/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///
Showing posts with label இணையப்பயிலரங்கம். Show all posts
Showing posts with label இணையப்பயிலரங்கம். Show all posts

Thursday, February 26, 2026

இணையத்தமிழ் பயிற்சி. அழகப்பா பல்கலைக்கழகம்

|0 comments

 



வி வி எல் மோட்டார் யமஹா- வி விஜயலட்சுமி வீரபாண்டியன் நினைவு அறக்கட்டளை கணினி தமிழ்ப் பயிலரங்கு பாரம்பரியமிக்க அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இனிதே இன்று தொடங்கி நிகழ்வு சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய மூத்த பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறை தலைவர் முனைவர் சு.இராசாராம் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் செந்தில் ராஜன் அவர்கள் நொடிக்கு நொடி இந்த நுட்பம் மேன்மை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து  வீரபாண்டியன் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் திரு வி வீரபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியில் ஏராளமான தமிழ் துறை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயன் பெற்றனர். எனவே எதிர்கால திட்டத்தில் இணையத்தில் தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் குறிப்பிட்டார்.



Tuesday, August 19, 2025

மொழியில் நுணுக்கப் பயிற்சி - சென்னை

|0 comments

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை,  பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான மொழியில் நுணுக்கப் பயிற்சி   சென்னை மாநகராட்சியை சார்ந்த பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரு மாத கால - 27 நாட்கள்  (15-07-2025 - 11-08-2025) பயிற்சியாக நடைபெற்றது. 

இந்தப் பயிற்சியில் 28 - 7  - 2025 அன்று இணையத்தமிழ் என்ற தலைப்பில் வருகை தந்திருந்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திறம்பட ஒருங்கிணைப்பு செய்த உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்களை பாராட்டுகின்றேன்.






Monday, August 18, 2025

செயற்கை நுண்ணறிவு - இணையவழி உரை

|0 comments

 அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை, கரூர் -   புனித சிலுவைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி  இணைந்து ஒரு வார காலம் இணைய வழியில் பேராசிரியர்களுக்கு நடத்திய நிகழ்வில் 22- 7 - 2025 அன்று செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் உரை வழங்கி இருக்கின்றேன்.  இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட பேராசிரியர்கள் இணையவழியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



செயற்கை நுண்ணறிவும் - தமிழ் ஆய்வுகளும்

|0 comments

12- 6- 2025 திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்க்குச் செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வழங்கிய தருணம். இந்தப் பயிற்சியில் ஜமால் முகமது கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்புச் செய்த பேராசிரியர் செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தமிழ் ஆய்வுகளும் செயற்கை நுண்ணறிவு என்ற பொருண்மைக் கருத்துக்களை செவிமடுத்த பேராசிரியர்களுக்கு நன்றி.

காவிரிக் கரையில் கணினித்தமிழ்ப் பயிற்சி

|0 comments

 12-03-2025 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணித்தமிழ் பயிற்ச்சி வழங்கிய நிகழ்வு