் வடிவில்மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ்கோப்புகளாக இருக்கலாம்பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்கட்டுரைகள்ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம்.தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால்யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கவேண்டும்.பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதுஎன்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டு இதழ் அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும்ஏற்றுக்கொள்ளப்பட்டு,மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில்சேர்த்துக்கொள்ளப்படும் கட்டுரைகளை அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும் என்பதில் எந்தவித கருத்துவேறுபாடும்இருக்காதுமாநாட்டுக்கு வர இயலாதோரின் கட்டுரைகளை மாநாட்டுக்குழு ஏற்றுக்கொள்ளாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

(அளவில்இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு ti2012-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
ti2012@infitt.org அல்லது ed@infitt.org மற்றும் chair@infitt.org

http://www.infitt.org என்ற உத்தம நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இம்மாநாடு குறித்தான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுவருவோம்இப்பக்கத்தில் தங்களின் மாநாட்டு வருகைக்காகப் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
மணி முமணிவண்ணன்
தலைவர்உத்தம நிறுவனம்

Wednesday, September 26, 2012

இணையப்பயிலரங்கு

|0 comments
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் 26-09-2012 புதன்கிழைமை காலை பத்து மணிக்குத் தமிழ் இணையப்பயிலரங்கு கல்லூரி செயலர் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது.



விழாவின் தொடக்கமாக கல்லூரியின் செயலர் மற்றும் கு.சின்னப்பாரதி அறக்கட்டளையின் தலைவருமான  மருத்துவர் திரு. பொ.செல்வராஜ்  அவார்கள் தனது தலைமையுரையில் இன்றைய காலக்கட்டத்தை உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கணிப்பொறி மற்றும் இணையத்தை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்






விழாவில் திரு செல்வமுரளிக்கு கல்லூரித் தாளாலர் சிறப்புச் செய்தல். நான், கல்லூரி முதல்வர் முனைவர் கி.சி.அருள்சாமி துணைமுதல்வர் பேரா. ந.இராஜவேல், தமிழ்த்துறைதலைவர்  உள்ளனர். 


அடுத்து தமிழ் இணையம் குறித்த கருத்துரை நான் வழங்கினேன். இணையம் தோன்றிய காலம் தமிழ் இணையத்தில் தோன்றிய காலம் வரையும் தொகுத்து வழங்கினேன். தமிழ் இணைய மாநாடுகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எந்த அளவுமுக்கியத்துவன் கொடுத்தது. தமிழ் இணையக்கல்விக்கழகம், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளையின் ஓலைச்சுவடி காப்பகம் என மாணவர்களுக்குப் பல பயனுள்ள தகவல்களைத் தொகுத்து வழங்கினேன்.

அடுத்து திரு செல்வமுரளி அவர்கள் மாணவர்களுகு மின்னஞ்சல் உருவாக்கி அதன் பயன்பாடுகளை விளக்கிக் கூறினார். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மாணவிகளுக்குத் தொடங்கி அதனை செயல்படுத்தும் முறையினையும் தெளிவாக விளக்கிக்கூறினார்.

இறுதியாக தமிழ்த்துறைப்பேராசிரியர் பேரா. ரெ.தினேஸ்குமார்,  நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் தமிழ்த்துறை மாணவர்கள், மற்றும் கணிப்பொறித் துறை மாணவர்கள் என 150 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர், தமிழ்த்துறைப்பேராசிரியர் விஜ்ய். 
திரு.மு.விஜயகுமார்
ஆசிரியர்,www.mysangamam.com,www.namakkal4u.com திருச்செங்கோடு.



பயிற்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.


பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள்.


Saturday, September 15, 2012

“மென்தமிழ்“ மென்பொருள் வெளியீட்டுவிழா

|2 comments


கணினித்தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய சவாலை சரியாகச் செய்துள்ளார் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். அவரது அயராத உழைப்பில் உருவான
கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருள் மென்தமிழை உருவாக்கியுள்ளார்.

 இந்த மென்பொருளை  தமிழ் உலகத்திற்குப் பல தொண்டுகளைச் செய்துவரும்   SRM பல்கலைக்கழகத்தில் 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தமிழ்ப்பேராயத்தின்  வாயிலாக வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. 

முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் இல. சுந்தரம் வரவேற்புரையாற்ற முனைவர் ந. தெய்வசுந்தரம் அறிமுகவுரையாற்றுகிறார்.

உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் திரு.தி.ஸ்ரீதர் அவர்கள் மென்பொருளை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகிறார். முதல் இரு படிகளை முனைவர் ப. அர. நக்கீரன் அவர்களும், முனைவர் மு. முத்தவேலு அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். அதனைத்தொடர்ந்து முனைவர் நா. சேதுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்.கோ. பாக்கியவதி இரவி அவர்கள்  நன்றியுரை வழங்குகிறார்.


குறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. வாங்கிப் பயன் பெறுங்கள்.