/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 19, 2020

தகவல் தொழில்நுட்ப பூங்கா - யாழ்ப்பாணம்

                                    தகவல் தொழில்நுட்ப பூங்கா - யாழ்ப்பாணம்


 தகவல் தொழில்நுட்ப பூங்காவின் விரிவுரையாளர் செந்தூரன், பேராசிரியர் துரை.மணிகண்டன், தமிழறிதம் நிறுவனத்தின் செயாலாளர் திரு. சரவணபாவானந்தன் IT-park  நிறைவேற்று அலுவலர் த.அரவிந்தன், பேராசிரியர் க. உமாராஜ்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 07-03 2020 தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT - park) நிறைவேற்று அலுவலர் த. அரவிந்தன் தலைமையில் காலை 11 மணிக்குப் பயிற்சி வழங்கினோம். இந்தத் தகவல் பூங்கா படிப்பகத்தில் சுமார் 70 மாணவர்களுக்கு இணையத் தமிழ்ப் பயிற்சி வழங்கப்பட்டது. அங்கு படிக்கும் மாணவர்களுக்குத் அடிப்படை கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பினைப் படிப்பித்துக் கொடுத்து வந்தனர். அதில் தமிழ்ச் சார்ந்த இணையச் செய்திகளை எடுத்து விளக்கும் போது அங்கிருந்த மாணவர்கள் வியந்து போனார்கள்.
                    மாணவர்களுக்கு இணையத்தமிழ்  பயிற்சி வழங்கியபோது.

தமிழில் இவ்வளவு வளங்கள் இருக்கின்றதா என்றும் இவ்வளவு காலமாக இவைகள் தெரியாமல் இருந்ததாகவும் கூறினார்கள். மேலும் நான் நீங்கள் தொழில்நுட்பங்களை இனி தமிழில்தான் பயன்படுத்த வேண்டும் என்றேன். அதில் சில பணப்பொறி இயந்திரத்தில் இனி தமிழில் பணப்பரிவர்த்தனைச் செய்யுங்கள் அடுத்து கூகுளில் தமிழில் தேடுங்கள், ஜீ மெயிலைத் தமிழில் பயன்படுத்துங்கள் முகநூல், கட்செவி போன்ற சமூக ஊடகங்களையும் தமிழில் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினேன். இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் விரிவுரையாளர் S. செந்தூரனும் உடனிருந்தார்.  






1 comments: