/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, April 6, 2009

இணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]

செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில்இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிறஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில்ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனைஇணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்றுகுறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம்(நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்திஇதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப்பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ்இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில்மட்டுமே வெளிவருகின்ற முத்துகமலம் மின்னிதழ் பற்றி மட்டும் இக்கட்டுரைவிளக்க முற்படுகிறது.முத்துகமலம் இணைய இதழ் 1.6.2006ல் தேனியிலிருந்த்து திரு.எம்.சுப்பிரமணிஎன்பவரால் தொடங்கப்பட்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. மாதத்தில்இருமுறைப் புதிபிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில்இலக்கியம் தொட்டு இக்காலம்வரையில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும்வெளியிட்டு வருகிறது.அறிவிப்புகள் என்று தொடங்கி விளம்பரம் செய்திடல் முடிய 29தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.அறிவிப்புகள்.தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல்,குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்குஉதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும்.மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு
நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது.மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும்அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம்.இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமாக இப்பகுதியில் வெளியிட்டுவருகின்றனர்.ஆன்மீகம் ஆன்மீகம் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் இப்பகுதியில் வெளியிடுகின்றனர். இந்துகிறிஸ்த்து, இஸ்லாம் மதம் என்ற அனைத்து மதக்கருத்துக்களையும் இதில்நம்மால் காணமுடியும். பகுத்தறிவு பகுத்தறிவு ஆன்மீகச்செய்தியை வெளியிட்டுவரும் இவ்விதழில் பகுத்தறிவுச் செய்திகளும்பரவலாக வெளியிட்டுவருகிறது.மூடப்பழக்கங்களை கடுமையாகச் சாடுகின்றன. இதில்ஒரு சில கட்டுரைகள் நல்லமுறையில் எழுதப்பட்டுள்ளன். ஆராயப்பட்டுள்ளன.பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் பொன்மொழிகள் எனற தலைப்பிலும் பல மொழிகளைச்சார்ந்த அறிஞர் பெருமக்களின்பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன்.அடையாளம்,கதைகள் என்ற தலைப்பில் உலக பேராசிரியர்களின் வாழ்க்கை வரலாறும்,சிறுகதைகளும் வெளியிட்டு வருகிறது.கட்டுரைகள் தரமான கட்டுரைகள் இந்த இணைய இதழில் வெளிவருகின்றன.அவறில் சொற்பொழிஞர்-அண்ணா -முனைவர் சே.கல்பனா. மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன் முடிவில்லாப் போராட்டம்-உருத்திரன் கணபதிபிள்ளை. அகப்பாடல்களில் புறச் செய்திகள் -முனைவர் மு. பழனியப்பன் உண்மை என்ன? - தொடர்-வேந்தன் சரவணன். மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் -அப்பையா கணபதி. நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்-முனைவர் மு. பழனியப்பன் என பலர் கட்டுரைகள் எழுதிவருகின்றனர். கவிதைகள் இன்று வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கவிதை இல்லாமல் இல்லை. அந்தவகையில் முத்துக்கமலம் இணைய இதழில் கவிதைகள் வெளிவருகின்றன. வேண்டும்! அமைதி வேண்டும்!! -மாரிமுத்து காதல் உண்மையானது...? -மு.சந்திரசேகர். நாளை நன்மை இல்லை...! -
சக்தி சக்திதாசன். வெட்கம் கொண்டு வெண்ணிலா... -ஆர். கனகராஜ்.இவர்களைப்போன்று இன்னும் பலர் எழுதி வரிகின்றனர்.சிரிக்க சிரிக்க இப்பகுதில் முழுக்க முழுக்க சிரிப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது. அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...- குரு.சுப்ரமணியன் கண்ணதாசனின் நகைச்சுவைகள் அப்பாவி சுப்பையா பதில்கள். -தொடர்- தேனி.எஸ்.மாரியப்பன் கல்யாணம் ஆனதும் சொல்லி அனுப்பு. -குரு.சுப்ரமணியன் மாமியாரைத் தீர்க்கனும்னா...?-தஞ்சை தாமு. உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே... -குரு.சுப்ரமணியன் மருத்துவ நகைச்சுவைகள் -தேனி.எஸ்.மாரியப்பன் காந்திஜியின் நகைச்சுவை -தேனி.எஸ்.மாரியப்பன் மற்றும்பலர் எழுதிவருகின்றனர். மகளிர் மட்டும் மகளிர் மட்டும் பகுதியில் பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பான செய்திகளைவெளியிட்டு வருகிறது.குறிப்பாக, இந்துமதம் சொல்லும் உயரிய பெண்களின் கடமைகள், மணமக்களுக்கு எய்ட்ஸ் சோதனை, ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பெண் குழந்தை பெற்றால் பரிசு. போன்ற பல அறியச்செய்திகளையும்வாசகர்களுக்கு வழங்குகிறது.சமையலறை இப்பகுதியில் சமையல் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றூள்ளன். இனிப்புகள் சில இனிப்பான சமையல் செய்முறைக் குறிப்புகள் கார வகைகள் சில காரமான சமையல் செய்முறைக் குறிப்புகள்மனம் திறந்து என்ற பகுதியி வாழ்க்கையில் வெளிப்படையாக இருந்த்துவிட்டால்எந்த துயரும் வராது. அதனைப்போக்கவே இப்படி ஒரு தலைப்பைத்தேர்ந்த்தெடுத்துள்ளனர். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள... -சக்தி சக்திதாசன் நாளிதழ்களுக்கு சில ஆலோசனைகள்... -சித்தூர்.எஸ்.முருகேசன் மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா? -மணிகண்டன் அட நமக்குத் தெரியாமப் போச்சே... -தாமரைச்செல்வி போன்றோர்கள் எழுதிவருகின்றனர்.விவாதக்களம்நாணயத்திற்கு இரண்டு பக்கங்களிருப்பது போல் எதை எடுத்தாலும், இன்றையசமுதாயத்தில் இரு வேறு நிலைகள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே ஆதரவும்
இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் விவாதக்களம் என்றசிறப்புப் பகுதியில் வெளியிட்டு வருகிறது. அரசியல், சினிமா மற்றும்பிறர் மனம் வருந்தக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில்விவாதக்களம் காண இருக்கிறது. வாசகர்கள் தெரிவிக்கும் இரண்டு நிலையிலும்சிறப்பான விவாதக் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது..புத்தகப் பார்வைஇப்பகுதில் புதிய நூல்கள் பற்றிய முழு விபரங்களும் இடம் பெற்றுவருகின்றன. புத்தகப் பார்வைக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்பும்பதிப்பாளர்கள் / ஆசிரியர்கள் புத்தகத்தின் இரண்டு பிரதிகளாக அனுப்பிவைக்க வேண்டும். இப்பகுதியில் புதிதாக வெளியிடப்படும் குறும்படங்கள் /ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் போன்றவைகளுக்கான மதிப்புரைகளும் இடம்பெறுகிறது. குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அனுப்பவிரும்பும் வெளியீட்டாளர்கள் / இயக்குனர்கள் / விற்பனையாளர்கள்,தங்களுடைய குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அடங்கியகுறுந்தகட்டை (CD) இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். இவையில்லாமால் ,கல்லூரிவாசல்,குறுந்தகவல்,மருத்துவம்,கிறுக்குத்தனம்,குறும்புகள்,தமிழ் வலைப்பூ,உதவிக்களம்,சுவையானத்தீர்ப்புகள்,நிகழ்வுகள்,கிடைக்கப்பெற்றோம்,உங்கள்கருத்து,ஆசிரியர்குழு, விளம்பரம்செய்திட என பல்வேறுத்தலைப்புகளில் கருத்துக்கள் இந்த முத்துகமலம் இதழில்வெளியிடப்படுகிறது.மற்றய இணையத்தலத்தினைவிட பல புதிய தலைப்புகளில் கருத்துக்களைவெளியிட்டுத் தமிழின் புகழைஉலக நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பற்ற பணியைச்சிறப்புடன் செய்துவருகிறது.பயன்பட்ட நூல்கள்1.முனைவர் துரை.மணிகண்டன், இணையமும் தமிழும், நல்னிலம் பதிப்பகம், சென்னை.2008.2 .தமிழ் இணையம்,தொழில் உலகம் வெளியீடு,2000,சென்னை.3.www.muthukamalam.com4.www.pathivukal.com5.www.wikipedia.org.

0 comments: