1-10-2015, வியாழக்கிழமை பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தமிழ் இணையம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் காலை 9.30 மணிக்கு கல்லூரி குளிர்மை அரங்கில் இனிதே தொடங்கியது.
தொடக்க அமர்வில் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள் இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இணையம் அறிமுகம், தமிழ் எழுத்துரு பிரச்சனை, தமிழ் இணைய இதழ்களில் எழுதுவது எப்படி, தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய நிலை என்ன? இந்திய அளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது என பல புள்ளி விபரங்களுடன் விளக்கம் தந்தார். இறுதியில் மாணவரகள் கேட்ட வினாக்களுக்குத் தக்க பதிலும் தந்து உதவினார்.
பயிற்சியில் மாணவிகள்
அடுத்த அமர்வில் நான் (Dr.Durai.Manikandan) உரை நிகழ்த்தினேன். அதில் தமிழ் எழுத்துருவை எவ்வாறு கணினியில் பதிவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்வது என்பதை செய்முறைப் பயிற்சியுடன் விளக்கினேன். அதில் ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் செய்முறையில் கலந்துகொண்டனர். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மூவரும் உருவாக்க கற்றுக்கொடுத்தேன். மிக அருமையாக இருந்தது. இப்பயிலரங்கம் நான் பேசிய இடங்களுள் சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் சுமார் 59 மாணவ மாணவிகள் தமிழில் தட்டச்சு செய்வதற்குக் கற்றுக்கொண்டனர். இதுவே இப்பயிலரங்கத்தின் வெற்றி என்றே சொல்லாம்.
பயிலரங்கில் தமிழ் எழுத்துருவையும், தமிழ் வலைப்பதிவையும் உருவாக்கும் மாணவர்கள்.
இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் அயோத்தி அவர்கள் உரை நிகழ்த்தினார். மிக் அருமை. அவர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களையும் பேராசிரியர்களையும் பார்த்து இந்த ஆண்டு நமது கல்லூரி தமிழ்த்துறையில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வாளரும் இணைய இதழைப் பற்றி ஆய்வுக்கட்டுரை வழங்க வேண்டுமென்று கூறினார். அப்பொழுதுதான் இந்தப் பயிலரங்கம் வெற்றியடைந்ததாக இருக்கும். இதை அனைத்துப் பேராசிரியர்களும் கடைபிடிக்கவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். பயிற்சி வழங்கிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.
இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.ரஜ்ஜனி தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் இப்பயிலரங்கில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் என எழுபது மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தொடக்க அமர்வில் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள் இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இணையம் அறிமுகம், தமிழ் எழுத்துரு பிரச்சனை, தமிழ் இணைய இதழ்களில் எழுதுவது எப்படி, தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய நிலை என்ன? இந்திய அளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது என பல புள்ளி விபரங்களுடன் விளக்கம் தந்தார். இறுதியில் மாணவரகள் கேட்ட வினாக்களுக்குத் தக்க பதிலும் தந்து உதவினார்.
பயிற்சியில் மாணவிகள்
தேனி எம் சுப்பிரமணியத்திடம் வினா எழுப்பும் கல்லூரி ஆசிரியர்.
பயிலரங்கில் தமிழ் எழுத்துருவையும், தமிழ் வலைப்பதிவையும் உருவாக்கும் மாணவர்கள்.
கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சியில்
இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.ரஜ்ஜனி தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் இப்பயிலரங்கில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் என எழுபது மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விழா நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பலர் பயன் பெற்றிருப்பர் என்பதை நிகழ்வுகள் உணர்த்தின.
ஆமாம் ஐயா. மிக்க நன்றி