புதுக்கோட்டையில் நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா வெகு சிறப்பாக 11/ 10/ 2015 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா அவர்கள், தமிழ் இணையக்கல்விக் கழக உதவி இயக்குநர் மா.தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா அ. இரவிசங்கர், வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன். எழுத்தாளர் எஸ்.இரமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கட்டுரை, கவிதை, மரபுக்கவிதை, சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளிக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். அதில் தமிழ்க்கணனி சார்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை (ரூ.5000, மற்றும் நினைவுப் பரிசும்) எனக்கு வழங்கினார்கள். நான் அதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன்.
முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் தனது வலைப்பதிவைப் பற்றி விளக்கும்போது. அருகில் கவிஞ்சர் தங்க.மூர்த்தி, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்.
விருதை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதியிடமிருந்த (Dr.Durai.Manikandan) பெறும் காட்சி. அருகில் காரைக்குடி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா, வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்
மேலும் பல பரிசில்களும், பாராட்டுகளும் பெற்றிட வாழ்த்துக்கள் நண்பரே.....
மிக்க நன்றிங்க ஐயா.