இந்திய தேசியத்
தேர்வுப்பணி (NATIONAL TESTING SERVICE-
INDIA) மைசூர், திருச்சிராப்பள்ளி மண்டலக்களப்பணி மையம் நடத்திய பயிற்சிப்பட்டறை இனிதே
03-10-2012 காலை திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரி குளிர்மை அரங்கில் கல்லூரி முதல்வர்
பொறுப்பு திரு பிரபு அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது.
விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்
தொலை நிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் இரா.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். NTS – ல்
இருந்து வந்திருந்த முனைவர் வ. இளங்கோ அவர்கள்
பயிற்சியில் பங்குபெற்ற பல கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு வினாக்களை எடுப்பதற்கானப்
பயிற்சியை வழங்கினார்.
இன்றையப் போட்டித்தேர்வுகளுக்கான
வினா அமைப்பு முறைகளை முற்றிலும் மாற்றி புதிய
அமைப்புமுறையில் வினாக்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தில் தமது கருத்தை முன்வைத்துப்
பேசினார்.
NTS சின் இளநிலை ஆய்வறிஞர் வ. இளங்கோ உரை நிகழத்த முனைவர் இரா.பாஸ்கரன், திரு.பிரபு முதல்வர் பொறுப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.இராசரத்தினம்.
பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கு.இராசரத்தினம் அவர்கள் இத்திட்டத்தின் பயன்பாட்டை எடுத்து விளக்கினார்.
நிகழ்வில் முனைவர்
சேதுபாண்டியன் அவர்கள் மொழியில் நோக்கில் எவ்வாறு வினாக்களை எடுக்கவேண்டும் என்ற அமைப்பில்
உரை நிகழ்த்தினார்.
அடுத்த நாள் முனைவர் வீரப்பன் அவர்கள் தேசிய அளவில் வினாக்களை எடுக்க
இங்கு வந்திருக்கும் பேராசிரியர்கள் கவணிக்க வேண்டிய கருத்துக்களை வெளியிட்டு பேசினார்கள்.
மூன்றாம் நாள்
காலை பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து பேராசிரியர்களும் வினாவை எடுத்துக்கொடுத்தனர்.
அதனைச் சரியான முறையில் திருத்தி பேராசிரியர்களிடம் கொடுத்து சில வழிமுறைகளையும் கூறி
எழுதச்சொன்னார். மீண்டும் ஒருமுறை வினாவினை எடுக்கச்சொல்லி பயிற்சியைக் கொடுத்தார்.
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.
0 comments:
Post a Comment