/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 19, 2020

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆட்சிமொழிச் சட்டவாரம்.


                         பயிற்சியில் கலந்துகொண்டவர்களில் பலர்
2019-2020 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கொள்ளும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் சிறப்பாக  அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை 20-3-2020 ஆம் நாளுக்குள் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அனுப்பிய குறிப்பாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வளர்ச்சித்துறைத் துணை இயக்குநர் முனைவர் இராஜேந்திரன் 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 09- 03-2020 முதல் 15-03-2020 வரையிலான காலத்திற்கு ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 10-03-2020  காலை 10.00 மணி முதல் 12.45-00 மணி வரைத் தமிழ்ப்பல்கலைக்கழக கருத்துறை கூட்ட அரங்கில நடைபெற்றது. 

   துணை இயக்குநர் முனைவர் இராஜேந்திரன் அவரக்ள் துரை.மணிகண்டனுக்குச் சான்றிதழ் வழங்கியபோது அருகில் மேனாள் திருச்சிராப்பள்ளித் தமிழ்வளச்சித்துறைத் துணை இயக்குநர் திரு. மேகநாதன்.

இந்த பயிற்சியில்அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகியோர்களும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர்களும் கலந்துகொண்டு கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளைப் பெற்றனர்.

மேலும்  தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல், தமிழில் விரிதிரை பயிற்சி மற்றும்  ஆட்சிமொழி குறித்துப் பயிற்சியையும் எடுத்து விளக்கினேன்.

இப்பயிற்சியில் இணையத்தமிழ் வரலாறு அதன் வளர்ச்சி மற்றும் தமிழில் இதுவரைத் தோன்றியுள்ள தமிழ் மென்பொருள்கள் என பலவகைப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களையும் வந்திருந்தவர்களுக்குப் பயிற்சியாக வழங்கினேன். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவரும் கணினித்தமிழைப் பருகிச்சென்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்