காலம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இணையத்தமிழ் துறைக்கு நான் வந்து கடந்த 15 ஆண்டுகள் ஆகின்றன. 2005ஆம் ஆண்டில் இத்துறையில் நுழைந்த போது ‘கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்று’ இருந்தது. நானும் இத்துறைத் தொடர்பான விடயங்களை ஒரு சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். இருந்தாலும் முழுமையாக இல்லை. எனக்கு தேவையானதை கூகுளில் தேடுவேன் இருக்காது. உடனே அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து எனது வலைப்பதிவான மணிவானதியில் இடுவேன்.
மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி? வலைப்பூ உருவாக்குவது எப்படி? தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்றெல்லாம் பதிவிடுவேன். இணையம் தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள நான் நூல்களையும் தேடி உள்ளேன். அப்பொழுது எனது கண்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான நூல்கள் 2008 வரை கிடைக்கவில்லை.
இதனை போக்கும் விதமாக ஏன்? நாம் ஒரு நூலை எழுதி வெளியிடக்கூடாது என்று எண்ணி “இணையமும் தமிழும்” என்ற நூலை 2008 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டேன்.
இந்த நூலை வெளியிட சென்னையை சேர்ந்த நன்னிலம் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன். அதன் நிர்வாக இயக்குனர் திரு கோவிந்தசாமி அவர்கள் இந்த தலைப்பில் நூல் வெளியிட்டால் யார் இந்த நூலை வாங்குவார்கள்? என்று என்னை கேட்டார்? இணையம் தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவரவில்லை எனவே இந்த நூலை வெளியிட்டோம் என்றால் நன்றாக இருக்கும் என்றேன். அப்படி நூலை வெளியிட்டோம் என்றால் இந்நூலை கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்கள் தமிழ் கணினி இணையப் பயன்பாட்டைத் தெரிந்து கொள்வார்கள் என்றேன்.அதற்காக இந்த நூலை வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். மேலும் நூலின் பயனை இப்பொழுது அறியமாட்டார்கள் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்றேன். அவரும் சம்மதம் தெரிவித்து இந்நூலை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இந்த நூல் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஈவேரா அரசு கலைக்கல்லூரித் தமிழ் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் மோரிஸ் ஜாய்ஸ் அவர்கள் இணையமும் தமிழும் என்ற நூலைப் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்களுக்குக் கணினிப் பற்றிய அறிமுகத்தை வழங்கினார்.
இன்று பல பல்கலைக்கழங்களிலும் பலநூறு கல்லூரிகளிலும் பாடமாக வைத்து பல ஆயிரம் மாணவ-மாணவிகள் இணையத்தமிழைத் தெரிந்து கொள்கின்றனர். இதற்கு எமது நூலைப் பாடத்திட்டத்தில் வைப்பதற்குப் பரிந்துரை செய்த பாடத்திட்டக் குழுவில் பங்காற்றிய பேராசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
இந்த நூலை இரண்டாவது பதிப்பாக 2022 இல் நானே எனது கமலினி பதிப்பகம் மூலம் சில திருத்தங்கள் செய்து
வெளியிடுகின்றேன்.
அவைகளில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் கணினித்
தமிழ் விருது பட்டியலும், ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்
கலைச்சொல்லாக்கம், உத்தமம் மாநாடு 2021 ஆம் ஆண்டுவரை எங்கு நடைபெற்றது என்ற செய்தியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
எனவே தமிழ் ஆய்வுலகம் இந்நூலை ஏற்று வரவேற்க வேண்டுமென்று அன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்.
முனைவர் துரை.
மணிகண்டன்
இணையத்தமிழ் ஆய்வாளர்
9486265886 - 7010058174
45- ஆவது சென்னை புத்தகக் கண்காடசியில் எமது நூல்களான
1. இணையமும் தமிழும் (2008)
2. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (2009)
3. இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (2011)
4. தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் (2012)
5. ஊடகவியல் –( 2018)
6. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி (2021)
அனைத்தும் WE CAN BOOKS கடையில் கிடைக்கும்.
அரங்கு எண்; 113
முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ் ஆய்வாளர். கடந்த 15 ஆண்டுகளாக இணையத்தமிழ் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறைகளிலும் இணையத்தமிழ் குறித்த பயிற்சியை வழங்கி வருபவர். மேலும் மூன்று முறை இலங்கையும், ஒருமுறை சிங்கப்பூர், மலேசியா சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணைய தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கியவர். தமிழகத்தில் பல நூறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலைக் கழகங்களில் இவரது நூல்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுவரை இணையத்தமிழ்த் தொடர்பாக ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்
1. இணையமும் தமிழும் (2008)
2. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (2009)
3. இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (2011)
4. தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் (2012)
5. ஊடகவியல் –( 2018)
6. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி (2021)
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை, தமிழக அரசின் தமிழ் இணைய கல்விக் கழகமும் இணைந்து வழங்கிய கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை இரண்டாவது முறையாக வழங்கியது.
Dr.Durai.Manikandanதமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை, தமிழக அரசின் தமிழ் இணைய கல்விக் கழகமும் இணைந்து வழங்கிய கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை 3-2 -2022 காலை 10:30 மணிக்குப் பல்கலைக்கழக அரங்கத்தில் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறுசெயலிகளின்(Smart Applications) அறிமுகத்தைத் தொடங்கி குறுஞ்செயலிகள் இன்று தமிழில் எந்தந்த துறையில் கிடைக்கின்றன, அதை உருவாக்குவதற்கு ஒரு கணினி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக் கொண்டால் நாமே ஒரு தமிழில் ஒரு செயலியை உருவாக்க முடியும் என்பதைப் பயிற்சி மூலம் மாணவர்களுக்குத் தொடங்கினேன்.
பிறகு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு நெறியாளர், துணைத் தேர்வு நெறியாளர், துணைப்பதிவாளர், அலுவலகங்கள், என அனைத்துக் கணினிகளிலும் தமிழ் ஒருங்குறி எழுத்துருவை பதிவிறக்கம் செய்து அவர்களுக்குத் தட்டச்சு செய்யும் வழிமுறைகளையும் மிக நேர்த்தியாக வழங்கினேன்.
குறுஞ்செயலி அறிமுக வழங்குதல்
இறுதியாக கணித்தமிழ்ப் பேரவைச் சார்பாகச் சிறந்த தமிழ் வலைப்பக்கங்களை உருவாக்கி அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அலுவலகப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கியதுமுனைவர் கு.விஜயா மற்றும் துணைவேந்தர் அவர்கள்
மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர் மிகுந்த மரியாதையோடு வரவேற்று இந்த பயிற்சியை முழுமையாக வழங்குங்கள். மேலும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலும் சென்று இதுபோன்ற தமிழ் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு.