/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, April 6, 2009

புதுக்கவிதைகளில் இளைஞர்கள்

புதுக்கவிதைகளில் இளைஞர்கள்
துரை. மணிகண்டன்,விரிவுரையாளர்,தமிழாய்வுத் துறை,தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,பெரம்பலூர்.
20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;. இந்நூற்றாண்டில் புதுக்கவிதையே வானளாவிய வளர்ச்சியடைந்துள்ளது. இப்புதுக்கவிதைகளில் இளைஞர்களின் நம்பிக்கைகளையும் வெற்றிகளையும் குறித்த செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.

கவிதை:
மனிதன் உணர்ச்சிகளின் மொத்த உருவம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உணர்ச்சி அலைகள் எழுகின்றன. மலையைப் பார்க்கும்பொழுது மனம் உயர்வு பெறுகின்றது, விம்முகிறது. வறுமையைக் காணும்போது வாடி வதங்குகிறது. இது போன்ற உணர்ச்சி அலைகள்தான் கவிதைகளாக மலர்கின்றன. கவிதைகளில் பாடுபொருள்கள் ஆண்டிற்கு ஆண்டு மாற்றம் பெற்று வருகிறது. குறிப்பாக இப்பத்தாண்டு கால எல்லைக்குள் அதிகமாக இளைஞர்களின் கனவுகளைப் பற்றியும் அவர்களின் எதிர்கால இலக்குகளையும் குறிவைத்து எழுதி குவித்துள்ளனர்.
நம்பிக்கை:
ஏழைகளின் எல்லையில்லா சொத்து நம்பிக்கை. இதனை இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஏசுவிற்கு விழுந்த சாட்டையடியாக இளைஞனைப் பார்த்து கவிஞர் சிற்பி,
'இளைஞனேபருவ நெருப்பில்காய்ச்சிய வாளே!
நாளை என்பதுஉன்
திருநாளேநினைவிருக்கட்டும்
உன்புருவ நெருப்பில்
பூகம்பங்கள்இமையைத் திறந்தால்சூர்யோதயங்கள் ...'என்று ஆசிரியர் இளைஞனின் நம்பிக்கைக்குத் தூபம் இட்டுள்ளதைக் காண முடிகின்றது. மேலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதனை,
'நீதலை நிமிர்ந்து நடந்தால் நீல வானம்
குடைபிடிக்கும்தாழ்ந்து இழிந்து குனிந்தால் கைக்குட்டையும் எட்டாதவானமாகும்'
என்ற வரிகளைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன்னையறியாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பூமித்தாயை முத்தமிடுவான்.
சிறுத்தையே வெளியே வா!
சோம்பித் திரிபவர்களையும் வாழ்க்கையின் பயனை அறியாதவர்களுக்கும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாக்களாக சிற்பி இளைஞனை விழித்து அழைக்கின்றார்.
'வாநீ வெல்லவிண்வெளி
காத்திருக்கிறதுநீ பந்தாட கிரகங்கள்

பிரளயமாக்க விழி திற!வெற்றி உனக்குமுன்கொடியெடுத்துப் போகிறதுவருக இளைஞனே! வருக'என்ற வரிகள் நம்பிக்கை முடமானவனை நன்னம்பிக்கை முனையாக தட்டி எழுப்புகிறது.தவறவிட்டதைப் பிடித்துக்கொள்:இன்றைய இளைஞர்கள் வயதில் வாலிப விளையாட்டுகளிலும் திரைப்படச் சுருளிலும், கலர் கனவுகளிலுமே காலத்தை தொலைத்து விடுகின்றனர். மேலும் தொலைப்பதற்கு என்ன இருக்கிறது? தயங்காதே என்று தமிழன்பன்,'சந்தனம் மணத்தைச்சந்தைகளில் தேடுவதில்லைதென்றல் குளிர்ச்சியைத் தெருக்களில் பெறுவதில்லைஉன் வாழ்வை உன்னைத் தவிர்த்துவேறெங்கு தேடுகிறாய்'என கேட்கும்பொழுது கவிஞரும் ஒரு சில காலங்களில் தன் வாழ்வை தொலைத்து விட்டுத்தான் பின்பு தேடிக் கண்டுள்ளார் என்பதை இவ்வரிகளில் காண முடிகின்றது.இவர் இளைஞர்களின் கடமையாக, குறிப்பிடும்போது,'கடமை வாக்கியத்தில் வார்த்தைகளாய்இருப்பவர் மட்டுமேஉரிமை உதடுகளால் உச்சரிக்கப்படுவார்கள்'என்று இளைஞர்களின் மனநிலையை உளவியல் பார்வைக் கொண்டு தெளிவுபடுத்துகிறார்.ஏமாறாதே:வாழ்க்கையில் ஏமாறாமல் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. ஏமாறியவர்கள் பல. எனவே இளைஞனைப் பார்த்து மேலும் சில நம்பிக்கை மழையைத் னவுகிறார்.
'உன் கிழக்கில் கூடஅஸ்தமனம் தான்விதைக்க மறந்தவனேஉனக்கேன் அறுவடை ஞாபகம்'
என்னும் போது ஊமை இளைஞனும் கண்ணீர் விடுகிறான். இனிநாம் ஏமாறலாமா? என தன்னைத்தானே வினா எழுப்பிக் கொள்கிறான்.இளைஞன் இளைஞிகளின் ஒற்றுமை:இன்றைய இந்திய இளைஞர்களின் ஒற்றுமையும் முன்னேற்றமும் மேலோங்கிய நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனை கவிஞர் மீரா தம் கவிதைகளில் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அவைகளில்,
'இந்திய இளைஞனேஇந்திய இளைஞியேகாந்தி நேருஅப்துல்கலாம் அடிகளார்அருகா டேவீஸ் அருணா ஆசப் இந்திரா சரோஜினிஇவர்களையெல்லாம்நெஞ்சில் பச்சைக்குத்திநிறுத்துங்கள்'என்று குறிப்பிடுகிறார். இவ்வரியைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் ஏதோ ஒன்று கனக்கிறது. மேலும் வாழப்பிறந்தவனுக்கும் சாதிக்கத் துடிக்கும் இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி, கடல் இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது என்பதனை கவிஞன் தமிழன்பன்,'உன்னுள் கடல் கடலுள் நீ.இந்தப் பெருமிதத்தோடுஎழுந்து நில்உன் உச்சிக்கான ஏணி கேட்டுநாணிக் குனியும'என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும் முழு மனிதனாக்கும் என்பது உறுதி.
முடிவு:21-ஆம் நூற்றாண்டின் இளைஞர்களைப் பூமிப்பந்தையே புரட்டிப்போடும் புத்தி கூர்மையுடையவர்களாக உருவாக்க புதுக்கவிதைகள் பல வழிகளில் ஏணிப்படியாக உள்ளன. இளைஞன் இளைஞியர்கள் ஒற்றுமையுடன் ஏமாறாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
'இன்றையஇளைஞர்கள்இடி மின்னலையும்காலடியில் வைப்பார்கள்' என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.துணை நூல்கள்:1. நா. வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.2. டாக்டர் நா. சுப்புரெட்டியார், புதுக்கவிதையின் போக்கும் நோக்கும்.3. கவிஞர் சிற்பி, கவிதைத் தொகுதிகள்.4. கவிஞர் தமிழன்பன், சிற்பியின் சிகரம்.5. கவிஞர் மீரா, சிநேக புஸ்பங்கள்.

0 comments: