/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, January 25, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (25-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஆறாம் நாளில் காலை அமர்வில் மேனாள் மொழியியல் துறை இயக்குநர் பேராசிரியர் க.முருகையன் அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் முருகையன்

ஒலியியல் என்றால் என்ன? ஒலியியல் என்பது அறிவியல் முறையில் ஆராய்வது.
ஒலியியன்களைப் பற்றி தொல்காப்பியர் கூறிய இலக்கணங்களையும், இன்று மொழியியல் நோக்கில் ஒலியியலையும் விளக்கிக் கூறினார். இதழ் ஒலி,மூக்கொலிகள்,பல்லிதழ்கள் மூலம் ஒலியன்கள் தோற்றம் பெறும் பாங்கை விவரித்தார்.
இவ்வாறு ஒலியன்களின் தோற்றம் வளர்ச்சி இன்றைய கணினி மொழிக்கு எவ்வாறு கொடுத்தால் கணினி ஏற்றுக்கொள்ளும் என்பதையும் பல இலக்கியக் கதைகள் மூலமும் பயிற்சிமூலமும் தெளிவுபடுத்தினார்.

அடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொழில்நுட்ப அலுவளர் திருமதி இரா. இராணி அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்துக்கள் பிறப்பின் மூலத்தை காட்சிவிளக்க முறையிலும், பல ஒளி,ஒலி வடிவிலும் எடுத்துக்காட்டினார்.



திருமதி இரா.இராணி

மதிய அமர்வில் அண்ணாப்பல்கலைக்கழகக் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் திருமதி இரஞ்சனி பார்த்தசாரதி அவர்கள் அறிவுப் பகராண்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவு என்றால் என்ன? அறிவை எப்படி கணினிக்குக் கொடுக்கவேண்டும்? என்பன போல உரையை முன் வைத்தார். தமிழ் மென்பொருள் உருவாக்கம் செய்ய தேவையான சின்ன சின்ன இயற்கை அறிவின் கூறுகளை கணினிக்குக் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.அடுத்து உலக அறிவையும் நாம் தொகுத்து கணினிக்குக் கொடுக்க வேண்டும்

பேராசிரியை திருமதி இரங்சனி பார்த்தசாரதி

இவையல்லாமல் தற்பொழுது நாம் web1.0 விலிருந்து web2.0 விற்கு சென்றுள்ளோம் இன்னும் நாம் கணினியில் web3.0, மற்றும் web4.0 என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த தரமான எல்லையை நாம் கணினியில் அடையவேண்டும். அதற்கு உலக அளவில் உள்ள அறிவை ஒன்றுபடுத்தி அதன் உட்கூறுகளைக் கணினிக்குள் உள்ளிடவேண்டும் என்றார்.இறுதியாக தொகைவிரி(ontology) பற்றிய கருத்துக்களை விளக்கினார்.


இறுதியாக சி.பி.எம் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ப.சோ.சந்திரசேகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Tuesday, January 24, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு

|0 comments

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஐந்தாவது நாளில் கலை அமர்வில் மேணான் பேராசிரிவயர் கி.அரங்கன் அவர்கள் தொடரியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



தொடரியியல் என்றால் என்ன என்பதையும் அது தொடர்பான விளக்கத்தையும் கூறினார். தொடரியியலில் அமைப்பு மொழியில் அமையும் ஆய்வும் நோம்சாம்ஸ்கியின் தொடரியல் கோட்பாட்டைக்கொண்டு தெளிவாக விளக்கினார்.
அவ்வாறு அமைப்பு மொழியியல் செய்த ஆய்வுகளையும் மாற்றிலக்கணக் கோட்பாடுகள் என்பது மொழியின் இயல்பை புரிந்துகொள்வது என்று விளக்கினார்.
மாற்றிலக்கண முன்மாதிரியை முதன் முதலில் தொடங்கியவர் நோன்சாம்ஸ்கி என்றார்.மேலும் இலக்கணம் என்றால் என்ன? மாற்றுவிதிகளை எவ்வாறு உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது போன்ற செய்திகளை விளக்கினார்.


அடுத்த அமர்வில் திராவிடப் பல்கலைக்கழகக் கணினிமொழித் துறைப்பேராசிரியர் முனைவர் செல்வராஜ் அருள்மொழி அவர்கள் சொல்வளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



சொல்வளங்களின் பயன்பாடு இயற்கைமொழியாய்விற்கு மிக முக்கியமானது, ஒரு மொழியின் சொற்களை எடுத்து பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முறையில் சொல்வளம் பயன்படுகிறது. தற்பொழுது இந்திய மொழிகளில் 11 மொழிகளுக்கு மட்டும் சொல்வளம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும், இது 2012 பிப்ரவரி முதல் மத்திய அரசு இணையத்தில் வெளியிட உள்ளனர் என்றும் கூறினார். பல இணையதளங்களுக்குச் சென்று சொல்வளம் குறித்தச் செய்திகளைப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு நேரடிக்காட்சிமூலம் எடுத்துக்காட்டினார்.


மதிய அமர்வில் பாரதியார் பல்கலைக்கழக மேணான் மொழியியல் துறைத் தலைவர் சி.சண்முகம் அவர்கள் பொருணமையியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.




பொருண்மையியல் என்றால் என்ன்? பொருளின் திறன் என்ன என்று விணா எழுப்பி விளக்கினார்.
பொருண்மையியலின் ஆராய்ச்சி மொழியைச்சார்ந்த ஆராய்ச்சி, மனதை சார்ந்த மொழி ஆராய்ச்சி, பொறி அடிப்படையிலான மொழி ஆராய்ச்சி என்ற முறையில் அமைந்துள்ளது.
உடலியியல்,உளவியல், சமூதாயவியல், உலகவியல், பண்பாட்டுக்கூறுகள் அடிப்படையில் பொருண்மையிலை ஆராயும் உத்தியையும் கையாண்டால் நாம் கணினிமொழிக்குத் தேவையான பொருண்மைக்கூறுகளை நாம் எழிதில் உருவாக்கிவிடலாம் என்றார்.

இறுதியாக விவேகானந்த கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு.முத்தையா அவர்கள் நன்றி கூறினார்.

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.


நிகழ்ச்சியில் பேராசிரியர் மு.முத்தையா மற்றும் பேராசிரியர்கள் கி.அரங்கன்,சி.சண்முகம். தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம்.


சிறப்பு சொற்பொழிவாளர்களுடன் மலேயா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்







Monday, January 23, 2012

23-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

|2 comments
SRM பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள் தொடரியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.

அடுத்த அமர்வில் அண்ணா பல்கலைக்கழக மேனாள் கணினித்துறைப் பேராசிரியர் வெ.கிருட்ணமூர்த்தி அவர்கள் ஓளிவழி எழுத்துரு அறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.எளிமையான விசைப்பலகை உருவாக்கம் மற்றும் எழுத்துணரியின் பயன்பாடுகள், அச்சுப்பிரதியைக் கணினித்திரையில் தோற்றம் செய்தல், எழுத்துப்பிழையைச் சரிபார்த்தல் என தமிழின் முக்கிய செயல்பாடுகளையும் மென்பொருளையும் விளக்கிக்காட்டினார்.


மதியம் அமர்வில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் மொழித் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் உரையை முன்வைத்தார்.



கணினிமொழி உருவாக்க வேண்டுமெனில் தமிழ்மொழியில் புதிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும் என கூறினார்.
பொருளடைவை உருவாக்க வேண்டும், விகுதிகளைப் பிரித்து அதற்குத் தனியாகப் தொகுப்புச் செய்யவேண்டும்.
புணர்ச்சி இலக்கணத்தையும் பிரித்து ஆய்வு செய்யவேண்டும் என்று கூறினார்.

அடுத்த அமர்வில் முனைவர் இரா.சண்முகம் உருபனியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் ஒரு சொல்லைப் பிரித்து அதன் இலக்கணக் கூறுகளைப் பிரிக்கும் வசதியைக் கணினி எவ்வாறு செய்கிறது என்று விளக்கினார்.


பயிலரங்கில் கலந்து கொண்ட மயிலாடுதுறை அ.வ.கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்

மதுரை விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.முத்தையா அவர்கள் பயிற்ச்சியில் கலந்துகொண்ட காட்சி


Sunday, January 22, 2012

22-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

|1 comments
குமரகுரு பொறியியல் கல்லூரி கணினித்துறைத் தலைவர் முனைவர் ஆ. முத்துக்குமார் அவர்கள் நிரலாக்க மொழிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



நிரலாக்கம் என்றால் என்ன?
நிரலாக்கத்தின் தொடக்க நிலையைச் சுட்டினார்.
உலக அளவில் ஆசிரியர்கள் ஒன்றுகூடி ஒரு இதழ் தொடங்கவேண்டும் என்று கூறினார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் க.இரவிசங்கர் அவர்கள் பேச்சொலியியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


பேச்சொலிகள் என்றால் என்ன? உயிரொலிகள், மெய்யொலிகள், ஓருயிர்கள், ஈருயிர்கள் தோன்றும் விதம் பற்றி விளக்கினார்.

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, (புதுச்சேரி)தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இணையம் என்றால் என்ன்? அதன் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இணையம் தோற்றம் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய வெளிநாட்டு அறிஞ்சர்களின் பங்களிப்பு என விளக்கம் தந்தார். பிறகு வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் நாம் எவ்வாறு வலைப்பூவை உருவாக்குவது என்று கூறினார்.

இறுதியாக விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளை எழுதிய தகவலுழகன்(ரெ.லோகநாதன்)விக்கிப்பீடியாவைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்.


பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.


ஒருங்கிணைப்பாளர் இல.சுந்தரம் மற்றும் பேராசிரியர்கள்.






Saturday, January 21, 2012

SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு

|2 comments

Srm பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இனிதே 20-01-2012 அன்று முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களாளும்,நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தின் தலைவர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களாலும் srm பல்கலைக்கழக வேந்தர் திரு.பச்சமுத்து தலைமையில் தொடங்கியது.


21-01-2012 சனிக்கிழமைக் காலையில் குறியாக்கம் என்ற தலைப்பில் மேனாள் கணினித்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ப.செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


தமிழ்க் குறியீட்டுமுறைகளின் தோற்றம் அதன் வளர்ச்சி, இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்க் குறியீடுகள் எவ்வாறு உள்ளன. யூனிகோடு எழுத்துருவின் தோற்றம் அதில் தமிழ்மொழி இடம்பிடித்தச் சூழல் என அழகாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறினார்.

அடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள் மொழித்தரவுத் தொகுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.


மொழித்தரவுகள் என்றால் என்ன? மொழித்தரவுகள் முதன்முதலில் 1987 ல் தொடங்கப்பட்டது என்று கூறினார்.
ஆங்கிலத்தில் 4000 மில்லியன் கோடி மொழித்தரவுத் தொக்குப்புகள் செய்துள்ளனர்.தமிழ்மொழியிலும் 500 மில்லியன் தமிழ் சொற்கள் தொகுத்து வெளியிடவேண்டும் என்று கூறினார்.இறுதியாக மொழித்தரவுகளின் பயன்பாடுகளைப் பற்றியும் எடுத்து விளக்கினார்.

மதியம் தொடங்கிய அமர்வில் முனைவர் ந.நடராசபிள்ளை அவர்கள் சொல்வகை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



தொல்காப்பியர் குறிப்பிடும் சொல்வகையைக் கொண்டு மொழியியல் கோட்பாடுகளோடு விளக்கினார். மேலும் கணிப்பொறிக்கு எவ்வாறு சொற்களை உள்ளீடு செய்வது அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதும் அவற்றைப் போக்க என்ன வழிமுறைகளைக் கையாள்வது என்ற விளக்கத்தையும் தெளிவுப்படுத்தினார்.

இறுதியாக முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் இலக்கணம், மொழியியல் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் மொழியியலின் தேவையையும் விளக்கினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வாளர்களில் ஒரு பகுதி






Friday, January 13, 2012

பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியில் தமிழ் இணையம்- பயிலரங்கம்

|1 comments


ஒரத்தநாட்டில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் மகளிர் கல்லூரியில் 11-01-2012 புதன் அன்று தமிழ்த்துறையின் சார்பாகத் தமிழ இணையம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.விழாவின் தொடக்கமாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சரளா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.





கல்லூரி முதல்வர் திருமதி மணிமேகலை அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்.



கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை மற்றும் தமிழ்த்துறைத் தலைவி முனைவர் சரளா அவர்கள்.

அடுத்து நான் தமிழில் இணையத்தின் தோற்றம், அது கடந்து வந்த பாதை, வளர்ச்சி நிலை மற்றும் தமிழ் இணையாதளங்கள், அவற்றில் நாம் எவ்வாறு எழுதமுடியும் என்பதையும், அதற்கு எந்தெந்த தமிழ் எழுத்துருவை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்து விளக்கினேன்.

பிறகு தமிழ் வலைப்பூ என்றால் என்ன? அதனை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பதையும் விளக்கினேன்.
இறுதியாக முதுகலை மாணவிகளுக்குத் தேவையான தமிழ் நூல்கள் தமிழ் இணையக்கல்விக் கழகம் இணையப்பக்கத்தை காட்டி அதில் உள்ள தமிழ் நூல்களை எடுத்துக்காட்டினேன்.



பயிர்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்,பேராசிரியைகள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வளர்ச்சிப் பணியையும் அவர்கள் சேகரித்துள்ள ஓலைச்சுவடிகளையும் எடுத்துக் காட்டினேன்.மின்குழுமத்தின் இன்றையத் தேவைகளையும் குறிப்பிட்டுக் காட்டினேன்.
தமிழ்விக்கிப்பீடியாவின் இன்றையத் தேவையினையும் அதில் நாம் எவ்வாறு எழுதுமுடியும் என்ற வழிமுறையையும் விளக்கினேன்.



இறுதியாகத் தமிழ் துறைப் பேராசிரியை முனைவர் சுமதி அவர்கள் நன்றி கூறினார்.






தமிழ் இணையம் சிறப்பு சொற்பொழிவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்துகொண்டனர். நண்பரும், பேராசிரியருமான திரு. துரைமுருகன்,மற்றும் கண்ணன் எம்மை வழி அனுப்பி வைத்தனர்.

Thursday, January 12, 2012

உலகத் தமிழர்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

|0 comments
உலகம் உயரவேண்டும்
உண்மை விளங்க வேண்டும்
தமிழர்களின் வாழ்வு ஒளிர்வுபடவேண்டும்
தை மாதம் தமிழ் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்ப்போம்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய போங்கல் நல்வாழ்த்துக்கள்.














அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.




Friday, January 6, 2012

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்இணையமும் தமிழும் தலைப்பில் சொற்பொழிவு

|0 comments
இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒரத்தநாட்டில் இயங்கிவரும்
பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 11-01-2012 புதன் அன்று காலை 10-30 மணிக்குத் தமிழ்த்துறையில் சிறப்புரையாற்ற உள்ளேன்.

Wednesday, December 21, 2011

SRM பல்கலைக்கழத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
அன்புடையீர் வணக்கம்

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து தமிழ்க் கணினிமொழியியல் (Tamil Computational Linguistics) துறையில் ஆர்வமுடைய கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் பயிற்சியளிக்க, சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது.


பயிலரங்கில் தமிழியல், பிற மொழிகள், மொழியியல், கணினியியல் துறைகளைச் சேர்ந்தவர்களே பங்கேற்கமுடியும்.

மொழித் தொழில்நுட்பம் (Language Technology), பேச்சுத் தொழில்நுட்பம் (Speech Technology) ஆகிய துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களும் பிற வல்லுநர்களும் பயிற்சியளிப்பார்கள்.

பயிலரங்கம் 20.01.2012 முதல் 30.01.2012 வரை 11 நாட்கள் சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
பதிவுக் கட்டணங்கள் ஏதும் இல்லை,

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 06.01.2012-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு
பேராசிரியர் இல.சுந்தரம்
அலைபேசி எண் 9842374750


Wednesday, December 14, 2011

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூ உருவாக்கம்

|2 comments
14-12-2011 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள், இணையத்தில் எவ்வாறு தமிழ் வலைப்பூக்களை உருவாக்குவது என்ற முறையையும் உருவாக்கிக் காட்டியுள்ளேன்.

கூட்டத்தில் செண்பகத்தமிழ் அரங்கு பொறுப்பாளர் திரு இராச.இளங்கோவன்,


சங்க துணை அமைச்சர் பெ.உதயகுமார்,புலவர் சி.சிவக்கொழுந்து,கீ அரங்கராசன் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


கூட்டத்தில் கலந்துகொண்ட மாரிமுத்து என்ற மாணவனுக்குப் பாரதி என்ற பெயரில் வலைப்பூ ஒன்று உருவாக்கிக்காட்டப்பட்டது. அதனை அந்த மாணவனே உருவாக்கும் படம்.





Friday, December 2, 2011

இணையத்தில் வலைப்பூக்கள் உருவாக்குதல்

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 14-12-2011 புதன் கிழமை மாலை 6-30 மணிக்கு வலைப்பூக்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளேன். பங்குபெருபவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Friday, November 25, 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

|0 comments
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.போட்டியில் அனைவரும் கலந்து்கொள்ள வேண்டுகின்றேன்.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்

http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

நன்றி திண்ணை.காம்

Monday, November 21, 2011

சென்னையில் இணையத்தமிழ் கருத்தரங்கம்

|2 comments

முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் இருபதாவது மாதாந்திர கூட்டம் சென்னையில் 20-11-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் NTR சாலையில் மாலை 6-00 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் சங்கத்தின் தலைவர் திரு.மாறன் அவர்கள் ஆவார்.


சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான்





கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து கொண்டவர்கள் அரசு அலுவளர்கள், தொழிலாளர்கள், தொழில் நிருவனத் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.



இச் சிறப்புரையில் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடுகள் ,எதிர்வரும் காலங்களில் இணையத்தின் உதவியுடன் தமிழை வளர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகள் பற்றியச் செய்திகளையும் எடுத்து விளக்கினேன்.
மேலும் முத்துக்கமலம், பதிவுகள்,திண்ணை,வார்ப்பு இணைய இதழ்களைக் காட்டி இணைய இதழ்களுக்கு எவ்வாறு எழுதுவது என்று சுட்டிக்காட்டினேன்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அவசியத்தையும் அதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் பேசப்பட்டது.
வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.


மின்குழுமங்களின் பங்களிப்பையும் அதில் நாம் தொடுக்கும் வினாவிற்கு தகுந்த விடையை கொடுக்கும் உலகத்தமிழர்களையும்(மின் குழுமம், அன்புடன் குழுமம்,அழகி குழுமம், கீற்றுக்குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்) காணும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இணையம் தொடர்பான வினாக்களைக் கேட்டார்கள்.


1.இணையத்தில் எவ்வாறு தமிழில் எழுதுவது?
2. இணையத்தில் எந்த தலைப்பைத் தேடினாலும் பதில் கிடைக்குமா?
3. நம் கருத்தை எவ்வாறு இணையத்தில் பதிவேற்ற இயலும்?
4.மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?
5.வலைப்பூ என்றால் என்ன? அதனை உருவாக்கும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்.

இதுபோன்ற பல வினாக்களுக்கு செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.




இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பார்வேந்தன் அவர்கள் நன்றி கூறினார்.


இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இடம் கொடுத்த சங்கத்தின் செயலாளர் திரு ராமன், பொருளாலர் திரு.கன்னியப்பன், துணைச்செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும் வலைப்பூவின் ஆசிரியருமான சென்னையைச் சேர்ந்த திரு.சேதுபாலா அவர்களும் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


















Wednesday, November 16, 2011

முத்தரையர் எழுச்சி சங்க கூட்டத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி

|1 comments
முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் கூட்டத்தில் இணையத்தி தமிழ் வளர்ச்சி சிறப்புரை.





முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் இருபதாவது மாதாந்திர கூட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(20-11-2011) மாலை சரியாக 4-30 மணியளவில் சென்னையில், கோடம்பாக்கத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
அவரைத்தொடர்ந்து தமிழக அரசியல் வாரப்பத்திரிக்கையின் துணை ஆசிரியர் திரு.பி. அரங்கநாதன் அவர்கள் உள்ளாட்சி தேர்தல் ஓர் விமர்சனம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
கூட்டத்தில் சென்னையைச்சேர்ந்த முத்தரையர்கள் மற்றும் இணையத்தமிழ் ஆர்வளர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இடம்: 120/131, NTR.தெரு,ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

திரு.மாறன்.
அலைபேசி: 9840882829