/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, June 27, 2012

வலைப்பதிவு முகவரி -3 - ஆம் பகுதி

|3 comments

• காட்சி http://kaattchi.blogspot.in/
• கானல்நீர் http://karuppiah4u.blogspot.in/
• காலச் சக்கரத்தில் நானும் ...... http://vinothselvarasu.blogspot.in/
• காலம் http://govikannan.blogspot.in/
• காவேரி கணேஷின் பக்கங்கள் http://kaveriganesh.blogspot.in/
• கிட்டிபுள்ளு http://kittipullu.blogspot.in/
• கிராமத்து பையன் http://gramathan.blogspot.in/
• கிரி Blog http://www.giriblog.com/
• கிறுக்கல்கள் http://shru2004.blogspot.in/
• கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/
• கு.ஜ.மு.க http://kudukuduppai.blogspot.in/
• குசும்பு http://kusumbuonly.blogspot.in/
• குட்டி சுவர்க்கம் http://www.kuttisuvarkkam.com/
• கும்மாச்சி http://www.kummacchionline.com/
• கும்மி http://kummionly.blogspot.in/
• குயில்களின் கீதங்கள்.. http://paadumkuyilkal.blogspot.in/
• குறிஞ்சி மலர்கள் http://kurinjimalargal.blogspot.in/
• குறிப்புகளும் தந்திரங்களும் http://tipsntricks.yetho.com/
• குறைஒன்றுமில்லை http://echumi.blogspot.in/
• குழலி பக்கங்கள் http://kuzhali.blogspot.in/
• குழலும் யாழும் http://kuzhalumyazhum.blogspot.in/
• கூடல் http://koodal1.blogspot.com/
• கூடல் பாலா http://koodalbala.blogspot.in/
• கூடுசாலை http://marthandanj.blogspot.in/
• கூடுதுறை http://scssundar.blogspot.in/
• கூர்வாள் http://kayalsm.blogspot.in/
• கொம்பியூட்டர் உலகம் http://computerulakam.blogspot.in/
• கே.பாலமுருகன் http://bala-balamurugan.blogspot.in/
• கே.பி.ஜனா... http://kbjana.blogspot.in/
• கேவிஆர் பக்கங்கள் http://kvraja.blogspot.in/
• கைப்பேசி
• கொஞ்சம் வெட்டி பேச்சு http://konjamvettipechu.blogspot.com/
• கொல்லாமை http://kollaamai.blogspot.in/
• கோகுலத்தில் சூரியன் http://gokulathilsuriyan.blogspot.in/
• கோமாளி.! http://koomaali.blogspot.in/
• கோழிபையன் http://kolipaiyan.blogspot.in/
• கரிசல்காரன் http://karisalkaran.blogspot.in/
• சகார்த்தா நண்பன் http://jakartananban.blogspot.in/
• சக்தியின் உணர்வுக ள் http://sakthi-sakthiunarvugal.blogspot.in/
• சங்கநாதம் http://www.gunathamizh.com/
• சங்கப்பலகை http://www.blogger.com/
• சங்கமித்திரன் http://paraneetharan-myweb.blogspot.in/
• சங்கவி http://www.sangkavi.com/
• சட்டம் நம் கையில் http://lawforus.blogspot.in/
• சட்னி-சாம்பார் http://sambarchutney.blogspot.in/
• சத்திய ஆன்ம ஈகம் http://cyber-mvk.blogspot.in/
• சந்தோஷ்பக்கங்கள் http://santhoshpakkangal.blogspot.in/
• சமரசம் உலாவும் இடமே!!!! http://aatralarasau.blogspot.com/
• சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு... http://www.samudra-sukhi.com/
• சமையல் அட்டகாசங்கள் http://samaiyalattakaasam.blogspot.in/

Tuesday, June 26, 2012

தமிழ் வலைப்பதிவுத் தொகுப்பு-முகவரிகள் - பாகம் -2

|1 comments

• என் பயணத்தின் பிம்பங்கள்...! http://kaalapayani.blogspot.in/
• என் பார்வையில்... http://srikaran-blog.blogspot.in/
• என் வானம் http://nandhu-yazh.blogspot.in/
• என். உலகநாதன் http://www.iniyavan.com/
• என்.கணேசன் http://enganeshan.blogspot.in/
• என்டர் ப்ளஸ் ™ + http://wesmob.blogspot.com/
• என்றும் வாசகன்!! http://blogsenthilnathan.blogspot.in/
• எப்பூடி..... http://eppoodi.blogspot.in
• எரியாத சுவடிகள் http://nbavan7.blogspot.in/
• எல்லாப்புகழும் இறைவனுக்கே http://shadiqah.blogspot.in/
• எழிலாய் பழமை பேச... http://maniyinpakkam.blogspot.in/
• எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. http://wettipedia.blogspot.in/
• எழுத்து பூங்கா http://my-poonga.blogspot.in/
• எஸ்.ஏ.சரவணக்குமார் http://nellaikavisasaravanakumar.blogspot.in/
• ஏகாந்த பூமி http://ekanthabhoomi.blogspot.in/
• ஏதும் அறியான் http://ethum-ariyan.blogspot.in/
• ஏன் இப்படி...! http://thekkikattan.blogspot.in/
• ஒண்ணுமில்லை.....ச்சும்மா http://www.mmabdulla.com/
• ஒரு ஊரில்... http://naga-thoughts.blogspot.in/
• ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்! http://balajib2bl.blogspot.in/
• ஒருமை http://jerryeshananda.blogspot.in/
• ஒலியோடை http://nimal.info/oliyoodai/
• ஓடும் நதி.....! http://odumnathi.blogspot.in/
• க.பாலாசி http://balasee.blogspot.in/
• கசியும் மௌனம் http://www.erodekathir.com/
• கடகம் http://kadagam.blogspot.in/
• கணக்கு போடலாமா? http://kanakkupaadam.blogspot.in/
• கணிநுட்பம் http://kaninutpam.blogspot.in/
• கணினி மென்பொருட்களின் கூடம் http://www.gouthaminfotech.com/
• கணேஷின் பக்கங்கள்! http://urfriendchennai.blogspot.in/
• கணேஷ் http://ganeshmoorthyj.blogspot.in/
• கண்டதும் சுட்டதும் http://kandathumsuddathum.blogspot.in/
• கண்ணாடி http://pirathipalippu.blogspot.in/
• கண்மணி பக்கம் http://kouthami.blogspot.in/
• கதம்பம் வலைப்பூ http://e-kathampam.blogspot.in/
• கதிர் http://kathirvalaipoo.blogspot.in/
• கதை கவிதை... http://kathaikkiren.blogspot.in/
• கனவில் இசைத்தவை... http://kanavilisaiththavai.blogspot.in/
• கனவில் நிஜம் http://kanavilnijam.blogspot.in/
• கனவு பட்டறை..... http://ganifriends.blogspot.in/
• கனவுகளே.., http://kanavukale.blogspot.in/
• கனாகாலம் http://kanakalam.blogspot.in/
• கன்கொன் || Kangon http://kangon-kangon.blogspot.in/
• கருவேல நிழல்.... http://karuvelanizhal.blogspot.in/.
• கரைசேரா அலை... http://karaiseraaalai.blogspot.in/
• கரையோரக் கனவுகள் http://karaiyoorakanavugal.blogspot.in/
• கறுப்பு வெள்ளை http://seralathan.blogspot.in/
• கற்போம் http://www.karpom.com/
• கற்றதும் பெற்றதும் http://tamizyan.blogspot.com/
• கற்றலும் கேட்டலும் http://suharaji.blogspot.com/
• கலகலப்ரியா http://kalakalapriya.blogspot.in/
• கலியுகம் http://marumlogam.blogspot.in/
• கலைச்சாரல் http://kalaisaral.blogspot.com/
• கல்பனா சேக்கிழார் http://www.sekalpana.com/
• களம் http://ariaravelan.blogspot.in/
• கவி அழகன் http://kavikilavan.blogspot.in/
• கவிச் சோலை http://kavisolaii.blogspot.in/
• கவிதை காதலன் http://kavithaikadhalan.blogspot.in/
• கவிதை நீரோடை http://kavithaivaasal.blogspot.com/
• கவிதை வாசல் http://kavithaivaasal.blogspot.in/
• கவிதை வீதி... http://kavithaiveedhi.blogspot.in/
• கவின் தமிழ் http://kavinthamil.blogspot.in/
• காகிதஓடம் http://kakithaoodam.blogspot.in/

Friday, June 22, 2012

தமிழ் வலைப்பதிவுத் தொகுப்பு-முகவரிகள்

|5 comments

• அ.ராமசாமி எழுத்துகள்
• அஃகேனம் http://akhenam.blogspot.in/
• அகல்விளக்கு http://www.agalvilakku.in/
• அக்கம் பக்கம் http://amuthakrish.blogspot.in/
• அக்கரைச்சீமை
• அடர் கருப்பு http://skaamaraj.blogspot.in/
• அடிக்கடி... http://adikkadi.blogspot.in/
• அட்ரா சக்க http://www.adrasaka.com/
• அண்ணாகண்ணன் வெளி http://annakannan.blogspot.in/
• அண்ணாமலையான் http://annamalaiyaan.blogspot.in/
• அதிரடிக்காரன் http://www.muthusiva.in/
• அதிரை எக்ஸ்பிரஸ் http://adiraiexpress.blogspot.in/
• அதீத கனவுகள் http://www.greatestdreams.com/
• அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் http://andamantamil.blogspot.in/
• அந்நியன் 2 http://naattamain.blogspot.in/
• அனுஜன்யா http://anujanya.blogspot.in/
• அனுபவங்களோடு நான் .. http://devarajvittalan.blogspot.in/
• அன்னைபூமி http://annaiboomi.blogspot.in/
• அன்புடன் அருணா http://naanirakkappokiraen-aruna.blogspot.in/
• அன்புடன் ஆரூரன்... http://arurs.blogspot.in/
• அன்பே சிவம் http://anbesivam2009.blogspot.in/
• அன்பேசிவம் http://eniyoruvithiseivom.blogspot.in/
• அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை http://mannaiyinselvan-siva.blogspot.in/
• அன்போடு ஆனந்தம் http://vnthangamani.blogspot.in/
• அபி அப்பா http://abiappa.blogspot.in/
• அபிமன்யு வலைக்களம் http://abimanyuonline.blogspot.in/
• அப்படியா?!!!!!!! http://apdiyaa.blogspot.in/
• அப்பாவி தங்கமணி http://appavithangamani.blogspot.in/
• அமுதம்தமிழ் http://amuthamthamizh.blogspot.in/
• அமைதி அப்பா http://amaithiappa.blogspot.in/
• அமைதிச்சாரல். http://amaithicchaaral.blogspot.in/
• அம்மா அப்பா http://aammaappa.blogspot.com/
• அய்யனார் விஸ்வநாத் http://ayyanaarv.blogspot.com/
• அரைகிறுக்கன் http://araikirukkan.blogspot.in/
• அறி(வு)முகம் http://akathy.blogspot.in/
• அறிவின் உச்சக்கட்டம் http://www.nimzath.com/
• அறிவோம் ஆயிரம் http://arivomaayiram.blogspot.in/
• அள்ளி விட்டான் http://allivittaan.blogspot.in/
• அழியாச் சுடர்கள் http://azhiyasudargal.blogspot.in/
• அவிய்ங்க http://aveenga.blogspot.in/
• அவிழ்மடல் http://www.aalunga.in/


• ஆ யு த எ ழு த் து http://arr27.blogspot.in/
• ஆகாய மனிதன் !!! http://arr27.blogspot.in/
• ஆச்சி ஆச்சி http://aatchi.blogspot.in/
• ஆணிவேர் http://suryajeeva.blogspot.com/
• ஆண்டவன் அனுபூதி http://anubhudhi.blogspot.in/
• ஆதிரா பக்கங்கள் http://tamizhnodigal.blogspot.in/
• ஆதிரா பார்வைகள் http://www.aathira.net/
• ஆனந்தம் http://joyfulever.blogspot.in/
• ஆய்வுக்கட்டுரை .
• ஆராய்வு http://jeevendran.blogspot.in/
• ஆரூர் மூனா செந்தில் http://www.amsenthil.com/
• ஆழிமழை http://aazhaimazhai.blogspot.in/


• இ-தமிழன் ! http://e-tamizhan.blogspot.in/
• இக்கரையும்...அக்கரையும்... http://zenguna.blogspot.in/
• இசை இன்பம் http://isaiinbam.blogspot.in/
• இணைய நண்பர்களுக்காக! http://enthamizh.blogspot.in/
• இணையகவி http://inaiyakavi.blogspot.in/
• இது என் ரஃப் நோட்டு http://roughnot.blogspot.in/
• இது என்னோட இடம். http://majinnah.blogspot.in/
• இது பவியின் தளம் ......... ....துளிகள். http://pavithulikal.blogspot.in/
• இதயப்பூக்கள் http://iyarkai09.blogspot.in/
• இந்த உலகம் எங்கே செல்கிறது?????????? http://wheretheworldisgoing.blogspot.in/
• இந்திராவின் கிறுக்கல்கள் http://padikkaadhinga.blogspot.in/
• இனயம் தாஹிர் http://www.enayamthahir.com/
• இனிய உளவாக http://iniyaulavaaga.blogspot.com/
• இனியவை கூறல் http://eniyavaikooral.blogspot.in/
• இன்பம் பொங்கட்டும் !!! http://www.qatarseenu.com/
• இன்றைய கவிதை http://inkavi.blogspot.in/
• இப்படிக்கு இளங்கோ http://ippadikkuelango.blogspot.com/
• இம்சைஅரசன் பாபு http://imsaiarasan-babu.blogspot.com/
• இயங்கு! http://iyangu.blogspot.com/
• இரத்தின புகழேந்தி http://rathinapughazhendi.blogspot.com/
• இரவுப்பறவை http://iravuparavai.blogspot.com/
• இராகவன், நைஜிரியா http://raghavannigeria.blogspot.in/
• இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி http://rmpschool.blogspot.in/
• இரும்புத்திரை
• இலக்கிய இன்பம் http://ilakkiya-inbam.blogspot.com/
• இலக்கியம் - literature http://literaturte.blogspot.com/
• இலக்கியா http://anbuvanam.blogspot.com/
• இலுப்பைத்தோப்பு http://iluppaithoppu.blogspot.com/
• இளைய தமிழகம் http://ilayatamil.blogspot.in/

• ஈரம் மகி http://www.blogger.com/profile/
• ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் http://eerammagi.blogspot.in/

• உடையவர் http://emperumaanaar.blogspot.in/
• உணவுஉலகம் http://www.unavuulagam.in/
• உண்மை தமிழன் http://unmaitamilan.blogspot.in/
• உண்மையா பொய்யா? http://unmaitamilan.blogspot.in/
• உபுண்டு http://ubuntuintamil.blogspot.in/
• உப்புமடச் சந்தி... http://santhyilnaam.blogspot.com/
• உயிரோடை http://uyirodai.blogspot.in/
• உரைகல் http://meithedi.blogspot.in/
• உளவியல் / Psychology http://psychologytamil.blogspot.in/
• ஊஞ்சல் http://tharanipriyacbe.blogspot.in/
• ஊர்சுற்றி... http://oorsutri.blogspot.in/

• எங்கள் Blog http://engalblog.blogspot.in/
• எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம் http://www.sollamattaen.co.cc/
• எங்கே செல்லும் இந்தப் பாதை .....
• எட்டயபுரம் http://kalapria.blogspot.in/
• எண்ணங்களின் வண்ணங்கள் http://colourfotos.blogspot.in/
• எண்ணங்கள் http://sivamgss.blogspot.in/
• எண்ணங்கள் அழகானால்... http://npandian.blogspot.in/
• எண்ணச் சிறகுகள் http://chudarvizhi.blogspot.in/
• எண்ணத்தை எழுதுகிறேன்... http://umaprabhu.blogspot.in/
• எதிர்நீச்சல் http://ethirneechal.blogspot.in
• எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com/
• எனது ரசனை.... http://enathurasanai.blogspot.in/
• என் இனிய தமிழ் மக்களே... http://mydeartamilnadu.blogspot.in/
• என் உயிரே...! http://buafsar.blogspot.in/
• என் எண்ணங்கள் http://lingeshkk.blogspot.in/
• என் எண்ணப் புழுதிக்கடல் http://ayithayeluthu.blogspot.in/
• என் க"விதை"கள் http://kayalvizhi-enkavithaigal.blogspot.in/
• என் கண்ணில்.!! http://aliaalifali.blogspot.in/
• என் கனவில் தென்பட்ட http://www.nasareyan.com/
• என் நடை பாதையில்.... http://shelpour.blogspot.in/
• என் பக்கங்கள் http://kotticodu.blogspot.in/

நன்றி www.gunathamizh.blogspot.com

Friday, June 15, 2012

ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இணையப் பயிலரங்கம்

|2 comments

கல்வித்துளிர் அமைப்பின்மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பகுதியில் உள்ள ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாள் கருத்துரை வழங்கும் விழாவாக நடைபெற்றது. இதில் கல்வித்துளிர் அமைப்பின் தலைவர் அமெரிக்காவில் HP நிறுவணத்தில் மென்பொருளாலராகப் பணியாற்றும் திரு. பிரகாஷ் அவர்கள் முன்னிலையில் ஒருநாள் இணையப்பயிலரங்கம் 13-06-2012 அன்று தொடங்கியது. இதில் முதலாவதாக சீ-பேடு நிறுவனத்தின் தலைவர் திரு.செல்வமுரளி அவர்கள் மாணவர்களுக்குக் கணிப்பொறி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அடுத்து நான் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். இணையத்தின் தோற்றம், தமிழ் இணைய வரலாறு, மற்றும் பல தமிழ் இணைய தளங்களையும் ( முத்துக்கமலம், வார்ப்பு, திண்ணை, பதிவுகள்) மாணவர்களுக்குக் காட்டினேன். பிறகு தமிழ் இணையக் கல்விக்கழக வலைப்பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள கதைகள், மற்றும் நூலகங்களை எடுத்துக்காட்டினேன்.
அதன் பின்பு தமிழ் விக்கிப்பீடியாவிர்குச் சென்று மாணவர்கள் அதில் எவ்வறு எழுதவேண்டும் என்ற அடிப்படையையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்.




பயிற்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்.



எங்கள் பயிலரங்கம் நடந்த முதல் நாள் அதே பள்ளிக்கூடத்தில் இயறகியின் பாதுகாப்பு பற்றி மரம் நடுவதின் முக்கியத்துவத்தை பற்றிப் பேசினார்



செல்வமுரளி கணிப்பொறிக்குறித்த உரை.





திரு.பிரகாஷ் அவர்கள் பள்ளிக்கு 10,000 ஆயிரம் ரூபாயை தனது அப்பா, அம்மா மூலம் வழங்குகிறார். அருகில் பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்துறை ஆசிரியர்.





Friday, June 8, 2012

ஃபேஸ்புக்- முகநூல்- Facebook

|2 comments

ஃபேஸ்புக்- முகநூல்- Facebook

உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று உலகம் விரிந்து, பரந்து வளர்ந்துள்ளது. இன்றைய அறிவியல் புரட்சி இதனைப் புரட்டிப்போட்டுள்ளது. செயற்கைகோள், இணையம் இவைகளின் புதிய வரவுகளால் மனிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக்கொள்ளும் வசதிகளை இது குறைத்துள்ளது. அனால் ஒரு பக்கம் இப்படியென்றால், மறுபக்கம் மனிதர்கள் இன்று செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதிகள் இதனால் கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்று இணையத்தில் ஃபேஸ்புக் என்ற முகநூல் அறிமுகமாகியுள்ளது. இதில் நாம் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொண்டால் நமது கருத்துக்களை இலவசமாக வெளியிடலாம். கல்லூரி, விவசாயம், தொழில், அறிவியல், கணிப்பொறிச்சார்ந்த செய்திகள், பாலியல் சார்ந்த கருத்துக்கள் என இதுபோன்ற இன்னும் பல வசதிகளை நாம் அனுப்பிக்கொள்ளலாம் மற்றும் பெற்றும்கொள்ளலாம்.
அமெரிக்காவைச் சார்ந்த மர்க் எலியட் ஜீக்கர் பெர்க் என்பவரால் (Mark Elliot zuckerberg) ஃபேஸ்புக் முதலில் தொடங்கப்பட்டது. இவர் ஒரு தொழில் முனைவராவர். இவர்தான் இதன் நிறுவனரும் ஆவார். மார்க் ஹார்வேர்டில் கல்வி பயின்று கொண்டிருந்தபோது அவருடைய வகுப்புத் தோழர்களான டஸ்டின்மோஸ்கொவிட்ச், எடர்டோசவெரி மற்றும் கிரிஸ்ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார்கள்.




வாழ்க்கை வரலாறு

நியூயார்க் நகரிலுள்ள ஒயிட் பிளைன்சினில்தான் மார்க் பிறந்தார். நியூயார்கில் உள்ள டாப்ஸ் பெர்ரியில் வளர்ந்தவர். நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போதே நிரலாக்கம் செய்யத் தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் மார்க் கணினி நிரல்களை உருவாக்குவதில் முனைப்புக்காட்டி வெற்றியும் பெற்றுள்ளார். இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
குறிப்பாக தகவல் தொடர்பு கருவிகள் மற்றூம் விளையாடுத்தொடர்பான நிராலாக்கம் செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். பிலிபிஸ் எக்செட்டர் அகாடெமியில் சேர்வதற்கு முன்பு அர்டெஸ்லே உயர்நிலைப்பள்ளிக்கு மார்க் சென்றுகொண்டிருந்தார். உயர்நிலைப்பள்ளியில் மார்க் படிக்கின்றபோது இலக்கியங்களின் ஆர்வமாகப் படித்துள்ளார். அவர் பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமிக்கு இடம் மாறிச்சென்றார். அங்கு லத்தினில் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார். பின்பு அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் அவர் உருவாக்கினார். அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார்.

மேலும் சினாப்சிஸ் என்ற இசை இயக்கியையும் உருவாக்கினார். பயணர்களின் கேட்கும் பழக்கங்களைக் கற்பதற்கும் செயற்கை நுண்ணறிவில் இது பயன்படுத்தப்பட்டது. மைக்ரோ சாஃப்ட் மற்றும் ஏஓஎல் ஆகிய நிறுவனங்கள் சினாப்சிசை வாங்கி ஜீக்கர்பெக்கை பணியமர்த்த முயற்சித்தன. ஆனால் அவர் அதற்குப் பதிலாக ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முடிவெடுத்தார்.

ஃபேஸ்புக் தொடக்கம்

பிப்ரவரி 4, 2004 அன்று பெர்க் அவரது ஹார்வேர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார். பெறும்பாலான கல்லுரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழு, ஒளிப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளீயிடும் நீண்டகால மரபுடைய வழக்கத்தைக் கொண்டிருந்தது. அது ஃபேஸ்புக் என அறியப்பட்டிருந்து.
கல்லூரியில் ஒருமுறை ஜீக்கின்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது ஹார்வேர்டு – நினைவு என்ற பெயரிலேயே தொடங்கியது. பின்னர் பெர்க் தனது ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்குப் பரப்ப முடிவெடுத்துக் கொள்கிறார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்து முடித்தார்.

இடப்பெயர்தல்

தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்சும் மற்றும் வேறுசில நண்பர்களுடனும் பெர்க் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவிற்கு இடம் பெயர்கிறார், இடம் பெயர்கிறார்.

நியூஸ் பீடு

செப்டம்பர் 5, 2006 அன்று ஃபேஸ்புக்கில் நியூஸ் ஃபீடு அறிமுகமாகிறது. நியூஸ் ஃபீடு என்பது வலைத்தளத்தில் உங்களது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். நியூஸ் ஃபீடு தேவையற்றதாகச் சிலர் பார்த்ததற்காகவும், சைபர்ஸ்டால்கிங்கிற்கான கருவிக்காகவும் பெர்க் விமர்சிக்கப்பட்டார்.

ஃபேஸ்புக் இயங்குதளம்

மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை ஜீக்கர் பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். இந்த அறிவிப்பானது உருவாக்குநர் மத்தியில் நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம். இதன் வளர்ச்சியால் ஒருசில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.


ஃபேஸ்புக் பீகான்

நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளப்பர அமைப்பை பெர்க் அறிவித்தார். இந்த புதிய நிரலின் ஒரு பகுதி பீக்கான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைதளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்தும், அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இடமளித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியல் இட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய முடிந்தது.

இந்த நிரலானது இரண்டு கமுக்க குழுக்கள் மற்றும் தனிப்பட்டப் பயனர்களிடமிருந்து பலமான கமுக்க ஏற்பாடுடகளுடன் வந்தது. பெர்க் இந்த ஃபேஸ்புக் சிக்கலால் விரைவாக பதிலளிக்க முடியவில்லை. ஆனால் இறுதியாக டிசம்பர் 5, 2007 அன்று ஃபேஸ்புக்கில் ஒரு வலைப்பதிவை பெர்க் எழுதினார். பீக்கானுடன் உள்ள சிக்கல்களுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டு பயனர்களுக்கு எளிதான வழியில் பொருத்தமாகவும் உள்ள சேவைகளை வழங்க உள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.

ஃபேஸ்புக்கில் மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு

அக்டோபர் 24, 2007 அன்று ஃபேஸ்புக் 16% பங்கை மைக்ரோசாஃப்ட் கார்பரேசனுக்கு $240 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் கன்சோலின் ஒரு மென்பொருள் புதிபித்தலின் வெளீயீட்டில் ஃபேஸ்புக் , டிவிட்டர் மற்றும் லாஸ்ட் எஃபெம்மின் ஆதரவு இருந்தது என்று பி. எஸ். ஆர் பொறியியல் கல்லூரி எம். பி.ஏ மாணவன் தி. ஆனந்த் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வேடிக்கையாக உருவாக்கப்பட்ட முகநூல் இன்று உலகில் இணையம் பயன்படுத்துபவர்களில் 90% ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர்.

Thursday, May 31, 2012

உலக அரங்கில் தமிழ் கல்வியும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும்

|0 comments
இந்த கட்டுரை Diaspora Tamil Education Conference 2012
June 8 - 10, Santa Clara Convention Center, California, USA
வில் நடந்த மாநாட்டுக்கு எழுதிய கட்டுரையாகும்.

முன்னுரை

புலம் பெயர்ந்த தமிழர்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.தொழில்,அறிவியல்,தொழில்நுட்ப துறைகள், கல்வி வேலைவாய்ப்புகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
அனால் அவர்களின் இளைய தலைமுறைகள் (குழந்தைகள்) தாய்மொழிக் கல்வியைக் கற்பதில் பல இடையூறைச் சந்திக்கின்றனர். இதற்கு அங்கு வாழும் சூழல் ஒரு காரணம். புலம்பெயர்ந்து நாட்டின் தாய்மொழி குழைந்தகள் அங்குள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கலாச்சாரம், கல்வி இவைகளால் தமிழ் குழைந்தைகள் தமிழ்மொழிப்பாடங்களைப் படிக்கும் சூழல் முழுமையாக தடைபடுகிறது.அல்லது அவர்களுக்குத் தமிழ்மொழிக்கல்வி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

உலக நாடுகளில் தமிழர்கள்

இன்று உலக அளவில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து கோடிக்கும் அதிகம். படிக்கும் மாணவ மாணவிகள் 50,000 பேர் இருக்க வாய்ப்பு உள்ளது. மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, கனடா, லண்டன், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படிக்கின்றனர்.

மலேசியா

மலேசியாவில் மொத்தம் 523 தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 1,10000 மாணவர்கள் பயில்கின்றனர். ஆங்கிலம், மலாய் மொழி தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவற்றை மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டுமெனில் தொழிநுட்பம் சார்ந்த உபகரணங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதற்கு கணினி அறிவின் அவசியத்தை உணர்ந்த அங்குள்ள பேராசிரிய மக்கள் தமிழ் மாணவர்களூக்குக் கணினி அறிவினையும், தொழில்நுட்பமுறையில் அமைந்த லினிக்ஸ், உபுண்டுவை கற்றுக்கொடுக்கின்றனர் என்று மலேசியாவைச் சார்ந்த வே.இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மக்கள் தொகையில் ஐந்து லட்சம் பேர் தமிழர்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு கணினிப் பாடங்களை இணைக்க வேண்டும் என்று 1997 ஆண்டு கொண்டு வந்த தனது முதன்மைத் திட்டத்தில் ஒரு விதி கொண்டுவந்து அதனை நடைமுறைப் படுத்தியும்வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இரண்டு லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் குழந்தைகளும் தமிழ்க் கல்வி பெறுவதில் பெறும் சிக்கல் நீடித்துள்ளது.

லண்டன்

1982 முதல் 1984- ஆண்டுகளில் உள்ளூர் கல்வி அதிகாரசபை தாய்மொழியில்தான் கற்பிக்கப்படவேண்டும் என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதில் சமூகப்பள்ளிகள் மாலை நேரத்தில் வார இறுதியில் ஆரம்பிப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அச்சமயம் கணினி, கற்பிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட கால கட்டம். மொழிகளையும் கணினி மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஒரு திட்டம் (Project) ஆரம்பித்து, சமூகத்தில் உள்ள 8 மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு எழுத்துருவ வடிவமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் சில எழுத்து உருவ அமைப்பிற்கு ஆசிரியர் திரு சிவாப்பிள்ளை அவர்கள் பொறுப்பெடுத்து ஆல்ரைட் என்ற மென் பொருளை 1984 -ல் எல்லா சமூகப் பள்ளியிலும் அறிமுக செய்துள்ளார். இது டாஸ் ஆப்ரேட்டிங்கில் பாவிக்கப்பட்டது. அச்சமயம் டாக்டர் குப்புசுவாமி என்பவர் அருமையான அணங்கு தமிழ் உருவெழுத்தை அறிமுகம் செய்கிறார். அது ஆப்பிள் கணினிக்கும் வின்டோஸ் கணினிக்குமாக ஆக்கியிருந்துள்ளார்கள். இருவரும் இணைந்து லண்டன் பள்ளிகளுக்கு இம்மென்பொருளை அறிமுகப்படுத்தினர் .என்று தனது நேர்காணலில் சிவாப்பிள்ளைக் கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்தின் உதவியால் கற்றல் பயன்பாடு

1.சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கட்டுரை எழுதுவதிலும் கதை சொல்வதிலும் dream viewer koobits என்னும் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.இதனால் புகைப்படங்களை இணைத்து கட்டுரை எழுதுவது சாத்தியமாகிறது. பிரின்ஸ் எழிசபத் தொடக்கப்பள்ளியில் INNO GARDEN என்னும் பகுதி உருவாக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டு முறையிலேயே பாடம் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

2.MULTI MEDIA BUILDER என்னும் மென்பொருள் மூலம் கீழ் நிலைத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் தமிழ் சொற்களை அறிமுகம் செய்யவும் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்கவும் பயன்படுகிறது.

3.மாணவர்களிடம் வினாக்களைக் கேட்டு விடை சொல்லும் முறையில் ஆசிரியர் ஓரிடத்திலும் மாணவர்கள் ஓரிடத்திலும் இருந்துகொண்டு தமிழ்ப் பயிற்சிகள் செய்வதற்கு மிக ஏதுவான முறையில் பயன் படும் முறியில் hot potatoes, class marker என்னும் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்களிடம் வினா விடை பயிற்சிகள், மாறிக்கிடக்கும் சொற்களைச் சரியான தொடராக்கும் பயிற்சிகள் செய்ய உதவுகின்றன.

4.black board என்னும் மென்பொருள் இணையம் வழி கற்றல் கற்பித்தல் முறையை எளிமையாக்குகின்றன..
இதைபோன்றே web quest, video editing போன்ற மென்பொருளால் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

5.ஒலி ஒளிக் காட்சிகளைப் பயன்படுத்தி கேட்டலும் பேசுதலும்( audio-lingual) என்ற அமைப்பு முறையில் தமிழ்க் கல்விக் கழகம் செயல்பட்டு வருகின்றன.மாணவர்களூக்குத் தமிழ் உச்சரிப்பை முறையாகக் கற்றுக்கொடுக்கவும் பல எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக்காட்டி கணினிவழி பல்லூடகத்தின் உதவியால் பலவிதங்களில் வெளிப்படுத்திக் காட்டலாம்.இதற்கு கணினி வல்லுனர்களும் மென்பொருள் தயாரிப்பாளர்களும் உதவ முன்வரும் சமயத்தில் பல்வேறு பரிமானங்களில் கணினித் திரையில் ஆர்வமூட்டும் உச்சரிப்பு முறைகளைக் வேளிநாட்டுத் தமிழ்க் குழந்தகளுக்குக் கொடுக்க முன்வந்தால் அவர்கள் விருப்பி தமிழைக் கற்க முன் வருவார்கள்.

6.சிறுவர்களின் வாசித்தல் மற்றும் நடித்தல் முறையில் பாடம் அமையவேண்டும்.

7.மாணவர்கள் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தை கணினியில் பதிவேற்றம் செய்தல். ஆசிரியர் ஒரு முறை வாசித்து மாதிரி வாசிப்புக்காக ஒலிவடிவில் அங்கேயே ஏற்றம் செய்து வைத்திடவேண்டும்.குரலைப் பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி வைக்க வேண்டும்.பிறகு ஆசிரியர் ஏற்றம் செய்து வைத்திருக்கும் பனுவலை மாணவர்கள் படிக்கவேண்டும்.பிறகு மாதரி வாசிப்பைக் கேட்க செய்திடவேண்டும். மாணவர் பனுவலை வாய்விட்டு வாசித்துத் தமது வாசிப்பை பதிவுசெய்ய வேண்டும்.பதிவு செய்த வாசிப்பை இணையத்தில் ஏற்றம் செய்யலாம்.இக்கற்றல் நடவடிக்கையால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடம் கேட்பார்கள்.

8.இலக்கியங்களை அசைவூட்டப்படும் வரைகலை நுணுக்கங்கள் வாயிலாகப் படச் செய்திகளுடன் அளிக்கலாம்.

குறிஞ்சி மலர்


முல்லை மலர்
\

மருதம் மலர்



நெய்தல் மலர்



பாலை மலர்



9.கரும்பலகையில் வெண்கட்டியால் எழுதிப்படித்த மாணவன் இன்று மின்-வெண்பலகையில் interactive wite board (IWB) மின் – பேனாவால் எழுதிப் படிக்கும் போக்கும் தொட்டுப்படிக்கும் பழக்கமும் லண்டனில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆசிரியர் சிவாப்பிள்ளைக் கூறுகிறார். மேலும் தொழில்நுட்ப முறையில் கற்கும் கல்வியை மாணவர்கள் விருப்புகின்றனர்.இதற்கு ஆதாரமாக லண்டனில் 1000 க்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் 26 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 12 மொழிகளுக்கு (தமிழ் உட்பட) அங்கிகாரம் வழங்கியுள்ளனர்.அங்கு ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக அங்கீகாரம் பெற்ற OCR* தராதரச் சானறிதழ் கிடைக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது என்று சிவாப்பிள்ளை குறிப்பிடுகிறார். இதைப்போன்று ஒவ்வொரு உலக நாடுகளிலும் தமிழ் கல்வியியின் அவசியத்தை உணர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு தமிழ் பாடங்களை நடத்தலாம்.

10. புலம் பெயர்ந்த மாணவர்களின் தமிழ்மொழிக் கற்றலை நீதிக்கதைகள் மூலமும் நாம் கற்றுக்கொடுக்கலாம். தற்பொழுது தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தமிழ் மொழியில் மட்டும் கதைகள் உள்ளன. அதனை புதிய மென்பொருளின் உதவியுடன்(எழுத்துரு மாற்றிகள் போல) ஆங்கிலம், மலாய், கொரியா,ஜெர்மன், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் மொழிகளில் கதைகள் மாற்றம் செய்யப்பட்டால் அக்குழந்தைகள் தாய்மொழியிலும் கதையைக் கேட்பார்கள். மேலும் அவர்கள் அன்றாடம் பேசும் அந்நிய மொழியிலும் கதைகளைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்.

11. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று.
என்ற திருக்குறளைச் கூறி ஒரு தட்டில் காய்,மற்றொரு தட்டில் கனியைக் காட்டி காய்- கெட்ட சொற்கள் கனி- நல்ல சொற்கள் என மாணவர்களிடம் விளக்கும்போது மாணவர்களே கனி-நல்லசொல் காய்- கெட்ட சொல் எனக் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

முடிவுரை

புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகள் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் இன்றைய தொழில்நுட்பத்தை சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதன்முதலில் உலகில் உள்ள தமிழ்மொழியைக் கற்றுக்கொடுக்கும் இணையதளங்களை ஒன்றிணைக்க வேண்டும்.

அடுத்து தமிழ் பாடல்களை சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய கால கவிதைகள் முடிய உலகில் உள்ள பெரும்பானமையான மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்து அதனை இணையத்தில் ஏற்றபெற வைத்தல் வேண்டும்.

தகுதியான மொழிப்பெயர்ப்பு மென்பொருளை தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி அதனை இணையத்தில் இலவசமாக வெளியிடவேண்டும்.

இதுபோன்ற முறைகளில் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தினால் உலக அரங்கில் தமிழ்க் கல்வியினை புலபெயர்ந்த தமிழ்க்குழந்தைகள் விருப்பமுடனும் மகிழ்சியுடனும் ஆர்வத்துடனும் கற்க முன்வருவார்கள்.


பார்வை நூலகள்

1.தமிழ் இணையம் 2010 கோவை. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள்.
2.தமிழ் இணையம் 2011 அமெரிக்கா. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள்.
3.பேராசிரியர் சிவாபிள்ளை, நேர்காணல் திரு.ஆல்பட் ,முத்துகமலம் இணைய இதழ்.
4.www.tamilvu.org

Tuesday, May 15, 2012

பவர்பாய்ண்ட் (Power point) அறிமுகம்

|2 comments

பவர்பாய்ண்ட் (Power point) அறிமுகம்

பாடப்பொருளைக் கவர்ச்சிகரமானதாக உருவாக்கி அறிமுகப்படுத்துவதற்கு Power point எனும் மென்பொருள் பயன்படுகிறது. படவீழ்த்தியின் உதவியோடு பெருந்திரளான மாணவர்கள் கூட்டத்திற்கு Power point ன் மூலம் நாம் வங்கும் பாடப்பொருள் வண்ணமயமாகவும் மாணவர்களைக் கவரும் விதத்திலும் உருவாக்குவதற்குப் படங்கள், வண்ண எழுத்துக்கள், ஒலி-ஒளியுடன் கூடிய காட்ச்சிப்படங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். தயாரிக்கப்படும் பாடப்பொருளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும்.

Power point ஐ உருவாக்குதல்

முதல்படியாக Power point ஐ தொடங்கவேண்டும். Power point ஐ தொடங்குவதற்கு முன்பு start என்ற பொத்தானை அழுத்தவேண்டும். அடுத்து All programs என்பதை தேர்வு செய்யவேண்டும். அதன்பின் Microsoft office powerpint என்பதை அழுத்த வேண்டும். இவ்வாறு Power point ஐ தொடங்கும்போது கீழ்கண்டவாறு படம் -1 திரையில் தோன்றும். Power point ஐ தொடங்கும்போது திரையில் ஒரு வெற்றுப்பகுதி தோன்றும். இந்த வெள்ளை நிற செவ்வகமான பகுதி slide எனப்படும். Power point முகப்புப் பகுதியில் பல்வேறு விதமான பகுதிகள் அடங்கியிருக்கும். அவற்றுள் சில பின் வருமாறு


தலைப்புப் பட்டை (Title bar)

Power point முகப்புப் பகுதியில் தலைப்புப் பட்டைதான் மேலே உள்ளது.

Menubar ( பட்டியல் பட்டை )

தலைப்பு பட்டைக்கு கீழே வலது பக்கத்தில் Menubar அமைந்துள்ளது. Power point ல் தேவைப்படும் கட்டளைகளை வழங்கும் ஒன்பது தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த பட்டியல் பட்டை இருக்கிறது. Power point ல் இருக்கக்கூடிய பட்டியல்கள் (Menus ) பின்வருமாறு

1.Home

2.Insert- உட்புகுத்து

3. design

4. animation

5. Slide- Show படங்களை காட்டும் கண்ணாடி வில்லை

6. review-

7. View - காட்சி


ஒவ்வொரு பட்டியலும் சில குறிப்பிட்ட ஆணைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இவற்றை விருப்ப பட்டியல் எனலாம். நமக்குத் தேவையான பட்டியல் ஆணையைத் தேர்ந்தெடுக்கும்போது Power point ஆணைக்கு ஒத்த செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

Tool bar ( கருவிப்பட்டை )

கருவிப்பட்டை பட்டியல் ஆணைத் தொடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குறுக்குவழி பொத்தான்களை ( Shortcut button ) உள்ளடக்கியுள்ளது. நிலையான கருவிப்பட்டை மற்றும் வடிவக் கருவிப்பட்டைஇ போன்றவை பொதுவாக பயன்படுத்தும் கருவிப்பட்டைகளாகும்.

Status bar

இந்த Status bar அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது நாம் Power point ல் வேலை செய்து கொண்டிருக்கும் போது எத்தனை Slide கள் ( படத்தை காட்டும் கண்ணாடி வில்லை ) போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதை காட்டுகிறது.



Sunday, April 22, 2012

தேனி எம் சுப்பிரமணிக்குத் தமிழக அரசு பரிசு.

|2 comments

தமிழ் விக்கிப்பீடியா நூலுக்குத் தமிழ்க அரசு பரிசு.


தனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்காகத் தமிழக முதல்வரிடமிருந்து திரு. தேனி எம். சுப்பிரமணி அவர்கள் பரிசு பெறுகிறார்.

2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் கணினியியல் துறையின் கீழ் சிறந்த நூலாகத் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இதற்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தேனி எம். சுப்பிரமணிக்கு வழங்கிப் பாராட்டினார்.

Saturday, April 21, 2012

மின் அஞ்சல் உருவாக்கம்.

|2 comments
மின் அஞ்சல் என்றால் என்ன?

மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும். அதற்கு நாம் மின்னஞ்சல் ஒன்றை தொடங்கிக்கொள்ள வேண்டும்.
நாம் எவ்வாறு அலைபேசி, தொலைபேசியில் எதிர்முனையில் உள்ளவர்களிடம் பேசுகின்றோம், அது எவ்வாறு?. எதிர்முனையில் உள்ளவர்களின் தொலைபேசி எண் நம்மிடம் இருப்பதால்தான். அதுபோல உலகத்தில் எந்த ஊராக, நாடாக இருந்தாலும் நாம் உடனே தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்று தேவை. எவ்வாறு தொலைபேசியில் அவரது எண்ணைக்கொண்டு தொடர்புகொண்டோமோ அதைபோன்று மின்னஞ்சல் முகவரிகொண்டு அவருக்குச் செய்திகள், படங்கள் அனுப்பலாம்.

எழுத்து வடிவில் உள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் தபால் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரிமாறிக்கொள்வதற்கு பதிலாக மின்னியல் தொடர்பு மூலமாகப் பெற்றுக்கொள்ளும் முறைக்கு மின்னஞ்சல் என்று பெயர். அதாவது கணிப்பொறியின் கட்டமைப்பு முறையின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுகிறது.

மின்னஞ்சலின் பயன்பாடுகள்:

1.மின்னஞ்சல் மூலமாக நமது கருத்துக்களை நண்பர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்சியாளர்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் பகிர்ந்துகொள்ள பயன்படுகிறது.

2.நாம் எங்கு இருக்கின்றோமோ அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்பலாம்.

3. கடிதம் வந்துள்ளதா என்று தபால்காரரிடம் கேட்பது போல உலகில் எந்த மூலையிலிருந்தும் நமக்கு கடிதம்( மின்னஞ்சல்) வந்துள்ளதா என கணினியைத் திறந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

3. மின்னஞ்சலில் வரும் செய்திகளுக்குக் கட்டணம் கிடையாது. இது முழுக்க முழுக்க இலவசம்

4. மின்னஞ்சல் வைத்திருப்பவரின் புகைப்படங்கள், ஒலி, ஒளி பேச்சுக்கள் மற்றும் பாடங்கள், எழுத்தாக்கங்கள் ஆகியவற்றை நமக்குத் தெரிந்த மொழிகளில் அனுப்பலாம்.

5. மின்னஞ்சல் அனுப்புவதற்கு நேரம், காலம் கிடையாது. அவர் உறக்கத்தில் இருப்பாரோ? அல்லது ஏதாவது பணியில் இருப்பாரோ? என்ற அச்சம் தேவையில்லை. 24 மணி நேரமும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

6. நாம் அனுப்பிய செய்தி அனுப்பியவருக்கு சென்று சேர்ந்ததா? என்கிற ஐயம் தேவையில்லை. சேர்ந்திருந்தால் “உங்கள் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது” என்று திரையில் தோன்றும். அவ்வாறு செய்தி சேராமல் இருந்தால் அடுத்த சில நொடிகளில் நம் மின்னஞ்சல் முகவரிக்கு திரும்பி வந்துவிடும்.

7. அவ்வாறு நாம் அனுப்பிய செய்தி சேர்த்துவிட்டால் செய்தி சேர்ந்த நேரம், மாதம். ஆண்டும் பதிவாகிவிடும்.
உலகில் எந்த கணிப்பொறிக்கூடத்திலும் உங்களது மின்னஞ்சலை திறந்து பார்த்துக்கொள்ளலாம்.

8. மின்னஞ்சல் முகவரி இருந்தால் உலகில் உள்ள உங்கள் நண்பர்களிடம் உரையாடிக்கொள்ளலாம். (சாட்டிங்)

9. மின்னஞ்சல் முகவரி இருந்தால் இணையத்தில் வலைப்பூவை உருவாக்கி உங்கள் கருத்துக்களை அதில் வெளியிட்டு உலக மக்கள் காணுமாறு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு பல பயன்களை ஒரு முட்டாள் பெட்டியின் மூலம் நாம் நல்ல அறிவுப்பூர்வமான தகவல்களை அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். எனவே குப்பன், சுப்பன், சவ்வாட்டியும் இந்த மின்னஞ்சலின் பயனை அடையவேண்டாமா? அதற்கு ஒரு மின்னஞ்சலை உருவாக்கிகொள்ளவேண்டும்.

மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?:

உலகில் எந்தமொழியாக இருந்தாலும் ஆங்கிலத்திலேயே மின்னஞ்சல் உருவாக்கிக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மின்னஞ்சலை உருவாக்கிக்கொள்ள பல பெரிய நிறுவனங்கள் இன்று உள்ளன. அவற்றில் கூகுள், யாகூ, ரெடிஃப்மெயில் போன்றவை முன்னணி நிறுவனங்களாக உள்ளன.

முதல் மின்னஞ்சல் முகவரி:

அமெரிக்கவில் உள்ள மசாசூசெட் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பயனாளர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதற்காக ஒரு திட்டத்தினை உருவாக்கினர். 1971 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்னஞ்சலில் பயன்படுத்தப்படும் @ குறியீட்டை ரேய் தோம்லின்சன் (RAY TOMLINSON) என்ற பொறியாளர் தேர்ந்தெடுத்தார்.
பின்னர் தோம்லின்சன் என்ற தன்னுடைய பெயரையும், bbn என்னும் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பெயராகிய Tenexa என்பதையும் சேர்த்து Tomlinson@bbntenexa என உலகின் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கினார்.

நாம் முதலில் இணைய இணைப்புள்ள கணிப்பொறியில் www.google.com என்று அடிக்க வேண்டும்.


அடித்தவுடன் கூகுள் முதல் பக்கம் தோன்றும்.

அதில் உள்ள gmail என்ற குறியீட்டை அழுத்தினால் அடுத்த பக்கம் தோன்றும். அதில் New to Gmail? Create an account என்ற பதத்தை சொடிக்கினால் உங்களது விபரக்குறிப்பை அடுத்த பக்கத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.

முதலில் உங்கள் முதல் மற்றும் இறுதிப் பெயரை பதிவு செய்துவிடவேண்டும் அடுத்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையான எ.கா Duraikannu@gmail. Com என்று அடிக்கவேண்டும்.

அடுத்து கடவுச்சொல்லை அடிக்க வேண்டும்.
இது பத்திரமாக பிறருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.

இதனைத் தொடர்ந்து உங்களது பிறந்த நாள், ஆண்/ பெண் விபரக்குறிப்பு மற்றும் உங்களது அலைபேசி எண் போன்றவை பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து (next step) தொடர்க என்ற பதத்தைச் சுட்டியால் சுட்டினால் அடுத்த பக்கம் தோன்றும்.

இதில் உங்களது சுய விபரங்களையும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். அடுத்து (next step) தொடர்க என்ற பதத்தைச் சொடுக்கினால் மூன்றாவதாக you are all set என்று தோன்றும்.

இறுதியாக கீழே Condinue to gmail என்ற பதத்தைச் சொடுக்கினால் உங்களது மின்னஞ்சல் வெற்றிகரமாக உருவாக்கம் பெற்றுவிட்டதை அறிந்துகொள்ளலாம்.









Thursday, April 5, 2012

தமிழ்க் கணிப்பொறி வல்லுனர்கள்- இணையத்தமிழ் பங்களிப்பாளர்கள்

|3 comments

தமிழ்க் கணிப்பொறி வளர்ச்சியானது பல பாதைகளைக் கடந்துவந்துள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் தமிழ்க் கணிப்பொறி மற்றும் அதுசார்ந்த இணையதள தொடர்புகளுக்குத் தமிழ் ஆர்வளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வேதியல் துறையைச் சார்ந்தவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சமூக ஆர்வளர்கள், இணையதள அமைப்பாளர்கள் என பல்வேறுபட்டவர்கள் இதற்காக உழைத்துள்ளனர்.
அந்த வகையில் தமிழை முதன்முதலில் இணையத்தில் ஏற்றி அழகு பார்த்த பேராசிரியர் நா.கோவிந்தசாமியில் தொடங்கி இன்றுவரை புதிய தமிழ் மென்பொருள்களைக் உருவாக்கி உழைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களின் முழு விபரங்களைத்தான் இந்த பகுதியில் காணச்செல்கிறோம்.


முனைவர் நா.கோவிந்தசாமி

நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்
விரிவுரையாளராகப் பணியாற்றிய திரு நா கோவிந்தசாமி அவார். தந்தை பெயர் நாரயாணசாமி.தம் நேரத்தைத் தமிழ் இலக்கியம், கணிப்பொறி, இணையம் என்று செலவிட்டுத் தமிழுக்குப் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ளார். இணையத்தில் முதன் முதலில் தமிழைத் தவழவிட்ட பெருமை சிங்கப்பூரரான திரு நா. கோவிந்தசாமியையே சேரும்.

ஆரம்ப காலம்

திரு நா கோவிந்தசாமி அவர்கள் 1946 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்
பிறந்தவர். அங்கு உயர் கல்வியை முடித்த பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பின், தமிழில் இளநிலைப் பட்டக் கல்வி முடித்து, சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவந்துள்ளார்.
திரு நா. கோவிந்தசாமி, உஷா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

எழுத்துத் துறையில் ஆற்றிய பங்கு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருக்கும் திரு நா. கோவிந்தசாமி, அறுபதுகளில் தமது இலக்கியப்பணியைத் தொடங்கினார். அறுபது, எழுபதுகளில் ஏராளமான வானொலி, தொலைகாட்சி நாடகங்களை இவர் எழுதியிருக்கிறார். இவரின் "அன்புக்கப்பால்", "அலைகள் ஓய்வதில்லை" ஆகிய வானொலித் தொடர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. அப்போதைய நடப்புப் பிரச்சினைகள் பலவற்றை முன்னிருத்தி பல குறுநாடகங்களையும் எழுதியுள்ளார்.

நாடகங்கள் மட்டுமன்றிச் சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிய இவர் "தேடி" என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். இப்புத்தகத்திற்கு, 1992ம் ஆண்டின் தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகத்தின் விருது கிடைத்தது. இவரின் "சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பைத் தமிழ்ப்புத்தகாலயம் 1992ல் வெளியிட்டது.

சிங்கப்பூர் இலக்கியத்திற்கு வரலாற்றுப் பார்வையை உண்டாக்கியவர் திரு நா கோவிந்தசாமி அவர்கள். 1979ல் பல்கலைக் கழக பேரவை மாநாட்டில் இவர் படைத்த தமிழ் இலக்கியக் கட்டுரை சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அடித்தளமாக அமைந்தது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1975ல் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்து பல பணிகளை ஆற்றியுள்ளார். சிங்கப்பூர் எழுத்தாளர் வாரம் 1988ல் தொடங்கியது முதல் 1999ம் ஆண்டுவரை அதன் செயற்குழு உறுப்பினராக இருந்து பல தமிழ் எழுத்தாளர்களைச் சிங்கப்பூர்த் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவரின் முயற்சியால் 1979ல் பிரபல எழுத்தாளர் அகிலன் அங்கு அழைக்கப்பட்டார். அகிலனின் வருகை, சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இடையே ஓர் இலக்கியப் பாலம் அமையக் காரணமாய் இருந்தது.
"Fiction of Singapore" (1990), "Asean Drama Anthology" ஆகிய சிங்கப்பூர்த் தொகுப்புகளின் தமிழ்ப் பிரிவுக்கு திரு நா கோவிந்தசாமி அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தேசிய கலைகள் மன்றம், தேசிய தகவல் கலைகள் அமைச்சு மற்றும் பல இலக்கிய அமைப்புகளின் குழுக்கள் பலவற்றிலும் பங்காற்றியுள்ளார்.

பல இளையர்களை எழுத்துத் துறையில் ஊக்குவித்து உருவாக்கியவர் திரு நா கோவிந்தசாமி அவர்கள். புதிய இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தவர். தரமான இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் இவர் எப்பொழுதும் மதிப்பளித்து வந்தார். தமிழில் எழுதப்படும் புதிய இலக்கியங்கள், புதிய படைப்புகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் விழிப்புணர்வும் உள்ளவர்.
1977ல் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மிகச் சிறந்த கதைகள் எவை என்ற அலசல் ஆய்வின் மூலம் சேகரித்த கதைகளை 1981ல் தொகுப்பாக வெளியிட்டார். அவரின் "உள்ளொளியைத் தேடி", "தேடி" என்ற சிறுகதைத் தொகுப்பும் "வேள்வி" என்ற நாவலும் அவர் தமிழ் இலக்கியத்துக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்துக்களாகும். கவிதைகளில் நாட்டம் கொண்ட இவர் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவராக இருந்தார்.

கணினித்துறையில் ஆற்றிய பங்கு

திரு நா. கோவிந்தசாமி அவர்கள் தமிழ் கணினி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிய பெருமையைச் சிங்கப்பூருக்குத் தேடித் தந்தவர் திரு நா. கோவிந்தசாமி. 1995ல் "Journey" என்னும் சிங்கப்பூர் கவிதைத் தொகுப்பின் தமிழ்க் கவிதைகள் முதன் முதலில் கணினி வலைப் பக்கத்தில் இடம்பெற்றது.
உலகத் தமிழ்க் கணினி பேராளர்கள் பலர் பங்கு கொண்ட முதல் அனைத்துலக தமிழ் இணைய மாநாட்டை 1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பாடு செய்து நடத்தினார். தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இணைய மாநாட்டில் சிங்கப்பூரின் முக்கிய பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சிங்கப்பூரின் தமிழ் கணினி வளர்ச்சி பற்றி உரையாற்றினார். தேசியப் பல்கலைக் கழக கணினித் துறையுடன் இணைந்து "கணியன்" தமிழ் மென்பொருளை உருவாக்கினார். மாணவர்களுக்கான "செந்தமிழ்" என்ற குறுவட்டுகளையும் உருவாக்கியுள்ளார்.
1965 லிருந்து 1968 முடிய இவர் பதினான்கு சிறுகதைகள் எழுதினார். அவற்றில் 'காட்டாற்றின் கரையினிலே' (1967), தமிழர் திருநாள் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

பிறகு வானொலி நாடகத் துறையில் ஏழு ஆண்டுகள் உழைத்தார். மீண்டும் 1976 லிருந்து பத்திரிகையில் கதைகள் எழுதி வந்தார். இவரது முதற்காலப் பிரிவைச் சேர்ந்த பெரும்பாலான கதைகள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டவை. இரண்டாம் காலப் பிரிவில் உதித்த `ஓர் ஆன்மாவின் திரை அகற்றப்படுகிறது’ (1977) கதையில் முரண்பாடுமிக்க ஓர் எழுத்தாளனைப் படைத்து, உள்ளும் வெளியும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் இணைய வளர்ச்சியின் முடிசூடா மன்னன் நா.கோவிந்தசாமி 1999 ஆண்டு இயற்கை எய்தினார்.


உமர் தம்பி

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1953 ல் பிறந்தவர். தந்தை அ. அப்துல் அமீது, தாய் ரொக்கையா.
தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்துள்ளார்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.

மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.
ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், 2001 -வது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.
தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.

தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்

தேனீ இயங்கு எழுத்துரு

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்து உருவாக்கினார்கள்.

சமுதாயப் பணிகள்/கட்டுரைகள்

சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள்.
குழம்பி நிற்கும் குமுகாயம், நமக்கு கண்கள், செவிகள் இரண்டிரண்டு ஏன்?, தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை, காரியம் சிறிது, காரணம் பெரிது 3, காரியம் சிறிது காரணம் பெரிது -2, காரியம் சிறிது, காரணம் பெரிது

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்

AWC Phonetic Unicode Writer, Online RSS creator - can be used in offline as well, RSS செய்தியோடை உருவாக்கி [1][2], எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி, தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி,எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி [3][4], ஒருங்குறி மாற்றி [5][6], க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் [7][8], தேனீ ஒருங்குறி எழுத்துரு[9][10][11], வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு[12][13] , வைகை இயங்கு எழுத்துரு, தமிழ் மின்னஞ்சல் , தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி, Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்), தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

உமர் தம்பி அவர்களின் வலைப்பதிவு

தென்றல்

உமர் தம்பியின் ஆக்கங்கள்

எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல், யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள், RSS ஓடை-ஒரு அறிமுகம், தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு , முத்தமிழ்மன்றம்
தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு உருதுணையாக இருந்த திரு உமர்தம்பி 2006 ஆம் ஆண்டு இயறகை எய்தினார்.


யாழன் சண்முகலிங்கம்

அப்பு ஆர்ச்சி என அழைக்கப்பட்ட அமரர் யாழன்சண்முகலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி அங்கு குடியுரிமைப் பெற்றிருந்தார். அமெரிக்காவில் இருந்து கொண்டே தனது தமிழ் தொண்டை ஆற்றினார். ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ இவரது முக்கிய தமிழ் மென்பொருள். இதனை 1995ம் ஆண்டிலேயே பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார்.
கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு வழிவகுத்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
யாழன் விசைப்பலகையை 1993ம் ஆண்டில் உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். தமிழ் இணைய வளர்ச்சியின் முக்கிய காலக்கட்டங்களில் இந்நிகழ்வும் ஒன்றாகும். இவரது தமிழ் கணினி ஆர்வத்தினால் கோவை, ஜூன் 24& உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றனுக்கு இவரது பெயரும் சூடப்பட்டது.


முரசொலி மாறன்

தமிழ் இணைய மாநாட்டை 1999&ம் ஆண்டு நடத்த பெரும் முயற்சி எடுத்தவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முக்கியமானவர். மின்வழி தமிழ் வளர மென்பொருள் தயார் செய்து தமிழர்களுக்கு வழங்கிட வழிவகை செய்தவர். ஆங்கிலம்&தமிழ் ஆகிய இரு மொழியில் அமைக்கப்பட்ட ‘தாப்‘ என்ற எழுத்துருவும், தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ‘தாம்‘ என்ற எழுத்துருவும் 1999&ம் ஆண்டு மாநாட்டில் தான் வழிவகை செய்யப்பட்டது. முரசொலி மாறன் தமிழர்களிடம் மென்பொருட்களின் தரப்படுத்துதலுக்கான முயற்சியை வற்புறுத்தியவர்.
தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடையே பல்வேறு மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தவர். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பல செய்து சிறந்த தமிழ்மென்பொருள்களை உருவாக்க முயற்சி எடுத்தவர்.

சுஜாதா

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமரர் ரங்கராஜன் என்பவர் தான் சுஜாதா. தமிழ் இலக்கிய உலகில் ஆணித்தரமான இடத்தை பெற்றவர். கணினி வழி தமிழை பயன்படுத்தும் ஒரு சிறந்த பயனாளராக விளங்கினார். 1997&ல் நடந்த தமிழ் இணையதள மாநாட்டில் தமிழ் இணைய வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்தவர்களில் இவரும் ஒருவர். முரசு அஞ்சல் எனும் தமிழ் தட்டச்சு மென்பொருளை பயன்படுத்தி தமிழ் கணினி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இணையதளத்தில் தமிழில் நிறைய கதைகளை எழுதி தமிழ் வாசகர்களை ஈர்த்தவர்.

கோவை, ஜூன் 24& உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளுக்கு இவர்கள் பெயரும் சூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்



முனைவர் கு.கல்யாணசுந்தரம்.

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார்.
மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும்.
இவர் உத்தமம் அமைப்பின் தலைவராகக் கடமையாற்றி வந்துள்ளார்.
கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.


மலேசியாவில் இணையவழி தமிழ்:

”மலேசியாவில் தமிழ்மென்பொருளை முதன் முதலில் உருவாக்கிய பெருமை’பெர்லீஸ்’மாநிலத்தைச் சார்ந்ததிரு.மா.அங்கையாவையே சாரும். இவர் 1980களில் ஒரு தமிழ்ச்சொல் செயலாக்கியை உருவாக்கினார்.கணினி இயக்கத்திற்கு விசைப்பலகையும் உருவாக்கினார்”.13 இவரை அடுத்து கால ஓட்டத்தில் தற்சமயம் மலேசியாவில் மூன்று விதமான விசைப்பலகைகள் உதயமாகி உள்ளன.

1) 1992 – நளினம் சொல் செயலாக்கியின் விசைப்பலகை
2) 1985 – முரசு சொல் செயலாக்கியின் விசைப்பலகை
3) 1987 - துணைவன் சொல் செயலாக்கியின் விசைப்பலகை

கணினி தனக்குள் பயன்படுத்துவது 0,1 கொண்ட இருநிலை மொழி மட்டும் தான். உள்ளீடு, வெளியீடு செய்து ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் போன்ற மொழிகளுக்கான குறியீடுகளை பயன்படுத்தலாம்.

”மா.அங்கையா, முரசு நெடுமாறன், திரு.சி.சிவகுருநாதன் ஆகிய மூவரும் மலேசியாவில் தமிழ்மொழியை இணையத்தில் இணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்மூவரும் தங்களுக்கான தனித்தனி தகவல் வலைப் பக்கங்களை உருவாக்கினர்”.14இவர்களது இப்பணி மலேசியாவில் ஆயிரக்கணக்கான தமிழர்களும், தமிழ் சார்ந்த அமைப்புகளும் தங்களுக்கென சுயமான தகவல் வலைப் பக்கங்களை உருவாக்கவும், மக்களுக்கு அரிய பல தகவல்களையும் அவ்வப்போது கொடுத்து வருகிறது.

இன்று இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஆதிநாள் கணினி வல்லுநர்கள் முக்கிய காரணமாகும். ”மலேசியாவின் பாலப்பிள்ளை,முத்து நெடுமாறன், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரிநிவாசன், ஹரோல்ட் ஹிஃப்மன் ஆகியோர் நினைவு கூறத்தக்கவர்கள்”.15

இன்று தமிழ் இணையத்தில் நல்ல வளம் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான அகப்பக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றும் பல நாள்தோறும், நிமிடந்தோறும் வலையில் ஏறியவாறே இருக்கின்றன.

மலேசியாவில் முத்துநெடுமாறன்:

இனையத்தமிழ் மலேசியத் தமிழருக்கு எட்டாத தொலைவில் தான் இருந்த்து. கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்தும் பயனாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இச்சூழ்நிலையில் மலேசியா கண்டெடுத்த சொத்து முத்துநெடுமாறன் கணினி செயல்படும் ’முரசு’ தமிழ்ச்செயலியை உருவாக்கி பிறகு கைபேசியில் செயல்படும் ’செல்லினம்’ தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.

கணினி, கைபேசி, இணையத்தில் வந்தால் போதாது. அடுத்து வரப்போகும் ஐபோன்(IPHONE), ஐபேட்(IPAD) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச் செய்யும் பணிகளை அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர். கணினித் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பவர் முத்துநெடுமாறன். அண்மையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணையமாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்துநெடுமாறன் தமிழின் வள்ர்ச்சியை மேலும் பலபடிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசியாவில் தமிழ் இணையம் வளர்ந்து வருவதற்கு முரசு தமிழ்ச்செயலியை உலகத்திற்கு அளித்த பெரும் மலேசியத் தமிழர் முத்துநெடுமாறனைச் சாரும். மலேசியப் பிரதமருடைய இணையத் தளமும் தமிழில் செயல்படுகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. .

காசி ஆறுமுகம்

தமிழ் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் 'தமிழ்மணம்'. இதனை உருவாக்கியவர் காசிலிங்கம் ஆறுமுகம். 'காசி' எனஅறியப்படுபவர். இவர் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள வடசித்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திரு. ஆறுமுகம், திருமதி. சரசுவதி. தந்தை சில வகுப்புகள் படித்தவர். தாய் எழுதப் படிக்கத் தெரியாதவர்.

காசி எட்டாம் வகுப்பு வரை வடசித்தூரில் படித்தார்; ஒன்பதும் பத்தும் பொள்ளாச்சியில் படித்தார். பல்தொழில் நுட்பப் படிப்பைப் பொள்ளாச்சி நாச்சிமுத்து பல்தொழிற் கல்லூரியில் படித்தார்(1978-81). கோவை எவெரெசுடு பொறியியல்நிறுவனத்தில் சிலகாலம் பணி. அத்துடனே மாலைநேரத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாகப் பொறியியல் பட்டப்படிப்பு. இதன் பின்னர் திருவள்ளூரில் இந்துசுதான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொருள் வடிவமைப்பாளராகப் பணியில் இணைந்தார். மண்வாரி இயந்திரங்களின் பகுதிகளை வடிவமைக்கும் பணி. ஆறரை ஆண்டுகள் இப்பணியில் இருந்தார். இக்காலத்தில்சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்பம் முதுகலை(எம்.டெக்) படித்தார்.

பின்னர் கோவை ரூட்சு நிறுவனத்தில் வடிவமைப்பு மேலாளராகப்பணிபுரிந்து அந்நிறுவன வளர்ச்சிக்குப் பல வகையில் உதவியாக இருந்தார்.2000 ஆண்டில் தொழில்நுட்ப இயக்குநர் பொறுப்புக்கு உயர்ந்தார். காசிஅவர்கள் கணினிவழி பொருள் வடிவமைக்கும் நுட்பத்தைச் செயல்படுத்தி தரையைத்தூய்மை செய்யும் பல கருவிகளை வடிவமைத்தார். உலக அளவில் ஏற்றுமதித் தரம்வாய்ந்த பொருள்களை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார் காசி. 2000 இல் அந் நிறுவனத்திலிருந்து வெளியேறி சென்னையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ஒருவருடம் கணினி வழிவடிவமைப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிபுரிந்த பிறகு இவரைஅமெரிக்காவிற்கு அனுப்பியது டாடா நிறுவனம். நியூயார்க் மாநிலத்தில் ரோச்சஸ்டர் நகரில் உள்ள, புத்துருவாக்கத்தில் உலகப் புகழ்பெற்றசிராக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிந்தார்.

இருகுழந்தைகள், மனைவியுடன் நான்கு வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தார். முன்னதாகவே ஓய்வு நேரத்தில் முயன்று, 2000 இல் இல்லங்களில் 'சேவை'எனப்படும் இடியாப்பம் செய்வதற்காக புதிய சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து,2001 இல் காப்புரிமைக்கும் விண்ணப்பத்திருந்தார். இக்கருவி பற்றி தனியாகச் செய்தி உள்ளது.

அமெரிக்காவில் வசித்தபோது, காசிக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில்இணைய வசதிகளைப் பயன்படுத்த தொடங்கினார். யாகூ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கியது. 2003 இல் வலைப்பதிவுகள் அறிமுகம்ஆனது. அயல்நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை,படைப்புகளை,செய்திகளை வலைப்பதிவில் பதியும் வழக்கத்தில் இருந்தனர்.இவ்வாறு உலகம் முழுவதும் பதியும் தமிழ் வலைப்பதிவர்கள் முகவரியை சில ஆர்வலர்கள் பட்டியலிட்டுத் தங்கள் கணிப்பொறியில் வைத்திருந்தனர்.இப்பட்டியல் வழியாக யார் யார் என்ன செய்திகளைப் பதிந்துள்ளனர் என வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியது.

வலைப்பதிவு எழுதுபவர்கள் தொழில் நுட்பம்தெரிந்தவர்கள் என்பதால் இலக்கியப் படைப்புகளாக அல்லாமல் பெரும்பாலானவலைப்பதிவுகள் சிறு அனுபவங்கள், பயண அனுபவங்கள், சிறுபடைப்புகளைத் தங்கள் வலைப்பதிவுகளில்இட்டு வைத்தனர்.
இந்த சூழலில் புதுமையான வடிவமைப்பு, இயங்குமுறை கொண்டு காசியின்உழைப்பில் தமிழ்மணம்.காம் உருவாகி 2004ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் பயனுக்குவந்தது. ஓர் ஆண்டுக்குள் பல மாற்றங்களை, வளர்ச்சிகளைப் பெற்றுதமிழ் இணையத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றது. உலகில்எழுதப்படும் அனைத்துத் தமிழ்ப் பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகஅத்தளம் செயல்பட்டது.

இன்று தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள் மட்டுமன்றித் தமிழின்கிளைமொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகத் தமிழ்மணம் உள்ளது. நாம்எழுதும் வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டும் வண்ணம் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் உள்ளது. தமிழ்மணத்தின் கருவிப் பட்டையை நம் தளத்தில் பொருத்திவிட்டால் நாம் எழுதும் வலைப்பதிவை ஒரு நொடியில் தமிழ்மணம் வழியாகஉலகத்தின் பார்வைக்கு வைக்கமுடிம்.

தகடூர் கோபி
இயற்பெயர் த. கோபாலகிருட்டிணன். பிறந்த ஊர் தருமபுரி. இவர் இளநிலை மின் பொறியியல் பட்டமும், முதுநிலை தகவல் தொழில்நுட்பப் பட்டயமும் பெற்றுள்ளார்.. இவர் கடந்த 13 ஆண்டுகளாக ஐதராபாத்தில் ஒரு பன்னாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.



கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:

தகடூர் தமிழ் மாற்றி:
இணையத்தில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
உமர் பன்மொழி மாற்றி:
தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி (தேனீ இயங்கு எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளார்.).

அதியமான் எழுத்துரு மாற்றி:
தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது. தற்சமயம் TAB,TAM,TSCII குறியேற்றங்களால் ஆன வலைப் பக்கங்களையும் தினத்தந்தி போன்ற சில தமிழ் எழுத்துருக்களில் அமைந்த வலைப் பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க இயலுமாறு செய்துள்ளார்.
அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
அதியமான் எழுத்துரு மாற்றியின் பயர்பாக்சு நீட்சி வடிவம். இதன் மூலம் உள்நுழைவு/கடவுச்சொல் தேவைப்படும் வலைப்பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றி படிக்க இயலும்.

TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள்:
பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளார். .இதைப் போல நீங்கள் விரும்பிய எழுத்துருக்களை உருவாக்குவதற்கான செயல் விளக்கத்தையும் தமிழில் அவரது வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.
தமிழ் விசை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த நீட்சியை தற்போது மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
மேற்காணும் மென்பொருள்கள் தவிர ஔவை உரைபேசி செயலி மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி போன்ற இன்னும் சில மென்பொருள்கள் கோபியின் தயாரிப்பு பணியில் உள்ளன. அவரது மென்பொருள்கள் அனைத்துமே தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமைத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாகவும் கட்டற்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதர தமிழிணையப் பங்களிப்பு:
தமிழில் http://higopi.blogspot.com என்ற வலைப்பூ முகவரியில் அவர் வலைப்பதிவைத் துவங்கி அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தொழில்நுட்பம் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வருகிறார்.
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
மதுரை ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களின் எண்ணத்தில் உருவான "தொடுவானம்" இணையம் மூலம் கிராம மக்கள் குறைதீர்ப்பு திட்டத்தின் தொழில்நுட்பக் குழுவுக்கு தலைமையேற்று மென்பொருள் மற்றும் பயிற்சி செயல் வடிவத்தில் பங்களித்துள்ளேன்.
வலைத்தளம்: http://www.higopi.com/ ,வலைப்பதிவு: http://higopi.blogspot.com, மின்னஞ்சல்: gopi@higopi.com.

முகுந்தராஜ் சுப்ரமணியன் :

இவர் நாமக்கல் அருகிலுள்ள சேந்தமங்கலம்என்னும் சிற்றூரில் 1972-ல் பிறந்தவர். தந்தையார் சுப்பிரமணி, தாயார் அமராவதி ஆவர். சேந்தமங்கலத்தில் உள்ள சைனிக்குப் பள்ளியில் படித்தவர். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். பின்னர் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பட்டம் பெற்றவர்(1994-97). தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் ஒரு தனியார் நிறுவணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இணையத்தமிழுக்கு இவரின் பங்களிப்பு

கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:
தமிழா! கணிமைத்திட்டம்:
தமிழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழருக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் ஓரளவிற்கு வெற்றியையும் அடைந்துள்ளார்கள். இதை மலேசியாவிலுள்ள இளஞ்செழியன் என்பவருடன் சேர்ந்து ஆரம்பித்து தற்போது ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறார்..
தமிழா திட்டத்தின் வலைத்தளம்: http://thamizha.com
தமிழா திட்டத்தின் மென்பொருட்களின் மூலநிரல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: https://github.com/thamizha

எகலப்பை:

விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும்.
இதன் வலைத்தளம்: http://thamizha.com/project/ekalappai

தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி:

பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/

தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி;
பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/


சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
தற்போது பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி குயீன்ஸ்லாந்து என்ற பெயரில் ஒரு வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து இங்குள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார்.http://www.facebook.com/thaai.tamil.school.qld

வலைப்பதிவு: http://mugunth.blogspot.com
மின்னஞ்சல்: mugunth@gmail.com

தகடூர் கோபி
இயற்பெயர் த. கோபாலகிருட்டிணன். பிறந்த ஊர் தருமபுரி. இவர் இளநிலை மின் பொறியியல் பட்டமும், முதுநிலை தகவல் தொழில்நுட்பப் பட்டயமும் பெற்றுள்ளார்.. இவர் கடந்த 13 ஆண்டுகளாக ஐதராபாத்தில் ஒரு பன்னாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.



கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:

தகடூர் தமிழ் மாற்றி:
இணையத்தில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
உமர் பன்மொழி மாற்றி:
தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி (தேனீ இயங்கு எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளார்.).

அதியமான் எழுத்துரு மாற்றி:
தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது. தற்சமயம் TAB,TAM,TSCII குறியேற்றங்களால் ஆன வலைப் பக்கங்களையும் தினத்தந்தி போன்ற சில தமிழ் எழுத்துருக்களில் அமைந்த வலைப் பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க இயலுமாறு செய்துள்ளார்.
அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
அதியமான் எழுத்துரு மாற்றியின் பயர்பாக்சு நீட்சி வடிவம். இதன் மூலம் உள்நுழைவு/கடவுச்சொல் தேவைப்படும் வலைப்பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றி படிக்க இயலும்.

TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள்:
பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளார். .இதைப் போல நீங்கள் விரும்பிய எழுத்துருக்களை உருவாக்குவதற்கான செயல் விளக்கத்தையும் தமிழில் அவரது வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.
தமிழ் விசை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த நீட்சியை தற்போது மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
மேற்காணும் மென்பொருள்கள் தவிர ஔவை உரைபேசி செயலி மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி போன்ற இன்னும் சில மென்பொருள்கள் கோபியின் தயாரிப்பு பணியில் உள்ளன. அவரது மென்பொருள்கள் அனைத்துமே தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமைத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாகவும் கட்டற்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதர தமிழிணையப் பங்களிப்பு:
தமிழில் http://higopi.blogspot.com என்ற வலைப்பூ முகவரியில் அவர் வலைப்பதிவைத் துவங்கி அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தொழில்நுட்பம் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வருகிறார்.
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
மதுரை ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களின் எண்ணத்தில் உருவான "தொடுவானம்" இணையம் மூலம் கிராம மக்கள் குறைதீர்ப்பு திட்டத்தின் தொழில்நுட்பக் குழுவுக்கு தலைமையேற்று மென்பொருள் மற்றும் பயிற்சி செயல் வடிவத்தில் பங்களித்துள்ளேன்.
வலைத்தளம்: http://www.higopi.com/ ,வலைப்பதிவு: http://higopi.blogspot.com, மின்னஞ்சல்: gopi@higopi.com.

முகுந்தராஜ் சுப்ரமணியன் :

இவர் நாமக்கல் அருகிலுள்ள சேந்தமங்கலம்என்னும் சிற்றூரில் 1972-ல் பிறந்தவர். தந்தையார் சுப்பிரமணி, தாயார் அமராவதி ஆவர். சேந்தமங்கலத்தில் உள்ள சைனிக்குப் பள்ளியில் படித்தவர். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். பின்னர் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பட்டம் பெற்றவர்(1994-97). தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் ஒரு தனியார் நிறுவணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இணையத்தமிழுக்கு இவரின் பங்களிப்பு

கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:
தமிழா! கணிமைத்திட்டம்:
தமிழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழருக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் ஓரளவிற்கு வெற்றியையும் அடைந்துள்ளார்கள். இதை மலேசியாவிலுள்ள இளஞ்செழியன் என்பவருடன் சேர்ந்து ஆரம்பித்து தற்போது ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறார்..
தமிழா திட்டத்தின் வலைத்தளம்: http://thamizha.com
தமிழா திட்டத்தின் மென்பொருட்களின் மூலநிரல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: https://github.com/thamizha

எகலப்பை:

விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும்.
இதன் வலைத்தளம்: http://thamizha.com/project/ekalappai

தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி:

பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/

தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி;
பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/


சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
தற்போது பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி குயீன்ஸ்லாந்து என்ற பெயரில் ஒரு வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து இங்குள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார்.http://www.facebook.com/thaai.tamil.school.qld

வலைப்பதிவு: http://mugunth.blogspot.com
மின்னஞ்சல்: mugunth@gmail.com


திரு.மா.ஆண்டோபீட்டர்.

கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பது,தமிழ்மென்பொருள்களை வடிவமைப்பது, கணிப்பொறி சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பது எனப் பல்வேறு பணிகளைச் சத்தமில்லாமல் தன்னுடைய சாஃப்ட்வியூ நிறுவனத்தின் மூலம் செய்து வருபவர் மா.ஆண்டோ பீட்டர். கணிப்பொறியியல், இணையத்தில் தமிழ் மொழியை முன்னிறுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

முனைவர் மு. பொன்னவைக்கோ

இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிறை பொன்னிக்கண்ணு அம்மையாருக்கும் இளைய மகனாய்ப் பிறந்தவர். சொந்த ஊரில் அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், வழுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும், மீனம்பாக்கம் அ.மா.ஜெயின் கல்லூரியில் புகுமுக வகுப்பும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை (B.E.), முதுநிலை(M.Sc. (Eng) மின்பொறியீயல் கல்வியும், தில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் ஆய்வுப் படிப்பையும்( Ph.D) பயின்று பொறியாளர் ஆனவர்.
நாற்பது ஆண்டுகளாக இந்திய, வெளிநாட்டு நிறூவனங்கள் பலவற்றில் திட்டப் பொறியாளராக, திறமையான அதிகாரியாக, அறிவுரைஞராக, ஆய்வுநெறிகாட்டியாக , இயக்குநராக, துணைவேந்தராகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த ஆய்வாளர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியவர். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டவர். மின்னமைப்பு வடிவமைப்பில் பல புதிய கண்டுபிடுப்புகளைக் கண்டுபித்தவர். அவர் கண்டுபிடிப்புகள் அவரது பெயரால் ”கோ மாதிரிகள்” என வழங்கப்படுகின்றன. உயர்கல்வி மேம்பாட்டிற்குப் பல திட்டங்களை வழங்கியவர். தமிழ்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் படிப்போர்க்கு ஆற்றல் கல்வி வழங்கி, பட்டம் பெற்றவுடன் பணியில் சேர வழி வகுத்தவர். பட்டப்படிப்பில் பயில்வோர் எம்மொழியினராயினும் தமிழைக் கட்டாயம் பயிலப் பாடத்திட்டம் வழங்கியவர்.
தனியாத தமிழ்ப் பற்றால் கணித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநர். இணையவழிக் கலிவிக்கு முதன் முதலாக வித்திட்டவர். புதிது புதிதாகப் புதுமைகளைப் படைப்பவர். உத்தமம் அமைப்பிற்குப் பெயர் சூட்டியவர். உலகத் தமிழ் தகவல் தொழிநுட்ப மன்றம்( உத்தமம்) International Fourm for Information technology in Tamil( INFITT)
ஆசிரியரின் கணிப்பொறி சார்ந்த நூல்கள்
1. கணிப்பொறியியல்
2. கணிப்பொறியும் தகவல் தொடர்பியலும்
3. HTML- ஓர் அறிமுகம்
4. C மொழி
5. ஸ்டார் ஆபிஸ்
6. விஷீவல் பேசிக்
7. ஜாவா
8. அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள்
9. தமிழ்க் கணிப்பொறி மொழிகள்
10. இணையத் தமிழ் வரலாறு.

பிற நூலகள்

1 பொன்னவைக்கோ கவிதைகள்
2. மெல்லத் தமிழ் இனி வெல்லும்
3. அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்.

முனைவர் இராதசெல்லப்பன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக்த்தில் தமிழாய்வுத்துறையின் தலைவராகப் பணியாற்றவர். சிறந்த தமிழ்க் கணினிப் பற்றாளர். பல ஆய்வு மாணவர்களுக்குக் கணிப்பொறி அறிவின் தாக்கத்தை ஏற்படுத்தியவர். உத்தமம் குழுவில் உருப்பினராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். இவர் கணிக் கலைச்சொல் அகராதி என்ற நூலையும் கணிப்பொறியும் தமிழும் என்ற இரு நூல்கலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் அருமுயற்சியால் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.

முனைவர் துரை.மணிகண்டன்.

தஞ்சை மாவட்டம் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் துரைக்கண்ணு முத்துராஜா, சவுந்தரவள்ளி பாண்டுரார் அம்மையாருக்கு 1973 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை கச்சமங்கலம் அரசுபள்ளியில் பயின்று மேலநிலைக் கல்வியைத் திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர். தனது இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைத் (1994 முதல் 2001 முடிய) திருச்சிராப்பள்ளித் தூயவளனார் கல்லூரில் பெற்றார். முனைவர்ப் பட்டத்தைத் தேசியக்கல்லூரியில் 2007 முடித்துள்ளார். இவர் தமிழ் இணையத்தின் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவர். தமிழ் இணையம் என்ற தலைப்பில் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இவைமட்டுமன்றி தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் சார்ந்த வல்லுனர்கள் பயன் பெறும் வகையில் தமிழுலகத்திற்கு நான்கு நூல்களையும் எழுதியுள்ளார்.அவைகளில் இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், கணிப்பொறியும் இணையத்தமிழ வரலாறும். என்பதாகும்.

இணையமும் தமிழும் என்ற நூல் திருச்சிராப்பள்ளி ஈ. வெ. ராமசாமி அரசு கலைக் கல்லூரியில் பாடமாக வைக்கப்படுள்ளது. “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்” என்ற நூலுக்குத் திருச்சிராப்பள்ளி , முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது.

முனைவர் மு.இளங்கோவன்

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20-06-1967 இல் உழவர்குடியில் பிறந்தவர். பெற்றோர் சி. முருகேசனார், திருவாட்டி மு. அசோதை அம்மாள். தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை அரசினர் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில்முடித்தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984). மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் ந. சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைமுதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992). பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் "மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டம் பெற்றவர்(1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 -1996) நிறைவு செய்தார். முனைவர் பட்டத்திற்கு இவர் "பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார்.


“தமிழின் ஆழ்ந்த அறிவும் தொழில்நுட்பத்தின் விரிவும் இணைந்து இருநூற்றாண்டுகளைப் பாலம் கட்டி இணைக்கத் தெரிந்த முனைவர் மு.இளங்கோவனைப் போன்ற இணையத் தமிழர்கள்தாம் தமிழ் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கும் தங்கத் தூண்களாகத் திகழப்போகிறார்கள்உ இவரைப் போன்ற இளைஞர்களைத்தான் என் கவிதை கனவு கண்டு வருகின்றது” என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பாராட்டப்பெற்றவர் முனைவர் மு.இளங்கோவன். இயல், இசை, நாடகம் என்று பகுக்கப்படும் தமிழில் இணையத்தமிழ் என்று இன்னொரு வகையை இணைத்துத் தமிழ் இணையத்தைத் தமிழகம் முழுவதும் பரப்பி வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து தமிழகத்தில் அறிவுப்புரட்சி செய்து வருவதையும் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையைப் பல்லாயிரம் பக்கம் இணையத்தில் எழுதி இணைத்துள்ளதையும் அறிந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்னா) அமெரிக்காவிற்கு அழைத்து இவரைச் சிறப்புச் செய்து பாராட்டி அனுப்பியுள்ளது.

இணையத்தமிழ் பங்களிப்பு மற்றும் விருதுகள்

கணினிப் பயன்பாடு நோக்கித் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் தேவையில்லை என்று உரைத்தவர். கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் இணைக்கும் ஒருங்குகுறி சேர்த்தியம் முயற்சியில் உலக அளவில் நடந்த உரையாடல்களில் கலந்துகொண்டு தமிழுக்கு ஆக்கமான கருத்துகளை

தமிழறிஞர்களின் வாழ்வியலை இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான அறிஞர்களின் வாழ்வியல் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறத் தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இவர் உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்தம் இணையத் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தருமபுரித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழறிஞர் என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது (2008). தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த வலைபதிவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருதினை (2006- - 2007) மாண்புயர் இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களின் கையால் இவருக்கு வழங்கியுள்ளது. தமிழக மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கையால் ஒரு இலட்சம் உருவா விருதுத்தொகையைப் பெற்றவர்.

தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்கள் வளர்ச்சிக்கும் அறிவியல் சிந்தனையோடு பணியாற்றியும், பயிற்றுவித்தும் வருவதோடு மிகச்சிறந்த ஆய்வுப்பணிகளைச் செய்துள்ளமையைப் பாராட்டி இந்த ஆண்டு(2012) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இவருக்குப் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

ஆசிரியரின் பிறநூல்கள்.

மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப்போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் நூல்களுள் மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், வாய்மொழிப்பாடல்கள், பழையன புகுதலும், அரங்கேறும் சிலம்புகள், பாரதிதாசன் பரம்பரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.), நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

வலைப்பதிவு: http://muelangovan.blogspot.com/
மின்னஞ்சல்: muelangovan@gmail.com


முனைவர் தி.நெடுஞ்செழியன்.

திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறைப் பேராசிரியாராகப் பணியாற்றிவருகிறார். இவர் பல கல்லூரிகளில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியுள்ளார். தமிழ்த்திணை என்ற இணைய இதழையும் நடத்திவருகின்றார். இவரது தமிழ்க் கணினியியல் என்ற நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் முதுகலைக்குப் பாடமாக வைத்துள்ளார்கள்.

முனைவர் மு.பழினியப்பன்

புதுக்கோட்டை மாமன்னர் அரசுக்கல்லூரியில் தமிழ்த்துறைப்பேராசிரியாரகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இணைய வளர்ச்சிக்கு இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது. பல கல்லூரிகளில் கணிப்பொறிசார்ந்த தலைப்புகளில் உரை நிகழ்த்தியுள்ளார். கணினியும் தமிழும் என்ற நூல் புதுச்சேரி பாரதிதாசன் கல்ல்லூரியிலும், புதுகோட்டை மாமன்னர் கல்லூரியிலும் இளங்கலை பாடத்திற்குப் பாடமாக வைத்துள்ளனர்.






Sunday, April 1, 2012

தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும்.

|1 comments
தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றான் தமிழ்ச் சங்கப்புலவன் கனியன் பூங்குன்றன். ஆம், அஃது இன்று உண்மையாகிவிட்டது. உலகத்தைச் சுற்றிவந்தால்தான் கனி என்றான் சிவன். மகன்களில் முருகன் மயில்மீது ஏறி உலகைச் சுற்ற, மற்றொருமகன் கணபதி தன் தாய் தந்தையைச் சுற்றிவிட்டு கனியைப் பேற்றுக்கொண்டான் என்கிறது புராணம். இன்றும் அவ்வாறே கணிப்பொறி ஒன்றும், அதனோடு இணைய இணைப்பும் இருந்துவிட்டால் உலகை நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்ந்துவிடலாம், கண்டுவிடலாம்.
இன்று நாம் கணினித் திரையில் காணும் எழுத்துருக்கள் எங்கு? யாரால்? எவ்வாறு? தோற்றம் பெற்றிருக்கும் என்று நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.எனவே இக்குறையைப் போக்க தமிழ் எழுத்துருக்களும், மென்பொருள்களும் என்ற தலைப்பில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

இக்கட்டுரையில் பதிவாகியுள்ள செய்திகளை நான் ஒருவனே எழுதவில்லை. பல இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள், அழகி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் எமது நண்பர்கள் பலரிடம் கேட்டும், முனைவர் பொன்னவைக்கோ அவர்களது நூலிலிருந்தும் எடுத்துள்ளேன். இதில் ஒருசில எழுத்துருக்கள் விடுபட்டிருந்தாலும் அதனை தயவு செய்து தெரியப்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்குத் தமிழ் உலகம் நன்றிக்கடன் பட்டதாக இருக்கும்.

தமிழில் நீங்கள் கணினியை பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பிரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

தமிழ் மென்பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் நேரடியாக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கும் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எளிமையாக கூறுவதென்றால், நாம் பயன்படுத்தும் விசைப்பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில சமஸ்கிருத எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப்பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளை கையாள சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.

மேலும் அங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்வேறு உள்ளீட்டு முறைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99, போன்றவை) உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வெவ்வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை திறமையுடன் கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக்கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா. கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி ஏற்றுக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருளாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப்பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளை போட்டு வைத்திருக்கும் சட்டகங்களை போன்றதே எழுத்துரு எனப்படுவது.

தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், படம் வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக பாவித்துச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென் பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர்.இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடித்தன.
ஆதமி மென்பொருள் ஆங்கில மென்பொருள்போல தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கவேண்டுமென பல கணிப்பொறி வல்லுனர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக முதலில் கனடாவில் வசிக்கும் திரு.கலாநிதி சீனிவாசன் என்பவரால்1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதமி தமிழ் மென்பொருளாகும். இதன் மூலம் கணிபொறியில் தமிழில் எழுதி அதனை அச்சுப்பதிவு செய்துகொள்ள முடிந்தது. இந்த ஆதமி எழுத்துருவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. பிறகு சீனிவாசனின் விண்டோஸ் பதிப்பாக ஆதவின், திரு ஆகியவையும் உருவாயின.

மயிலை

தொடர்ந்து1985-ஆம் ஆண்டு சுவட்சர்லாந்தில் உள்ள முனைவர் கு.கல்யாண்சுந்தரம் என்பவரால் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A-வைத் தட்டினால் அது அ-என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைபோன்று K-க, O- கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன. மேலும் இவருடன் இணைந்து முத்தெழிலனும் மயிலை, இணைமதி, தமிழ், ஃபிக்ஸ் போன்ற எழுத்துருவையும் உருவாக்கிச் செயல்படுத்தினர்.

கு.கல்யாணசுந்தரம் வடிவமைத்த மயிலை எழுத்துரு அமைப்பு



முரசு அஞ்சல்
“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் போன்ற செயல்கள் இலகுவாக்கப்பட்டன.


முரசு அஞ்சல் மென்பொருள் எழுத்துரு


தமிழ் லேசர்

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் உருவைமைத்த ’தமிழ் லேசர்’(tamil laser), காஞ்சி என்ற இரண்டு குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.


ISCII-83

இந்திய அரசால் நிருவப்பட்ட Centre for Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISCII-83 என்ற தமிழ் மெபொருள் உருவாக்கப்பட்டது.

தமிழ் இனையம் 99 கருத்தரங்க முடிவில் 1-6-1999 அன்று தமிழக அரசின் பரிந்துறையில் தமிழ் அச்சுப் பணிகளுக்கு அழகூட்டும் வகையில் தமிழ் எழுத்துருக்களை மட்டுமே கொண்ட TAM என்ற ஒரு தமிழ் எழுத்துத் தரம், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் TAB என்ற தரமும் உருவாக்கப்பட்டது.

பிற தமிழ் எழுத்துருக்கள்.

அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் ஆர்வளர் முனைவர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் T.கோவிந்தராசு என்பவர் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்திலும் கணிப்பொறியிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

தாரகை

சிங்கப்பூரில் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்துரு மென்பொருளாகும்
இவைகள் மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் திரு.செல்லப்பனின் asian printers,க.இளங்கோவனின் CAD Graph, டாக்டர். கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech, மா.ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscript fonts), திரு.தியாகராசனின் வானவில் போன்றவையும் அடங்கும்.

இ-கலப்பை

முரசு 2000-த்தை தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிவரும் மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல்,தொடர்ந்து யூனிக்கோடு எழுடத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.


இ-கலப்பை மென்பொருள் எழுத்துரு

தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு

அஸ்கி (ASCII)
ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.
தகுதரம் (TSCII)
இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைத்த தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாக்கப்பட்டது.. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப் பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன் படுத்தப்படுகிறது.

ஒருங்குறி (UNICODE)

ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளைஒன்றினைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் Mac OS 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள்மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

மேலும் சில தமிழ் எழுத்துருக்கள்.

மலேசியாவைச் சேர்ந்த கே.பால். இரவீந்தரன் என்பவர் துணைவன் 2.3 என்ற எழுதியை உருவாக்கியுள்ளார். பாரிசில் வாழும் கோபாலகிருஷ்ணன் எனபவர் புதுச்சேரி என்ற தமிழ் மென்மத்தை உருவாஅக்கியுள்ளார். வட அமெரிக்கரான தமிழர்கள் ஞானசேகரன் மற்றும் பால. சுவாமிநாதன் ஆகியோர் யுனிக்ஸ் முறையில் அமைந்த எழுத்துருக்களை உருவாக்கினர். நா.கோவிந்தசாமியால் தமிழ்நெட் என்றதொரு எழுத்துருவை உருவாக்கினார். உமர் தம்பி தேனி இயங்கு எழுத்துருவை உருவாக்கினார். சுரதாவின் தமிழ் எழுதி யுனிகோடு முறையில் எழுத உதவும் எழுதியாகும். சுரபி என்ற தமிழ் எழுதி ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மின்தமிழ் என்ற எழுதி வாப்டெக் (vabtech) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.


கூகிள் தமிழ் ஒலிமாற்றி மென்பொருள்

கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.
http://www.google.com/ime/transliteration/


தமி்ழ் ஆங்கில மொழிப்பெயர்ப்பு மென்பொருள்கள்
.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.

சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்).

மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குறித்து, "சென்' குழுவைச் சேர்ந்த சோமன், தனலட்சுமி, ஆனந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கூறியது:

கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை மொழிகளை கம்ப்யூட்டருக்குள் புகுத்தும் முயற்சி நடக்கிறது. அந்தந்த நாட்டு மொழிகளில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் இயற்கை மொழி ஆய்வில் 2007ல் இருந்து ஈடுபட்டுள்ளோம். கம்ப்யூட்டர் மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழியியல் கருவி, துவக்கநிலை மொழிப்பெயர்பு சாதனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கலாம். தமிழ் சொல்வகை அடையாளப்படுத்தி, தொடர் பகுப்பான், உருபனியல் பகுப்பாய்வி போன்ற சாப்ட்வேர் மூலம் ஆங்கில சொற்றொடர்கள், வார்த்தை, பால்விகுதி, காலம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எந்த வினைச்சொல்லாக இருந்தாலும், எப்போது, எந்த பால் விகுதியை குறிக்கும் என கணித்து மொழிபெயர்க்கப்படும்.

வார்த்தைகளில் குறில், நெடில், வினை, மாத்திரை போன்ற அடிப்படை இலக்கணத்தையும் அடையாளம் காட்டும். எனவே, ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் உட்பட பலரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எளிதாக தமிழில் மொழிப்பெயர்க்கலாம். ஆசிரியர்கள் உதவியின்றி இலக்கணத்தை கூட கற்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தி மொழியிலும் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது; அடுத்தடுத்து பிற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கப்படும். ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை கூட அந்தந்த மொழிகளில் எளிதாக மொழிப்பெயர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு கருவியை வழங்குகிறது. அதன் பெயர் Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் பேக் (CLIP) .இதன் மூலம் டூல்டிப் தலைப்புகளில் ஆங்கில பயனர் இடைமுகச் சொற்களுக்கு இணையான தமிழ் மொழிபெயர்ப்புகளை பார்க்கலாம்.

இதைப் பயன்படுத்த. உங்கள் சுட்டியை திரையில் நகர்த்தி, நீங்கள் மொழிபெயர்த்துப் பார்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் நிறுத்தினால் போதும், தமிழில் அதன் விளக்கம் காண்பிக்கபடும்.

பயனர்கள் மேலும் சொந்தமாக மொழிபெயர்ப்புகளை சேர்த்துக்கொள்ளலாம், அதைப் பிரதி எடுத்து வேறோரு இடத்தில் ஒட்டிக்கொள்ளவும் செய்யலாம்.

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்த....சொடுக்கவும்.

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4e5258d2-52f4-46b8-8b74-da2dbec7c2f7&DisplayLang=ta

http://www.amrita.edu/campuses/cbr/index.ph

கூகிள் மொழிப்பெயர்ப்பு

கூகிள் மொழிப்பெயர்ப்பு தளம் ஒருஇணையப்பக்கத்டிஅ எளீதில், ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்ய உதவும் மென்பொருள்கௌம். உதாரணமாக நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் உலாவும் போது அதை மற்றவர்களுக்குத் தமிழில் பார்க்க உதவவேண்டு என்றால், இந்த உத்தியை பயன்படுத்தலாம்.
முதலில் இந்த பக்கத்திற்குச் சென்று, இடஹ்டு பக்கம் உள்ள translater dools ki என்ற தொடரைச் சொடுக்கவும். உங்களுக்குக் கூகிளீல் ஒரு கணக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கனக்கை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.உங்கள் கூகிள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சுல்லை கொடுத்து உள்ளே சென்றுவிடுங்கள்.
அப்லோட் என்ற பொத்தானை அழுத்துங்கள்.சிறிது நேரம் கழித்து வரும் பக்கத்தில், உங்கள் கணினியில் உள்ள கோப்பு ஒன்றை ப்ரவுஸ் பொத்தானை அழுத்தி உங்கள் கூகிள் கணக்கில் தள ஏற்றம் செய்ய அயத்த படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு( இந்த மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் கோப்பிற்கு) ஒரு பெயரைச் சூட்டுங்கள். எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
பிறகு அப்லோடு பார் மொழிப்பெயர்ப்பு பொத்தானை அழுத்துங்கள்.உங்கள் கோப்பு பரிசீலிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு செய்ய தயாராகி விடும்.
கூகிள் இரண்டு சாளரமாக –இடது பக்கம் கோப்பின் இருப்பு மொழியிலும், வலது பக்கம் நீங்கள் தேர்வு செய்த மொழியில் மொழிபெயர்க்க தயாராகவும் இருக்கும்.
மேல் வலது பக்கத்தில் பல பொத்தான்கள் உள்ளன.அதில் உங்கள் மொழி எழுத்தில் ஒரு பொத்தானை காணலாம். அது அமுங்கிய நிலையில் இருந்தால் நீங்கள் தட்டசிடுவது உங்கள் மொழியில் வரும். இது கூகிள் புக்மார்க்லேட் முறையில் வேலைசெய்யும்.
அவ்வப்போது உங்கள் உழைப்பை சேமித்துகொள்ள் சேமிப்பு பொத்தானை சொடுக்கவும். உங்கள் மொழிப்பெயர்ப்பு செய்த கோப்பு கூகிள் கணக்கில் இருக்கும். இதை நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.அல்லது ஒரு குழுவாக சேர்ந்து இந்த கோப்பை மொழிபெயர்க்கலாம். உங்கள் கூகிள் கணக்கில் இருந்து இந்த மொழிபெயர்க்கப்பட்ட கோபை தள்விறக்கம் செய்து உங்கள் சொந்த தளத்தில் தள ஏற்றமும் செய்துகொள்ளலாம்.

அகபே தமிழ் எழுதி

அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்த தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும், வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)

விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள்தான் அழகி ஆகும்.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration).
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.

என்.எச்.எம் மென்பொருள்(new Horizon media)

சென்னையில் உள்ள கிழக்குப்பதிப்பக திரு.பத்திரிசேசாத்திரி அவரகளின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது.இதுவரை வந்துள்ள தமிழ்ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம்.இதனை இலவசமாக கணிப்பொறியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கனியன் பூங்குன்றன் விருது இம்மென்பொருள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்லினம் மென்பொருள்

என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கிதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் அறிமுகமாக வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிடபட்டது.

சர்மா சொற்பிழைச்சுட்டி மென்பொருள் (http://sarma.co.in/tamil/index.htm)

சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.

மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ( Tamil Wordprocessor)

ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களும் , அவரின் மாணாக்கர்களும் ஆவர். கணினித்துறையில் தொழில் புரியும் அவரது மகனும் இப்போது உதவுகிறாராம்.
மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ( Tamil Wordprocessor) என்ற தமிழ்மென்பொருள்
தமிழுக்கு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது. கணினிமொழியியல் ( Computational
Linguistics) , மொழித்தொழில்நுட்பம் ( Language Technology) ஆகிய
அறிவியல், தொழில்நுட்பத்
துறைகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்துருக்கள் ( fonts) ஒருங்குறி உள்ளீட்டுமுறையில் ( Unicode )
அமைந்துள்ளன. தமிழ் இணையம்99 உட்பட நான்குவகை விசைப்பலகைகள் இடம்
பெற்றுள்ளன. தமிழ்
ஆவணங்களைப் பதிப்பிக்கத் தேவையான அனைத்து பதிப்புவசதிகளும் இடம்
பெற்றுள்ளன.இம்மென்பொருளில் சொற்பிழைதிருத்தி
, சந்திவிதி விளக்கம், அகராதி பயன்பாடு ஆகிய பல இன்றியமையாத பயன்பாடுகள்
நிறைந்துள்ளன. இம்மென்பொருள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நிகழ்ச்சி நிரல்
விவரம் இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. தமிழாசிரியர்களுக்குப் பெரிதும்
பயன்படக்கூடிய மென்பொருளாக இது அமையும். .

தமிழ் மின் அகராதி மென்பொருள் இலவசமாக..

இது கூக்ளியில் வந்திருக்கும் இலவச போர்ட்டபிள் மென்பொருள்.இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்..மேலும் இதனை நம்முடைய கணிப்பொறி STARTபோது தன்னிச்சையாக ஆரம்பிக்குமாறும் செட்டிங் செய்யலாம்.
தமிழ் அகராதி இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்.
http://denaldrobert.blogspot.com/2011/11/blog-post_25.html



இது கூக்ளியில் வந்திருக்கும் இலவச போர்ட்டபிள் மென்பொருள்.இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்..மேலும் இதனை நம்முடைய கணிப்பொறி START போது தன்னிச்சையாக ஆரம்பிக்குமாறும் செட்டிங் செய்யலாம்.


இதன் சிறப்பம்சங்களாக பன்மொழி அகராதி,கூக்ளி மற்றும் பிங் இணைய தேடுதல், OCR, தேர்வு செய்த மொழியினை எழுதும் பலகை (Virtual கீபோர்ட்) மற்றும் விக்கிபீடியா தேடுதல்.


இதன் சிறப்பம்சமாக நாம் தேடும் மொழியின் உச்சரிப்பையும் ஒலி வடிவில் கேட்கலாம்.நாம் தேர்வு செய்த அல்லது மொழி பெயர்ப்பு செய்த தகவல்கள் தேவை என்றால் கோப்பாக சேமிக்கும் வசதியும் உள்ளது.

இதனை பயன்படுத்தும் போது வேறு இடத்தில் கர்சரை கிளிக் செய்தால் இந்த அகராதி கடிகாரமாக மாறி கீழே உள்ளவாறு அழகாக காட்சி அளிக்கும்.நாம் வேறு பணியை செய்யும் போது அது நம்முடைய கணினியின் மேற்பரப்பிலேயே இருக்கும்.தேவையென்றால் அதில் கிளிக் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.தேவை இல்லாவிட்டால் அதனை close செய்வதன் மூலம் மீண்டும் டாஸ்க் பாரில் அமர்த்திக் கொள்ளலாம்.


இதம் மூலம் 65 மொழிகளை கையாளலாம்.இந்தியாவின் முன்னணி மொழியான ஹிந்தி,தமிழ் வட இந்திய மொழிகளான மராத்தி,குஜராத்தி மற்றும் தென்னிந்திய மொழிகளான மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்றவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.


குறள் தமிழ்ச் செயலி

மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.