நாமக்கல்
செல்வம் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் 26-09-2012 புதன்கிழைமை காலை
பத்து மணிக்குத் தமிழ் இணையப்பயிலரங்கு கல்லூரி செயலர் அவர்களின் தலைமையில்
தொடங்கப்பட்டது.
விழாவின்
தொடக்கமாக கல்லூரியின் செயலர் மற்றும் கு.சின்னப்பாரதி அறக்கட்டளையின் தலைவருமான மருத்துவர் திரு. பொ.செல்வராஜ் அவார்கள் தனது தலைமையுரையில் இன்றைய காலக்கட்டத்தை
உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கணிப்பொறி மற்றும் இணையத்தை நாம் அதிகம் பயன்படுத்த
வேண்டும் என்று கூறினார்
விழாவில் திரு செல்வமுரளிக்கு கல்லூரித் தாளாலர் சிறப்புச் செய்தல். நான், கல்லூரி முதல்வர் முனைவர்
கி.சி.அருள்சாமி துணைமுதல்வர் பேரா. ந.இராஜவேல், தமிழ்த்துறைதலைவர் உள்ளனர்.
அடுத்து தமிழ் இணையம் குறித்த கருத்துரை நான் வழங்கினேன். இணையம்
தோன்றிய காலம் தமிழ் இணையத்தில் தோன்றிய காலம் வரையும் தொகுத்து வழங்கினேன். தமிழ்
இணைய மாநாடுகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எந்த அளவுமுக்கியத்துவன் கொடுத்தது. தமிழ்
இணையக்கல்விக்கழகம், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, மதுரைத்திட்டம், தமிழ் மரபு
அறக்கட்டளையின் ஓலைச்சுவடி காப்பகம் என மாணவர்களுக்குப் பல பயனுள்ள தகவல்களைத் தொகுத்து
வழங்கினேன்.
அடுத்து திரு செல்வமுரளி அவர்கள் மாணவர்களுகு மின்னஞ்சல் உருவாக்கி
அதன் பயன்பாடுகளை விளக்கிக் கூறினார். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மாணவிகளுக்குத்
தொடங்கி அதனை செயல்படுத்தும் முறையினையும் தெளிவாக விளக்கிக்கூறினார்.
இறுதியாக தமிழ்த்துறைப்பேராசிரியர் பேரா. ரெ.தினேஸ்குமார், நன்றி கூறினார்.
இந்த
நிகழ்வில் தமிழ்த்துறை மாணவர்கள், மற்றும் கணிப்பொறித் துறை மாணவர்கள் என 150 மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர், தமிழ்த்துறைப்பேராசிரியர் விஜ்ய்.
திரு.மு.விஜயகுமார்
|
பயிற்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள்.
0 comments:
Post a Comment