/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, October 14, 2015

தமிழ் இணையப் பயிலரங்கம் - பூண்டி வாண்டையார் கல்லூரி

தஞ்சாவூர் பூண்டி வாண்டையார் திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 13-10-2015  செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ”தமிழ்க்கணினிப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முதலில் தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.சிவபாதம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அடுத்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.உதயகுமார் அவர்கள் கணினிப்பொறியின் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கினார். உலகில் வளர்ந்த மொழிகளாக இருக்கும் சீனா, ஜெர்மனி, ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் அவரவர் தாய்மொழியில்தான் தொழில்நுட்பத்தைக் கற்று மேலோங்கி உள்ளனர். அதைபோல நம் தாய்மொழியான தமிழில் தொழில்நுட்ப அறிவுகளை கற்கவேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் சோ.உதயகுமார் அவர்கள்.தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் நா.சிவாஜிகபிலன் அறிமுகம் செய்துவைக்கின்றார்.  வரிசையில் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர்முனைவர் வீ.சிவபாதம், கல்லூரி முதல்வர் சோ.உதயகுமார், பேராசிரியர் இராபர்ட் அலைக்சாண்டர் மற்றும் நான்(Dr.Durai.Manikandan.)

அடுத்து முன்னிலை உரையாற்றி அறிவியல் புலத்தலைவர் முனைவர் இராபர்ட் அலைக்சாண்டர் அவர்கள் கணிப்பொறியின் இன்றையப் பயன்பாட்டையும் தமிழ் இணையதளங்களில் பேரா.நா.கோவிந்தசாமியின் பங்களிப்பையும் எடுத்து விளக்கினார்.
நிகழ்வில் என்னை அறிமுகம் செய்து பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளர் பேராசிரியர் நா. சிவாஜிகபிலன் அவர்கள் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்த்துறைச் சார்ந்தவர். இவர் கணினித்தமிழுக்கும் இணையத்தமிழுக்கு ஆற்றிய தொண்டாக நான்கு நூல்களை எழுதி வெளியிட்டு உலக மக்களுக்கு வழங்கியிருப்பது நமக்கெல்லாம் வியப்பே என்றார். நூல் விபரங்களையும் கூறினார்.( இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள், தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்) அடுத்து நான் உரை நிகழ்த்தினேன்.  சுமார் 40 நிமிடம் மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினேன்.

இரண்டு மணிநேரம் மாணவர்களுக்குப் பயிற்சிமுறையில் விளக்கினேன். பயிற்சியில் 100 மாணவிகள் மற்றும் 15 மாணவர்கள் 20 மேற்பட்ட பல்வேறு துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டன்ர். இதில் சுமார் பத்து மாணவிகள் தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்து தேடுதலில் தேடினார்கள்.  பல மாணவர்களும் இப்பயிற்சியை மேற்கொண்டனர். மிகச்சிறப்பாக மாணவார்களும் மாணவிகளும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 மாணவி தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தமிழில் வலைப்பதிவை உருவாக்கி எழுதும் காட்சி

ஒரு மாணவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தச்சன்வயல் என்ற அவனது ஊரைப்பற்றி எழுதினார். 

ஒரு சிறப்பாக அங்கு பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சிவாஜிகபிலன் அவர்கள் மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து வைத்துள்ளார். அஃது இப்பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. ஒரு மாணவனுக்கு அவனது ஊரான தச்சன்வயல் என்ற ஊரைப்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதினார். மற்றவர்களும் எங்கள் ஊரைப் பற்றி எழுதுகின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
                   நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இப்பயிற்சியும் எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. விழாவினை ஏற்பாடு செய்திருந்த பேரா. சிவாஜிகபிலன் அவர்களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், கணினித்துறை, பொருளாதாரத்துறைப் பேராசிரியர் என அனைவரும் கலந்து பயன்பெற்றனர். இவர்களுக்கு என நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்த்துறையில் பேரா.சிவாஜிகபிலனின் முயற்சியால் பல மாணவிகள் ஒருங்குறியில் தட்டச்சு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். நன்றி திரு சிவாஜிகபிலன் அவர்களே

5 comments:

 • ஆரூர் பாஸ்கர் says:
  October 14, 2015 at 11:26 AM

  நல்ல விஷயம். புட்பம் தன்னாட்சிக் கல்லூரியில் படித்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

 • மணிவானதி says:
  October 15, 2015 at 9:02 AM

  பழம்பெரும் கல்லூரி ஐயா. நான் முதன்முதலாகச் சென்றேன். ஐயா அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னலாலும் தகும் ஆரூரார் அவர்களே. நன்றி.

 • Jeevalingam Yarlpavanan Kasirajalingam says:
  November 11, 2015 at 2:40 AM

  இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

 • வளரும் கவிதை says:
  January 6, 2016 at 10:30 PM

  இனிய நண்பர் திரு துரை.மணிகண்டன் அவர்களுக்கு வணக்கம்.
  புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பான மூன்றாவது “இணையத் தமிழ்ப்பயிலரங்கம்“ நடத்த நினைக்கிறோம். தங்களின் உதவி தேவை. என்னைத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன் - எனது மின்னஞ்சல் -muthunilavanpdk@gmail.com & cell - 94431 93293

 • மணிவானதி says:
  January 9, 2016 at 3:41 PM

  மிக்க நன்றிங்க ஐயா. நாம் இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கை நடத்தலாம். நான் தங்களோடு கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்