10-01-2015 சனிக்கிழமை காலை எட்டாவது அமர்வு காலை
10.00 to
11.30 வரை
நடைபெற்றது. இந்த அமர்வில் தலைவராக முனைவர் பெ. மாதையன் அவர்கள்
இடம்பெற்றிருந்தார். ‘தொடரடைவு உருவாக்கம்’ என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கருத்துரையை முன்
வைத்தார். இன்றைய சூழலில் எந்த மொழியிலும் அகராதிகளை உருவாக்கிக்கொள்வதற்கு ஏற்றவகையில்
மென்பொருள்கள் விற்பனையில் உள்ளன. நம் தேவைக்கேற்ப மென்பொருள்களை உருவாக்கித்
தரும் நிறுவனங்களை நாடிக் கட்டளை நிரல்களைப் பெற்று அல்லது உரிய தமிழ்க் கணினியாளர்களை அணுகி அவர்களைப் பயன்கொண்டு தொடரடைவுத் திட்டத்தைக் கணினிவழி செயற்படுத்தலாம் என்றார்
முனைவர் இரா. விஜராணி
முனைவர் இரா. விஜராணி அவர்கள் ‘ முல்லைப்பாட்டு சொல்லடைவு தொகுத்தல்’ என்ற தலைப்பி ஆய்வுக் கட்டுரையை செய்முறை வடிவில் வழங்கினார். முல்லைப்பாட்டிற்கான சொல்லடைவுகளை எவ்வாறு இணையத்தில் உருவாக்குவது என்ற அடிப்படை இலக்கணத்தை எடுத்துக் கூறி விளக்கினார். மேலும் இதுபோன்று பல சங்க இலக்கியச் சொல்லடைவுகளை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று தனது கருத்தை முன் வைத்தார்.
பத்தாவது அமர்வாக மதியம் 2.00 to 3.30 வரை நடைபெற்றது. இம் அமர்வில் முனைவர் கோ.பழநிராஜன் அவர்கள் தலைவராக இருந்து ‘கணினியில் சொல்லடைவு, தொடரடைவு மற்றும் அகராதி தொகுத்தல்’ தனது ஆய்வுக்கட்டுரையை வழங்கினார். அதில் சொற்கள் பல வேறுதிரிபுகளைப் பெற்றுள்ளதை அறியமுடிகிறது. சொற்களைப்பிரிப்பதிலும் அவற்றை வகைப் படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் சொற்களும் அவற்றின் பயன்பாடும் வேறுபடுவதே. இஃது இயற்கைமொழி ஆய்வுக்கு அடிப்படையாக அமைகிறது. பயன்பாட்டு மொழியியலான மொழிகற்றல், கற்பித்தல், அகராதிஉருவாக்கம், இயந்திரமொழிபெயர்ப்பு, மேலும் மொழிக்கருவிகள் உருவாக்கத்திற்குப் பயன்படுகின்ற உருபனியல்பகுப்பி, உருவாக்கி, சொற்றொடர்பகுப்பி, சொற்சூழல்கருவி, இலக்கணக் குறிப்பான் எனப் பல்வேறு நிலைகளில் பயன்படுகிறது. ஒரு மொழியின் பொதுவிதி, சிறப்புவிதி எது என இனம்கண்டு அதற்கேற்ப விதி அமைத்து கொள்வதற்கு இவ் ஆய்வு பயன்படும். மேலும் மொழியின் சொல்வளம், சொல்லாக்கம், பழைய, புதியசொற்கள், பொருள்மாற்றம் போன்றவற்றை ஆராய முடியும்.இச்சொற்களின் பயன்பாட்டு மூலம் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியஆய்வுகள் சிறக்கும் என்றார்.
முனைவர் கோ.பழநிராஜன்
படங்களும் செய்திகளும் கண்டு மகிழ்ந்தேன்
மிக்க நன்றிங்க ஐயா.