/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, April 28, 2009

இணைய உதவியில் முதல் தமிழ் ஆய்வேடு

3 comments:

  • மணிவானதி says:
    April 28, 2009 at 11:27 PM

    தமிழ்நாட்டில் பெரம்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி மற்றும் இணையத்தமிழ் எனும் தலைப்பிலான கருத்தரங்கம் மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் எம்.ஏ (தமிழ்).,எம்.ஏ.(இதழியல்).,எம்.ஃபில்., பி.எச்.டி., பி.டி.ஜே., அவர்கள்,

    "அமெரிக்காவில் இருக்கும் நண்பர் ஆல்பர்ட் என்பவர் "முத்துக்கமலம் எனும் பெயரில் இணைய இதழ் ஒன்று நடத்தி வரும் இணைய வழியிலான தனது நண்பர் எம்.சுப்பிரமணி என்பவர் தேனியில் இருக்கிறார். அவர் மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வழியாக இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்குப் படித்து வருகிறார். அவருக்கு ஆய்வுக் கட்டுரை தயாரிக்க நெறியாளராக ஏதாவது ஒரு துறையில் முனைவர் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றவராகவும் இருப்பவர் ஒருவர் தேவைப்படுகிறார். தங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருந்தால் தெரிவித்து அவருக்கு உதவுங்கள்." என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    "நான் தமிழில் முனைவர் பட்டத்துடன் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டமும், முதுகலைப் பட்டயமும் பெற்றிருந்ததால் நானே தாங்கள் குறிப்பிடும் நண்பருக்கு நெறியாளராக இருந்து உதவுகிறேன்." என்று தெரிவித்து எனது கைபேசி எண்ணையும் அவருக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பினேன்.

    இரண்டு நாட்கள் கழித்து எனது கைபேசிக்கு தேனியிலிருந்து எம்.சுப்பிரமணி என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் என்னிடம் முனைவர் பட்டத்துடன் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறேனா என்று விசாரித்துக் கொண்டு தனது ஆய்வுத் தலைப்புத் தேர்வுக்கான படிவத்தைத் தபாலில் அனுப்பி வைப்பதாகவும் அதில் கையொப்பமிட்டு அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.

    நானும் அதற்கு சம்மதித்து அவர் அனுப்பிய ஆய்வுத் தலைப்புத் தேர்வுப் படிவத்தில் கையொப்பமிட்டு அனுப்பி விட்டேன். அவர் அந்தப்படிவத்தை மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் கொடுத்து "தமிழ் இணையச் சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் ஒப்புதலும் பெற்று விட்டார். அதன் பின்பும் அவர் என்னை வந்து சந்திக்கவில்லை.

    சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய தொலைபேசிக்கு அழைத்து "ஒரு முறை மயிலாடுதுறை வந்து என்னைச் சந்தித்தால் ஆய்வேடு எப்படி தயாரிப்பதென்று தெரிவிக்கிறேன். அதன்படி தாங்களும் செயல்பட்டால் விரைவில் ஆய்வேட்டைத் தயாரித்துப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து விடலாமே." என்று தெரிவித்தேன்.

    அதற்கு அவர், "தாங்களும் இணையத்தில் தமிழ் இதழ் நடத்துகிறீர்கள். நானும் இணையத்தில் தமிழ் இதழ் நடத்துகிறேன். இணையத்தின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் நான் தயாரிக்கும் ஆய்வேட்டிற்கான தலைப்புகள் மற்றும் கட்டுரைப் பகுதிகள் அனைத்தையும் தங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி விடுகிறேன். தாங்களும் அதில் பிழை எதுவுமிருந்தால் திருத்தம் செய்து எனக்கு மின்னஞ்சலிலேயே அனுப்பி வைத்து விடுங்கள். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் எனக்கு அது குறித்து தெரிவியுங்கள்." என்றார்.

    அவருடைய கருத்து எனக்கும் சரியெனப்பட்டது. நானும் ஒத்துக் கொண்டேன்.

    அவருடைய ஆய்வேட்டிற்கான ஐந்து இயல்கள், முன்னுரை, நிறைவுரை மற்றும் சான்றிதழ்கள், துணைநூல் பட்டியல், ஆய்விற்கு உதவிய இணைய தளங்களின் முகவரிகள் உட்பட அனைத்தையும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்பினார். நானும் சில பகுதிகளில் இருந்த எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைத் திருத்தி மின்னஞ்சலிலேயே அனுப்பி வைத்தேன். அவர் அதையெல்லாம் ஒருங்கிணைத்து ஆய்வேடாகவேத் தயாரித்து விட்டார். அந்த ஆய்வேட்டில் நெறியாளர் சான்றிதழில் கையொப்பம் பெறுவதற்காக மட்டுமே என்னை நேரில் சந்தித்தார். இந்த ஆய்வேடு இன்னும் சில தினங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. (கடந்த 23-03-2009 அன்று சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.)

    தேனியைச் சேர்ந்த முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரும் ஆய்வாளருமான எம். சுப்பிரமணி மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வழியாக இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு "தமிழ் இணையச் சிற்றிதழ்கள்-ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் ஆய்வு செய்து சமர்ப்பித்த ஆய்வேடு நெறியாளரின் நேரடி அறிவுரைகள் எதுவுமின்றி மின்னஞ்சல் வழியில் அறிவுரைகளைப் பெற்று செய்யப்பட்ட ஆய்வேடு என்பதுடன் "உலகில் இணைய வழியில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் ஆய்வேடு" என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறது. அந்த ஆய்வுக்கு நெறியாளராக இருந்த பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்று ஒரு நெறியாளர், ஆய்வாளர் ஒருவரைப் பார்க்காமலேயே வழிகாட்டவும் ஆய்வேடு தயாரிக்கவும் இந்த இணையப் பயன்பாடு உதவியிருக்கிறது. இனி வரும் காலங்களில் நெறியாளர் உலகம் முழுவதும் ஆய்வாளர்களுக்கு மாநிலம், நாடு என்கிற எல்லையைக் கடந்து இணையத்தின் மூலம் உதவமுடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது." என்றார்.

    -முனைவர்.துரை.மணிகண்டன்.

  • வணக்கம் .உங்கள் பக்கம் கண்டேன் வாழ்த்துக்கள்.

  • vanakkam aiyaa. thangkal seithiyinaip padiththen. mika nalla muyarsi. ungal iruvarkkum vaazththukkal. naanum inaiyam thodarpaana aayvil thaan iidupaddullen.