திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கணினித் தமிழ்ப் பயிற்சி
மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன் , துணை இயக்குநர் ம.சி.தியாகராஜன்.
2019-2020 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கொள்ளும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை 20-3-2020 ஆம் நாளுக்குள் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அனுப்பிய குறிப்பாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உதவியாளர் திருமதி சி.சுகன்யா, மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 20-02-2020 முதல் 26-02-2020 வரையிலான காலத்திற்கு ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 20-2-2020 பிற்பகல் 02.00 மணி முதல் 05-00 மணி வரை நடைபெற்றது.
இந்த பயிற்சியில்அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகியோர்களுக்குத் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கினேன்.
மேலும் தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல், தமிழில் விரிதிரை பயிற்சி மற்றும் ஆட்சிமொழி குறித்துப் பயிற்சியை வழங்கினேன்.