/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, April 12, 2015

“மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்”

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை (மேம்பாட்டு அமைச்சகம் இந்திய அரசு) நிதி நல்கையுடன், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி 8-01-2-15 முதல் 10-01-2015 வரை நடத்திய கருத்தரங்கம் கருப்பொருள்: மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்விழா ஆரம்பம்பத்தில் கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், வருகை தந்த பேச்சாளர் அனைவரும் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர். 
                                                                               மரம் நடுதல்
               8-01-2-015 அன்று தொடக்கவிழா மாண்பமை முனைவர் வெ மா முத்துக்குமார் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துணைவேந்தர் வெ.மா.முத்துகுமார் உரை. அருகில் சிவாப்பிள்ளை.

கல்லூரி நடைமுறை பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும் அவர் தொகுத்துக் கூறினார். இவ்வாறான மாநாட்டின் மூலம் இணையக் கல்வின் முக்கியம் பற்றி மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி பேச்சாளர்களை வரவேற்றுப் பேசினார். 

                                                           முதல்வர் முனைவர்  சு.பத்மாவதி             கருத்தரங்க மையப்பொருள் பற்றி வருகை தரும் விரிவுரையாளர் க.சிவப்பிள்ளை உரையாற்றினார். மொழியின் வளர்ச்சி வளர்ந்து வரும் நிலையில் அகராதியின் தேவை அவசியமாகிறது ஒரு சொல்லில் பயன்படுத்தப்பட்ட துறைசார் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றின் விளக்கத்தைத் தொகுத்துத் தருவது சொல்லடைவு ஆகும். பயன்படுத்தப்பட தமிழ் கலைச்சொற்களின் பட்டியலையும் அவற்றுக்கான ஆங்கில அல்லது பிற மொழிச் சொற்களையும் பட்டியலிட்டும் தரப்படவேண்டும் எனவும், ஒரு சிலர் தரமான சொல்லடைவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அவர்கள் அதை வெளியிட மறுக்கின்றனர். தமது ஆக்கத்தைத் தம்முடனேய வைத்திருக்க விரும்புபவர்கள் இவர்கள் எனவும் பிற இலக்கிப் படைப்புகளடையும் மின் ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் முனைவர் இராதாசெல்லப்பன், முனைவர் கரு,நாகராஜன், துணைவேந்தர்,                                           க.சிவாப்பிள்ளை, முனைவர் துரை.            வாழ்துரையை முனைவர் இராதா செல்லப்பன் வழங்கினார். தமிழ் அகராதிகளை வரிசைப்படுத்தி விளக்கம் கொடுத்தார் .கருத்தரங்கச் சிறப்புரையை முனைவர் கரு நாகராஜன் அவர்கள் பேசினார். உயர் கல்வியின் முக்கித்துவத்தை எடுத்துரைத்தார்..
முனைவர் கரு.நாகராஜன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குபவர் துணைவேந்தர் வெ.மா.முத்துகுமார்.


      முதல் அமர்வு காலை 11.30 மணிக்கு முனைவர் வ.தனலெசுமி தலைமையில் முனைவர் கு.ர.சரளா அவர்களும் முனைவர் இரா.மனோகரன் அவர்களும் தமது ஆய்வுக் கட்டுரை வழங்கினார்கள். தனலெட்சுமி அவர்கள் ‘கணினிவழிச் சொல்லடைவுகள் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் கட்டுரையை வழங்கினார்.  அவரவர் மொழியைக் கணினியில் கொண்டுவரும் முயற்சியே மொழித் தொழில்நுட்பத்திற்கு (Language Technology) வித்திட்டது எனலாம்.  தற்போது இத்துறை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வளர்ச்சியால் வேகமான வளர்ச்சியை அடைந்து இயற்கை மொழி ஆய்வில் (Natural Language Processing பல அரிய சாதனைகளைச் செய்ய வழிவகுக்கின்றது.  சங்க இலக்கியப் பாடல்களுக்குக் கணினிவழிச் சொல் இலணக்கப் பகுப்பாய்வு முறையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.  
        கு.ர.சரளா அவர்கள் ’அகராதி தொகுப்பு படிநிலைகள் என்ற தலைப்பில் கட்டுரையை வழங்கினார். மரபு வழி அகராதிகளில் இருந்த கடின நிலைகளை மாற்றி இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மின் ஊடகங்களில் அகராதித் தொகுப்புப் பணிகள் நடந்தேறி வருகின்றன. மின் ஊடகங்களில் வெளியிடப்படுகின்ற அகராதிகள் சொல்லுக்குப் பொருள் என்ற நிலையிலேயே  இருக்கின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. அகராதித் தொகுப்பு நெறிமுறைகளோடு கூடிய முழுமையான மின் அகராதியை தமிழில் காண  இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
        இரா.மனோகரன் ‘நிகண்டு முதல் மின்னணு அகராதி வரை’ என்ற தலைப்பில் இன்றைய கணினிக் காலத்தில் மின்னணு அகராதி உருவாக்கத்தில் தரவுத் தளங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. இலவச தரவுத்தளங்களின் பயன்பாடு மிகச்சிறப்பாக இன்று கிடைக்கின்றது. இவற்றைப் பயன்படுத்தி இன்று பல்வேறு வகையான மின்னணு அகராதிக் வெளிவருகின்றன. இவற்றின் வெளிப்பாட்டு நிலையில்  வடிவங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றார்.

2 comments:

  • Yarlpavanan says:
    April 13, 2015 at 5:25 PM

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  • மணிவானதி says:
    April 13, 2015 at 8:43 PM

    மிக்க நன்றி. தங்களுக்கும் சித்திரை வாழ்த்துக்கள்.