தறிநாடா நாவலில்
பாத்திரப்படைப்பு
பி.
சத்திய மூர்த்தி.,
ஆய்வியல்
நிறைஞர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம்
– 624 302
முன்னுரை:
இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
பொன்னு:
தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.
பரமேஸ்வரன்:
மில் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்த போது நடந்த பொது துப்பாக்கி சூட்டில் இறந்து பட்டார். இவரின் இழப்பு ஊர் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவன் இறந்தவுடன் அவன் சொர்க்கத்துக்கு செல்கிறானா, இல்லை நரகத்துக்கு செல்கிறானா, என்பது இப்பூமியிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
இவன் சொர்க்கத்திற்குதான் செல்கிறான் என்பது இவ்வூர் மக்களின் பேச்சு தீர்மானித்தது. இவர் இறந்த பின்பும் இப்பூவுலகில் வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தெருவிற்கு
“தியாகி இல்லம்” என்று பெயர் வைத்தனர் பரமேஸ்வரன் என்றப் பெயரை மறந்து தியாகி என்றே அழைத்தனர். இவரின் வீட்டைக்கடந்து செல்கிறபோது ஊர்மக்கள் அடைகிற ஆனந்தம் அளப்பறியது.
காசி:
தனது சம்சாரம் இறந்து போனப் பின்பு காவிஉடையை அணிந்து கொண்டார். திருமணம் செய்துவிட்டு விக்ரமாதித்யன் போல ஊரில் ஆறுமாதமும், புண்ணியஸ்தலமான காசியில் ஆறுமாதமும் என்று தனது வாழ்வைக் கழித்து வந்தார். குட்சியஜல்இருந்து திரும்பும் போழுது காசி மாலை தீர்த்தம் சாமி உருவங்கள் என்று வாங்கிவந்து அதைத் தன்னுடைய உறவினர்கள்,
ஜாதிக்காரர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு மறுபடியும் காசிக்குச் செல்வார். இப்படித்தான் இவரின் வாழ்வு ஏகாந்தமாய் ஓடிக்கொண்டிருந்தது.
ரங்கச்சாமி:
ரங்கசாமி தறிநெய்யும் போது சீரான தளத்திற்கேற்ப கால்களை மாற்றிக் கொண்டு “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி” என்று முணுமுணுத்துக் கொள்வார். அதை ராகம் போட்டுப் பாடுவதை விட இப்படி முணுமுணுப்பதுதான் அவருக்குப் பிடிக்கும் இவருடைய உடம்பானது ஒல்லியாக இருக்கும் என்று பலர் கூறுவர். மிகவும் சிரம்மப்பட்டு தன்னுடைய மகனைப்
படிக்க வைத்தார். இவருக்கு வடிகஞ்சியானது மிகவும் பிடிக்கும்.
நாகமணி:
அழுக்குப் புடவையுடன் இருக்கும் நாகமணி கல்யாணம் ஆகிஇருப்பது
வருடமாகியும் ரங்கசாமியை (கணவன்) விட்டுப்பிரியாமல் கணவனுக்கும், பிள்ளைக்கும் “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தாள். இல்லறத்தை மட்டும் பேணிக்காத்த அவள்
“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சிச் சொல்லல் பாவம்”;
என்ற பாரதியின் கூற்றை மறந்து “பலசாதி பலவட்டற ஜாதி” என்று கீழ்ச்சாதி மக்களை இழிவாகப் பேசும் தன்மை கொண்டவளாக விளங்குகின்றாள்.
அருணாச்சலம்:
பதறிய காரியம் சதறிப்போகும் என்றப் பழமொழிக்கேற்ப அருணச்சலம் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் அவசரபுத்தி உள்ளவன். இவன் நெசவாளர்களைப் பற்றி கூடினா கோ~ம் போடறகோஹ்டி என்று சொல்லுவான்.
அவன் போராட்டத்திற்குச் செல்லும்போது தறிநாடாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுவான் எதிரில் படும் முதலாளிகளைக் குத்தலாம் அப்படியாவது விடிவு காலம் பிறக்குமா என்று நினைத்தான் எங்களுடைய போராட்டத்திற்காக நான் தீக்குளிப்பேன் என்று காவல் துறையினர் இவனை எச்சரித்தனர். போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இவனுடைய உயிர் பிரிந்தது.
மக்கள் இவனைப் பற்றி பல்வேறாக பேசினர். துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை யென்றால் தானே தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கூறியதாக மக்கள் கூறினர்.
தர்மன்:
தர்மன் வீடானது நெசவாளர்களுக்குப் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. இவருடைய வீட்டில் எப்போதும் சீட்டாட்டம் நடந்துகொண்டே இருக்கும் தர்மன் முன்பெல்லாம் மாசம் மூணு பாவு நெய்சாச என்று கேட்பான். அதுஎன்ன மூணுபாவு முந்தியெல்லாம் மாசம் மூணு மழை பெஞ்சுதான்னு ராசா கேட்கிற கதைதா சரி அதென்ன மாசம் மூணு மழை “நீதிராசாவுக்கு ஒரு மழை, பெண்ணுக்கொரு மழை, நல்லவங்களுக்கு ஒரு மழைன்னு கணக்கு” மாசமூணு மழை என்றால் நீதிராசாவுக்கு ஒரு மழையும்
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
என ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க நல்லவர் பொருட்டு ஒருமழையும் பொய்யும் என தர்மன் கூறுகிறார். இப்பொழுது நீதிராசாவும் இல்லை நல்லவரும் இல்லை மழையும் பெய்வதில்லை என்றார்.
முடிவுரை:
இந்நாவலில் குறிப்பிடும் ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன. பொன்னு என்பவன் பகுத்தறிவு நிறைந்தவனாகக் காணப்படுகிறான். பரமேஸ்வரன் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்து தியாகி என்னும் பட்டத்தோடு இன்றும் திகழ்கிறான். ரங்கசாமிக்குப் பல்வேறு குடும்பச் சிக்கல் இருந்தாலும் தன்னுடைய மகனைப் படிக்க வைத்துச் சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கி பார்ப்பதே இவருடைய கனவாகும். நாகமணி சிறந்த குடுபத் தலைவியாக இருந்த போதிலும் மற்ற சாதியைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கம் அவளிடம் இருக்கிறது.
அருணாச்சலம் அவசர புத்தியுடையவன். ஏந்தவொரு செயலைச் செய்தாலும் அவனிடம் வேகம் மட்டுமே இருக்கும் விவேகம் இருக்காது. துர்மன் வீடானது பொழுதுபோக்கு அம்சமாக நெசவாளர்களுக்கு இருக்கிறது பல்வேறு தத்துவங்களை பேசக்கூடியவன்.