/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, February 20, 2022

இணையத்தமிழ் ஆய்வாளர் - கணித்தமிழ் ஆய்வாளர்

 முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ் ஆய்வாளர். கடந்த 15 ஆண்டுகளாக இணையத்தமிழ் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்கள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறைகளிலும் இணையத்தமிழ் குறித்த பயிற்சியை வழங்கி வருபவர். மேலும் மூன்று முறை இலங்கையும்,  ஒருமுறை சிங்கப்பூர், மலேசியா சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணைய தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கியவர். தமிழகத்தில் பல நூறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலைக் கழகங்களில் இவரது நூல்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை இணையத்தமிழ்த் தொடர்பாக ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்

1. இணையமும் தமிழும் (2008)

2. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (2009)

3. இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (2011)

4. தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் (2012)

5. ஊடகவியல் –( 2018)

6. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி (2021)


துரை.மணிகண்டன்

1 comments: