/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, July 27, 2020

நிரலாளர் முனைவர் இரா அகிலனின் - technical tools of sangam literature

|2 comments
சங்க இலக்கியப் பாடல்களின் பகுப்புகளாகத் தொடரடைவு, சொல்லடைவு, அகராதி,, பொருள் விளக்கங்களைத் தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு பகுத்தும், வகுத்தும் வழங்குவது எவ்வாறு என விளக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொழுது மொழி கணினியிலும் கைபேசியிலும் பயணிக்கிறது. தற்காலத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சங்க இலக்கியங்களைக் கணினி வழியாக ஆராய்ச்சி செய்வதற்கானக் கருவிகள் உரு
வாக்கம், பயன்பாடுகள் மற்றும் தேவைகள் பற்றி இக்காணொலி விவரிக்கின்றது.

பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களின் - concordance for sangam literature

|1 comments
 சங்க இலக்கியம் தொடங்கி கம்பராமாயணம், வில்லிபாரதம் முதல் அனைத்து இலக்கிய பாடல்களுக்கும் ABC  பகுப்பாய்வு முறையில் சொல்லடைவுகளையும் தொடரடைவுகளையும்  கணினியில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களின் உரையை இந்தக் காணொலியில் காணலாம்.

சங்க இலக்கியத் தொடரடைவு, பக்தி இலக்கியம், கம்பராமாயணம், concordance for sangam literature, Bakthi concordances
 முனைவர்.ப.பாண்டியராஜா, abc analysis, தமிழ் இணையக் கழகம், http://tamilconcordance.in/, Word class, திருக்குறள், நளவெண்பா, பெருங்கதை, தொல்காப்பியம், முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி, தொடரடைவு, சொல்லடைவு, Tamil concordance, Dr.p.pandiyaraja 


Monday, July 20, 2020

தமிழில் மழலைக்கல்வி முதல் பட்டப் படிப்பு வரை இணையம் வழியில் எளிமையாக கற்கலாம் வாங்க

|0 comments

தமிழர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ்மொழியை மழலைக்கல்வி முதல் பட்டப் படிப்பு வரை இணையம் வழியில்   எளிமையாக கற்கும் வழிமுறைகள்.


மழலைக்கல்வி, சான்றிதழ் கல்வி, மேற்சான்றிதழ் கல்வி, பட்டயக்கல்வி, மேற்பட்டயக் கல்வி, பட்டப் படிப்புக் கல்வி, கல்வி விபரங்கள், பாடத்திட்டங்கள், இணையவகுப்பறை, தேர்வுமுறைகள்,பேராசிரியர் மா.நன்னன், மாணவர் பதிவு,  Certificate Course,  Kindergarden, Undergraduate Degree, Smat Classroom,  Online Courses, Online Courses Certificate in Tamil, http://www.tamilvu.org/, Test  Methods, Test Techniques, Student Registration form, Syllabus, Diploma, PG diploma, மணிவானதி, தமிழ் இணையக்கலவிக் கழகம்




Saturday, July 18, 2020

செயற்கை நுண்ணறிவு - Artificial intelligence - NLP

|0 comments

தமிழ் இணையக் கழகம் சார்பாக நடைபெற்ற இணையவழி சிறப்புரையில் அண்ணாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் மாலா நேரு அவர்கள் செயற்கை நுண்ணறிவு (NLP) என்ற தலைப்பில் 14-05-2020 அன்று வழங்கிய சிறப்புரை.

செயற்கை நுண்ணறிவின் விளக்கமும், அதன் தோற்றம், வளர்ச்சி, பல்வேறு துறைகளில்  செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

Dr.Mala Nehru, Artificial intelligence, NLP, Dr.Mala,  செயற்கை நுண்ணறிவு, natural network, robotics, AI, machine learning, deep learning, application of deep learning, speech recognition, machine translation, மணிவானதி, tamil internet academy, தமிழ் இணையக் கழகம்


Thursday, July 16, 2020

Google Drive- வில் (கூகுள் ட்ரைவ்) இலவசமாக 15 GB - யை சேமிக்கலாம் வாங்க.

|0 comments

உங்கள் கணினி (Computer), மடிக்கணனி (Laptop), திறன்பேசிகளில் (Sumartphone) உள்ள கோப்புகள் (Files), புகைப்படங்கள் (Photo), முக்கியமானக் கல்விச் சான்றிதழ்கள், பெரிய கோப்புகள் (files) என அனைத்தையும் கூகுள் ட்ரைவில் -  (Google Drive) 15 GB யை இலவசமாக சேமிக்கலாம். உங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்கள், கருத்தரங்க நூல்கள், சிறப்பிதழ்கள், ஆய்வேடுகள், இலக்கியத் தரவுகளின் முழு கோப்புகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றையும் இந்த கூகுள் ட்ரைவில் சேமித்து வைக்கலாம்..

How to save google drive photos to gallery, How to save google drive files, save google drive files to computer, Google Drive, கூகுள் ட்ரைவ், Google drive in tamil, Google drive how to use,  save to book google drive,  save to ariticle google drive, ways to move files into google drive.


Monday, July 13, 2020

’கணினித் தமிழ் எழுத்துருவும் வடிவமைப்பும”

|2 comments
தமிழ் இணையக் கழகம் சார்பாக தொடர் இணையத்தமிழ் உரையாடலில் 12- 7- 2020 அன்று மாலை ஏழு மணிக்கு எழுத்தோவியர் திரு. நாணா அவர்கள் கணினித் தமிழ் எழுத்துருவும் வடிவமைப்பு என்ற தலைப்பில் உரை வழங்கினார். தனது 35 ஆண்டுகால பத்திரிக்கை துறையில் பயணித்த  அவரது அனுபவங்களை  உரையில் எடுத்துக்கறினார்.  பழமையான கல்வெட்டு எழுத்துக்கள், நாணய சித்திர எழுத்துக்கள், ஓலைச்சுவடி எழுத்துருக்கள், செப்புத் தகடுகளில் இடம்பெற்றிருந்த  எழுத்துருக்கள் அதனை தொடர்ந்து தம்பிரான் வணக்கம் என்ற நூலை அச்சிட்ட  அச்சு முறையின் செயல்பாடுகள் குறித்த செய்திகளைக் குறிப்பிட்டார்.  சினிமாவில் எழுத்துருக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தன என்றும் பிறகு இந்திய டுடே பத்திரிக்கையில் எழுத்து வடிவமைப்பாளாராகப் பணியாற்றியதையும் தனது அனுபத்தைக் கூறினார். மேலும் கண்ணதாசனின் கையெழுத்துக்களை எழுத்துருவாக மாற்றி

அதனை ன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். சுஜாதா, இளையராஜா மற்றும் பல சினிமா பிரபலங்களும் அவர்களது கையெழுத்துகளையும் எழுத்துருவாக மாற்றம் செய்து கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் அதே போல பல்வேறு நூல்களைத் தனது கை வண்ணத்தால் அட்டைப் படமும் செய்து அதில் இருக்கின்ற எழுத்துருவையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இவர் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் வெவ்வேறு வகையான 50  எழுத்துருக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் வடிவமைத்துள்ள எழுத்துக்கள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் வடிவமைத்துக் கொடுத்துள்ளது எழுத்துருக்களில் சில புதிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தனது தமிழ் எழுத்துரு பயணத்தையும், தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் தான் கடந்து வந்த பாதையையும் அதில் இவர் பங்காற்றிய சிறப்பினையும் எடுத்து விளக்கினார். இந்த இணைய உரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை கும்பகோணம் ஆடவர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் சாமியப்பா அவர்கள் வழங்கினார்.