/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, July 13, 2020

’கணினித் தமிழ் எழுத்துருவும் வடிவமைப்பும”

தமிழ் இணையக் கழகம் சார்பாக தொடர் இணையத்தமிழ் உரையாடலில் 12- 7- 2020 அன்று மாலை ஏழு மணிக்கு எழுத்தோவியர் திரு. நாணா அவர்கள் கணினித் தமிழ் எழுத்துருவும் வடிவமைப்பு என்ற தலைப்பில் உரை வழங்கினார். தனது 35 ஆண்டுகால பத்திரிக்கை துறையில் பயணித்த  அவரது அனுபவங்களை  உரையில் எடுத்துக்கறினார்.  பழமையான கல்வெட்டு எழுத்துக்கள், நாணய சித்திர எழுத்துக்கள், ஓலைச்சுவடி எழுத்துருக்கள், செப்புத் தகடுகளில் இடம்பெற்றிருந்த  எழுத்துருக்கள் அதனை தொடர்ந்து தம்பிரான் வணக்கம் என்ற நூலை அச்சிட்ட  அச்சு முறையின் செயல்பாடுகள் குறித்த செய்திகளைக் குறிப்பிட்டார்.  சினிமாவில் எழுத்துருக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தன என்றும் பிறகு இந்திய டுடே பத்திரிக்கையில் எழுத்து வடிவமைப்பாளாராகப் பணியாற்றியதையும் தனது அனுபத்தைக் கூறினார். மேலும் கண்ணதாசனின் கையெழுத்துக்களை எழுத்துருவாக மாற்றி

அதனை ன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். சுஜாதா, இளையராஜா மற்றும் பல சினிமா பிரபலங்களும் அவர்களது கையெழுத்துகளையும் எழுத்துருவாக மாற்றம் செய்து கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் அதே போல பல்வேறு நூல்களைத் தனது கை வண்ணத்தால் அட்டைப் படமும் செய்து அதில் இருக்கின்ற எழுத்துருவையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இவர் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் வெவ்வேறு வகையான 50  எழுத்துருக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் வடிவமைத்துள்ள எழுத்துக்கள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் வடிவமைத்துக் கொடுத்துள்ளது எழுத்துருக்களில் சில புதிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தனது தமிழ் எழுத்துரு பயணத்தையும், தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் தான் கடந்து வந்த பாதையையும் அதில் இவர் பங்காற்றிய சிறப்பினையும் எடுத்து விளக்கினார். இந்த இணைய உரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை கும்பகோணம் ஆடவர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் சாமியப்பா அவர்கள் வழங்கினார்.

 

2 comments:

  • AK says:
    August 5, 2020 at 11:58 AM

    அருமை. அரசாணை வெளியிட்ட பின்பு இன்னும் ஏன் அரசு அலுவலக பணிக்காக தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாட்டிற்கு வராமல் வானவில் எழுத்துரு பயன்படுத்தப்பட்டு வருகிறது? கல்லூரிகளிலும் ஒருங்குறி எழுத்துரு பயன்படுத்த ஊக்குவிக்காமல் பாமினி எழுத்துரு பயன்பாட்டில் உள்ளது?

  • மணிவானதி says:
    August 22, 2020 at 8:36 PM

    நன்றி. பலருக்கு இதுபோன்ற எழுத்துரு இருப்பது பலருக்குத் தெரியவில்லை. தற்பொழுது பவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஐயா.