/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, October 29, 2017

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா

|4 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா சார்பில் கனடாவின் டோரண்டோ நகரில் ‘இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா) தொடங்கி 29-10-2017 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது.


இதில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இணையவழி கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்டுரை வழங்கவிருந்தனர். அவர்களுக்குக் கனடா நாடு விசா தராமல் காலம் தாழ்த்தியதால், அங்கு செல்லவிருந்த தமிழ் அறிஞர்கள் / ஆர்வலர்கள் கனடா செல்ல இயலாமல் போனது. எனவே, அதே நாளில் அதே வேளையில் இந்தியாவிலும் இந்தக் கருத்தரங்கத்தினை நடத்துவது எனத் தீர்மானித்த இம்மாநாட்டுக் குழுவினர், திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா - அதிகாலை 4 மணி) இணையவழிக் காணொலிக் காட்சிகள் வழியாக இரண்டு கருத்தரங்கங்களும் இணைக்கப்பட்டு நடத்தப் பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக உத்தமத்தின் துணைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  (Durai.Manikandan) நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

இணையவழிக் கருத்தரங்கில் மாநாட்டுக் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. அதில் பேரா.க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், பேரா.பத்மநாபபிள்ளை, கருத்தரங்க ஆய்வுக்குழுத் தலைவர் பேரா.க.காமாட்சி, பேராசிரியர் விஜயராணி, பேரா.சி.சிதம்பரம், பேரா.பிரகதி.
வாழ்த்துரை வழங்கிய பேரா.விஜயராணி
நன்றியுரை வழங்கிய பேரா.சிதம்பரம்.
இணையவழ்க் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்.
கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன் எழுதிய ஊடகங்களில் தமிழ் என்ற நூலை முத்துக்கமலம் இணைய இதழ ஆசிரியர் தேனி சுப்பிரமணி பெற்றுக்கொண்டபோது...
மாநாட்டில் வழங்கப்பட்ட பேக் மற்றும் நினைவுப்பரிசு.(முனைவர் துரை.மணிகண்டன், பேரா.காமாட்சி, தகவல் தொடர்பு வினோத்,)
மாநாட்டில் இணையத்தோழி மின்னிதழின் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தேனி சுப்பிரமணி.

Friday, September 29, 2017

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்- Tamil Usages In Internet

|1 comments
சிவன்காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 27/09/2017 அன்று நடைபெற்ற ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கில் “ இணையத்தில் தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.
நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை துறைத்தலைவர் முனைவர் பா.பொன்னி வழங்கினார். அடுத்து வரவேற்புரையாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி பத்மபிரியா வழங்கினார்.
அடுத்து நான் 10 45 லிருந்து 1 மணி வரை இணைய அறிமுகத்தையும், தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்படும் போக்கும் குறித்து விரிவாக விளக்கினேன். ( இணையம் அறிமுகம், இணையமாநாடுகளின் பங்களிப்பு, எழுத்துரு தோற்றம் இன்றைய நிலை, தமிழ் இணைய இதழ்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றம் வளர்ச்சி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் மென்பொருள்கள், அதிலும் குறிப்பாக எழுத்துப்பிழைத் திருத்திகள், முகநூலின் பயன்பாடுகள் அதனை எவ்வாறு எவற்றைப் பயன்படுத்த வேண்டும், போன்ற ....)


(பேராசிரியர் பத்மபிரியா, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.பொன்னி இடையில் Dr.durai.manikandan பேராசிரியர் ச.தனலெட்சுமி மற்றும் வளர்மதி)

மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

                                           (ஆய்வகக் கூடத்தில் பயிற்சியில்)
இறுதியாக செல்வி ச.பாலமுருகேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
குறிப்பு:
1. நான் இதுவரை 70 மேற்பட்ட கல்லூரிகளுக்குப் பயிற்சி வழங்க சென்றுள்ளேன். ஆனால் இக்கல்லூரியில்தான் 60 % மாணவிகளுக்குத் தட்டச்சு தெரிந்து இருந்தது. இதற்குக் காரணம் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் ஊக்கம்.
2. அங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணினியை இயக்கி தட்டச்சை மிக இலகுவாக பாவித்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். எனக்கு வியப்பாகவும் இருந்தது.
3.இதற்கெல்லாம் காரணம் துறைத் தலைவர் முனைவர் பா. பொன்னி அவர்கள்தான்.
வாழ்க வளமுடன்.....
பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்ற கல்லூரி மாணவிகள்.

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் இணையத்தமிழ்

|0 comments
கும்பகோனம் அரசினர் மகளிர் கல்லூரியில் ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பயிற்றுனராக நான் கலந்துகொண்டு விளக்கம் அளித்தேன். 






கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்- பேராசிரியர்கள் உடன்




பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஒரு பகுதியினர்.

Monday, August 28, 2017

கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்

|0 comments


29, 30 /08/2017 அன்று பெண்கள் அரசினர் கலைக்கல்லூரி (கும்பகோணம்) தமிழ்த்துறையில் "கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்"  என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.



29-08-2017 அன்று கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”கணிப்பொறியின் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பா.ஹேமலதா அவர்களின் தலைமையில் சிறபாகத் தமிழ்த்துறை ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப.செந்தில்குமாரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்தியா அவர்களும் இணைந்து செயல் பட்டனர்.
நிகழ்வில் இணையத்தமிழ் குறித்த செய்திகளை விரிவாக எடுத்து விளக்கினேன்.
அடுத்து தமிழ்த்தட்டச்சு பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், செயற்கை அறிவின் இன்றைய நிலை, காணொளி காட்சியைப் பயன்படுத்தும் திறன், முகநூலின் நன்மைகள், பல்வேறு இலக்கியப் பதிவுகள் போன்றவற்றையும் விளக்கினேன்.
தமிழின் பயன்பாட்டு மென்பொருள்களாக பேரா.தெய்வசுந்தரம் அவர்களின் மெந்தமிழ் சொல்லாளர், பேரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மென்பொருள்களும் பயன்படுத்திக் காட்டினேன்.
இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.அகிலா நன்றியுரை வழங்கினார்..

Sunday, July 23, 2017

“ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்”

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் சூலை 26, 2017 அன்று மாலை 6.30 மணிக்கு “ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளேன். அன்பர்கள், கணினித் தமிழ் ஆர்வலர்கள்  கலந்துகொண்டு பயன்பெற அன்போடு அழைக்கின்றேன்.

நன்றி: புகைப்படம் --https://alchetron.com/Tiruchirappalli-10406-W

Wednesday, July 5, 2017

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் - நூல்/ UGC தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகிறது

|1 comments






பொருளடக்கம்
அலகு – I
கணிப்பொறி அறிமுகம் ( பக். 1-27)
1.1  கணிப்பொறியின் வரலாறு - History of Computer
1.2  கணிப்பொறியின் வளர்ச்சி – Growth of Computer
1.3  கணிப்பொறியின் குணங்கள் – Characteristics of  Computer
1.4  கணிப்பொறியின் தலைமுறைகள் – Generation of  Computer
முதல் தலைமுறை (Generation of Computer) – இரண்டாம் தலைமுறை (Second Generation) – மூன்றாம் தலைமுறை (Third Generation) – நான்காம் தலைமுறை (Fourth Gerneration) – ஐந்தாம் தலைமுறை (Fifth Generation) – மேகக் கணிமை  (Cloud Computing)
1.5  கணிப்பொறிகளின் அமைப்பு வகைகள் – Types of Computer
இலக்க வகைக் கணிப்பொறி (Digital Computer) – ஒப்புமை வகைக் கணிப்பொறி (Analog Computer) – கலப்பின வகைக் கணிப்பொறி (Hybrid Computer) – மீக்கணிப்பொறி (Super Computer) முதல் நிலைக் கணிப்பொறி (Mainframe Computer) – சிறுகணிபொறி (Mini Computer)
1.6  நுண் கணிப்பொறி – Micro computer
பணி நிலையம் – தன்னுடைமை கணினி (Personal Computer) – மடிக்கணினி (Laptop) – கையடக்க கணினி (Personal Digital Computer)
1.7  கணிப்பொறியின் அமைப்புகள் – Structure of Computer
உள்ளீட்டுப் பகுதி (Input unit) – வெளியீட்டுப் பகுதி (Ouput Unit) – சேமிப்புப் பகுதி (Storage Unit) – கட்டுப்பாட்டுப் பகுதி (Control Unit) – எண்கணித தர்க்கப் பகுதி (Arithmetic Logic Unit) – மத்திய செயல்பாட்டுப் பகுதி – (Central Processing Unit)
1.8  கணிப்பொறி – வன்பொருள், மென்பொருள்
மென்பொருள் (Software) – வன்பொருள் (Hardware)
1.9. உள்ளீட்டுக் கருவிகள் (Input Devices)
விசைப்பலகை (Keyboard) – ஒளிப்பேணா (Light Pen) – சுட்டி Mouse – பந்துருளை (Tracker Ball) – தொடு சுட்டி (Touch Pad) – ஒலி உள்ளீடு கருவி – வருடி (Scanner)
1.10. வெளியீட்டுக் கருவிகள் – (Output Devices)
திரை (Monitor) – அச்சுப்பொறி (Printer) – அச்சுப்பொறி வகைகள் (Types of Printers) – ஒலிபெருக்கி (Speaker) – ஒளிபெருக்கி (Projector)
1.11. சேமிப்புக் கருவிகள் – (Memory Devices)
   நேரடி அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM) – படிப்பதற்கான நினைவகம் (Read only Memory - ROM) – இரண்டாம் நிலை சேமிப்புக் கருவி (Secondary Memory  Devise) – நெகிழ் வட்டு (Floppy Disk Drive) – குறுவட்டு  (Compact Disk Drive)
1.12. இயங்குதளம் – (Operating System - OS)
      கணினி சாளரம் (Windows) – சன்னல் 1.0 (Windows) – விண்டோஸ் – 1.0 – விண்டோஸ் – 2.0 – விண்டோஸ் 3.0 – விண்டோஸ் என்.டி 3.1 – விண்டோஸ் 95 – விண்டோஸ் வொர்க் ஸ்டேசன் 4.0 – விண்டோஸ் 98 – விண்டோஸ் எக்ஸ்.பி –விண்டோஸ் 2003 – விண்டோஸ் சர்வர் 2008- விண்டோஸ் 8
அலகு – 2
தமிழில் அச்சுப்பதிப்பும் அஞ்சல் பரிமாற்றமும் (பக். 28-42)
2.1 மைக்கேரா சாப்\டு வேர்டு – (MS - Word)
      தொடக்கம் (Home) – தலைப்புப் பட்டை (Title Bar) – பட்டியல் பட்டை (Menu Bar) – கருவிப் பட்டை (Tool Bar) – கோடிட்ட உதவும் சாதனம் (Ruler) – இடையில் சேர்க்கப்படும் புள்ளி (Instruction Point) – இடைப்பட்ட வேலையைச் செய்யும் கண்ணாடி (Task Pane) – சுருள் பட்டை (Scroll Bar) – (Status Bar)
2.2 மைக்ரோ சாப்\டு எக்ஸல் – (MS-Excel)
      அட்டவணைச் செயலி (Spread Sheet) – பரப்புத்தாள் – மெனு பெட்டி – வாய்ப்பாடு பெட்டி – தரவு பெட்டி.
2.3 பவர்பாய்ண்ட் – (Power Point)
      பெருந்திரையை உருவாக்குதல் – தலைப்புப்பட்டை  (Title Bar) – பட்டியல் பட்டை (Menu Bar) – முகப்பு (Home) – உட்புகுத்துப்பெட்டி (Insert) – வடிவமைப்பு (Design) – அசைவூட்டப் படம் (Animation) – காட்சி (Show) – கருவிப்பட்டை (Tool Bar)  - (Status Bar)
2.4. மைக்ரோசாப்\ட் அக்சஸ் – (MS - Access)
      வினா எழுப்புதல் (Queries) – வடிவம் (Forms) – அறிக்கை (Reports) – பக்கங்கள் (Pages) – சரிப்படுத்துதல் (Modulation)
அலகு – 3
கணினியில் தமிழும் தமிழ்  மென்பொருள்களும் (பக்.43-81)
3.1. அறிமுகம் (Introduction)
      கணினியில் தமிழ் – விசைப்பலகை சிக்கல் – பொதுதரம் இல்லா எழுத்துருக்கள் – வலைக் கணினியில் தமிழில் மின்னஞ்சல் – தமிழில்  மின்னஞ்சல் இடர்பாடுகள் – தமிழில் மின்னஞசல் தீர்வுகள் - தனித் தீர்வை நோக்கி முரசு.
3.2 தமிழ் எழுத்துருக்கள் - (Tamil Fonts)
மயிலை (Mayilai) தமிழ் லேசர் – (Tamil Laser) – இஸ்கி (ISCII) – தாரகை – இ கலப்பை – அஸ்க்கி (ASCI) – தகுதரம் (TSCII) – ஒருங்குறி (Unicode)  அகபே தமிழ் எழுதி – அழகி (Azhagi) – என்.எச்.எம் (New Horizon Media) – செல்லினம் (Sellinam)
3.3 தமிழ்  சொற்ப்பிழைத்திருத்தி (Spell Checker)
      சர்மா சொற்பிழைச் சுட்டி (Sarma Checker) – மென்தமிழ்ச் சொல்லாளர் (Mentamizh) – பொன் மொழி (Ponmozhi) – பொன்சொல் (Ponsoll) – வாணி எழுத்து  பிழைத்திருத்தி (Vaani)
3.4 சந்திப்பிழைத் திருத்தி (Sandhi Checker)
      நாவி சந்திப்பிடைத் திருத்தி (Naavi) – மென் தமிழ்  சந்திப் பிழைத்திருத்தி (Mentamizh) – பொன்மொழி (Ponmozhi)
3.5 தமிழ் மின் அகராதி  மென்பொருள் (Tamil Dictionary)
      குறள் தமிழ்ச் செயலி  (Kural)
3.6. சொற்செலிகள்
      எழுத்துணரி (Text to Speech) – திருக்குரல் எழுத்துப் பேச்சு மாற்றி (Thirukural  - TTS) – எழுத்துப் பேச்சு மாற்றி (Listen tome) – தமிழ்  பிரெய்லி  எழுத்துப் பேச்சு மாற்றி (Tamil Braily)
3.7. பேச்சுணரி (Speech Recognizer)
3.8. ஒலி எழுத்துணரி (Optical Character Recognition - OCR)
      பொன்விழி (Ponvizhi)
3.9. கையெழுத்துணரி (Handwritten Recognition)
       பொன்மடல் (Ponmadal) – கூகுள் உள்ளீட்டு கருவி  (Google Input tool)
3.10. யாப்பு உணரி (Tamil Prosody Analyzer)
      அவலோகிதம்  (Avaologitham)
3.11. ஒலிபெயர்ப்பு உணரி (Transliteration/Transcription/Romaniation)
      அனுநாதம் (Annunatham)
3.12. எழுத்துமுறை  மாற்றி (Language  Script Converter)
      அஷரமுகா எழுத்துமுறை மாற்றி (Aksharamukha) – கூகுள் தமிழ்  ஒலி  மாற்றி – தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு  மென்பொருள்கள்
3.13. கணினித் தமிழ்  வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருள் (Freeware)
      கட்டற்ற  மென்பொருள் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள்கட்டற்ற மென்பொருளாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மென்பொருள்கள் – எழுத்துணரி – சொல் திருத்தி – இலக்கண  பிழைத் திருத்தி – அகராதி – உரை ஒலி மாற்றி – நிரலாக்கம் – உதவி நிரல்கள் – அரட்டை – இலக்கியத் தேடல்- அவலோகிதம் – மின்னூலாக்கம் – தமிழாக்கம் – ஆவணமாக்கல் – அறிவுப் பகிர்வு – கணினித் தமிழ் இணைய இதழ்
அலகு – 4
தமிழ் இணையம்  (பக். 82-145)
4.1 இணையம் அறிமுகம் (Introduction of Internet)
      வலைப்பின்னல் (Network) இணையத்தின் பயன்பாடுகள் (Use of Internet) – நிறுவன உள் இணைம் (Local Area network- LAN) – இணையத்தின் வரலாறு (History of Internet) – அமெரிக்காவும் இணையமும்
4.2 கணினி இணைத்தில் தமிழ்  
      இணையத்தில் தமிழ் முன்னோடி – இயங்கு எழுத்துரு – தமிழ். நெட் – தகுதர நியமம் – ஒருங்குறி நியமும் – அரசின் ஏற்பு -கீமான்- நிலைபெற்ற ஒருங்குறி –
4.3. தமிழ் இணைய மாநாடுகள் (Tamil Internet Conferences)
      முதல்மாநாடு - இரண்டுமாநாடு – மூன்றுமாநாடு – நான்குமாநாடு – ஐந்தாம்மாநாடு – ஆறாம் மாநாடு – ஏழாம் மாநாடு – எட்டாம் மாநாடு – ஒன்பதாம் மாநாடு – பத்தாம் மாநாடு – பதினொன்றாம் மாநாடு –பன்னிரண்டாம் மாநாடு – பதிமூன்றாம் மாநாடு – பதிநான்காம் மாநாடு -பதினைந்தாவது மாநாடு.
4.4. கணிப்பொறித் திருவிழாக்கள் (Festivals of Computer)
4.5. தமிழ்க் கணினி மொழியியல் (Tamil computational Linguistics)
4.6. தமிழ்க் கணிப்பொறி வல்லுநர்கள்  (Genius of Tamil Computing)
      நா. கோவிந்தசாமி – ஆரம்பகாலம்- எழுத்துத் துறையில் ஆற்றிய பங்கு –கணினித்துறையில் ஆற்றிய பங்கு – உமர்தம்பி – தேனி இயங்க உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் –உமர்தம்பியின் ஆக்கங்கள் – யாழன் சண்முகலிங்கம்-முரசொலிமாறன்-சுஜாதா – முனைவர் கு. குல்யாணசுந்தரம் – மலேசியாவில் இணையவழித் தமிழ் – முத்துநெடுமாறன் – காசி ஆறுமுகம் – தகடூர் கோபி – தகடூர் தமிழ் மாற்றி – உமர்பன்மொழிமாற்றி – அதியமான் எழுத்துரு மாற்றி – அதியமான் \பயர்பாக்ஸ் நீட்சி-தமிழ் விசை \பயர்பாக்ஸ் நீட்சி –சமூகத் திட்டங்களில்  பங்களிப்பு – முகுந்தராஜ் சுப்பிரமணியன் – தமிழா  கணிமைத் திட்டம் ஏ – கலப்பை – தமிழ் விசை பயர்பாக்ஸ் – தமிழா சொல்திருத்தி – சமூக திட்டங்களில் பங்களிப்பு – மா. ஆண்டோபீட்டர்-எழுதிய நூலகள் –பொறுப்புகள் –முனைவர் மு. பொன்னவைக்கோ- முனைவர் ந. தெய்வசுந்தரம் - திரு. செல்வமுரளி- முனைவர் இராதாசெல்லப்பன் – இ.மயூரநாதன்  - சிவாப்பிள்ளை – பேரா. வாசுரெங்கநாதன்.
4.7. இணையத் தமிழ்  பங்களிப்பாளர்கள் (Internet Tamil users)
      முனைவர் துரை. மணிகண்டன் – முனைவர் மு. இளங்கோவன் – முனைவா தி.நெடுஞ்செழியன் – முனைவர் மு. பழநியப்பன் – தேனி மு. சுப்பரமணியன்.
4.8. கணினித்தமிழ் விருதுகள் (Awards of Tamil Computing)
      முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – நோக்கம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தரராமசாமி விருது – விருது பெற்றவரின் விவரம் – S.R.M. பல்கலைக்கழக தமிழ்க் கணிமை விருது
அலகு – 5
தமிழ் இணையப் பயன்பாடுகள் மற்றும் கற்றல் கற்பித்தல் (பக். 146-252)
5.1. மின் அஞ்சல் என்றால் என்ன? (Electronic Mail – E Mail)
      மின்னஞ்சல் பயன்பாடுகள் (Email users) – முதல் மின்னஞ்சல் EMail Uses முகவரி (First Email) – மின்னஞ்சல் உருவாக்கம் (Creation of Email)
5.2. தமிழ்  வலைப்பூக்கள் (Tamil  Blog)
      வலைப்பூ – வலைப்பதிவு – தமிழ் வலைப்பூ – வலைப்பூ  சேவை  - முதல் தமிழ்  வலைப்பூ – தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி – வலைப்பூக்களின் வகைப்பாடுகளும் வளர்ச்சியும் – தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் – வலைப்பதிவர் திருவிழா.
5.3. தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் (Creation of  Blogs )
5.4. வலைப்பதிவுகளின் திரட்டிகள் (Collection of Tamil Blogs)
      தமிழ்மணம் – திரட்டி – தமிழ்வெளி – சங்கமம் – தமிழ்க்கணிமை – வேர்ட்பிரசு – டெக்னோரட்டி – மாற்று – தமிழீழத்திரட்டி –– இலங்கை வலைப்பதிவர் – தமிழ்வௌனி – மசேிய தமிழ் வலைப்பூ – பூவாசம் – முத்துக்கமலம்.
5.5. தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்தல் (Tamil Font Download)
     NHM writer எழுத்துரு பதிவிறக்கம்
5.6. தமிழ் எழுத்துரு மாற்றிகள் (TamilFont Converter)
      எழுத்துரு பிரச்சனை – எழுத்துரு மாற்றிகள் – பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி (Suratha) – அதியமான் எழுத்துரு மாற்றி (Adhiyaman) – தமிழ் எழுது்துரு மாற்றி (Kandupidi) – சிலம்பம் (Silampum) – இஸ்லாம் கல்வி எழுத்துரு மாற்றி (Islamkalvi) என். எச்.எம். எழுத்துரு மாற்றி (N.H.M.) – எழுதி மாற்றி (Tamilexicon) – கொழும்பு பல்கலைக்கழகம் – தமிழ் 24 செய்தி (Tamil 24 News) – பயன்பாடுகள்
5.7 தமிழ் மின்னியல் நூலகம்  (Tamil Digital Library)
      மின்னியல் நூலகம் – உலக மின்னியல் நூலகம் – தமிழ் மின்னியல்  நூலகம் – ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – மதுரைத் திட்டம் (Project Madurai) – தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual Academy) சிறப்புக் கூறுகள் – தேவாரம் (Thevaram) – காந்தளகம்  (Tamilnool) – அறக்கட்டளை  (Tamilheritage) – நூலகம். நெட் (Noolaham) – இந்திய  மின்னியல் நூலகம் (Digital Ligbrary of India) – சென்னை நூலகம் (Chennai Library) – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (Ulakththamizh) – மின்னில் நூலகப் பயன்பாடு.
5.8. மின்நூல்கள் (E-Book)
      மின்நூல் – மின்நூல் வரலாறு – தமிழ் மின்நூலகள் – பிளாஷ் மென்பொருள் – கையாவண நூல் (PDF Book) – மீயுரை நூல்  (HTML Book) – புரட்டு நூல் (Flip Book) – மென்னூல் (Equp Book) – கிண்ணூல் (Mobi Book)
5.9. மின் நூல் உருவாக்கம்  (Creation of E- Book)
5.10.  மின் மொழி பெயர்ப்புகள் (Machine Translation)
      கூகுள் மொழிபெயர்ப்பு – தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (National Translation Mission) – தோற்றம் – விரிவான  திட்டம் – இந்திய  மொழிகளுக்கான  இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்பு – மொழிகள் – தமிழ்  இந்தி – இந்தி தமிழ் – தமிழ் தெலுங்கு மற்றும் தெலுங்கு தமிழ் – தனி மின் மொழிபெயர்ப்பு – மின் மொழிபெயர்ப்பின் நன்மைகள்.
5.11. தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)
      விக்கிப்பீடியா பொருள் விளக்கம் – தோற்றம் – தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றம் – தமிழ் – பண்பாடு – வரலாறு – அறிவியல் – கணிதம் – தொழில்நுட்பம் – புவியல்.
5.12. சமூக ஊடகங்கள் (Social Media)
      ட்விட்டர் (Twitter) – முகநூல் (Facebook) – வாழ்க்கை வரலாறு – முகநூல் தொடக்கம் – இடப்பெயர்தல் – நியூஸ்பீடு (Newspeed) – முகநூல் இயங்குதளம் – பயன்பாட்டாளர்கள் – வாட்சாப் வரலாறு (History Whatsapp) – வாட்சாப் பிறப்பு – பயன்பாடுகள் – இன்ஸ்டாகிராம்  (Instagram) – ஸ்னாப்சட் (Snapset)
5.13. ஸ்கைப் (Skype) – வைபர்  (Viber)
5.14. தமிழ் குறுஞ்செயலி (Application)
      குறுஞ்செயலி விளக்கம் – தோற்றம் – பயன்பாடுகள் – குறுஞ்செயலிகள் கிடைக்கும் இடம் – செயலிகளை உருவாக்க உதவும் தளங்கள்  - குறுஞ்செலிகளின் வகைப்பாடுகள்  - குறுஞ்செயலிகளின் தாக்கம் – ஒருசில தமிழ் குறுஞ்செயலிகள் – தொழில் நுட்ப குறுஞ்செலிகள் – உத்தமம்.
5.15. கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் பங்கு
      நோக்கம் – மின்வழிக் கற்றலின் பயன்பாடுகள் – தொழல்நுட்ப வழிகள் எவை? – PPT  வழி கற்றல் – தமிழ் இணையக் கல்விக்கழகம் – தெற்காசிய மொழிவள மையம் – தமிழ்க் கழகம் – அநிதம் – மூடுல்ஸ் – தமிழகம். வலை – அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் மூலம் கற்றல் – வலைப்பதிவுகளின் மூலம்  கற்றல் – சமூக ஊடுகங்களின் வழிக் கற்றல் – ஓம்தமிழ் – மென்பொருள்கள் மூலம் கற்றல் – கற்றலில் மென்பொருள் தேவை  - கற்றல் பாதையை உருவாக்கும் மென்பொருள் (Transhuttle) – மனவரைபடம்  (Mindmeister) – பல்லூடகம் (Blenspace) – வினாடி வினா (Bravo) – கற்றல் கற்பித்தலிழல் சிக்கல்களும் தீர்வுகளும்

பின்னிணைப்புகள்
இணைப்பு 1 – கலைச்சொற்கள்                                       253
இணைப்பு 2 – முக்கியமான தமிழ் இணைதள முகவரிகள்              256
இணைப்பு 3 – காணொளி காட்சிகளின் முகவரி                        267
இணைப்பு 4 – வலைப்பூக்களின் முகவரி                              268

இணைப்பு 5 – குறுக்கு விசைகள்                                     272


தொடர்பிற்கு 
முனைவர் துரை.மணிகண்டன் - 9486265886

நூலின் விலை ரூ.325
மாணவர்களுக்கு -ரூ.250
குறிப்பு; நான்காம் பதிப்பு -  2023.
தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள், மத்திய அரசு நடத்தும் UGC தேர்வுகளில் அதிகமான வினாக்கள் இந்த நூலிலிருந்து கேட்கப்படுகிறது.

Friday, March 31, 2017

தொல்காப்பியப் பொருளதிகார குறுஞ்செயலிகள் உருவாக்கம்.

|2 comments

Saturday, March 25, 2017

கட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு -2017 கனடா, தொராண்டோ பல்கலைக்கழகம்

|0 comments

16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017

தொராண்டோ, கனடா



மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் 
அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017,  கனடாவில் தொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில்  ஆகத்து  மாதம்  25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின் ஆதரவோடும், தொராண்டோ பல்கலைக்கழகம், சுகார்பரோவின் ஆதரவோடும் நடைபெறுகின்றது.  
தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  இவ்வாண்டு மாநாட்டுக்கருத்தரங்கில்  ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning) என்பதும்  தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதுமாக இரண்டு  கருத்துமுழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.   .
மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
  • இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன) 
    எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு – Sentiment Analysisஆவண வகைப்படுத்தல் – Document Classificationஉருப்பொருள் பிரித்தெடுத்தல் – Entity Extraction
  • இயந்திர மொழிபெயர்ப்பு,  தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு,  எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள், தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
  • மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
  • ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
  • கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
  • தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
  • எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
  • தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data,  தமிழில் பொருளுணர் வலை (semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
  • கற்றல் மேலாண்மை அமைப்புகள் (Learning Managements Systems), மெய்நிகர் கல்விச்சூழல் (Virtual Learning)
  • எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archiveஇணைப்புத் தரவு – Linked Data, மெய்ப்பொருளியம் – Ontology
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை ஏ-4 (A4) தாள் அளவில் இரண்டு பக்கங்களில் ஏப்பிரல் 15 தேதிக்குள்  cpc2017@infitt.org என்ற 
மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கமானது குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் ஆய்வு முறைகள் ஆய்வடிப்படையில் கண்ட முடிவுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும். தலைப்பை அறிமுகம் செய்யும் பொதுவான கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை மாநாட்டுக் குழு ஆய்வரங்கத்தில்  படிக்கவோ (oral presentation),   சுவரொட்டி காட்சிக்கட்டுரைகளாகவோ (poster presentation) ஏற்கும்.
கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி (யூனிக்கோடு) அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (TACE) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும்  தேவையறிந்து கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு மே 15ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.
முழுக் கட்டுரையை 4 பக்கங்களுக்குக் குறையாமலும் 6 பக்கங்களுக்கு மிகாமலும்  ஒளியச்சுக்கு ஏற்றவாறு சூன் 15 ஆம் நாளுக்குள் அனுப்பவேண்டும்.
கட்டுரை எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரில் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்பதிப்புச் சீரெண்ணுடன் (ISSN)  வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணினிமொழியியல் ஆய்விதழ்களிலும் வெளியிடப்படும்.
முக்கியமான நாட்கள்
2-பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்ஏப்பிரல் 15
ஏற்பு முடிவு  அறிவிப்பு :                                        மே 15
அச்சடிக்க இறுதி வடிவில் 4-6 பக்க 
முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் :              சூன் 15
மாநாடு நடைபெறும் நாட்கள் : 2017 ஆகத்து மாதம் 25, 26, 27
தமிழிணைய மாநாடு 2017-இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2017@infitt.org என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்

செ. இரா. செல்வக்குமார்,  
வாட்டர்லூ பல்கலைக்கழகம்                                                
தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக்குழு,                                               
தமிழினைய மாநாடு 2017.

                                   

இனிய நேரு 
 செயல் இயக்குநர் (உத்தமம்)

சுகந்தி நாடார்    தலைவர்
      உத்தமம