கணினித்தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய சவாலை சரியாகச் செய்துள்ளார் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். அவரது அயராத உழைப்பில் உருவான
கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருள் மென்தமிழை உருவாக்கியுள்ளார்.
இந்த மென்பொருளை தமிழ் உலகத்திற்குப் பல தொண்டுகளைச் செய்துவரும் SRM பல்கலைக்கழகத்தில் 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தமிழ்ப்பேராயத்தின் வாயிலாக வெளியீட்டுவிழா நடைபெறுகிறது.
முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் இல. சுந்தரம் வரவேற்புரையாற்ற முனைவர் ந. தெய்வசுந்தரம் அறிமுகவுரையாற்றுகிறார்.
உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் திரு.தி.ஸ்ரீதர் அவர்கள் மென்பொருளை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகிறார். முதல் இரு படிகளை முனைவர் ப. அர. நக்கீரன் அவர்களும், முனைவர் மு. முத்தவேலு அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். அதனைத்தொடர்ந்து முனைவர் நா. சேதுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்.கோ. பாக்கியவதி இரவி அவர்கள் நன்றியுரை வழங்குகிறார்.
குறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. வாங்கிப் பயன் பெறுங்கள்.
மிக்க மகிழ்ச்சி முனைவரே..
தேவையான தொழில்நுட்பம்.
நன்றி பேராசிரியர் அவர்களே. உங்கள் பின்னூட்டம் தேவை.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.