/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, January 31, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (30-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம் நிறைவுவிழா

|2 comments
காலை அமர்வில் AU-KBC,ஆய்வுமையத்தின் பேராசிரியை ஷோபா அவர்கள் தற்சுட்டு பதிலிடுபெயர் தீர்வு (ANAPHORA RESOLUTION) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய மொழிகளின் ஆராய்ச்சியில் திராவிடமொழிகளுக்கான பதிலிடுபெயர்கள் எவ்வாறு உருவாக்கம் பெறுகிறது என்று விளக்கினார்.


பேராசிரியை ஷோபா அவர்களுக்கு ந.தெய்வசுந்தரம் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குதல்

அடுத்த அமர்வில் பேராசிரியர் நாகராஜன் அவர்கள் RADIO VOICC என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன்று கல்வி பரிமாற்றம் பெற்றுவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு மிகமுக்கியக் காரணம். தற்பொழுது மாணவர்களின் ஆசிரியர் கணினியாகி விட்டது. இனி மின் கல்விதான் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.

பேராசிரியர் நாகராஜன்

மேலும் மோடலர் என்ற மென்பொருளைக்கொண்டு பாடம் நடத்த தேவையான அனைத்து திறனையும் கொண்டுள்ளது. மோடலின் மூலம் பல பல்கலைக்கழகங்களின் பாடங்களை காணமுடிகிறது. என்று கூறினார்.


மாலை நான்கு மணியளவில் நிறைவு விழா இனிதே தொடங்கியது.


நிறைவு விழாவில் தமிமிழ்த்துறைப் தலைவர் வ.தனலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மயிலை எழுத்துருவை உருவாக்கிய கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை புரிந்திருந்தார்.
கு.கல்யாணசுந்தரம்


அவர் தமிழ்மொழியையும் கணினி அறிவையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ் இணைய மாநாடு போன்று இப்பயிலரங்கம் நடந்துள்ளது. இங்கு நடந்த பயிலரங்க நிகழ்வுகளை மின் வடிவில் இணையத்தில் ஏற்றம் செய்தால் உலகத்தமிழர் அனைவருக்கும் இது பயன்படும் வகையில் அமையும் என்றார்.


அடுத்துப் பயிலரங்கத் தொகுப்புரையாக முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் பதினொரு நாட்கள் நடந்த நிகழ்வின் தொகுப்பாக இதுபோன்ற கணினித்தமிழ் பயிலரங்கம் எங்கும் நடைபெறவில்லை என குறிப்பிட்டார். அனைவரும் சேர்ந்து தமிழ்மென்பொருள்களை உருவாக்கவேண்டும் என்றார். அதற்குத்தான் இந்த பயிலரங்கம் என்று குறிப்பிட்டுச்சென்றார்.


இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தின்(cill-ldcil) ஆய்வு மாணவார் திரு.பிரேம் அவர்கள் நாங்கள் இங்குதான் முதன்முதலில் கணினிமொழியும் டமிழ்மொழியும் இணைந்து நடந்த பயிலரங்கமாகப் பார்க்கின்றோம்.கணினியின் சிறப்பும் தமிழ்மொழியின் சிறப்பையும் நன்கு இப்பயிலரங்கம் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
திரு.பிரேம்

அடுத்துப் பயிலரங்கில் கலந்துகொண்ட A.V.C கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் பயிலரங்கில் நடந்த நிகழ்வுகள் குறித்துப் பேசினார். தமிழைக் கணிதமொழி என்பதை நாங்கள் இங்குதான் உணர்ந்தோம். இலக்கணத்தை முழுமையாகக் கற்றாவர்கள்தான் கணினித்துறையில் புதிய மென்பொருளை உருவாக்கமுடியும், நாங்கள் இங்கு பதிவேற்றம் செய்த கருத்துக்களை நல்லமுறையில் பதிவிரக்கம் செய்தாக வேண்டும். இப்பயிலரங்கில் கலந்துகொண்டவர்களில் தமிழ்விக்கிப்பீடியா குறித்தச் செய்திகளைத் தெளிவுபடுத்திய தகவலுழகன் மற்றும் தமிழ் வலைப்பூக்களைப் பலருக்கு உருவாக்கித் தந்த முனைவர் துரை.மணிகண்டன் அவர்களின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது என்றார்.
பேராசிரியர் தி.நெடுஞ்சுழியன்.

பேராசிரையைத் தொடர்ந்து குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியை இந்த பயிலரங்கம் தமிழகப் பாடத்திட்டத்தை மாற்றும் நோக்கில் அமைந்துள்ளது. இனியாவது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இணையத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் ஒரு பாடத்தை உருவாக்க வேண்டும் என்றார். மேலும் இப்பயிலரங்கை சிறப்பாக நடத்திய இந்த நிருவனத்திற்கு மிக்க நன்றியுடையவர்களாக இருப்போம் என்றார்.

இலங்கையிலிருந்து வந்திருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம் நாங்கள் இலங்கையில் தமிழில்தான் பேசுகின்றோம் ஆனால் இங்கு தமிழில் பேசுவதைப் பலர் தவிர்க்கின்றனர். தமிழ்ச்சார்ந்த மென்பொருள்கள் இன்னும் உருவாக்க இந்த பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.


சு.லெ.அப்துல்ஹலீம்

மலேசியாவின் மலேயப் பலகலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர்களில் ஒருவரான சல்மா அவர்கள் தமிழ்க்கணினி மொழியியல் ஆய்விற்கு இந்த பயிரங்கம் எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது என்றார். மேலும் மலேசிய மொழிகளில் சொல்திருத்தக் குழுமத்தில் நாங்கள் ஆறுபேரும் இடம்பெற்றுள்ளோம். எனவே இது எங்களுக்கு மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறோம் என்றார்.

நிகழ்ச்சியின் அடுத்ததாக நிறைவுரையை எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமத்தின் தலைவர் திரு ப. இரவி அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்த பதினொரு நாள் பயிலரங்கம் வந்திருந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

சிறப்புரை வழங்கிய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்கள் இந்தியாவின் மிக முக்கியமானப் பல்கலைக்கழகங்களில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகமும் ஒன்று. இப்பலகலைக்கழகத்தில்தான் தமிழ்ப்பேராயம் என்ற ஒரு துறைத்தொடங்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்கலைக்கழக வேந்தரின் தமிழ்ப்பற்றுதான் காரணம் என்றார்.

இறுதியாகப் பயிலரங்கில் கலந்துகொண்ட 100 பேராளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பதினொருநாள் சிறப்புரை நடத்திய பேராசிரியர்களின் செய்திகளை குறுந்தகடாக உருவாக்கிக் கொடுத்தனர்.



இறுதியாக கணினித்தமிழ்க் கல்வித்துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு.இல.சுந்தரம் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியை மிக அழகாகத் தொகுத்துவழங்கியவர் கணினித்தமிழ்க் கல்வித்துறையின் துணைப்பேராசிரியர் திரு. ஆ.முத்தமிழ்ச் செலவன் ஆவார்.


பயிலரங்கில் கலந்துகொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் உ.அலிபாபா அவர்கள்.



பயிலரங்கில் கலந்துகொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன், மற்றும் கோயம்புத்தூர் வெங்கடேஸ்வரா கல்லூரியின் கணினிதத்துறைப்பேராசிரியர் எ.சோமசுந்தரம் அவர்கள்.








Sunday, January 29, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (29-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும்(cill-ldcil) இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஒன்பதாம் நாளில் காலை அமர்வில் இந்திய அறிவியல் கழக மின்னியல் துறைப்பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ணன் அவர்கள் உரை ஒலிச் செயலி (TXET- TO- SPECH SYNTHESIS) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ணன் அவ்ர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ
நினைவுப்பரிசு வழங்குதல்

தமிழ்மொழியில் இன்னும் கணினித்தொடர்பான ஆய்வு செம்மையாக தொடங்கவில்லை என்றும் அதற்கு நாம் புதுதடம் போடவேண்டும் என்றார்.
தமிழ்மொழியில் நாம் தங்குதடையின்றி நிரலாக்கம் செய்யவேண்டும். அதை நாம் வெகுவிரைவில் தொடங்க வேண்டும் என்றார்.
படிக்கின்ற செய்தியைக் கேட்க வேண்டும், நாம் பேசுவதை கணினி எழுதவேண்டும். பார்வை இழந்தவர்கள் புத்தைகத்தை வாசிப்பதை கேட்கவேண்டும். பேச இயலாதவர்களுக்கு அவர்களின் இயக்கமுறையில் பேசக் கற்றுக்கொடுக்கவேண்டும்.
இந்த வசதிகள் பிறமொழிகளுக்கு ஒரு சில உள்ளன.


பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ண

அம்ர்வில் துணைவேந்தர் பொன்னவைக்கொ, திருமதி உமா அவர்கள்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது பலர் பேசுவதை நாம் சேமித்து அதனைக் கேடகவேண்டும் அவ்வாறு கேட்கும்போது இல்லாத வார்த்தைகள், புதுமையான வார்த்தைகள், வட்டாரவழக்குச் சொற்களை நாம் இணைக்க முடியும். இதற்குப் பல இணையதளங்களில் அதற்கான சேவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலுள்ள மாவட்டப் பெயர்கள், மக்களின் பெயர்களின் என தொகுத்து வெளியிட்டால் நாம் புதிய உரை செயலியை உருவாக்கலாம் என்றார்.


அடுத்த அமர்வில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் இயல்மொழி ஆய்வு(NATURAL LANGUAGE PROCESSING) என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். நாம் கணினியில் படிப்படியாகத்தான் முன்னேற்றம் அடையமுடியும் என்று பேசினார். நம் தமிழ்மொழியில் பொறியைக் கொண்டு இயல்மொழிச் செயலாக்கம் செய்யவேண்டும் என்றார்.
கணிப்பொறியைப் பேசவைக்கும் முயற்சி 1960- ல் மூகாம்பிகை கல்லூரி மாணவர்கள் முயற்சி எடுத்து செய்தார்கள். அதற்குத் தமிழ்மொழியில் நிரலாக்கம் செய்ய வேண்டும். இனி யாரக இருந்தாலும் தமிழில் நிரலாக்கம் செய்வோம். உயிர் எழுத்து. மெய்யெழுத்து, உயிர்மை எழுத்து என்ற வகையில் பிரித்து மென்பொருளைத் தமிழில் உருவாக்கமுடியும் அதறகு இயல்மொழி ஆய்வுத் தேவை என்றார்.


பேராசிரியை திருமதி உமா அவர்கள் நாம் கணினியில் திருக்குறளை உள்ளீடுசெய்தால் கணினியே உரைசொல்லவேண்டும். மேலும் மருத்தவரின் ஆளுமைத்திறன், மருந்தக செயல்பாடுகள், அளவில் பெரிதாக இருக்கும் கட்டுரையைச் சுருக்கித்தருவது, போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்படவேண்டும் அதற்கு இந்த இயல்மொழி ஆய்வு முக்கியமாக இருக்கும் என்றார்.
அமர்வில் கலந்துகொண்ட பாண்டிச்சேரி பல்கலைக்கழகப்பேராசிரியை



மதிய அமர்வில் யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையின் தலைவர். திரு. இராமதாஸ் அவர்கள் திறவூற்று மென்பொருள் (open source software) உரை நிகழ்த்தினார். நாம் எந்த ஒரு மென்பொருள் வாங்கினாலும் நம் தேவைக்கேற்ப மாற்றம் செய்துகொள்ளும்படியான முறையில் இருக்கவேண்டும். மேலும் அதிலிருந்து வேறொரு மென்பொருளை உருவாக்கச் சிந்திக்க வேண்டும். மென்பொருள்கள் அனைத்தும் தகவலைப் பகிர்ந்துகொள்ள பயன்படுகிறது என்றார்.


திரு. இராமதாஸ்

முனைவர் பொன்னவைக்கொ அவர்கலூடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம், கோயம்புத்தூர் வெங்கடேஸ்வரா கல்லூரியின் கணினிதத்துறைப்பேராசிரியர் எ.சோமசுந்தரம்.

ஏ.வி.சி கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்.
அமர்வில் கலந்துகொண்டவர்கள்.


அமர்வில் கலந்துகொண்டவர்களின் குழுப்படம்


திட்ட ஒருங்கிணைப்பாளர் இல. சுந்தரம், தமிழ் இணையக்கல்விக் குழுமத்தின் பேராசிரியர் திரு,ஜானகிராமன், குற்றாலம் ஆதிபராசக்தி தமிழ்த்துறை ப்பேராசிரியை.












Saturday, January 28, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (28-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|1 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும்(cill-ldcil) இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று எட்டாம் நாளில் காலை அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் பல்தொழில்நுட்ப துறைப்பேராசிரியர் முனைவர் க. இராஜன் அவர்கள் பொறிமொழிக் கற்றல்(machine leraring) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



முனைவர் க. இராஜன்

இயந்திரங்களுக்கு அறிவை எவ்வாறு கொடுக்கமுடியும் என்ற நோக்கில் உரை அமைந்திருந்தது. ஒரு சொல்லை உள்ளீடு செய்யும் முன் எழுத்துக்களை பிரிக்க வேண்டும் பிறகு 2,3,4,5, எழுத்துக்கொண்ட வார்த்தைகளைப் பிரித்து பொருள் இலக்கணமும் அதுதொடர்பான தமிழ்ச் செய்யுள் பாடல்களை இடும் நோக்கில் கணினிக்கு அறிவைக் கொடுக்கவேண்டும்.

அடுத்த அமர்வில் பேரா.ந.தெயவசுந்தரம் அவர்கள் சொற்செயலாக்கம்(WORD PROCESSING) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மனித மூளைக்கு கற்றுக்கொடுப்பதுபோல கணினிக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறினார்.

1. விதியின் அடிப்படையில்
2. புள்ளியியல் அடிப்படையில்
3. அணுத்திறன் அடிப்படையில்

பேரா. ந. தெய்வசுந்தரம்


மேலும் குழந்தை அறிவை கணினிக்கு எப்படி கொடுப்பது என்றும் விவரித்தார்.

கணினிக்கு மொழி சார்ந்த, அகராதித் தொகுப்பு, சொல் பகுப்பு, எழுத்து உச்சரிப்பு, ஒலி அமைப்பு, தொடரியல், பொருளடைவு, இலக்கணக்கூறுகள் என தனித்தனியே பிரித்து எடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்த கூறுகளினால் கணினியின் மூலம் நாம் இலக்கணத்திருத்தி, சொற்பிழைத்திருத்தி, சந்திப்பிழைத்திருத்தி, இயந்திரமொழிபெயர்ப்பு, பேச்சை எழுதும், எழுதுவதை பேச்சாக மாற்றும் முறையையும் நாம் உருவாக்கலாம் என்று கூறினார்.


மதிய அமர்வில் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தில் ஆய்வுப்பணி செய்துவரும் ஆர்.பிரேம்குமார், திரு. வடிவேல் இருவரும் ஒலியன் வாசிப்புக்கருவி பற்றி விளக்கினர்.

திரு. வடிவேல், திரு. பிரேம்குமார்.


பயிற்ச்சியில் கலந்துகொண்ட cill-ldcil- ஆய்வாளர்கள்



அடுத்த அமர்வில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ்க் கல்வித்துறையின் பேரா. ஆ.முத்தமிழ்ச்செலவன் பேச்சொலி ஆய்வுக் கருவிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொலைபேசியி ஒருவர் தமிழ்நாட்டிலிருந்து கேரளவில் இருக்கும் தமிழ்மொழி தெரியாதவருக்குத் தொலைபேசியில் பேசினால் அது அவரது தாய்மொழியான மலையாளந்திறகு மாற்றம் செய்துகொடுக்கும் முறையில் இருக்க வேண்டும் என்றார். அதுபோல உலகமொழிகள் அனைத்திற்கும் தமிழ் மொழியில் கேட்கவேண்டும். அதுபோல உலகமொழிகளிலிருந்து நம் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு பேச்சொலி கிடைக்கவேண்டும் என்றார்.
பேராசிரியர் ஆ.முத்தமொழ்ச்செல்வன்


மன்னார்குடி அரசு கலைக்கல்லூரிப் பேராசிரியர் த.கார்த்திகேயன்.

பயிலரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்களில் ஒருவர் வினா எழுப்புகிறார்.




Friday, January 27, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (27-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|1 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று எட்டாம் நாளில் காலை அமர்வில் அண்ணாப் பல்கலைக்கழகக் கணிப்பொறியியல் துறைப்பேராசிரியை முனைவர் தெ. வி. கீதா அவர்கள் தமிழ்க் கணினியியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.


பேராசிரியை தெ. வி. கீதா அவர்கள்

தமிழுக்குக் கணினி என்ன செய்தது என்பதைவிட கணினிக்குத் தமிழ் என்ன செயதது என்ற தெளிவான வினாவுடன் உரைத்தொடங்கினார். தமிழ்ச்சொற்களைக்கொண்டு எவ்வாறு அகராதி தயாரிக்கமுடியும், பிறகு இதற்குUNL நிரலாக்கத்தில் 46 வகையான பிரிவுகளில் நம்மால் நிரலாக்கம் செய்து தமிழை உள்ளிடமுடியும் என்றார். முதலில் சொற்களைப் பிரித்து RULS முறையில் உருவாக்க வெண்டும் என்றார்.
வினா விடை முறையில் நாம் சொற்களை அமைக்க முடியும் என்றார்.



அதற்கு ஆதாரமாக அகராதி(http://www.agaraadhi.com/dict/home.jsp) என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் எந்தச் சொல்லை உள்ளீடூ செய்தாலும் பொருள் விளக்கம், சொற்களின் விளக்கம், சொல்லின் அடிபடையில் இருக்கும் திருக்குறளும் இடம்பெற்றுள்ளன. இத்தளம் இவர்களின் ஆராய்ச்சிக்குக் கிடைத்த பரிசாகவும் தமிழ்மொழிக்குக் கிடைத்த அரிய பொக்கிசமாகவும் நாங்கள் கருதினோம். பார்வையாளர்கள் வினாக்களைக்கேட்டனர். அனைத்து வினாக்களுக்கும் தெளிவான பதில்கள் கொடுத்தார்கள். பேராசிரியருடன் அவரது மாணவரும் வந்திருந்தார். அவர் அகராதி இணையப்பக்கத்தில் அண்ணாப்பல்கலைக்கழகம் என்னமாதிரியான ஆராய்ச்சிப்பணி தமிழுக்குச் செய்துள்ளது என்றும் காட்சிப்படமூலம் விளக்கினார்.



பேராசிரியையுடன் முனைவர் துரை மணிகண்டன்

மதிய அமர்வில் அமிர்தா பல்கலைக்கழகக் கணினிப்பொறியியல் துறைப் பேராசிரியர் ச.இராசேந்திரன் அவர்கள் WORDNET(சொல்வலை) என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


பேராசிரியர் ச.இராசேந்திரன்

உருபமைப்பு முறையின் முக்கியத்துவத்தையும் சொல்லுருப்புகளீன் வகைகளையும் கணினிக்குப் பிரித்து கொடுத்தால் அது விரைவாக செயல்படும் என்று கூறினார். மேலும் படிநிலை அமைப்புமுறையின் விளக்கம், பல்பொருள் ஓரொலிச் சொற்கள் பற்றியும் அதனால் கணிப்பொறி மிக வேகமாக தமிழில் உள்ளீடு செய்தால் விரைவாக நாம் தேடிய தமிழ்ச்சொற்கள் கிடைக்கும் என்றார். இப்பணியை நான் ஒருவனால் செய்ய இயலாது அனைவரும் ஒன்றுகூடி செயல்படவேண்டும் என்றார்.



பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்



எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (26-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஏழாம் நாளில் காலை அமர்வில் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் கணினிக்கு எவ்வாறு தமிழ்மொழியின் ஒலியியல் கூறுகளை கொடுப்பது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்

கணினிப் புரிந்துகொள்ளும் வகையில் சின்னச்சின்ன தரவுகளாகப் பிரிதுக் கொடுக்கவேண்டும் என்றார். அப்பொழுதுதன் சொற்பிழைத்திருத்தியை உருவாக்கமுடியும்.அதற்கு பகுபத உறுப்புகளில் உள்ள பகுதி, விகுதி. சந்தி, சாரியை, விகாரம் இடைநிலை என்றால் என்பதை முதலில் தொகுத்து பின்பு கணினிமொழிக்குக் கொடுக்கவேண்டும்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்

பிறகு சொற்பிழைத்திருத்தி, இலக்கணத்திருத்தி, சந்திப்பிழைத்திருத்தி போன்ற தமிழ் மென்பொருள்களை உருவாக்கி அதனை கணினிக்காட்சிமூலம் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக இத்தைகய செயல்பாடுகளில் தமிழ்ப்படித்தப் பேராசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வளர்களால் மட்டும் இப்பணியைச் செய்ய இயலாது. கணினி அறிவு, மொழி அறிவு, இலக்கண அறிவு மூன்றும் ஒன்றாக இணைந்திருந்தால்தான் ஒரு தமிழ் மென்பொருளை சரியாக உருவாக்கமுடியும் என்பதையும் குறிப்பிட்டார்.
பேராசிரியருடன் அவரது மாணவைகள் இருவர் வந்திருந்தனர்.

ஒருவர் கணினித்துறை ஆய்வாளர் செல்வி மு.அபிராமி மற்றொருவர் மொழியியல் துறை ஆய்வாளர் செல்வி. கி.உமாதேவி என இருவரும் இம்மூன்று தமிழ் மென்பொருள்களின் பயன்பாட்டிற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

செல்வி மு.அபிராமி , செல்வி. கி.உமாதேவி

மதியம் நடந்த கணினிக்கூடப் பயிற்சியில் கலந்துகொண்டோம்.
இதில் தமிழில் கணினியை இயக்க தமிழ்பென்பொருளை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்பது குறித்தும், வலைப்பூக்கள் உருவாக்குவது குறித்தும் கற்றுக்கொடுக்கப்பட்டது. பலர் இதில் ஆர்வமாக கலந்துகொண்டதை காணமுடிந்தது.





Wednesday, January 25, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (25-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஆறாம் நாளில் காலை அமர்வில் மேனாள் மொழியியல் துறை இயக்குநர் பேராசிரியர் க.முருகையன் அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் முருகையன்

ஒலியியல் என்றால் என்ன? ஒலியியல் என்பது அறிவியல் முறையில் ஆராய்வது.
ஒலியியன்களைப் பற்றி தொல்காப்பியர் கூறிய இலக்கணங்களையும், இன்று மொழியியல் நோக்கில் ஒலியியலையும் விளக்கிக் கூறினார். இதழ் ஒலி,மூக்கொலிகள்,பல்லிதழ்கள் மூலம் ஒலியன்கள் தோற்றம் பெறும் பாங்கை விவரித்தார்.
இவ்வாறு ஒலியன்களின் தோற்றம் வளர்ச்சி இன்றைய கணினி மொழிக்கு எவ்வாறு கொடுத்தால் கணினி ஏற்றுக்கொள்ளும் என்பதையும் பல இலக்கியக் கதைகள் மூலமும் பயிற்சிமூலமும் தெளிவுபடுத்தினார்.

அடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொழில்நுட்ப அலுவளர் திருமதி இரா. இராணி அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்துக்கள் பிறப்பின் மூலத்தை காட்சிவிளக்க முறையிலும், பல ஒளி,ஒலி வடிவிலும் எடுத்துக்காட்டினார்.



திருமதி இரா.இராணி

மதிய அமர்வில் அண்ணாப்பல்கலைக்கழகக் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் திருமதி இரஞ்சனி பார்த்தசாரதி அவர்கள் அறிவுப் பகராண்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவு என்றால் என்ன? அறிவை எப்படி கணினிக்குக் கொடுக்கவேண்டும்? என்பன போல உரையை முன் வைத்தார். தமிழ் மென்பொருள் உருவாக்கம் செய்ய தேவையான சின்ன சின்ன இயற்கை அறிவின் கூறுகளை கணினிக்குக் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.அடுத்து உலக அறிவையும் நாம் தொகுத்து கணினிக்குக் கொடுக்க வேண்டும்

பேராசிரியை திருமதி இரங்சனி பார்த்தசாரதி

இவையல்லாமல் தற்பொழுது நாம் web1.0 விலிருந்து web2.0 விற்கு சென்றுள்ளோம் இன்னும் நாம் கணினியில் web3.0, மற்றும் web4.0 என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த தரமான எல்லையை நாம் கணினியில் அடையவேண்டும். அதற்கு உலக அளவில் உள்ள அறிவை ஒன்றுபடுத்தி அதன் உட்கூறுகளைக் கணினிக்குள் உள்ளிடவேண்டும் என்றார்.இறுதியாக தொகைவிரி(ontology) பற்றிய கருத்துக்களை விளக்கினார்.


இறுதியாக சி.பி.எம் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ப.சோ.சந்திரசேகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Tuesday, January 24, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு

|0 comments

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஐந்தாவது நாளில் கலை அமர்வில் மேணான் பேராசிரிவயர் கி.அரங்கன் அவர்கள் தொடரியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



தொடரியியல் என்றால் என்ன என்பதையும் அது தொடர்பான விளக்கத்தையும் கூறினார். தொடரியியலில் அமைப்பு மொழியில் அமையும் ஆய்வும் நோம்சாம்ஸ்கியின் தொடரியல் கோட்பாட்டைக்கொண்டு தெளிவாக விளக்கினார்.
அவ்வாறு அமைப்பு மொழியியல் செய்த ஆய்வுகளையும் மாற்றிலக்கணக் கோட்பாடுகள் என்பது மொழியின் இயல்பை புரிந்துகொள்வது என்று விளக்கினார்.
மாற்றிலக்கண முன்மாதிரியை முதன் முதலில் தொடங்கியவர் நோன்சாம்ஸ்கி என்றார்.மேலும் இலக்கணம் என்றால் என்ன? மாற்றுவிதிகளை எவ்வாறு உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது போன்ற செய்திகளை விளக்கினார்.


அடுத்த அமர்வில் திராவிடப் பல்கலைக்கழகக் கணினிமொழித் துறைப்பேராசிரியர் முனைவர் செல்வராஜ் அருள்மொழி அவர்கள் சொல்வளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



சொல்வளங்களின் பயன்பாடு இயற்கைமொழியாய்விற்கு மிக முக்கியமானது, ஒரு மொழியின் சொற்களை எடுத்து பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முறையில் சொல்வளம் பயன்படுகிறது. தற்பொழுது இந்திய மொழிகளில் 11 மொழிகளுக்கு மட்டும் சொல்வளம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும், இது 2012 பிப்ரவரி முதல் மத்திய அரசு இணையத்தில் வெளியிட உள்ளனர் என்றும் கூறினார். பல இணையதளங்களுக்குச் சென்று சொல்வளம் குறித்தச் செய்திகளைப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு நேரடிக்காட்சிமூலம் எடுத்துக்காட்டினார்.


மதிய அமர்வில் பாரதியார் பல்கலைக்கழக மேணான் மொழியியல் துறைத் தலைவர் சி.சண்முகம் அவர்கள் பொருணமையியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.




பொருண்மையியல் என்றால் என்ன்? பொருளின் திறன் என்ன என்று விணா எழுப்பி விளக்கினார்.
பொருண்மையியலின் ஆராய்ச்சி மொழியைச்சார்ந்த ஆராய்ச்சி, மனதை சார்ந்த மொழி ஆராய்ச்சி, பொறி அடிப்படையிலான மொழி ஆராய்ச்சி என்ற முறையில் அமைந்துள்ளது.
உடலியியல்,உளவியல், சமூதாயவியல், உலகவியல், பண்பாட்டுக்கூறுகள் அடிப்படையில் பொருண்மையிலை ஆராயும் உத்தியையும் கையாண்டால் நாம் கணினிமொழிக்குத் தேவையான பொருண்மைக்கூறுகளை நாம் எழிதில் உருவாக்கிவிடலாம் என்றார்.

இறுதியாக விவேகானந்த கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு.முத்தையா அவர்கள் நன்றி கூறினார்.

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.


நிகழ்ச்சியில் பேராசிரியர் மு.முத்தையா மற்றும் பேராசிரியர்கள் கி.அரங்கன்,சி.சண்முகம். தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம்.


சிறப்பு சொற்பொழிவாளர்களுடன் மலேயா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்







Monday, January 23, 2012

23-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

|2 comments
SRM பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள் தொடரியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.

அடுத்த அமர்வில் அண்ணா பல்கலைக்கழக மேனாள் கணினித்துறைப் பேராசிரியர் வெ.கிருட்ணமூர்த்தி அவர்கள் ஓளிவழி எழுத்துரு அறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.எளிமையான விசைப்பலகை உருவாக்கம் மற்றும் எழுத்துணரியின் பயன்பாடுகள், அச்சுப்பிரதியைக் கணினித்திரையில் தோற்றம் செய்தல், எழுத்துப்பிழையைச் சரிபார்த்தல் என தமிழின் முக்கிய செயல்பாடுகளையும் மென்பொருளையும் விளக்கிக்காட்டினார்.


மதியம் அமர்வில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் மொழித் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் உரையை முன்வைத்தார்.



கணினிமொழி உருவாக்க வேண்டுமெனில் தமிழ்மொழியில் புதிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும் என கூறினார்.
பொருளடைவை உருவாக்க வேண்டும், விகுதிகளைப் பிரித்து அதற்குத் தனியாகப் தொகுப்புச் செய்யவேண்டும்.
புணர்ச்சி இலக்கணத்தையும் பிரித்து ஆய்வு செய்யவேண்டும் என்று கூறினார்.

அடுத்த அமர்வில் முனைவர் இரா.சண்முகம் உருபனியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் ஒரு சொல்லைப் பிரித்து அதன் இலக்கணக் கூறுகளைப் பிரிக்கும் வசதியைக் கணினி எவ்வாறு செய்கிறது என்று விளக்கினார்.


பயிலரங்கில் கலந்து கொண்ட மயிலாடுதுறை அ.வ.கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்

மதுரை விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.முத்தையா அவர்கள் பயிற்ச்சியில் கலந்துகொண்ட காட்சி