/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

|0 comments
தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள்


தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன் வளர்சி மற்றும் பங்களிப்புப் பற்றி விவரித்துக்கூறினார்.

திரு.லதானந்த,திரு.மாயவரத்தான்,திரு. தேனி.எம்.சுப்பிரமணி,பேராசிரியர் சரவணன்.

வலைப்பூக்களின் தொடக்கம், அதன் வகைகள் பற்றி திரு.மாயவரத்தான் உரை நிகழ்தினார். அதனைத் தொடர்ந்து முனைவர் துரை.மணிகண்டன் கணினித்தமிழும்,தமிழில் தட்டச்சுப்பயிற்ச்சிகுறித்த கருத்துக்களை தெளிவுபட எடுந்துக் கூறினார்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சிமன்ற எழுத்தர்கள்,மற்றும் கிராம தன்னார்வ தொண்டர்கள்.


நிகழ்ச்சியில் முனைவர் துரை.மணிகண்டன்
மதுரை ஆட்சியருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.விஜயகுமார் திரு.மணிகண்டன், திரு.நாகமணி,திரு.வி.பி.மணிகண்டன்,திரு.செல்வமுரளி,திரு.லதானந்த.



மதியம் 2-மணிக்கு ஊராட்சி அலுவலர்களும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும்
தொடுவானம் வலைப்பாதிவில் எவ்வாறு மக்களின் குறைகளை பதியவேண்டும்,என்பது குறித்து திரு, செலவமுரளி, திரு.நாகமணி.முனைவர் துரை.மணிகண்டன்.விளக்கம் அளித்தனர்.
இறுதியாகா ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடுவானம் நிகழ்ச்சியின் பயன்களைத் தொகுத்து விளக்கினார்.
. அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்கள் 13, கிராம ஊராட்சிகள் 431, பேரூராட்சிகள் 10, நகராட்சிகள் 3, மூன்றாம் நிலை நகராட்சிகள் 3 உள்ளன. தொடுவானம் என்ற இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் புதிய முயற்சி. இது முதற்கட்டமாக 25 கிராமங்களில் செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் 5 பேருக்கு வழங்கப்படுகிறது. தொலை தூர கிராமங்களில் இருப்போர் கலெக்டரை சந்திக்க வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவற்றை சந்திக்கின்றனர்.

கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கொடுப்பதற்காக தொலைதூரங்களில் இருந்து இங்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கவே இந்த தொடுவானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கிராம மக்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளில் இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கோ நேரடியாக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 431 கிராம ஊராட்சிகள் உள்ளன. முதல் கட்டமாக 25 ஊராட்சிகளில் இந்த தொடுவானம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்த மாவட்ட நிர்வாகத்தின் ஓர் புதிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தை ஊராட்சியில் உள்ள அலுவலர்கள் திறம்பட செயல்படுத்தி கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

வாழ்க தொடுவானம் வளர்க மதுரை மக்கள்

Friday, July 15, 2011

தொடுவானமும் மதுரை மாவட்ட நிர்வாகமும்

|0 comments
தொடுவனமும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இணையத்தமிழ் கருத்தரங்கிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Thursday, July 14, 2011

மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்கம்

|0 comments
மதுடை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை 16-7-2011 அன்று கணினி மற்றும் இணையத்தமிழ் குறித்த கருத்தரங்கு நடைபெறுகின்றது.
இநிகழ்வில்
மதுரை மாவட்டம் முழுக்க இந்தத் திட்டத்தை அமல்படுத்த எண்ணி அதற்கு முன்னோடியாக மதுரைமாவட்டத்தின்
கடைக்கோடியில் அமைந்துள்ள 26 கிராமங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் 130 தன்னார்வலர்களுக்கும்,
25 கிராமநிர்வாக அலுவலர்களுக்கும்,26 ஊராட்சி எழுத்தர்களுக்கும் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப்
பயிற்சி முடிந்த பின் அடுத்தடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் இந்தப்
பயிற்சி விரிவுபடுத்தப்படும். தமிழ் உலகம் அறக்கட்டளை மாவட்ட ஆட்சியருடன் கலந்துபேசி இதற்கான
ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயிற்சி மற்ற மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் ஒரு
எடுத்துக்காட்டாக அமையும் என்பது திண்ணம்.

தொடுவானம்....

இந்தப் பயிற்சிக்கு ”தொடுவானம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிகம் படிக்காத, பள்ளி இறுதிவகுப்புவரை
பயின்றவர்களையே பெரும்பாலும் தேர்வு செய்து தன்னார்வலர்களாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 40விழுக்காடுக்கு
மேல் பெண்கள் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பார்வையற்ற,
குறைபாடுள்ளவர்களும் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் கணினியைப் பயன்படுத்தி தங்கள்
கிராமக் குறைகளை மனுவாக அனுப்ப இந்தத் தொடுவானம் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்றுநர் பட்டாளம்....

இந்தப் பயிற்சித்திட்டத்தில் மென்பொறியாளர் தகடூர் கோபி அவர்கள் முதன்மைப் பயிற்றுநராக இருந்து வழி நடத்தவுள்ளார். இவருக்கு உறுதுணையாகக்
களமிறங்கி நம் தமிழ் உலகம் உறுப்பினர் திரு.செல்வமுரளி அவரது குழுவினருடன் பயிற்சியளிக்கவும் தொழில்நுட்பப்
பணிகளையும்,அவருடன் விண்மணி இணையத்தள நிறுவனர் நெல்லை மென்பொறியாளர்.திரு.நாகமணிஅவர்களும்
கவனிக்கிறார். தன்னார்வலர்களுக்கான பயிற்சியை அளிப்பதில் நம் தமிழ் உலகம் உறுப்பினர்கள் முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பிலும், தேனி.எம்.சுப்பிரமணி விக்கிப்பீடியா பற்றியும் உரை நிகழ்த்த உள்ளனர்

Thursday, July 7, 2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

|0 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனைவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த அமைப்பின் தோற்றம், தோன்றக் காரணம், இதன் பயன்கள், பங்களிப்புகள், இதனால் தமிழ் தரவு தளங்கள் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதைக் பற்றி இங்கு பதிவு செய்துள்ளேன்.

தோற்றம்

உலக்ததமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் உத்தமம் சிங்கப்பூரில் ஜுலை மாதம் 24-ஆம் தேதி 2000த்தில் தோற்றம் பெற்றது. இரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்த நிலையில் 2000 ஆண்டில் முன்றாவது தமிழ் இணைய மாநாடு இலங்கையில் நடைபெற இருந்தது. இந்த மாநாடு நடைபெற முன்னேற்பாடுகள் செய்ய 2000-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12, 13, 14 தேதிகளில் இலங்கையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், இந்நாள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் துணைவேந்தருமான முனைவர் மு.பொன்னவைக்கோவும், முன்னைய துணை வேந்தரும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவரும் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் சிங்கப்பூரிலிருந்து அருண்மகிழ்நனும், மலேசியாவிலிருந்து முத்து நெடுமாறனும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆகஸ்டு 13-ஆம் தேதி மாலை 6-00 மணியளவில் இதுபற்றிப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, துணைவேந்தர். மு.பொன்னவைக்கோ, பேராசிரியர் மூ.ஆனந்தகிருஷ்ணன், திரு. அருண்மகிழ்நன், முத்துநெடுமாறன், சிவதாசன், சோமசுந்தரம், முத்து நெடுமாறன், குமாரதாசன் போன்றோர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர் அப்போது அருண்மகிழ்நன் ‘International Steering Committee On Tamil Inaiyam’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டு என்று முனைவர் கலியாணசுந்தரம் வரைந்தனுப்பிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அது தொடர்பாக நீண்டநேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக முனைவர் கலியாணசுந்தரத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதில் சில சிக்கல் இருந்துள்ளன Steering Committee என்று பெயரிடுவதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. காலம் கடந்து கொண்டிருப்பதால் அனைவரும் இரவு ஏதாவது ஒரு பெயருடன் வருவோம் என்று விவாதம் களைக்கப்பட்டு அவரவரின் அறைக்குச் உறங்கச் சென்று விட்டனர்.
துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களுக்கு விடியற்காலம் 4-00 மணிக்கு விழிப்புத் தட்ட விடியற்காலையில் ஏதாவது ஒரு தலைப்பு வேண்டுமே என்று நன்கு சிந்தித்து “International Fourm For Information Technology in Tamil – Infitt” என்றும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் - உத்தமம் என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். இதனைக் காலை அனைவரும் ஒன்று கூடி யார் யார் என்ன என்ன பெயர்களைக் கொணடு வந்துளளர் என முனைவர் பொன்னவைக்கோ வினவ யாரும் இதுபற்றி சிந்திக்கவில்லை என்பது புலனாகிறது. உடனே தான் சிந்தித்த உத்தமம் - உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்று தமிழுலும், Infitt – International Fourm For Information Technology in Tamil என்று ஆங்கிலத்தில் பெயரிடுவது என்று கூற அனைவரும் அதனை வரவேற்று அப்பெயரை ஏற்றுக் கொண்டனர் என்று அவர் எழுதிய இணையத் தமிழ் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்.60) தமிழ் இணையம் 2000 மாநாடு இலங்கையில் போர் காரணமாக சிங்கப்பூரில் ஜுலை மாதம் 22-லிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் 23-07-2000 அன்று உத்தமம் தோற்றம் பெற்றது.

உத்தமத்தின் திட்டபணிகள்

உத்தமத்தின் முதன்மைப் பணியாக இணையத் தமிழின் ஆய்விற்காக எட்டு ஆய்வுப் பணிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. 5 பணிக்குழுக்கள் தமிழ் இணையம் 2000 மாநாட்டிலும் எஞ்சிய 3 பணிக்குழுக்கள் பிற்காலத்திலும் நிறுவப்பட்டுள்ளன.

பணிக்குழு-1 : தமிழ்க்கலைச்சொல் தொகுப்பு.
பணிக்குழு-2 : ஒருங்குறித் தமிழ் [Unicde Tamil] ஆய்வு
பணிக்குழு-3 : இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல்.
பணிக்குழு-4 : தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு
பணிக்குழு-5 : ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரபாடும்
பணிக்குழு-6 : தமிழ் எழுத்துரு படிவத்தறிதல்
பணிக்குழு-7 : லினக்ஸிஸ் தமிழ் (Tamil in Linux)
பணிக்குழு-8 : தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம்.

என்ற எட்டு பணிக்குழுவிலும் உலகில் பல்வேறு நாடுகளைச் சோர்ந்த தமிழறிந்த கணிப்பொறி வல்லுனர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

பங்களிப்பும் பணிகளும்

உத்தமம் குழு அமைக்கப்பட்ட பின் தமிழ் இணையம் 2001 என்ற தலைப்பில் மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் ஆகஸ்டு மாதம் 26-28 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருளாக “வளர்ச்சிக்கான வழிகள்” என்ற ஆய்வுப் பொருண்மையில் நடத்தப்பட்டது. மின்வணிக மொழியைத் தமிழாக்கித் தமிழை வணிக மொழியாக்கல் என்ற கணிப்பொறிக் கல்வித்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். மலேசிய தமிழர்கள் பார்த்து பயன்பெறுமாறு தகவல் தொழில் நுட்பக் கண்காட்சியும் மாநாட்டில் நடத்தப்பட்டது. இதில் 30,000க்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இணையம் 2002 மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் செப்டம்பர் மாதம் 27-29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் என்ற கருத்துக்களை முன் வைத்தது. இந்த இணைய மாநாட்டின் போதுதான் மாநாட்டுத் தலைவர் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்’ அமெரிக்காவில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி சிக்கல்கள் தொடர்பாக ஒருங்குறிக் குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டியும் இடம் பெற்றன. இம்மாநாட்டில்தான் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ Tamil Heritage Foundation தொடங்கப்பட்டது.

தமிழ் இணையம் 2003 மாநாடு சென்னையில் ஆகஸ்டு மாதம் 22-24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில் நுட்பம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கப்பூரில் டிசம்பர் மாதம் 11,12 ஆம் நாளில் நடைப்பெற்றது இதில் நாளைய தமிழ் தகவல் தொழில் நுட்பம் என்னும் கருப்பொருளில் தொழில் நுட்ப வளர்ச்சிப் பணிகள் பற்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.

2005-லிருந்து 2008 வரையிலான 4-ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடு எதுவும் நடைபெறவில்லை. அதன் பின்பு 2009-ல் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் 23 முதல் 25 ஆம் தேதிகளில் கொலோன் பல்கலைக் கழத்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘கணினிவழிக் காண்போம் தமிழ்’ என்ற கருப்பொருளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் வரலாறு காணாத வகையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997-ல் தமிழ் இணையத்தமிழ் முன்னோடி, தமிழ் இணையத்தின் தந்தை போராசிரியர் நா.கோவிந்தசாமியால் சிங்கப்பூர் மே திங்கள் 17,18 ஆம் தேதியில் நடைபெற்றது. இதில் ஒருமித்த தமிழ் எழுத்துரு தீர்வு முன் வைக்கப்பட்டது.
இரண்டாவது இணைய மாநாடு 1999-ல் தமிழ்நாட்டில் சென்னை நகரில் பிப்ரவரி 7,8,9-ஆம் நாட்களில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதற்குத் ‘தமிழ் இணையம் 99’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எழுத்துருவிற்குத் தீர்வு காணப்பட்டது. உலகம் முழுவதும் தமிழ் கணினியைப் பயன்படுத்துபவர்கள் Tam, Tab என்ற இரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிமுகப்படுத்தினர்.

இவ்வாறாக இதுவரை 10-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 - சிங்கப்பூர்
2. 1999 - சென்னை, தமிழ்நாடு
3. 2000 - சிங்கப்பூர்
4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா)
5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா,
6. 2003 - சென்னை, தமிழ்நாடு
7. 2004 - சிங்கப்பூர்,
8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி,
9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு
10. 2011 - அமெரிக்கா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு




2011ல் நடந்த மாநாட்டின் தொடக்கவிழா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


உத்தமம் – தரவுகள்

தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.
இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.


தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.

இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.

Wednesday, June 29, 2011

கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு

|0 comments
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார்.



10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,)





தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.



எம்மை தொடர்ந்து திரு ஒரிசா பாலு அவர்கள் தமது கடலாய்வு அனுபவங்களை படக்காட்சிகளுடன் விவரித்தார். மேலும் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, பரவல் மற்றும் தமிழர் தொன்மை ஆகியவை பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.



பேராசிரியர் க.சரவணன் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி பயிற்சியைச் சிறப்பாக எடுத்து விளக்கினார்கள்.

காலை நிகழ்வுகள் முடிந்து மதியம் 2-மணிக்கு மென்பொருள் நிருவனர் திரு ம. சிவக்குமார் அவர்கள் பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கிக் காண்பித்தார். வலைப்பூவையும் மாணவ மாணவிகளுக்குத் தொடங்கிக் காட்டி பயிற்சியும் அளித்தார்.



மாலை 4 மணிக்கு ஆசிரியர் கவி.செங்குட்டுவன் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி என்ற தலைப்பில் தமிழ் இணையக் கல்விக்குழுமத்திலிருந்து நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினார். மற்றும் மதுரைத்திட்டம், சென்னை நூலகம் போன்ற மின்னூலகத்தினையும் பயன்படுத்தும் முறையையும் விளக்கினார்.

இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்ட கல்லூரிமாணவ மாணவிகளுக்கும், கிருஷ்னிகிரி மாவட்டதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இப்பயிலரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்கள்,
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகியவற்றின் முதுகலைத் தமிழ் மாணவர்களும்
நந்தனம் பொறியியல் கல்லூரி மாணவர்களும்
மாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 150 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.



நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.


கருத்தரங்க குழுவினர் திரு செல்வமுரளி,பேராசிரியர் சரவணன்,ஆசிரியர் கவி செங்குட்டுவன், முனைவர் துரை.மணிகண்டன்,மென்பொருள் சரவணன்.


அமெரிக்காவிலிருக்கும் கணிப்பொறியாளர் திரு ஆல்பட் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு எற்பாடுசெய்தார்கள். ஆல்பட் உடன் இணைந்து விஎம் பவுண்டேசன் நிருவனர் திரு செல்வ.முரளி அவர்களும் உருதுணையாக இருந்து நிகழ்வினைச் செம்மையாக நடத்தினார்.
இந்த நிகழ்வுகள் முழுவதும் தமிழ் உலகம் அறக்கட்டளை



மூலம் நேரடி காணொளி மூலம் www.ulagatamiloli.comஎன்ற

இணைய தளத்தில் ஒளிபரப்பப் பட்டது.

Wednesday, June 22, 2011

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் இணையப் பயிலரங்கம்

|0 comments
திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் இணையப் பயிலரங்கம் நடை பெற்றது. அதில் மாணவர்களுக்கு இணையம் குறித்த செய்திகளை விளக்கினேன்.






மாணவர்கள் மற்றும் மாணவிகள்

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியி தமிழ் இணையதளங்கள்

|0 comments
பெரம்பலூர் தந்தைஹேன்ஸ் ரோவர் கல்லூரியி தமிழ் இணையதளங்கள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய மன்ற விழாவில் சிறப்புரையாற்றியதன் ஒருபகுதி

முனைவர் துரை மணிகண்டன், கல்லூரி முதல்வர் திரு சாமிநாதன் துறைத்தலைவர் தமிழ்மாறன் மற்றும் நாரயாண்சாமி

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவார்கள், மாணவிகள் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.
|0 comments

Thursday, June 9, 2011

தமிழ் விக்கிப்பீடியா

|2 comments
தமிழ் விக்கிப்பீடியா

இணையத்தில் தரவு தளங்களில் குறிப்பிட்டுச் சொல்வோமானால் அது விக்கப்பீடியாவாகத்தான் இருக்க முடியும் எந்த தலைப்புகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் தகவல்களை நமக்குக் கொடுக்கும் சிறந்த தளம் விக்கிப்பீடியாவாகும். இந்த தளம் இன்றைய ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் செய்தியாளர்களுக்கும் கிடைத்த செய்திப் புதையல் என்றே கூறலாம். 267 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் ஒன்று.

விக்கிப்பீடியா பொருள் விளக்கம்

உலகிலுள்ள எந்தப் பொருள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் ஒரு புத்தகம் என்சைக்ளோபிடியா என்கிற கலைக்களஞ்சியம். இந்தப் புத்தகத்தை இணைய வழியில் கொடுக்க முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த கண்னி மென்பொருள் வல்லுனர் ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஜ்ஞ்சர் ஆகியோர் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் விக்கிபீடியா (Wikipedia). ஹவாய் மொழியில் விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு “விரைவு” என்ற பொருள். விரைவாக அறிவு சார்ந்த தகவல்களை பயன்பாட்டாளர்களுக்குத் தருவதால் இந்த இணைய என்சைக்ளோபீடியாவிற்கு ‘விக்கிப்பீடியா’ எனப் பெயரிட்டுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



தோற்றம்

2001 ஆம் ஆண்டில் இணையதளம் அமைப்பதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) மற்றும் தத்துவ ஆசிரியரான திரு.லாரி சாஞ்சர் (Larry Sanger) ஆகியோர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். இந்த தளத்திற்கான இடத்திற்காக இணையத்தில் விக்கிப்பீடியாவின் பதிவை 2001 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று www.wikipedia.com என்ற இணைய முகவரியையும், ஜனவரி 13-ஆம் தேதியன்று www.wikipedia.org என்ற இணைய முகவரியையும் பதிவு செய்தனர். ஆங்கிலத்தில் முதலில் செயல்படத் தொடங்கிய இத்தளம் பிற மொழிகளிலும் செயல்படுத்த லாப நோக்கமற்ற தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாக விக்கிப்பீடியாவிற்கென ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. விக்கிப்பீடியா அமைப்பானது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சு மொழியிலும், மே மாதத்தில் ஜெர்மன் மொழியிலும் தனி விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இத்துடன் வேற்று மொழிகளுக்கான விக்கிப்பீடியாவை உருவாக்கிக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டன. இவ்வாறு விருப்பமுடையவர்கள் அவரவர் மொழிகளுக்கேற்ப விக்கிப்பீடியாவை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் சுமார் 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த 267 மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் தர வரிசையில் முதலில் ஆங்கிலம், அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரெஞ்சு, போலீஷ் (Polish), ஜப்பான், இத்தாலி, டச்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கல், ரஷ்யா, சுவிஸ், சீனா, நார்வே, பின்னிஷ் (Finnish), கட்டாலன் (Catalan), உக்ரேனியன் ஹங்கேரி, செக் (Czech) துர்கீஸ், ரோமானியன், எஸ்பரண்டோ (Esperanto) வோலாபக் (Volapuk), கொரியன், டேனிஷ் (Danish), இந்தோனேசியா, சுலோவக் (Slovak), அராபி, வியட்நாமிஷ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் மொழியில் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியில் “மனித மேம்பாடு” என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடங்கியவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்கிற கருத்து உள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இது ஒரு விளம்பரமாக இருந்ததால் அதை பிற்காலத்தில் ஒரு பயனர் நீக்கி விட்டார். இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இ.மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) தமிழில் உருவாக்கியுள்ளார். இவையன்றி விக்கிப்பீடியாவும் அதன் பிற இணையத்திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ள மீடியா விக்கி என்னும் மென்பொருளின் அனைத்துப் பக்கங்களையும் அதற்குரிய இடைமுகத்துக்குத் தேவையான தகவல்களையும் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். என்று தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.



இதனால் தமிழில் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வைக்குச் சென்றது. இன்று பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் முயற்சியால் 14000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு 32800க்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில் 67-வது இடத்தில் உள்ளது. பிற இந்திய மொழிகளான இந்தி – 43 வது இடத்திலும், தெலுங்கு 47 வது இடத்திலும், மராத்தி 58 வது இடத்திலும், வங்காளம் 67 வது இடத்திலும், உருது 84 வது இடத்திலும், குஜராத்தி 91 வது இடத்திலும், கன்னடம் 97 வது இடத்திலும், பஞ்சாபி 144 வது இடத்திலும் பீகாரி 146 வது இடத்திலும், பஞ்சாபி 168 வது இடத்திலும், ஒரிசா 196 வது இடத்திலும், காஷ்மீர் 208 வது இடத்திலும், சிந்தி 213 வது இடத்திலும் அஸ்ஸாமி 220 வது இடத்திலும் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா தோன்றியதற்குப் பிறகு தோன்றிய பல மொழிகளிலான விக்கிப்பீடியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ் மொழியில் முன்னேற்றம் சற்று குறைவாகவே உள்ளது. இதனைப் போக்க தமிழர்கள் பலருக்கு இணைய அறிவும், தமிழ் தட்டச்சு செய்ய முடியாமையும் குறைபாடுகளாக உள்ளன. இது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் யார்வேண்டுமானாலும் தன்னார்வத்துடன் எந்த தலைப்பிலும் கட்டுரையை உருவாக்கலாம். முழுக்க முழுக்க இலவசமாக செயல்படும் தன்னார்வ நிறுவனமாகும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கம்

இணையத்தின் வழியாக தமிழ் தரவுகளைத் தேடுபவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படுகிறது. எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய தமிழில் தரமான கட்டற்ற கலைக் களஞ்சியத்தை உருவாக்குவது போன்றவையே இதன் நோக்கமாகக் கருதப்படுகிறது.

தமிழ்த் தரவுகளின் உட்தலைப்புகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 27,000 க்கும் அதிகமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதனைப் பல்வேறு நாட்டிலிருந்து, பலதுறை வல்லுனர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவர்களில் மயூரநாதன், கனடாவிலிருக்கும் தமிழரான. நக்கீரன், ஆஸ்திரேலியாவிலிருக்கும் தமிழரான கனக சிறிதரன், கனடாவில் இருக்கும் மின் மற்றும் கணினிப் பேராசிரியர் செல்வா என்கிற திரு. செ.ரா.செல்வக்குமார், தமிழ்நாட்டிலிருக்கும் சுந்தர், ரவிசங்கர், தேனி எம். சுப்பிரமணி, சிவக்குமார், ஜெர்மனியிலிருக்கும் சந்திரவதனா, ஜப்பானின் டெரன்சு, நோர்வேயிலிருக்கும் கலை, அமெரிக்காவிலிருந்து குறும்பன் மற்றும் கோபி, பீபிசெல்வம், நிரோஜன் சக்திவேல், டி.ரெங்கராசு, பேராசிரியர் வி.கே, கார்த்திக்பாலா, மு.மயூரன், பரிதிமதி, அராப்பத், மகிழ்நன், வைகுண்டராஜா, சோடாபாட்டில், தகவலுழவன் போன்றோர்கள் ஆவார். இவர்களுடன் மேலும் பல பயனர்களுடைய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இதில் கட்டுரைகளின் உட்கருத்தைக் கொண்டு ஒன்பது முக்கியத் தலைப்புகளாகப் பிரித்து வரிசைப்படுத்தியுள்ளனர். அவை முறையே

1. தமிழ்

தமிழ் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அகர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழியின் தோற்றம், மக்கள்தொகை, தமிழர்களின் வரலாறு, மற்றும் நூல்கள் குறித்த பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி சார்ந்த சில முக்கியக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

2. பண்பாடு

பண்பாடு என்ற தலைப்பில் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழர்களின் கலாச்சாரம், வீரம், விளையாட்டுகள் போன்றவையும் அகரவரிசைப்படுத்தி பகுத்து வைத்துள்ளனர். மனித சமுதாயத்தின் வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பண்புகள் சார்ந்த துணைப்பகுப்புகள் உள்ளன. மேலும் பண்பாடு குறித்த சில முக்கிய கட்டுரைகளின் தலைப்புகளும் கீழ் பகுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.


3. வரலாறு

இந்த தலைப்பில் மொத்தம் 28 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதன்மைப் பக்கத்தில் அரசு, இனம், காலம் போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய துணைப் பகுப்புகள் அகரவரிசையில் இடம் பெற்றுள்ளன. மேலும் உலக வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பும் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
4. அறிவியல்

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலச் சூழலில், அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள் பல்கிப் பெருகி வருகின்றன. ஒரு மொழி வளர்ந்து செல்வதற்கு அந்தந்த காலக்கட்ட அறிவியல் சாதனங்களையும், கருத்துக்களையும், உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் விக்கப்பீடியாவில் இதற்கென ஒரு தலைப்பில் அறிவியல் ஒப்பிரு அளவியல், அறிவியல் ஆய்விதழ்கள், இயற்பியல், அறிவியல் தமிழ் என 80 உட்தலைப்புகளில் அறிவியல் சார்ந்த முக்கியக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

5. கணிதம்

கணிதம் எனும் தலைப்பில் 35 துணைப்பகுப்பாக கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அறிவியல், இடவியல், இயற்கணிதம், எண் கோட்பாடு, எண் கணிதம், எண்கள், கணித இயல் வகைப்பாடுகள், கணித மரபு, விரல் கணிதம் என்ற உட்தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கீழ் உள்ள பகுப்பில் பல தலைப்புகளிலும் கணிதம் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

6. தொழில்நுட்பம்

இந்தத் தலைப்பில் பல துணைப்பகுப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆற்றல், இயந்திரவியல், உயிர், தொழில் நுட்பவியல், உலோகவியல், கட்டிடக்கலை, கணினியியல், கருவிகள், தகவல் தொழில் நுட்பம், தொழிற்சாலை, தொழில்கள், நானோ தொழில் நுட்பம், பயன்பாட்டுக் கருவிகள், விண்வெளிப் பயணம் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் உள்ளன.

7. புவியல்

புவியியல் எனும் தலைப்பில் புவியியலின் தோற்றம், கண்டங்கள், உலக புவியியல் அமைப்பு போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இடம், இயற்கை அழிவுகள், எரிமலை, கடற்கரை, சுற்றுலா, சூழலியல், தீபகற்பங்கள், நாடுகள், நில அமைப்பு, நிலவியல், நீர் நிலைகள், பீடபூமிகள், புவியாளர்கள், பெருங்கடல் ஆய்வு பற்றிய செய்திகள் உள்ளன. இந்தியாவைப் பற்றிய நிலவியல் தனியாக உள்ளன. அமெரிக்க ஜக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அயல் நாடுகளின் புவி அமைப்பும் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள நிலவியல், அமைப்புகளும், தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள், கடற்கரை, ஆறுகள், ஊர்களும் நகரங்களும், மலைகள் போன்ற செய்திகளாக பல செய்திக் கட்டுரை இடம் பெற்றுள்ளன.

8. சமூகம்

சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை பல துணைப் பகுப்புகளில் அகரவரிசையில் நிறுவியுள்ளனர். அன்றாட வாழ்வியல், சமூக அமைப்பு, அரசியல், இனங்கள், சமூக இயக்கங்கள், உறவுமுறை, ஊடகவியல், சட்டம், தொல்பொருள், மனித உரிமைகள், வணிகவியல் எனும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. மேலும் சில உள் தலைப்புகளில் சமூகம் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளன.

9. நபர்கள்

நபர்கள் தலைப்பில் அகிம்சைவாதிகள், அரசர்கள் அறிவியளாலர்கள், ஆன்மீகவாதிகள், இசைத்துறையினர், இயல்பியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூகத் தலைவர்கள், மருத்துவர்கள் என்ற தலைப்புகளில் அகரவரிசையில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒன்பது தலைப்புகளில் தமக்குத் தேவையான கருத்தைப் பயனுள்ளவர்கள் தேடி எடுத்துக் கொள்ளலாம். கட்டுரைத் தொகுப்புகளின்றி வேறு பல திட்ட செயல்பாடுகளும் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியாவின் துணைத் திட்டங்கள்

விக்சனரி

எனது தமிழ் விக்கிப்பீடியா நூலின் 161 ஆம் பக்கத்திலிருந்து 165 வரையுள்ள பக்கங்களில் உள்ள செய்திகளில் விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி இனங்கள், விக்கி செய்திகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்திக் கொள்ளவும்.

தமிழில் தொடங்கப்பட உள்ள திட்டங்கள்

விக்கிப்பீடியாவின் துணைத் திட்டங்களில் விக்கி பொது, விக்கி பல்கலைக்கழகம், மேல் விக்கி போன்ற திட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்கள்

1. உலகில் இருக்கும் எந்த கருத்துக்களையும் இதில் நம்மால் விரைவாக எடுத்துக் கொள்ளலாம்.
2. உலகச் செயல்பாடுகள், செய்திகள், மரபுசார்ந்த உடைகள், பண்பாடு போன்றவைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
4. ஆராய்ச்சி செய்வோர், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கட்டிடப் பணியாளர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், சமூகவியலாளர்கள் என அனைவருக்கும் பயன்படும் தரவு தளமாக இது பயன்படுகிறது.
5. பிற மொழிகளின் வரலாற்றை எளிதில் இதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
6. மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. இது ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது.

Monday, June 6, 2011

தமிழ் எழுத்துரு மாற்றிகள்

|4 comments
தமிழ் எழுத்துரு மாற்றிகள்



எழுத்துருக்கள்

கணிப்பொறியும் இணையமும் அறிமுகமானக் காலச்சூழலில் உலகில் இருக்கும் தமிழ் அன்பர்கள் ஏதாவதொரு எழுத்துருவில் கருத்தைப் பதிவு செய்ய தொடங்கினார்கள். அன்று அஃது அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் பலர் ஒன்று கூடிக் கொண்டாடியுள்ளனர். நாளடைவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழ் நண்பர்கள் அவர்களுக்கு விருப்பப்பட்ட எழுத்துருவில் எழுதத் தொடங்கினர். இவ்வாறு எழுதியவர்கள் அவர்களுக்குள்ளேயே கருத்தைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு உலக நாடுகளில் இருக்கும் பலரும் அவர்களுக்குத் தெரிந்த பலவகையான எழுத்துருவை உருவாக்கினர். இது சுமார் 250 எழுத்துருவாக இன்று உள்ளன.

எழுத்துருப் பிரச்சனை

தொடக்கத்தில் தமிழ்மொழியில் பலவகையான எழுத்துரு தோன்றுவது தமிழுக்குப் பெருமையாக இருந்தது. அதுவே சில வேளையில் சிக்கலையும் தந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் பிரபாகரன் என்பவர் கணினியில் தட்டச்சு செய்து அதனை கலிபோர்னியாவில் வசிக்கும் நண்பருக்கு அனுப்புகிறார். அங்கு அவர் கணினியின் முன் அமர்ந்து நண்பர் அனுப்பிய மின் அஞ்சலை ஆர்வத்துடன் பார்க்கிறார். செய்தி அனைத்தும் கோடு கோடாக, கட்டம் கட்டமாக என்னவென்று திகைக்கின்றார; என்ன சிக்கல் என்றால் கச்சமங்கலத்திலிருந்து அனுப்பியச் தமிழ்ச் செய்தியானது ஒரு வகை உள்ளூர் எழுத்துரு (எடுத்துக்காட்டு. இளங்கோ, கம்பன்) இந்த எழுத்துரு கலிபோர்னிய நண்பர் கணிப்பொறியில் இல்லை. அவர் வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறார். இப்போது கலிபோர்னியா நண்பர் ஒரு செய்தியை பிரபாகரனுக்கு அனுப்புகிறார். இவர் தன் கணிப்பானைத் திறந்து பார்த்தால் அவருக்குத் தோன்றியது கட்டம் கட்டம், கோடு கோடாகத் தெரிகிறது.
இதற்குத் தீர்வு என்ன என்று யோசிக்கும் போதுதான் உலகத்திற்கெல்லாம் பொதுவான எழுத்துருவை நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே இதற்குத் தீர்வு என்று இருவரும் முடிவிற்கு வருகின்றனர். சரி இனி இருவரும் ஒரே எழுத்துருவில் கதைக்காலம், எழுதலாம். இதற்கு முன் அனுப்பிய வந்த செய்திகளைக் காண என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த வினா இருவருக்கும் தோன்றுகிறது. இதுபோன்று உலகில் இருக்கும் அனைத்துத் தமிழுருக்கும் தோன்றுகிறது. விளைவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு பொதுவான எழுத்துரு தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை (Unicode Font) உருவாக்குகின்றனர். இந்த ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு உலகம் முழுவதும் தமிழுக்கான எழுத்துரு பிரச்சனை ஓரளவு தீர்ந்தது.

எழுத்துரு மாற்றிகள்

ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு முன்பு கணினியில் உருவாக்கப்பட்ட பிற தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்ற என்ன செய்வது அல்லது ஒருங்குறியிலுள்ள எழுத்துக்களை பிற எழுத்துருக்களுக்கு மாற்ற வேண்டிய அவசியமும் உருவானது. இதற்கு எழுத்துரு மாற்றிகள் தேவைப்பட பல எழுத்துரு மாற்றிகளும் உருவாக்கப்பட்டன.

இப்படி உருவாக்கப்பட்ட பல எழுத்துரு மாற்றிகளை இணையத்தில் இலவசமாக நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். நீங்கள் எந்த எழுத்துருவில் செய்தியை அடித்தாலும், அல்லது உங்களுக்கு வந்த செய்தியாயினும் அதனை உங்கள் கணினியில் உள்ள எழுத்துருவிற்கே மாற்றம் செய்து கொள்ளலாம் அல்லது ஒருங்குறிக்கு மாற்றி செய்தியைப் படித்துக் கொள்ளலாம். இதுபோன்று இணையத்தில் எண்ணற்ற எழுத்துரு மாற்றிகள் இலவசமாக இயங்குகின்றன. அப்படி சில எழுத்துரு மாற்றிகள் குறித்த தகவல்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

பொங்கு தமிழ் எழுத்துரு
தமிழ் எழுத்துரு மாற்றியின் தலைமகன் என்றே கூறலாம். ஏன் என்றால் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால் பல எழுத்துரு பிரச்சனை ஆங்காங்கு ‘நீரு பூத்த நெருப்பு போல’ பரவியிருந்த நேரம் சுரதா யாழ்வாணன் என்பவரின் முயற்சியால் எந்த எழுத்துருவையும் ஒருங்குறி எழுத்துருவிற்கு ((Unicode Font)) மாற்றி விடலாம் என்ற புதிய மென்பொருளை கண்டுபிடித்ததுதான்.
எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாது எழுத்துருவாக விருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளீடு செய்து கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களில் இருக்கும் எழுத்துருவைச் சுட்டினால் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்க முடியும். சுரதா யாழ்வாணன் இந்த எழுத்துரு மாற்றியைப் பற்றிக் கூறும்போது,

“யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்குப் பொங்குதமிழ் எனப் பெயரிடப்படுகிறது”

என்று கூறும்போது, சுரதாவின் தமிழ்ப்பற்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், இந்த தானிறங்கி எழுத்துருவைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஆவரங்கால் சீனிவாசனுக்கு எனது நன்றிகள் என்றும் கூறியுள்ளார்.
பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் 19-எழுத்துரு மாற்றிகள் செயல்முறையில் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்குறி எழுத்துருக்கு மாற்றிவிடும் வாய்ப்புடையவை. இது தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் இணைய இணைப்பின்றி சாதாரணமான நிலையிலும் இயங்கும்படி உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு எனச் சொல்லலாம்.

படம் – 1

அதியமான் எழுத்துரு மாற்றி

பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியைப் போன்று அதியமான் எழுத்துரு மாற்றியும் இலவசமாக இணையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த எழுத்துருவை உருவாக்கியவர் கோபி ஆவார். இவர் பொங்குதமிழ் எழுத்துருவை உருவாக்கிய சுரதா யாழ்வாணனை மேற்கோள் காட்டுகிறார். அதியமான் எழுத்துரு மாற்றியை உருவாக்க உறுதுணையாக இருந்தவர் என்றும் கூறுகிறார். மேலும் அமெரிக்காவில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் நா. கணேசனும் இந்த எழுத்துரு உருவாக்கத்திற்கு துணைப்புரிந்தனர் என்று கோபி நன்றி மறவாமல் தன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எழுத்துரு மாற்றியினால் இணையத்தில் ஒருங்குறி (Unicode) எழுத்துருவை மட்டும் பல இயங்கு தளங்கள் (OS) செயலிகள் (application) ஆகியன எந்த எழுத்துருவையும் கணினியில் நிறுவாமாலேயே படிக்கின்ற வசதியைத் தருகின்றன மற்ற தகுதரங்களை (Encoding standards) பயன்படுத்தும் வலைத்தளங்களைப் படிக்க உரிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும். மேலும் “சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறவும் உரிமை மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயெ இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிப்பதற்காகத்தான் இந்த எழுத்துரு மாற்றியை உருவாக்கியுள்ளேன்” என்று கூறுகிறார்.
இந்த மாற்றியில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் (TUNE) தமிழ் புதிய ஒருங்குறி தகுதரத்திலிருந்தும். TSCII தகுதரத்திலிருந்தும், ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்கலாம்.
இந்த எழுத்துரு மாற்றியினால் பத்துக்கும் மேற்பட்ட (திஸ்தி, டாம், டாப், TUNE, தினமணி, kalaham) எழுத்துருக்களை ஒருகுறியில் மாற்றி வாசிக்க முடியும்.

தமிழ் எழுத்துரு மாற்றி
இந்த எழுத்துரு மாற்றியும் பொங்குதமிழ், அதியமான் போன்ற நாம் வாசிக்க வேண்டிய செய்தியை இடதுபுறம் உள்ள கட்டத்தில் கொண்டு வந்து நிறுவிய பின் மேலே உள்ள எழுத்துருவான திஸ்கி, டாம், ரொமைனஸ்டு, அஞ்சல், மயிலை, முரசொலி, தினதந்தி பாமினி, டாம், பூமி, தினகரன், நக்கீரன், தினமணி என்ற பதிமூன்று எழுத்துருக்களையும் ஒருங்குறியில் மாற்றிக் கொள்ள முடியும்.

சிலம்பம் தமிழ் எழுத்துரு மாற்றி
ஒருங்குறி முறையில் எழுத்துருவை மாற்றிக் கொடுக்கும் செயலியாகும். இந்த எழுத்துரு மாற்றியில் பாமினி, தமிங்கிலிஸ் எழுத்துருவை ஒருங்குறி எழுத்துருக்களாக மாற்றிக் கொடுக்கின்றன.

இஸ்லாம் கல்வி எழுத்துரு மாற்றி
பாமினி முதல் ஒருங்குறி எழுத்துரு மாற்றி என இயங்கும் இந்த எழுத்துரு மாற்றி பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிரதவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் என்னும் எழுத்துருக்களை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒருங்குறிக்கு மாற்றும் செயலியாகும். அப்படி மாற்றும் போது சில சின்ன சின்ன தடங்கள், இடையூறு இருந்து வந்தன எ.கா. தொடரி (,), முற்றுப்புள்ளி(.) போன்றவை இடம் பெறமால் இருந்து வந்துள்ளன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றியின் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. பாமினி-ஒருங்குறி எழுத்துரு மாற்றியும் சுரதாவை முன்னோடியாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

என்.எச்.எம் எழுத்துரு மாற்றி
பத்ரி சேசாத்திரி என்பவரால் தொடங்கப்பட்ட நியூ ஹாரிசன் மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் வாயிலாக நாகராஜன் எனும் மென்பொருள் உருவாக்குனரால் உருவாக்கப்பட்ட எழுத்துரு மாற்றி வழியாக தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் இயங்கும் ஒரு மென்பொருளாகும். இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்வதுடன் நம் கணினியில் நிறுவிக் கொண்டால் நாம் குறிப்பிட்ட சில எழுத்துருக்களுக்கு இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.
பிற எழுத்துரு மாற்றிகள் ஒரு எழுத்துருவிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றம் செய்ய உதவுகின்றன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றி ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்கு மாற்றம் செய்து கொள்ள உதவுகிறது. இதனால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

படம் – 6

எழுத்துரு மாற்றிகளின் நன்மைகள்

இது போன்ற தமிழ் எழுத்துரு மாற்றிகளால் பல நன்மைகள் நம் தமிழ் மொழிக்கு கிடைத்துள்ளன.

1. தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட இணைய தளங்கள் பல்வேறு எழுத்துருக்களைக் கொண்டு வெளிவந்தன. ஆனால் இன்று பெரும்பான்மையான இணைய தளங்கள், வலைப்பூக்கள் ஆகியவை ஒருங்குறி முறையில் செயல்பட்டு வருகின்றன. எனவே பழைய தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்களிலுள்ள செய்திகளை மீட்டுருவாக்கம் செய்ய இந்த எழுத்துரு மாற்றிகள் பெரிதும் பயன்படுகின்றன.
2. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்து தமிழ் நூல்களும் டாம், டாப், திஸ்கி எழுத்துருவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் ஒருங்குறிக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டன.
3. தற்போது ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் உலகில் பலவேறு பகுதியிலுள்ள இணையப் பயன்பாட்டாளர்கள் இந்த எழுத்துரு மாற்றிகளின் உதவியுடன் பல தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படித்துத் தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

Saturday, April 2, 2011

கணிப்பொறியும் இணையத்தமிழும் - பயிலரங்கம்

|0 comments


திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் ஆய்வுத்துறையில் “கணிப்பொறியும் இணையத்தமிழும்” என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. இப்பயிலரங்கிற்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை தலைமை வகித்தார்.


இப்பயிலரங்கில் நான் கலந்து கொண்டு கணிப்பொறி குறித்தும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன். இந்நிகழ்வில்


1.கணிப்பொறியின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் கணிப்பொறியின் பயன்பாடுகள்

2.கணிப்பொறியில் தமிழ் இடம் பெற்ற வரலாறு

3.கணிப்பொறியில் தமிழ் மென்பொருள்கள் மற்றும் தமிழ் சொற்செயலிகள் அவற்றின் பங்களிப்புகள்

4.இணையத்தின் தோற்றமும் அதன் வரலாறு

5.இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாட்டின் தொடக்கம் மற்றும் அதன் வளர்ச்சி

6.தமிழ் இணைய முகவரிகள், தமிழ் இணையதளங்கள் மற்றும் தமிழ் இணைய இதழ்கள் குறித்த விளக்கம் அவற்றின் பயன்பாடுகள்

7.மின்நூலக வளர்ச்சி

8.தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் மதுரை மின்நூலாக்கப் பணிகள்

9.தமிழ் ஆய்விற்கு இணையதளங்களின் பயன்பாடு

10.தமிழ் மரபு செல்வஙகளான ஓலைச்சுவடிகளின் தொகுப்பிற்கான தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடு

11.தமிழ் தரவுதளங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்கு

12.இயந்திர மொழிப்பெயர்ப்பின் அவசியம் மற்றும் அதன் முக்கிய பங்களிப்புகள்

போன்றவை குறித்து இணையதளம் வழியாக விளக்கமளித்தேன்.

இறுதியாக மாணவ, மாணவிகள் சிலர் இணையத்தில் தமிழ் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். முடிவில் முனைவர் பட்ட ஆய்வாளர் சிவா நன்றியுரை வழங்கினார்.

Friday, February 11, 2011

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் நூலுக்குப் பரிசு

|0 comments


Thursday, February 10, 2011

இணையத்தில் தம்ழி வலைப்பூக்கள் நூலுக்குப் பரிசு.

|0 comments
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்குத் திருச்சிராப்பள்ளி முத்தமிழ் கலைப்பண்பாட்டு மைய்யம் வழ்ங்கிய சிறந்த அறிவியல் நூலுக்கான முதல்பரிசு ரூபாய் 5000 மும் பாராட்டுப்பத்திரமும் தைமாதம் 15 தேதி வழ்ங்கினார்கள். 

Friday, October 29, 2010

வகுப்பறை: தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

|0 comments
வகுப்பறை: தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!
தமிழ் மணம் நடத்திய பயிலரங்க ம் நல்ல முன்மாதிரி. உண்மையில் அதில் கலந்துகொண்ட அனைவருகும் என் பாராட்டுக்கள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

Tuesday, August 31, 2010

இணையத்தில் தமிழ் கருத்தரங்கம்

|0 comments
25-8-2010 புதன் கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூரி சிதம்பரபிள்ளை மகளிர் கல்லூரியில் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். 
  கல்லூரி முதல்வர் முனைவர் கி.சேகர் தலைமையில் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் இரா.மணிமேகலை முன்னிலையில் பேசினேன்.
 இணையத்தில் தமிழ் தோற்றம், இணைய அறிமுகம் மற்றும் தமிழ் மொழொயின் சிறப்பு, தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி, தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் தோற்றம் அவற்றில் உள்ள தமிழ் நூல்கள் ,தமிழ் மரபு அறக்கட்டளையின் பயன்பாடு குறித்தும் பேசப்பட்டது.

    மாணவிகள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற காட்சிமுறையில் விளக்கிக் குறிப்பிட்டேன்.பலர் கேட்ட வினாவிற்குத் தெளிவானமுறையில் இணையத்தைக்கொண்டு பதில்கொடுத்தேள்ளேன்.

 தமிழ்த்துறைப்பேராசிரியைகள் பலர் இது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். எம்மோடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைப்பேராசிரியர் வீரமணியும் உடன் வந்திருந்தார்.

Thursday, August 19, 2010

இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம்

|0 comments
வரும் 25-08-2010 புதன் கிழமை சிதம்பரம்பிள்ளை மகளீர் கல்லூரியில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம் உரை நிகழ்த்தவுள்ளேன். அதுசமயம் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

|0 comments

டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[ பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி ]இலால்குடியில் தமிழ்த்துறைச் சார்பாக முத்தமிழ் மன்றத் தொடக்கவிழாவில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கலந்துகொண்டு ”சங்க இலக்கியத்தில் மனித நேயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சங்க இலக்கியத்தில் கூறாதா மனிதநேயச்செய்திகளே இல்லையெனக் கூறலாம் என்றார். மேலும் ஓர் அறிவு உயிர்களுக்குச் செய்த தொண்டுதான் உலகில் அதிகம் பேசப்படுகிறது. அதை சங்க இலக்கியத்தில் பாரி, பேகன் போன்றோர்களின் மூலம் எடுத்துக்காட்டினார். மேலும் வள்ளலாரையும் எடுத்துக்காட்டிப் பேசினார். ஐயாவின் உரை மாணவ மாணவிகளுக்கும் பேராசிரிய பெருமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தன.
முதுமனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் திரு தங்க.மதியழகன் நினைவுப்பரிசை வழங்குகிறார். இடமிருந்து வலமாக மாணவர் பிரபு பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன். இரா. ஜெய்சங்கர், இராசா
|0 comments

முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களுக்குத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் நினைவுப்பரிசினை வழங்குகிறார் அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் தங்க. மதியழகன் உள்ளார்.

Sunday, July 18, 2010

|0 comments
|0 comments
|0 comments
|0 comments

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

|3 comments
தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்


முனைவர். துரை. மணிகண்டன்.

உதவிப் பேராசியர், தமிழ்த்துறை,

டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி)

இலால்குடி, திருச்சிராப்பள்ளி.

மின்னஞ்சல்: mkduraimani@gmail.com

___________________________________________________________

முன்னுரை

21ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இட்தைப் பெற்றிருப்பது இணையமாகும்.தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து வருகின்றது. இது விஞ்ஞானம், அறிவியல்,கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்குப் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப்பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு ’வலைப்பூக்கள்’ என்ற புதிய இலக்கிய வகை தோன்றி பெரும் பங்காற்றிவருகிறது.வலைப்பூக்கள் என்றால் என்ன?அதன் தோற்றம், தமிழில் தோன்றிய வரலாறு,மற்றும் அதன் வகைகளாக இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள்,பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம், பல்சுவைச் சார்ந்த வலைப்பூக்கள் என பகுக்கப்பட்டு ஒவ்வொன்றின் தமிழ் பயன்பாட்டையும் எடுத்து விளக்க இக்கட்டுரை விளைகிறது.

வலைப்பூ

ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது” என்று டாக்டர் வா.செ.குழைந்தைசாமி அவர்களின் கூற்றின்படி நாம் இன்றையப் பணியை இன்றைய கருவிக்கொண்டு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் நாம் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதில் வலைப்பூக்கள் என்ற ஒரு தனி இலக்கிய வகைத்தோன்றியுள்ளன. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.

வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்பிளாக் (Webblog) என்பதாகும். 17-12-1997-ல் ஜார்ன் பெர்கர் (John Barger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின்பு இதன் சுருக்க வடிவமான Blog எனும் பெயரை பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz) என்பவர் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு We blog என்று பிரித்துக் கையாளத் தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது.

தமிழ் வலைப்பூ

இந்த blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வலைப்பூ சேவை

வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996 ஆம் ஆண்டில் எக்ஸான்யா (Xanya) எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில் சுமார் 100 நாட்குறிப்பேடுகள் இடம் பெற்றன. அதன் பிறகு சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியைச் செய்து கொடுத்தன. இந்நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.காம் எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்து அதிகமான வலைப்பூக்களை அமைக்க வாய்ப்பளித்தது. இதன் மூலம் ஆங்கிலத்தில் பலர் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைக் கண்ட கூக்ளி (Google) நிறுவனம் இந்நிறுவனத்தை விலைக்குப் பெற்றது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை அளிக்கப்பட்டது.

முதல் தமிழ் வலைப்பூ

தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)

தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி

தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் க.துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும்.

தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகள் வளர்ச்சியும்

தமிழ் வலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு முக்கியமான சில தலைப்புகளின் கீழ் அவற்றை வகைப்படுத்தலாம்.

1. தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் வலையேற்றம் செய்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக கவினுலகம் என்னும் வலைப்பூ முனைவர் நா. கண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த வலைப்பூவில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் கட்டுரை வடிவிலும், கருத்துரையின் மூலமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. (www.emadal.blogspot.com)

2. இந்தக் கவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர். மானிடன் என்ற பெயரில் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் மு. பழநியப்பன். அவர்களால் இவ்வலைப்பூ 25.04.06-ல் உருவாக்கப்பட்டது. இவ்வலைப்பூவில் அதிக அளவில் கவிதைகளும் கட்டுரைகளும் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பரிமாணங்களைத் தனக்கே உரிய புதிய சிந்தனைகளுடன் இங்கு பதிவேற்றம் செய்துள்ளார். (www.manidar.blogspot.com) மு இளங்கோவன் என்ற பெயரில் ஒரு வலைப்பூ 1.5.2007 முதல் இயங்கி வருகிறது.பேராசிரியர் மு.இளங்கோவனால் வெளியிடப்படுகிறது. இதில் 300 இடுகைகள் வரை இடம் பெற்றுள்ளன. இவர் நாள்தோறும் புதிய புதிய இடுகைகளைப் பதிவேற்றம் செய்த வண்ணம் உள்ளார். இவரது கட்டுரைகள் இலக்கியத்தரம் வாய்ந்ததும் தெளிந்த நடையுடையதுமாக அமைந்துள்ளன. இவ்வலைப்பூவிலிருந்து பிற வலைதளங்களுக்குச் செல்லும் இணைப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு பழம்பெரும் இலக்கியவாதிகளின் தொகுப்புகள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. (mwww.mvelangovan.blogspot.com)

3. ஆன்மீக ஈடுபாடுடைய பலர் அவரவர்க்குப் பிடித்த ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இந்து, இசுலாம், கிறித்தவம், பவுத்தம் மற்றும் பிற ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு தமிழில் வலைப்பதிவு செய்து வருகின்றனர். கந்தர் அலங்காரம் என்ற பெயரில் கண்ணதாசன் மற்றும் ரவிசங்கர் என்பவர்களால் 2005-ல் தொங்கப்பட்ட இவ்வலைப்பூ உலக்த தமிழர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டதாகும். இந்த வலைப்பூ தவிர இந்து மதத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக திருப்பள்ளியெழுச்சி என்று மற்றொரு வலைப்பூவையும் இவர் உருவாக்கியுள்ளார். முருகப் பெருமானின் புகைப்படங்கள், பெருமைகள், விஷ்ணு பகவான் குறித்த பல செய்திகளும் சுப்ரபாதம், தோத்திரங்கள் என்று பக்தியின் உயர்வு நிலையைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. (www.murugaperuman.blogspot.com)

4. இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவைகளில் சில மென்பொருட்கள் ஏப்ரல் 2005 முதல் தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் தமிழில் கணிப்பொறியை எவ்வாறு இயக்குவது, தமிழ் மென்பொருட்களின் பட்டியல்கள், என பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் உள்ளன. கணினி, இணையம் பற்றிய சில செய்திகளும் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ளன. (www.tamiltools.blogspot.com)

5. விண்வெளி, அறிவியல், கணிதம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் சில வலைப்பூக்களையும் தமிழில் சிலர் உருவாக்கியுள்ளனர்.

குருவிகள் என்ற பெயரில் ஜுலை 2003லிருந்து தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் அறிவியல் செய்திகள் குறித்த கட்டுரைகளும், புகைப்படங்களும் அதிகமாக இடம் பெற்றுள்ளன. இந்த வலைப்பதிவர் குறித்த தகவல்களை அறிய முடியவில்லை. தமிழ் சினிமா செய்திகள் அவை குறித்த விமர்சனங்கள், நகைச்சுவை, அரிய புகைப்படங்கள் எனும் பார்வையிலான செய்திகளுடன் பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.

மருத்துவக் குறிப்புகள், மருந்துகள் அதைப் பயன்படுத்தும் முறைகள் என்று மருத்துவம் சார்ந்த சில வலைப்பூக்கள் தமிழில் உள்ளன. இந்த தமிழ் வலைப்பூக்களில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவங்களிலான வலைப்பூக்களே இருக்கின்றன. மூலிகை வளம் என்ற பெயரில் குப்புசாமி என்பவரால் 2007-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைப்பூவில் பல மூலிகைச் செடிகள் குறித்தும் அவற்றின் தாவரப் பெயர், தாவரக் குடும்பம், வழக்கத்திலிருக்கும் அதற்கான வேறு பெயர்கள், பயன் தரும் பாகங்கள் போன்றவைகளைப் புகைப்படத்துடன் தந்துள்ளார். இவை தவிர பல நோய்களுக்கு மூலிகை மருந்துகள் குறித்த தகவல்களும் கொடுத்திருப்பது நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. (wwwww.mooligaivazam-kuppusamy.blogspot.com)

6. பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற ஒரு சில பெண்களுக்கான சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.

சாதனைப் பெண்கள் என்ற பெயரில் ஜெர்மனியிலிருக்கும் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரால் உருவாக்கப்பட்ட சில வலைப்பூக்களில் இதுவும் ஒன்று. இந்த வலைப்பூவில் பல அச்சிததழ்களில் வெளியான சில முக்கியப் பெண்மணிகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.. (www.vippenn.blogspot.com)

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

I. வலைப்பூக்களின் வருகையால் தமிழ் மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.

II. தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெறுகியுள்ளனர். இதனால் தமிழின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.

III. வலைப்பூக்களால் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் மிக விரைவாக கிடக்கின்றன.

IV. இலங்கை,மலேசியா, கனடா,தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்த்துகொள்ள முடிகிறது.

V. தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களானா சங்க இலக்கியம் முதல்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவினால் உலகத் தமிழ்ர்களுக்குக் கிடக்கிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றுவருகிறது.

VI. இவைகள் அன்றி கணிப்பொறிச் சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன.

அறிவியல், விஞ்ஞாணக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றது.

VII. உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன்.

VIII. தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன. இதனால் தமிழ் ஆய்விற்குப் பல வழிகளில் பயன்படுகின்றன.

IX. வலைப்பூவினால் தொழில் நுட்ப வளர்ச்சிச் பெற்றுத் தமிழ்மொழி வளர்ந்து வருகின்றது.

X. வலைப்பூகளில் வெளிவரும் படைப்புகளும், கட்டுரைகளும், கவிதைகளும், பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றனர். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம். மேலும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழிக்குத் தன்னால் இயன்ற பனிகளையும் செய்து வருகின்றனர்.

முடிவுரை

எப்படி இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம் என்கின்றோமோ அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுக காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம்.புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. iஇதனால் பலவகைப்ப்ட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு அளப்பரியாத் தொண்டினைச் செய்து வருகிறது எனலாம்.

.நன்றி.

Tuesday, March 30, 2010

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்

|0 comments
உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத்தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் “நானும் உலக இலக்கியங்களில் பல வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். இருந்தாலும் புறநானூற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் போல வேறு எந்த நாட்டு இலக்கியங்களிலும் காண முடியவில்லை” என்று கூறுகிறார். அத்தகைய சிறப்பப் பொருந்திய இப் புறநானூற்றில் பல்வகை இலக்கிய வரலாற்று கூறுகள் இடம் பெற்றிருந்தாலும் மனித நேய கொள்கைகளும் இவற்றில் பொதிந்துள்ளதை இக்கட்டுரையில் காணலாம். மனித நேயம் [Humanism]மனித நேயம் என்பது பிறர் துயர் கொண்ட போது உதவுதலும் பிறருக்காக வாழ்தலுமாகும். நாடு, இனம், மொழி வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனித நேய வாழ்வாகும்.“ ‘மனித நேயம’ என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். ‘நேயம’; என்ற சொல் ‘நேசம’; என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு ‘அன்பு’ என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது”.‘அன்பு’ என்பதற்கு “ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு” என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.இரா. சக்குபாய் “உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாதது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்” என விளக்கம் தருகிறார். மனித நேயக் கொள்கைகள் [Theory of Humanism]உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்கம் [Red Cross Society] என்ற ஓர் அமைப்பு உண்டு. இதனை நிறுவியர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான்.இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும், பூகம்பமாக இருந்தாலும் ஆழிப்பேரலையாக இருப்பினும் எரிமலை வெடிப்பாக இருப்பினும் தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை, தங்குவதற்குத் தேவையான குழல்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் உதவி புரிகிறது. இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணித் தொடர்கிறது. இச்செயலை சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளான். இவன் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம் பாரத போர் நடைபெற்றதோ வட இந்தியாவில் ஜகுருஷேத்திரம்ஸ பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளான் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.“அலங்குனைப் புரவி ஐவரோடு சினைவிநிலந்தலைக் கொண்ட பொலம் ப+ந்தும்பைஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப்பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறம் - 2)உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையிலான இச்செயலாகப் பார்க்க முடிகின்றது. போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புரும் மனித நேயமே என்று கொள்ளலாம். ஒற்றுமைக் கொள்கைகள் [Principles of Unity]உலக இனம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழத்தான் விரும்புகிறது. ஆனால் இடையில் மதம், இனம், நாடு, மொழி என்ற பிரிவினைவாத நோய் மக்களை ஆட்கொண்டுவிட்டது. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் சமூகம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.இதனைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ பழந்தமிழ்ப் புலவன் உலக ஒற்றுமைக்கு முதன் முதலில் வித்திட்ட உலகப் புலவன் கணியன் பூங்குன்றனனின்,“யாதும் ஊரே யாவரும் கேளீர்தீதும் நன்றும் பிறர்தர வாரா” (புறம் - 192)என்ற பொன்னெழுத்துக்களால் இன்று உலக மனிதநேய ஒற்றுமைக்கு வித்திட்ட ஒப்பற்றவன் என்பது புலனாகிறது. அனைவரும் நம் உறவினர். நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர் என்று மக்களிடத்தே எடுத்தியம்பியுள்ள கொள்கைகள் ஆகும். இதனை அடியொற்றியே வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ‘ஓர் உலகம்’ எனும் நூலில் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருத்தல் வேண்டும் [In future our thinking be world wise) என்ற கருத்தை யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரியிலிருந்து எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.சோழ மன்னர்களாகிய நலகிள்ளி, நெடுகிள்ளி இருவரும் பகைவர்கள். நலங்கிள்ளியின் நாட்டிலிருந்து நெடுங்கிள்ளி ஆட்சி செய்யும் உறைய+ருக்கு இளந்தத்தன் என்னும் புலவர் வருகிறார். பகை நாட்டிலிருந்து வந்ததால் இளந்தத்தனை ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி அவனை கொல்ல முற்பட்டான். இதனைக் கேள்வியுற்ற கோவ+ர்க் கிழார் அவ்விடம் சென்று,“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்து............. ............... ................. ..................வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைபிறர்க்குத் தீதறிந் தன்றோ (புறம் 47 – 1 – 7)எனப் பாடினார். இளந்தத்தனை விடுவிப்பது நல்லது. இல்லையேல் உங்களுக்குள் போர் தொடங்குவதை யாரும் தடுக்க முடியாது என்று கூறி அவனை விடுதலை செய்ய வைத்து இருவரையும் சேர்த்து வைத்து ஒற்றுமைக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். அறக்கொள்கைகள் [Doctrinrs of Morality)ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் 55மூ பேர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ.நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. (பார்க்க. தமிழ்விக்கிபீடியா) இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலகமக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரோ என்ற வினா எழும்புகிறது.வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறான். அவன் குடும்பச்சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும்கடும்பின் கடும்பசி தீர யாடி நின்நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும்இன்னேர்க் கென்னது என்னேடுஞ் சூடியதுவல்லாங்கு வாழ்து மென்னது நீயும்கொடுமதி மனைகிழ வோயே...” (புறம்.173)என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார் உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும,; கொடுமையான கொடும் பசிதீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பிரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லபட்டவையாக அமைந்துள்ளன.மன்னர்களும் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய இறைவனே வந்து கொடுத்த சிறப்பு பொருந்திய உணவாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்ணாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுத்து உண்ணுவேன் என்று கூறிய அறக் கொள்கையைக் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்தமியர் உண்டலும் இலரே (புறம்.182-1-3)என்ற பாடல் அடிகளின் மூலம் அமிழ்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்ற செய்தியைப் புறநானூறு பதிவு செய்துள்ளது. பிறர் உயிர்களைப் பேணும் கொள்கைகள் [Paying respect in the theory]மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறரிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள்.கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி போன்றவர்களில் ஒருசிலர் பிற உயிர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்துள்ளனர்.முல்லைக் கொடிக்குத் தேர்க்கொடுத்த பாரி மன்னன் பற்றி படர்வதற்கு ஒரு கொழுக்கொம்பு இல்லையென்பதை பார்த்த பாரியின் மனம் துனுக்குற்று உடனே தான் ஏறிவந்த தேரைக் கொடிப்படர்வதற்கு வி;;ட்டு விட்டு வந்துள்ளான். மன்னன் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. முல்லைக்கொடியின் பரிதவிப்பு மன்னனை எந்த அளவிற்கு மனம் மாற்றியுள்ளது! இதைவிட மனிதநேயத்திற்கு உலகில் எங்கும் எடுத்துக்காட்டு இல்லை.மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி அதற்குப் போர்வைத் தந்த மன்னன் பேகன். என்ன ஒரு நிகழ்ச்சி. பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டியுள்ளது.உலக இனம் தழைக்க, மனித நேயம் வளர்ந்து அனைவரும் மனிதநேயத்தோடு வாழவேண்டும். இல்லையென்றால் உலகம் போரிலும், இனச் சண்டையாலும் மாய்ந்துவிடும் இல்லை அழிந்து போகும். இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உலக மக்களுக்கு மனிதநேயக் கொள்கைகளாகவும், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் வாழவேண்டும் என்றும், பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கைப் பெற்று வளர அறக்கொள்கைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். இவை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பேணுதல், பாதுகாத்தல் மனித இனத்தின் தலையாய கடமைகளாக இருக்கின்றன. இவையாவும் புராதான நூலான, திராவிட இலக்கியமானப் புறநானூற்றில் காணப்படும் கருத்துச் செய்திகளாகும். இவ்வழியைப் பின்பற்றி கருத்தை மனத்தில் இருத்தி பிறருக்கு உதவிகள் புரிந்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டியது நமது கடமையாகும்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் மற்றும் இணையத்தளங்கள்
1. புறநானூறு மூலமும் உரையும், டாக்டர். உ. வே.சா.
2. தமிழ் இலக்கியங்களில் காணலாகும் மனிதநேயமும் மத நல்லிணக்கமும், தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
3. மார்ச்சு மாதம் காலச்சுவடு, 2007.
4. www.ta.wikipidia.ஒர்க்
5. www.pathivukal.கம
6. www.muthukumalam.கம

Friday, November 6, 2009

இணைய எழுத்து

|1 comments
மீள்பிரசுரம்: http://www.sramakrishnan.com/இணைய எழுத்து -
எஸ். ராமகிருஷ்ணன் --
மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். -நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது.இணையத்தில் இரண்டு வகையான எழுத்துகள் வாசிக்க்கிடக்கிறது. ஒன்று தங்களுக்கு பிடித்த சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள் பாதித்த நிகழ்வுகள், நடப்புகளின் மீதான அவதானிப்பு . ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், ஆவேசம், என்று அவரவர் வலைப்பக்கங்களில் எழுதப்படுபவை. அதில் பெரும்பான்மை வலைப்பக்கங்களின் வழியே முதன்முறையாக எழுத துவங்கியவர்கள்.. மற்ற வகை. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது. இணைய தளங்கள் நடத்துவது.நான் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவன். நான், சாருநிவேதிதா, ஜெயமோகன், நாகார்ஜ�னன், மனுஷ்யபுத்திரன், உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இணையத்தளங்கள் நடத்திவருகிறோம். இன்று தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இணையதளங்களில் கட்டுரைகள், பத்திகள் எழுதுகிறார்கள். ஈழத்து இலக்கியம் குறித்து அதிகம் இணையதளங்களின் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது. அச்சு ஊடகங்களில் காணமுடியாத அரசியல் சமூக கலாச்சார பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள், பத்திகள், நேரடியான கருத்துமோதல்கள், உடனடி எதிர்வினைகள் என்று இணையம் பன்மடங்கு வீரியமாக செயல்படுவதை உணர்ந்தவன் நான். அதே நேரம் அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது.இணைய எழுத்திற்கு என்று இன்னமும் தனி அடையாளம் உருவாகவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் உள்ள தமிழ் வலைப்பக்கங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தரமாகவும், ஆக்கபூர்வமான அக்கறைகளுடனும், விவாதிக்க கூடிய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. இதே நிலை தான் அச்சு ஊடகங்களிலும் உள்ளது. ஆனால் அச்சு ஊடகங்களில் தேர்வு செய்யபடுதல் என்று முறை இருப்பதால் கொஞ்சமாவது வடிகட்டபடுகிறது. இணையம் அப்படியில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சுஜாதா கணிணியை பயன்படுத்தி தமிழில் எழுதுகிறார் என்பது நாளிதழ்களில் செய்தியாக வந்தது. அதற்காகவே அவரை தேடி போய் எப்படி தமிழில் எழுதுகிறார் என்று வியப்புடன் பார்த்து வந்தேன். கணிணியில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான மென்பொருட்கள் அதிகம் வராத நாட்கள் அவை. அந்த வியப்பு தான் என்னை கணிணி நோக்கி உந்தியது. நானும் கணிணியில் தமிழில் எழுத வேண்டும் என்று முனைப்பு கொண்டேன். நண்பர் எழுத்தாளர் இரா. முருகன் முரசு மென்பொருளை ஒரு பிளாப்பியில் தந்து அதை பயன்படுத்தும் முறை பற்றி சொன்னார்; அப்படி தான் கணிணியில் தமிழில் எழுத துவங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அட்சரம் என்றொரு வலைப்பதிவை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினேன். அதன் பிறகு இரண்டு வருசங்களாக எனது பெயரிலே இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.இணையத்தில் உள்ள இதழ்களில் திண்ணை தான் முன்னோடியான முயற்சி. திண்ணையில் கட்டுரை வந்திருக்கிறது வாசித்தீர்களா என்று கேட்பார்கள். புதிய ஊடக வெளியாக திண்ணை அமைந்திருந்தது. அதன் பிறகு ஆறாம்திணை. அம்பலம், சிபி.காம் துவங்கி இன்று உயிர்மை. காலச்சுவடு, போன்ற அச்சு இதழ்களின் மின்வடிவங்களும், கீற்று, அதிகாலை. தமிழ்மணம், மாற்று என்று இணைய எழுத்துகளை ஒரு சேர வாசிக்கும் கூட்டு தளங்களும் வந்துவிட்டன. உயிரோசை, சொல்வனம், பதிவுகள் போன்ற இலக்கிய இதழ்களும் வெளியாகின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் கூட இணையத்தில் முழுமையாக வாசிக்க கிடைக்கினறன.உயிரோசை இணைய இதழ் ஒரு ஆண்டு வெளிவந்து அதில் எழுதிய முக்கிய படைப்பாளிகளின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷம் தருகிறது. இணையத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் ஒரு சேர புத்தகமாவது இதுவே முதல்முறை . உயிரோசை இணையத்தில் சிறந்த இலக்கிய இதழாக வளர்ச்சிபெற்று வருகிறது. நான் அதன் தொடர்ந்த வாசகன். அதில் வரும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கிறேன். நான் அறிந்தவரை மற்றமொழிகளில் எழுத்தாளர்கள் தங்களது இணையதளங்களை ஒரு விசிட்டிங் கார்டு போல தான் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களை பற்றிய சுயவிபரங்கள் , அவர்கள் எழுத்தின் சில மாதிரி பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. நேரடியாக இணையத்திற்கு என்றே எழுதுவதுதில் தமிழ் எழுத்தாளர்களே முன்னோடியாக இருக்கிறார்கள். உலகெங்கும் இலக்கிய இதழ்களோ அல்லது பதிப்பகங்களோ தான் எழுத்தாளர்களுக்கான வலைப்பக்கங்கள், இணையதளங்களை நடத்துகின்றன. தங்களது இதழில் எழுத்தாளர் எழுதும் பத்தியை அதில் உள்ளீடு செய்கின்றன. அதிலும் தமிழில் நடந்துள்ள மாற்றம் முக்கியமானது, எழுத்தாளர்களே தங்களுக்கான இணைய தளத்தினை, வலைப்பக்கத்தை நடத்துகிறார்கள். அல்லது அவர் மீது அக்கறை கொண்ட வாசகர் அவருக்கான இணைய தளத்தை உருவாக்கி தந்து நடத்துகிறார். இந்த முயற்சி வேறு மொழிகளில் அதிகம் இல்லைபெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி, கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்துகொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை.இணையத்தில் எழுதுவதால் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்ற பொது வதந்தி தமிழகம் எங்கும் காணமுடிகிறது. நான் அறிந்த பல எழுத்தாளர்கள் அதை நேரடியாக என்னிடமே கேட்டிருக்கிறார்கள். உண்மையில் இணையத்தில் எழுதி சம்பாதிக்கின்றவர்கள் என்று எவரையும் இன்று வரை நான் காணவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தன் கையில் இருந்து ஆண்டிற்கு குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் செலவிட்டே இணைய தளங்களை நடத்துகிறார்கள். கடுமையான எதிர்வினைகள், வசைகளை நேரடியாக மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் வழியாக பெருகிறார்கள் என்பதே உண்மை. உலகெங்கும் உள்ள வாசகர்களுடன் தனது படைப்புகளை பகிர்ந்து கொள்வது என்ற எத்தனிப்பே பல எழுத்தாளர்களையும் இணையதளங்களில் எழுத வைத்துள்ளது.இணையத்தில் நான் கண்ட முக்கிய அம்சம். இங்கே வாசகர்கள் என்று யாரும் கிடையாது. வாசிப்பவரும் ஒரு எழுத்தாளரே. அவர் என்ன எழுதுகிறார் என்பதில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் ஒரு வலைப்பக்கம் வைத்திருப்பார். தொடர்ந்து எழுதி வருபவராக இருப்பார். அது தான் இதன் பலம் அதுவே இதன் பலவீனம். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளபடும் எத்தனங்களையே அதிகம் காணமுடிகிறது. அதற்காக எந்த அளவும் செயல்பட தயங்காத பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். பல வலைப்பக்கங்கள் அவர்களது டயரிகுறிப்புகள் என்ற அளவில் தான் உள்ளன.சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி.இணையம் அச்சு ஊடகங்களை தாண்டிய நவீன ஊடக வெளி. அதை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது எழுதுபவரின் கையில் தானிருக்கிறது. பக்க கட்டுபாடு இல்லை என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும் இரண்டு பக்கங்களுக்கு மேலாக எழுதப்படும் பதிவுகளை பலரும் படிப்பதில்லை என்பது தான் உண்மை. பின்நவீனத்துவக் கருத்துகள், மொழியாக்கங்கள், தத்துவம் சார்ந்த உரையாடல்கள், விஞ்ஞானம் பற்றிய ஆழ்ந்த கட்டுரைகள் இணையத்தில் வெளியாகின்றன. ஆனால் அவை வாசகர்களை கவனிப்பதேயில்லை. அது போலவே தொடர்ந்து தமிழ் வலைப்பக்கங்களை வாசித்து வரும்போது பத்துக்கும் குறைவானவர்களே தீவிரமாக தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்து எழுதி வருவதை காணமுடிகிறது. மற்றவர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் எழுத துவங்கி சில மாதங்களில் இணையத்தை விட்டே போய்விடுகிறார்கள். அல்லது ஒதுங்கி கொண்டு விடுகிறார்கள். சலிப்படைந்து திட்ட துவங்குகிறார்கள். சிலருக்கு வலைப்பக்கம் என்பது அன்றாட செயல்படாகியிருக்கிறது. எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்காக எதையாவது உள்ளிடுகிறார்கள்.சமீபமாக இணையத்தில் எழுத துவங்கிய சிலர் இதிலிருந்து அச்சு ஊடகங்களுக்கு தாவியிருக்கிறார்கள். பத்தி எழுதுகிறார்கள். அது போலவே பல ஆண்டுகளாக எழுதாமல் ஒதுங்கிய இருந்த இலக்கியவாதிகள் இணையத்தின் வருகையால் அச்சு ஊடகங்களை விலக்கி நேரடியாக இணையத்தில் எழுத வந்திருக்கிறார்கள். வார மாத இதழ்கள் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அடையாளம் காட்டுகின்றன. பெண்கள் வேறு எந்த ஊடகங்களையும் விட இணையத்தின் வழியே தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அது மிக முக்கியமான வரவு. இது போலவே ஒய்வு பெற்றவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் வலைப்பக்கம் தங்களுக்கான தொடர்பு வெளியாக மாறியிருக்கிறது. வலைப்பக்கங்கள் பொதுவாக மேடைப்பேச்சை போன்ற உடனடி கைதட்டல்களுக்கானவையாக கருதப்படுகின்றன. அப்படி இருக்க வேண்டியது அவசியமில்லை. அதனால் தான் பின்னூட்டம் இடுவதை இவ்வளவு பரபரப்பாகவும் நான் தான் முதலில் என்று கொண்டாட்டத்துடனும் செயல்படுகிறார்கள். பின்னூட்டம் ஒரு எதிர்வினை மட்டுமே. அதை விரும்புவதும் விலக்குவதும் படைப்பாளியின் சுதந்திரம். பிரிண்ட் அவுட் செய்து கையில் வைத்து மறுபடி படிக்க செய்யும் படியாக பல கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அவை இணையத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலே தானிருக்கின்றன.சுற்றுசூழல், சமகால அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தமிழ் மரபு சார்ந்த சிலரது வலைப்பதிவுகள் காத்திரமானவை. ஆனால் அதனை வாசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிக குறைவு. இணைய எழுத்திலும் சினிமாவே பிரதானமாக உள்ளது. அதிலும் கிசுகிசு, அதிரடி விமர்சனம், கவர்ச்சிபடங்களுக்கு அதிகமான வருகை காணமுடிகிறது.அச்சு இதழ்களில் இல்லாத ஒரே வித்தியாசம் தமிழ்சினிமாவை தாண்டி பலரும் வெவ்வேறு மொழி படங்களை பற்றி எழுதுகிறார்கள் என்பதே. ஆனால் அவை அந்த படங்களை பற்றிய தங்களது ரசனையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. ஆய்வு மிக குறைவே.லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹேயின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஏதாவது ஆவணப்படம் இருக்கிறதா என்று தேடினால் மறுநிமிசம் அவரது நேர்காணல், ஆவணப்படம். கவிதை பற்றிய அவரது சொற்பொழிவுகள் என்று நாலைந்து மணி நேரம் காணும் அளவிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் எழுத்தளார்களை பற்றிய ஆவணப்படங்கள், அவர்களது நேர்காணல்களின் வீடியோ பதிவுகள், மற்றும் அவர்களது சொற்பொழிவுகளின் ஆடியோ என எதையும் காண முடிவதில்லை. அரிதாக ஒன்றிரண்டு பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை தரவிறக்கம் செய்ய இயலாது. அத்துடன் அவை நேரலையாக காணவும் போராட வேண்டியிருக்கிறது. வெவ்வேறு இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆய்வாளர்கள் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்கள். ஆனால் அவை அந்த நிகழ்வோடு காற்றில் கரைந்து போய்விடுகின்றன. அதை முறையாக பதிவு செய்து இணையத்தில் தர முன்வந்தால் தமிழின் மாற்று சிந்தனை வெளி அதிகம் பேரை சென்று அடையும்.கல்வி புலங்கள் தங்களது செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து தரவேற்றம்செய்வதன் வழியே பொது வாசகர்கள் அதை அறிந்து கொள்ள செய்யய இயலும். அது போலவே சாகித்ய அகாதமி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள் தங்களது கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள், படைப்பாளிகளை பற்றிய ஆவணப்படங்கள் இணையத்தில் எளிதாக பார்வையிட வசதி செய்து தருவதன் வழியே அவை இன்னும் அதிகம் பார்வையாளர்களை சென்றடைய கூடும்ஈழத்து படைப்பிலக்கியங்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எளிதாக வாசிக்க கிடைக்கும் விதத்தில் ஈழம்.நெட் என்ற இணையம் உருவாக்கபட்டிருக்கிறது. இதில் முக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதி உள்ளது. இது ஒரு முன்னோடியான முயற்சியாகும். தமிழில் இது போன்ற கூட்டு முயற்சி அவசியம் தேவையானதாக உள்ளது.தமிழ் இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பல முக்கிய தகவல்கள், கட்டுரைகள், விவாதங்கள், இன்று வரை ஒருமித்து சேகரமாக்கபட்டு ஆவணப்படுத்தபடுதல் வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சுயவிபரங்கள், புகைப்படங்கள், முக்கிய புத்தகங்கள், அதன் பதிப்பகங்கள், விமர்சனங்கள் என்று அடங்கிய விரிவான தகவல் சேமிப்பு தளங்கள் உருவாக்கபடவேண்டும். இதற்கான ஒன்றிரண்டு முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ் விக்கிபீடியா போன்றவற்றில் உள்ள தகவல்பிழைகள் முறையாக சரி செய்யப்படல் வேண்டும்.இணையத்தில் புதிதாக எழுத வருகின்ற பலரும் எதை படிப்பது. என்ன சினிமாவை பார்ப்பது.எந்த இணைய தளங்களை வாசிப்பது என்று வழிகாட்டுதலை விரும்புகிறார்கள். அது அச்சு இதழில் காணமுடியாத வசதி. அதை எளிதாக பலரும் செயல்படுத்த முடியும். நான் தொடர்ந்து நான் வாசிக்கும் இணையதளங்கள், புத்தகங்கள், திரைப்படங்களை சிபாரிசு செய்கிறேன். இதற்காகவே எவராவது முன்வந்து ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டால் அது அதிகம் உதவிகரமாக இருக்க கூடும்.தமிழ் வலைப்பக்கங்களுக்கான இன்டெக்ஸ் ஒன்று உருவாக்கபடுதல் வேண்டும். அதன்வழியே எவரும் எந்த இணையதளத்தையும் உடனடியாக பார்வையிட முடியும். அது போலவே வாசிக்க கிடைக்காத பல முக்கிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. தமிழில் அது இன்றும் சாத்தியமாகவில்லை.நுண்கலை, பண்பாடு சார்ந்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய இடங்கள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எண்ணிக்கையற்று ஆங்கிலத்தில் உள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு புள்ளிகள் இணையத்தில் இன்னமும் ஒருங்கிணைக்கபடவில்லை.இணைய எழுத்து நாளை இன்னமும் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. புதிதாக எழுத வருகின்றவர்கள் இணையத்தின் வழியே அறிமுகமான போதும் தனித்த படைப்பாளியாக உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளன. அது போலவே மாற்று சிந்தனைகளுக்கு இணையம் இன்னமும் கூடுதலான முக்கிய ஊடகமாக அமையும். ஆவணபடுத்துதல், அறிமுகம் செய்வது. பல்துறைகளை ஒன்றிணைத்தல், புதிய வாசக தளங்களை உருவாக்குதல், அடிப்படை மாற்றங்கள் குறித்த விவாதங்களை உருவாக்குதல், குறும்படங்கள், ஆவணப்படங்களை எடுப்பவர்கள் இணையத்தின் வழியே அதை வெளியிடுவது என்று இணையம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகவே இணையத்தில் எழுதுவதும் இருக்கிறது.கசடுகளை நீக்கி தேவையானதை அறிந்து கொள்வது வாசகனின் கையிலே உள்ளது. இணையம் புதிய வாசகபரப்பை, எழுத்தை உருவாக்கும் தடையற்ற சாத்தியங்களை தருகிறது. அதன் வளர்ச்சியும் செயல்பாடும் கூட்டுமுயற்சிகளால் மட்டுமே மாறுதல் அடையும் என்று தோன்றுகிறது.நன்றி: http://www.sramakrishnan.com/
நன்றி பதிவுகள்.கம.