/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, February 22, 2020

இணையத்தமிழ்ப் பயிலரங்கம் - வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி

                                                        நிகழ்வின் தொடக்கம்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஒருநாள் இணையத்தமிழ்ப் பயிலரங்கம் 16-02-2020 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்விக் கழகம் சார்பாக இணையத்தமிழின் அவசியத்தை தமிழ்நாட்டில் உள்ள மக்களும், மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தலா 25000 வழங்கி இந்தச் சிறப்பு பயிலரங்கை கடந்த 2019 ஆண்டிலிருந்து தமிழ்கத்தில் பல்வேறு கல்லூரிகளில் நடத்தி வருகிறது.
அவற்றில் ஒன்றாக வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் சிறப்பாக நடைபெற்றது.
                                                   பேராசிரியர் வ.தனலெட்சுமி
  இந்தப் பயிலரங்கில்  முதல் அமர்வில் பேராசிரியர் வ.தனலெட்சுமி  இணையத்தமிழ் வரலாறும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார்கள். இந்தப் பயிற்சியில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் வலைப்பதிவை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அடுத்த அமர்வில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழில் தட்டச்சுப் பயிற்சியை வழங்கினார்.
                                                     முனைவர் துரை.மணிகண்டன்
தமிழ் எழுத்துரு உருவாகிய வரலாறும் அது கடந்துவந்த பாதையையும் தெளிவுபடுத்தினார். சுரதா எழுத்துருவில் தொடங்கி, முரசு, அஞ்சல், அழகி, NHM , இன்று பேசினாலே தமிழில் தட்டச்சு செய்யும் வரை எடுத்துரைத்தார்.

அடுத்து திரு.செல்வமுரளி தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவது எப்படி என்றும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
                                                                  திரு,செல்வமுரளி
மேலும் இணையத்துறையில்  மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பை பெறமுடியும் என்ற நோக்கிலும் தன் சிறப்புரையை வழங்கினார்.

இறுதியாக திரு.நாணா அவர்கள் மாணவர்கள் எவ்வாறு இணையத்துறையிலும், திரைப்படத்துறையிலும் எழுத்துருவைப் பயன்படுத்தி  வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்பதை தனது 25 ஆண்டுகால பத்திரிக்கைத்துறையின் அனுபவங்களை மாணவர்க்ளுக்கு எடுத்து விளக்கினார்.
                    திரு நாணா அவர்கள் மாணவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்.

இந்த நிகழ்வைத் தமிழ்த்துறையின் பேராசிரியர் முஷிப் ரகுமான் ஆவர்கள் ஒருங்கமைத்தார். மிகச்சிறந்த பண்பாளர். வந்தவர்களை உபசரிக்கும் பண்பாளர். நானும் இதுவரை எத்தனையோ கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்குச் சென்று வந்துள்ளேன். சில குறிப்பிட்ட கல்லூரிகளில் இந்தக் கல்லூரி பேராசிரியரின் விருந்தோம்பல் வெகு சிறப்பாக இருந்தது.
பேராசிரியர் வ.தனலெட்சுமி, முனைவர் துரை.மணிகண்டன் நிகழ்வின் கதாநாயகன் பேராசிரியர் முஷிப் ரகுமான்.

நிறைவாக பயிர்ச்சி வழங்க வந்த நால்வரும் ஒன்றாக இணைந்து அடுத்தக்கட்டமாக நாம் இணையத்தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினோம்.
நிகழ்வில் கலந்துரையாடியபொது தமிழ்த்துறைத் தலைவர் சிவராஜ், திரு நாணா.

0 comments: