/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, October 26, 2020

Top 100 Free Tamil Software - இதுவரை தமிழில் வெளிவந்த மென்பொருள்களின் தொகுப்பு

|1 comments

 


தமிழ் இணையக் கழகம் சார்பாக 25 -10- 2020 அன்று மாலை ஆறு மணிக்கு இணையவழியில் இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள், கணினி உலகில் தமிழ் மென்பொருள்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இந்த பதிவில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் தமிழில் இதுவரை வெளிவந்திருக்கின்ற  150 க்கும் மேறபட்ட தமிழ் மென்பொருள்களைத் தொகுத்து வழங்கியிருப்பது சிறப்பு.

1.   தமிழ் தட்டச்சு விசைப்பலகை

2.    தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்  

3.   உரையைப் படித்துக்காட்டும் மென்பொருள்கள்

4.   தமிழுலில் பேசுவதை எழுதும் மென்பொருள்

5.    மொழிபெயர்ப்பு கருவிகள்

6.    கல்வெட்டுகளைப் படிக்கும் மென்பொருள்

7.    இலக்கண மென்பொருள்

என தமிழ் சார்ந்த மென்பொருள்கள் இதுவரை யார் யார் உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றார்கள் என்பதை தொகுத்து இந்தக் காணொலி வழங்குகிறது.


 

உரை ஒலி மாற்றி

1.  முனைவர் டி.நாகராஜன் -  http://speech.ssn.edu.in/, https://ttsreader.com/.

2.  கூகுள் - https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.searchlite&hl=ta

3.  https://cloud.google.com/text-to-speech/

4.  https://play.google.com/store/apps/details?id=hesoft.T2S&hl=ta

5.     Indic Language Text To Speech --https://hear2read.org/

6.  முனைவர் ஏ.ஜி.ராமகிரிஷ்ணன்-  https://www.ragavera.com/tts

7.  முனைவர் வாசு.ரெங்கநாதன் - http://text2speech.tamilnlp.com/

8.    ரமேஸ் ஹரிஹரன், சந்தோஷ் தொட்டிங்கல் - http://dhvani.sourceforge.net/

9.  NDVA  -https://www.nvaccess.org

10.INDIAN LANGUAGE TECHNOLOGY PROLIFER   ATION AND DEPLOYMENT CENTRE - http://www.tdil-dc.in/index.php?option=com_vertical&parentid=85&lang=en

11.கட்டற்ற முறையில் - http://espeak.sourceforge.net/-

12.GitHub  -https://github.com/mozilla/DeepSpeech

13.IIT Madras(Donlab-India TTS) HTS - CMU Festival - https://github.com/indianrobotics/ArimaTTS -

14.https://github.com/KaniyamFoundation/tts-web

15.://github.com/sunnyglow/Thamizh-Pesi

16.https://inforobo.com/text-to-speech-online/

17.https://www.indiadict.com/web/text-to-speech.html

தமிழ் எழுத்துணரி

1.  http://www.i2ocr.com/free-online-tamil-ocr

2.  https://play.google.com/store/apps/details?id=com.atuts.tamilocr

3.  https://drive.google.com/drive/

4.  https://play.google.com/store/apps/details?id=com.thesimplest.ocrpro

5.  பொன்விழி - http://learnfunsystems.com/downloads/tamil.htm

6.   Amit Agarwal - Google apps script -https://www.labnol.org/code/20082-google-docs-ocr/

7.  https://github.com/tshrinivasan/OCR4wikisource

8.  https://tdil-dc.in/index.php?option=com_download&task=showresourceDetails&toolid=2015&lang=en

9.  http://ocr.tamil.subasa.lk/

10.https://online.easyscreenocr.com/Home/TamilOCR

11.சந்தோஸ் - https://smc.gitlab.io/handwriting/

எழுத்துப்பெயர்ப்பு

1.  தகடூர் கோபி - http://www.higopi.com/adhiyaman/

2.  சுரதா - www.suratha.com/reader.htm

3.  NHM  நாகராஜன்-  https://indiclabs.in/products/converter/

4.  முனைவர் வினோத்ராஜன் - http://aksharamukha.appspot.com/#/converter/

5.  நீச்சல்காரன் - http://macrolayer.blogspot.com/p/indic-transliteration.html

6.   நீச்சல்காரன் - http://apps.neechalkaran.com/oovan

7.  மதன்கார்க்கி - https://karky.in/karefo/login/login.html

8.  ஜெகதிஸ் - http://transliterator.blogspot.in/

9.  https://vengayam.net/translate/tamil.html

10.கிளிக்கெழுதி - http://kilikeluthi.online.fr/

11.கொழும்பு பல்கலைக்கழகம் -https://ucsc.cmb.ac.lk//ltrl/services/feconverter/

12.Sourceforge - https://sourceforge.net/projects/tamencs2unicode/

13.சுவடி - https://suvadi.lk/

தமிழ் ஒலி உரை மாற்றி

1.  https://dictation.io/speech

2.  https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin&hl=en_IN

3.  https://cloud.google.com/speech-to-text

4.  https://www.speechtexter.com/

5.  speechnotes. Co

 

தமிழ் கல்வெட்டுச் செயலி

1.  ஜீனவாணி - http://tamiljinavani.appspot.com/#/editor

2.  http://dev.udhayam.in/tamil-brahmi/

            சொல்லாய்வுக் கருவி

1.     National Languages Processing Centre (NLPC), University of Moratuwa, Sri Lanka   - http://parsers.projects.uom.lk/fst-ta/index.php

2.    கார்க்கி அராய்ச்சி நிறுவனம் -  https://karky.in/karefo/labs/piripori/piripori.html

3.    நிகழாய்வி  - http://78.46.86.133:8080/tva-aukbc/

4.    நீச்சல்காரன், சுளகு - http://apps.neechalkaran.com/sulaku

5.    சக்தி ஆபிஸ் - www.shaktioffice.in/product/product.html

6.    முனைவர் நா.தெய்வசுந்தரம், மென்தமிழ் சொல்லாளர்,  - http://www.lingsoftsolutions.com/mentamizh-2017

7.    பொன்மொழி - http://learnfunsystems.com/downloads/tamil.htm

தமிழ்த் தட்டச்சு செயலி

1.  குறள் தமிழ்ச் செயலி - http://www.kuralsoft.com/kural-tamil-software.html

2.  திரு.முத்துகருப்பன், இனிய தமிழ் - http://www.iniyatamil.com/

3.  பூபாளம் - http://www.boobalam.com/eluththaani/

4.  https://tamil99.org/

5.  https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.trial

6.  https://play.google.com/store/apps/details?id=com.sps.tamil26keyboard

7.  https://play.google.com/store/apps/details?id=iit.android.swarachakraTamil

8.  மொழி இடைமுகத் தொகுப்பு - https://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=17036

9.  indic-keyboards - https://code.google.com/archive/p/indic-keyboards/downloads

10.github   - https://github.com/srihari92/TamilVirtualKeyboard-in-java

11.https://play.google.com/store/apps/details?id=com.mitpl.modularkeyboard

12.http://www.vishalon.net/IndicResources/IndicIME.aspx

13.https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin

14.https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi

15.அழகி - https://play.google.com/store/apps/details?id=com.azhagi.inputmethod.azhagi

16.விக்கிமீடியா, தமிழ்விசை. கூகுள், செல்லினம், NHM, கீமேன், டைப் தமிழ், தமிழ் கீபோர்டு, இ-கலப்பை, அழகி,

தமிழ் நிரலாக்க மொழி

1.  முத்தையா அண்ணாமலை குழுவினர் - https://sourceforge.net/projects/ezhillang/

2.  https://github.com/echeran/clj-thamil

தமிழ்ப் பகுப்பாய்வுக் கருவிகள்

1.  ஒபன் தமிழ், தமிழ்பேசு - http://tamilpesu.us/

தமிழ்ப் பிழைதிருத்தி

1.  மைக்ரோ சாப்ட் - https://www.microsoft.com/ta-IN/download/details.aspx?id=52668

2.  லிபிரா ஆபீஸ் இளஞ்செழியன் வேணுகோபால் - https://extensions.libreoffice.org/en/extensions/show/tamil-spellchecker

3.  இளஞ்செழியன் வேணுகோபால், லாங்குவேஜ் டூல்ஸ் - https://languagetool.org/

4.  நீச்சல்காரன் – நாவி, - http://dev.neechalkaran.com/p/naavi.html

5.  நீச்சல்காரன் – வாணி - http://vaani.neechalkaran.com/

6.  சர்ச்கோ - http://searchko.co.in:8080/searchko/ta/

7.  பிழைதிருத்தி - http://www.stars21.com/spelling/tamil_spell_checker.html

8.  மென்தமிழ் சொல்லாளர் - http://www.lingsoftsolutions.com/mentamizh-2017

9.  முனைவர் வாசுரெங்கநாதன் - http://spellcheck.tamilnlp.com/

10.தமிழ்ப்பேசு - http://tamilpesu.us/sandhi-check/

 

மொழிக்கருவிகளின் தொகுப்பு

1.  நளினம் - http://www.nalinam.com/downloads.html

2.  https://www.modular-infotech.com/html/shreelipi.html

3.  TDIL - இந்திய மொழிகளுக்கான தொலை மையம்

4.  http://www.ildc.in/Tamil/tdownload.html

5.  LasTech - http://www.lastech.com/products/indlan.htm

6.  தமிழ் இணையக் கல்விக்கழகம் - https://www.tamilvu.org/en/content/tamil-computing-tools

மொழிமாற்றி

1.  https://translate.google.com/

2.  மைக்ரோ சாப்ட்வேர் - https://www.bing.com/translator/

3.     மைக்ரோ சாப்ட்வேர் - www.microsofttranslator.com/bv.aspx

4.  https://translate.yandex.com/

5.  http://www.stars21.com/translator/

6.  பேச்சி - http://translate.subasa.lk/ta2si.php

தமிழ் யாப்பு மென்பொருள்

1.  அவலோகிதம், - http://www.avalokitam.com/

அகராதி

1.  முனைவர் துரைபாண்டியன் - https://tamilpulavar.org/

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thursday, October 22, 2020

ஒப்பிலக்கியம் - Comparative Literature

|0 comments

 

தொடர்புகொள்ள - முனைவர் துரை.மணிகண்டன், 9486265886

பொருளடக்கம்

அலகு - 1

         இலக்கியமும் ஒப்பிலக்கிய வரையறை - இலக்கியம் என்ற சொல்லின் வரையறை - மரபும் இலக்கியமும் - புதுத்திறனாய்வு - ஒப்பிலக்கியம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - ஒப்பிலக்கிய வரையறை -பிற அறிஞர்களின் வரையறை - எவை ஒப்பிலக்கியம் - ஒப்பிலக்கிய நூல்கள் - ஒப்பிலக்கியப் படைப்பும் படைப்பாளரும் படைப்பு என்பதன் வரலாறு - ஒப்பிலக்கியப் படைப்பின் பயன் - கவனத்தில் கொள்ள வேண்டியவை - ஒப்பிலக்கியப் படைப்பாளர்கள் - ஒப்பிலக்கியப் படைப்பாளர்களின் தகுதிகள் - பண்புகள்.

அலகு - 2

         இலக்கியத் திறனாய்வும் திறனாய்வாளரும் - தமிழ் திறனாய்வு நெறிகள் - திறனாய்வு வகைகள் - திறனாய்வாளன் - திறனாய்வாளனின் தகுதிகள்

         ஒப்பிலக்கியத் திறனாய்வும் ஒப்பிலக்கியத் திறனாய்வாளரும் - ஒப்பிலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டாளர்கள் - இன்றைய ஒப்பிலக்கியக் கோட்பாடுகள் - கூர்தலறக் கோட்பாடு - சார்பியல் கோட்பாடு - அடிக்கருத்துக் கோட்பாடு - மாற்றுவடிவக் கோட்பாடு - மீட்டுருவாக்கக் கோட்பாடு - தாக்கக் கோட்பாடு - கலையியல் கோட்பாடு - ஒப்பிலக்கியத் திறனாய்வாளர்களின் பண்புகள்

அலகு - 3

         ஒப்பிலக்கியப் படைப்பில் கலைகளின் பங்கு - இலக்கிய கலையின் பண்பு - பல்வகைக் கலைகளின் மாண்பு - கலைகளின் பங்கு - ஒப்பிலக்கியப் படைப்பில் மொழிபெயர்ப்புக் கலை, பணிகள் - நமது இன்றியமையாக் கடப்பாடுகள் - மொழி பெயர்ப்பாளர்களுக்குரிய கடப்பாடுகள் - சிறப்பாக கருதவேண்டிய கடப்பாடுகள் 

அலகு - 4

         ஒப்பிலக்கியக் கட்டுரைகள் - கட்டுரைகளின் அமைப்பு - கட்டுரையின்  சிறப்பம்சங்கள் - கட்டுரையும் மொழிபெயர்ப்பும் - ஐக்கூகவிதைகள் - தமிழ் - கிரேக்க மறவர் பண்பு - புறநானூற்று தமிழ் மறவர் - கிரேக்க மறவர் - கையறுநிலை - உள்ளுணர்வும் கையறு நிலையும்

அலகு - 5

         தமிழ் ஆங்கிலக் கவிதைகளில் பக்திப்பார்வை - வினா விடை பாடல்கள் - ஜான் மில்டன் - திருச்சாழல் - சோனட் பாவடிவு - பாடல் வடிவம் - இரு அந்தக் கவிஞர்கள்.

         திருக்குறள் சுக்கிரநீதிக் கருத்துக்கள் ஒப்பீடு - திருக்குறளின் பழமையும் சிறப்பும் - சுக்கிர நீதிச்சாரம் பெற்ற தனித்தன்மைகள் - ஒற்றுமைகள் - வேறுபாடுகள் 


                                                         அமேசானில் நூலைப்பெறலாம்.

https://www.amazon.com.au/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-Comparative-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ebook/dp/B08J3Y6R47

                    நூலைப்பற்றி பேராசிரியர் முனைவர் ம. திருமலை அவர்களின் கருத்து

முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய “ஒப்பிலக்கியம்” என்ற நூலை படித்தேன். இந்நூல் ஐந்து இயல்களைக் கொண்டதாக மணிகண்டன் அமைத்திருக்கிறார். ஒப்பிலக்கியம் துறை இலக்கிய ஆய்வில் தனித்து விரிவாக  வளர்ந்த போது பல்வேறு சமூகத் தேவைகள் இருந்தன. பல்வேறு கலை, இலக்கியப் பிரிவுகளின் மீது அறிவியல் சிந்தனைகளின் தாக்கம் மிகுதியாக ஏற்பட்ட சூழல் நிலவியது என்று கூறலாம். உலக நாடுகளில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களின் அடையாளத்தைத் தேட அல்லது  நிலைநிறுத்த முற்பட்டபோது ஒப்பிட்டாய்வு முறை வேறூன்றியது என்று ஒருவாறு கூறலாம். ஒரு தேசிய இனம் உலகின் மற்ற இனங்களுக்கு தன்னைப் பலப்படுத்தும்  முயற்சியின் விளைவாக ஒப்பிட்டு முறை தோன்றியது. ஆதி காவியமான ஹோமரின் கவிதைகளை யுக்கோஸ்லொவியா நாட்டுப்புறப் பாடல்களுடன் ஒப்பிட்ட மில்பன் பரியின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? உலகின் தொன்மைகளுக்கே அடிப்படையாக அமைந்தது நாட்டுப்புறப் பாடல்கள்தான் என்பதை நிறுவுவதுதான் நோக்கம். நாட்டுப்புறப்பாடல்கள் / நாட்டுப்புறவியல் என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளமாகுமே என்பதை எவரும் மறுக்கமாட்டார்! எனவே தொன்மைமிக்கதும் பெருங்கதையாடலுமான ஆதிகாவியங்களின் மீது நாட்டுப்புறப் பாடல்களின் சாயல்கள் இருக்கின்றன என்று நிறுவும் முயற்சியின் இறுதி நோக்கங்கள்  தேசிய இன அடையாளத்தைத் தேடுவது,  அதனை முன்னிருத்துவது என்பதைத் தவிர வேறென்ன?

 இந்தியாவில் குறிப்பாக தமிழக்கதில் சுதந்திரப் போராட்டம்  முனைப்பாக நடந்துகொண்டிருந்த காலத்தில் ஆந்திர மாநிலம் (இன்றைய) பெல்லாரி சிறையில்  அடைக்கப்பட்டிருந்த வ.வே.சு Kambaramayana- A Study- என்ற ஆங்கில நூலை எழுதினார்,  அடிமைப்பட்டுக் கிடந்த பாரத நாட்டின் அரிய கலை பொக்கிஷங்கள் மிகவும் உயர்ந்தவை; ஒப்பிலக்கியத்திலும் உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமையை உடையவை என்ற செய்தியை ஆங்கில அறிவு சீவிகளுக்கு  உணர்த்துவதற்காகவே வ.வே,சு அவர்கள் Kambaramayana- A Study என்ற நூலை எழுதினார்.  அதுவும் ஆங்கிலத்தில் எழுதினார். உண்மையில் அந்த அரிய ஆய்வுநூல்  தமிழர்களுக்காக எழுதப்பட்டது என்று கூறுவதைவிட ஆங்கிலையர்களுக்காக எழுதப்பட்டது என்று கூறவேண்டும். இந்திய விடுதலைப்போரில் அறிவு சார்ந்த ஒரு போராட்ட வாழ்வு என்றுதான் வ.வே.சு அவர்களின் நூலைக் குறிப்பிட வேண்டும்.

 சுதேசிய மறுமலர்ச்சி உணர்வு /  தன் மேம்பாட்டுணர்வு அரசியல் தளங்களில் மாபெரும் வெற்றிகளைச் சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்கள் அடைய உதவி இருக்கின்றன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற செவ்வியல் இலக்கியங்கள் சுவடிகளிலிருந்து அச்சுவடிவத்தினை அடைந்த பின் அவை மேலும் இலக்கியங்களாகப் பார்க்கப்படவில்லை; தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்று ஆவணங்களாகவும் அடையாளங்களாகவும் தமிழ் அறிவு சீவிகளால் பார்க்கப்பட்டன. 1894 இல் அச்சு வடிவம் பெற்ற இவற்றை மேனாட்டு தமிழறிஞர்கள் பலரும் படித்து மனத்தைப் பறிகொடுத்தனர். எனவே ஒரு இனத்தின் அடையாளத்தை நிறுவுவதில் , மீட்டெடுப்பதில் இலக்கியங்களுக்கு  பெரும்பங்கு உள்ளது. பண்பாட்டுத் தளங்களில் சிக்கல்கள், தவிப்புகள் தோன்றும் போதெல்லாம் தமிழ்சார்ந்த  இலக்கியங்கள் மேலெழும்பி பிரம்மாண்டத் தோற்றம் கொள்கின்றன. இச்சூழல்களில் ஒப்பீடு, ஒப்பியல் ஆய்வுகள் தவிர்க்க இயலாத கருவியாகப் பயன்படுகின்றன.

சமுதாயக் கட்டமைப்பு, சமுதாய மாற்றம் போன்ற தளங்களிலும் பொருளியல் இயக்கவியல் சிந்தனைகளுக்கு நிகராக இலக்கிய ஒப்பாய்வு பேரிடம் பெறுகின்றது. தமிழ் மக்களைத் தன் மேம்பாட்டு இயக்கநிலைக்குக் கொண்டுசெல்ல அரசியல் இயக்கங்கள் செவ்வியல் இலக்கியங்களையே பயன்படுத்தின மறுதலையாம் தன்மேம்பாட்டு இயக்கநிலையில் இருந்த மக்களை யதார்த்த நிலைக்குத் திரும்ப கொண்டுவந்து உண்மையை உணர்த்தவும் அதேசெவ்வியல் இலக்கியங்கள் பயன்பட்டிருந்ததை இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பேராசிரியர் க.கைலாசபதியின் “Tamil Heroic Poetry” என்ற ஆங்கில நூல் ஒப்பிட்டு ஆய்வின் மூலம் உண்மையைத் தெரிவிக்கும் முயற்சிக்கு நல்ல சான்றாகும்! இவ்வாறு ஒப்பிலக்கிய ஆய்வின் பயன்கள் பற்பல.

ஒப்பிலக்கியம் ஒரு பாடப்பிரிவாகக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படத் தொடங்கியபோது சில கருவி நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. ஜே.டி,ஷா, நியூட்டன் ஸ்டாக்நெட், எஸ்.எஸ்.பிராவர், உல்ரிச் வைசெடைன் ஹார்ட் பிரென்ஸ், சி.எம்.பவ்ரா போன்றவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்த நூல்களின் சாராம்சத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில் தமிழில் ஒப்பிலக்கியம் பற்றிய பாடநூல்கள் அல்லது கருவிநூல்கள் சில வெளிவந்தன. ரெனிவெல்லார்க்-austin wurann ஆங்கிலத்தில் எழுதப்பட்ட”இலக்கியக் கொள்கை” என்ற நூலும் தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் கற்றல் நிலை இந்த ஒரு சில நூல்களின் அளவிலேயே நின்று போனது ஒரு துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. இவ்வாறு கூறும்போது நான் மிகுந்த மன வேதனையுடன்தான் கூறுகின்றேன்.!

         தமிழில் கிடைத்த கருவி நூல்களை அடிப்படையும் வைத்து கொண்டு உயர்நிலை பயன்பாட்டு நூல்கள் எழுதப்படவேண்டும்.  உயர்நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

         பேராசிரியர் க.கைலாசபதியின் “ஒப்பியல் இலக்கியம்” என்ற நூல் பெரிதும் சுதேசியத் தன்மையுடனும் பயன்பாட்டு நிலையிலும்  எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

         முனைவர் துரை.மணிகண்டன் எழுதியுள்ள ஒப்பிலக்கியம்  என்ற இந்நூல் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதற்பகுதி இலக்கியம்-ஒப்பிலக்கியம் வரையறை பற்றிப் பேசுகிறது. பல்வேறு அறிஞர்களின் கருத்தும் இப்பகுதியில் தொகுத்தும் கூறப்பட்டுள்ளன. ஒப்பிலக்கியப் படைப்பும் படைப்பாளரும் என்ற பகுதியில்  இதுவரை தமிழில் ஒப்பிலக்கியம் பற்றி பல்வேறு தமிழறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களினின்று கருத்துக்கள் திரட்டிக் கூறப்பட்டுள்ளன.  “ஒப்பிலக்கியப் படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள்” என்ற பகுதியே பொறுத்தப்பாடு குறைவாகக் காணப்படுகிறது. இலக்கியங்களை படைப்பாளிகள் உருவாக்குபவர்கள்; பல்வேறு மொழி இலக்கியங்களின் உள்ளீட்டில் ஒப்புகைக் கூறுகள் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இந்த ஒப்புமைக் கூறுகளை எடுத்தியம்புவதே ஒப்பிலக்கிய ஆய்வாளரின் பணி! இலக்கியங்களைப் படைப்பது புலவர்களின் பணி. அவற்றின் ஒப்புமைகளைக் கண்டறிவது ஒப்பிலக்கிய ஆய்வாளரின் பணி! புலவர்களே ஒப்பிலக்கியத்தைப் படைப்பது எங்ஙனம்? எனவே இது குறித்த தெளிவினை நூலாசிரியர் மேலும்  பெற வேண்டும் என்று தோன்றுகிறது.

         இலக்கியத் திறனாய்வும் திறனாய்வாளரும் என்ற பகுதியில் திறனாய்வுப் பற்றியச் செய்திகளைத் தொகுத்து விளக்குகிறது.  திறனாய்வாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றியும் இப்பகுதியில் கருத்துக்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டுத் திறனாய்வு பற்றியச் செய்திகள் ஒரு பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒப்பீட்டுத் திறனாய்வு(Comparative Criticism) ஓப்பிலக்கிய ஆய்வு ( Comparative research) என்ற இருண்டுமே நோக்கங்கள், வழிமுறைகள் வேறுபட்டவை என்பதை நூலாசிரியர் மேலும் சிறிது ஆழ்ந்து சான்றுடன் விளக்கி இருந்திருந்தால் இந்நூல் மிகவும் பயனுடையதாக  இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. இப்பகுதியிலும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

          “ஒப்பிலக்கியப் படைப்பில் கலைகளின் பங்கு”  என்ற இயலும் இவ்வாறே கருத்துக்களின் தொகுப்பாகவே அமைந்திருக்கிறது.

          “மொழிபெயர்ப்பு” பற்றிய பகுதியிலும்  பல்வேறு செய்திகளை நூலாசிரியர் துரை.மணிகண்டன் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழியின் சிறப்பு அதில் பிறநாட்டு இலக்கியங்கள் எந்த அளவிற்கு மொழிபெயர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவோ அந்த அளவிற்கே அமைகின்றது.

         ஒப்பிலக்கியக் கட்டுரைகள்” பகுதியில் ஒருசில கட்டுரைகளை உள்ளவாறே மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.

         தமிழ் - கிரேக்க மறவர் மாண்பு” என்ற பகுதியில் புறநானூற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் வீரவுணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர் துரை.

         தமிழ் ஆங்கில பக்திப் பாடல்கள் பற்றிய கட்டுரையில் ஜான் மில்ட்டன்னின் On His Blindness  என்ற கவிதை வரிகளை மாணிக்கவாசகரின் திருச்சாழல் பகுதியுடன் ஒப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இது போன்ற கட்டுரைகள் மேலும் எழுதப்பட வேண்டும்.

         திருக்குறள் , சுக்கிரநீதி ஆகிய இரண்டு நூல்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ள பகுதி குறிப்பிடத்தக்கது. இப்பகுதியை மேலும் விரிவுப்படுத்தித் தனி நூலாக அமைக்கலாம். இனிமேல் ஒப்பிலக்கிய ஆய்வுகள் செல்ல வேண்டிய  நெறியும் இதுவே!

         இந்நூல் இன்றைய இளையத் தலைமுறைக்கு ஒப்பிலக்கியம் பற்றிய விரிவான தகவல்களை அடிப்படையிலிருந்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் மாணவர்களுக்கும் ஒப்பிலக்கியம் பற்றி எதுவுமே தெரியாத பாமர மக்களுக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது உண்மை.

         முனைவர் துரை. மணிகண்டன் மேலும் சிறந்த ஒப்பாய்வு நூல்கள் பலவற்றை எழுத என் வாழ்த்துக்கள்.



Monday, October 19, 2020

Tamil e-content - சுரதா. காம் இணைய பக்கம்

|0 comments

 


தமிழ் இணையம் சார்ந்த முக்கியமான செய்திகளை ஒரே இடத்தில் காண்பதற்கு (Tamil e-content) இந்த சுரதா. காம் இணைய பக்கம் பயன்படும். இதில் தமிழ் எழுத்துரு மாற்றி கான இணையதள முகவரித் தொகுப்புகள், தமிழில் முக்கியமான தமிழ் இணைய இதழ்களுக்கான தொகுப்புகள், உலகளாவிய அளவில் இணைய வானொலிகளுக்கானத் இணையத்தொடுப்புகள், கணிப்பொறி தொடர்பான தொழில் நுட்பம் சார்ந்த இணையதளங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்து இந்தச் சுரதா.காம் இணையப்பக்கத்தில்  வழங்கியிருக்கின்றார்கள். ஆய்வாளர்கள் பொதுமக்கள் இந்த சுரதா இணைய வழியில் சென்று நீங்கள் பல்வேறு விடயங்களை மிக எளிதாக பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்காகத்தான் இந்த காணொளி உங்களுக்காக வழங்குகின்றோம்…



அறிவும் புரிவும் - இயல் மொழி செலுத்தங்களின் ஊடாக - Intelligence & Unterstanding In Context Of NLP

|0 comments

 

 


தமிழ் இணையக் கழகம் சார்பாக 18-10-2020 அன்று ஞாயிறு மாலை 6.00 மணிக்கு இணையவழியில் நடைபெற்ற இணையத்தமிழ்த் பொழிவில் புதுச்சேரியைச் சேர்ந்த கற்குங்கருவியியல் பொறிஞர் திரு.பா.மு.செல்வகுமார் அவர்கள் அறிவும் – புரிவும் இயல் மொழி செலுத்தங்களின் ஊடாக  - Intelligence & Unterstanding In Context Of NLP என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் இயந்திர கற்றலின் முக்கியத்துவத்தையும், அது கடந்தவந்த வரலாற்றையும் எடுத்து விளக்கினார். இந்த நிகழ்வில் இலங்கையிலிருந்து யாழ்பாவாணன், தமிழகத்திலிருந்து முனைவர் இரா. அகிலன், திரு.சுந்தர் லட்சுமணன், துரை.மணிகண்டன், போன்ற பங்கேற்பாளர்கள் கேட்ட வினாவிற்குப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய காணொலி.



Friday, October 16, 2020

இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவின் பங்களிப்பு

|0 comments


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கிய இணையத்தில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” என்ற தலைப்பில் அக்டோபர் 09, 2020 -ல் நடைபெற்ற இணையவழி உரையில் தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துவரும் தகவல் உழவன் அவர்கள் ’இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை வழங்கிய காணொலி.



Wednesday, October 14, 2020

“இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் தொடக்கவிழா நிகழ்வு

|0 comments


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணைய கழகமும் இணைந்து 08,09-10-2020 இரண்டு நாள் நடத்திய  “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்”   பன்னாட்டு  இணையவழிப் பயிலரங்கம்  தொடக்கவிழா நிகழ்வு  


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணைய கழகமும் இணைந்து 08,09-10-2020 இரண்டு நாள் நடத்திய  “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்”   பன்னாட்டு  இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்தப் பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை, சமஸ்கிருத துறை, தமிழ்த் துறை என மூன்று துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.  நிகழ்வின் தொடக்கமாக 8 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புலத் தலைவர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வின் மையக்கருத்துரையாக  கல்லூரியின் செயலர் அம்மாஞ்சி V. பாலாஜி அவர்கள் வழங்கினார். வாத்துரையை கல்லூரியின் முதல்வர் முனைவர் ராதிகா அவர்கள் வழங்கினார்.


Tuesday, October 13, 2020

கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள் - தமிழ்க் கழகத்தின் இயக்குனர் திரு. சிவா பிள்ளை

|0 comments

 


ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கிய இணையத்தில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” என்ற தலைப்பில் அக்டோபர் 08, 2020 -ல் நடைபெற்ற இணையவழி உரையில்  லண்டன், தமிழ்க் கழகத்தின் இயக்குனர் திரு. சிவா பிள்ளை அவர்கள் கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள் என்ற தலைப்பில் வழங்கிய உரை.

how to  through online teaching, how to online teaching, how to online teaching in tamil, how to earn online in different ways,  online teaching, online teaching in tamil, கற்பித்தலில் புதுமை, கற்பித்தலில் புதிய உத்திகள், இணையவழிக் கற்றல், திரைப்படப்பாடல் வழி கற்றல், #சிவாப்பிள்ளை, #sivapillai, srimad andavan arts and science college, tamil internet academy, srimad andavan arts college, srimad andavan science college, #மணிவானதி, தமிழ் இணையக்கழகம், #துரை மணிகண்டன், #மணிகண்டன்,


Monday, October 12, 2020

“இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” - பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம்

|0 comments


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய  “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்”   எனும் பன்னாட்டு  இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே. 

 நிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி  வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில்  கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும்   முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை  நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.


முதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன்  "தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார். 


அதனைத் தொடர்ந்து அன்று மதிய நிகழ்வில் லண்டன் தமிழ்க் கழகத்தின் இயக்குனர் திரு சிவா பிள்ளை அவர்கள்  "கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் மொழியை மிக இலகுவாக திரைப்படப் பாடல்களைக் கொண்டு எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும் என்றும், லண்டனில் தமிழ்க் குழந்தைகளுக்கு எவ்வாறு தமிழ் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் செயல்முறையின் மூலம் தெளிவாக விளக்கினார். 

 9 - 10 -2020 அன்று காலை 10 மணிக்குத் தமிழ் விக்கிபீடியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வரும் அன்பர் தகவலுழவன் " இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இதில் தமிழ் விக்கிபீடியாவின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் விக்கிபீடியாவில் எவ்வாறு ஒரு சொல்லை உள்ளீடு செய்வது? தமிழ் விக்கிபீடியாவில் எத்தனைப் பகுப்புகளாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாக விளக்கினார். 

அன்று மதியம் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் தலைமை பொறுப்பில் இருக்கும் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்  "இணையத்தில் தமிழ் மொழிக் கற்றலும் கற்பித்தலும்"  என்ற தலைப்பில் உரையை வழங்கினார். இவ்வுலகில் இந்தக் கொரனா காலகட்டத்தில் நாம் இணைய வழியில் கற்றல் கற்பித்தலை எவ்வாறு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதையும், சிங்கப்பூரில் இந்த இணையவழிக் கற்றல்  கற்பித்தல் எந்த அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கமளித்தார். 


இணைய வழியில் நடைபெற்ற இப்பயிலரங்கில் இந்திய அளவில் 27 மாநிலங்களிலும், பன்னாட்டு அளவில் ஓமன், இலண்டன், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, கனடா, மலேசியா ஆகிய 06 நாடுகளிலுருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். 

உள் மற்றும் வெளிநாட்டுப் பள்ளிகள் 04, 83 கலை அறிவியல் கல்லூரிகள், 01 பொறியியல் கல்லூரியும், 04 பலகலைக்கழகங்களும், மத்தியசெம்மொழி ஆய்வு நிறுவனமும், 02 உள் வெளி வேளாண் பல்கலைக்கழகமும், ஸ்ரீலங்கா விபுலானந்தா இசைக்கல்லூரி பேராளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

“இணைய வழியில் மொழிகளை மேம்பாடு அடையச் செய்தல்” எனும் தலைப்பில் இரண்டு நாள் (08.10.2020 & 09.10.2020) நடைப்பெற்ற பன்னாட்டுப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்களின் பின்னூட்டக் கருத்துரைகள் ஒருசில 

சிவகாசி பி.எஸ்.ஆர் கல்லூரிப் பேராசிரியை மு.முத்துமாரி அவர்கள் இப்பயிலரங்கு மொழிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கின்றது என்று கூறியுள்ளார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எஸ்.பாரதி அவர்கள் மொழி நிபுணர்கலை வைத்து நடைபெற்ற இப்பயிலரங்கம் சிறப்புக்குரியது என்று எடுத்துரைத்துள்ளார்.

செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பள்ளி ஆசிரியர் திரு.ஜி.பரமசிவம் அவர்கள் பயிலரங்கில் அருமையான பாடல் படங்களுடன் கற்பித்தலையும் திறனையும் சுட்டிக்காட்டி விளக்கிய விதம் மிக அற்புதம் என கருத்துரை பதிவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் எங்கள் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இப்பயிலரங்கம் அமைந்துள்ளது. அதனோடு மட்டுமின்றி கற்றல் கற்பித்தல் மிகவும் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு.ஆர்.வேல்முருகன் அவர்கள் பன்மொழியில் ஆய்வு, ஒப்பிலக்கியம் மேற்கொள்ள இப்பயிலரங்கம் வழி வகை செய்கின்றது என கூறியுள்ளார்.

இந்நிகழ்வு நடப்பதற்கு அனுமதி நல்கிய ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கல்விக் குழுமத்தின் தலைவர் ஐயா ஸ்ரீ. R.ராஜகோபாலன் அவர்களுக்கும், கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் CA அம்மங்கி V.பாலாஜி அவர்களுக்கும், கல்லூரியின் ஆலோசகர் முனைவர் N.ராமானுஜம் அவர்களுக்கும், இயக்குநர் முனைவர்  S.ஸ்ரீவித்யா அவர்களுக்கும், கல்லூரியின் முதல்வர் முனைவர் J.ராதிகா அவர்களுக்கும், துணைமுதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்களுக்கும், கலைப்புல முதன்மையர் முனைவர் R.P.இராஜேஸ்வரி அவர்களுக்கும், பிற துறை புலமுதன்மையர்களுக்கும், ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா அவர்களுக்கும், சமஸ்க்ருதத்துறைத் தலைவர் முனைவர் V.ராமன் அவர்களுக்கும், தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் க.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,  ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை, தமிழாய்வுத்துறைப் பேராசிரியப் பெருமக்களுக்கும், பிற துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



 இந்த இரண்டு நாள் நிகழ்வையும் மணிவானதி YouTube வலை தளத்தில் வழியாக வெளியிட்டு உதவிய  கனடாவிலிருந்து “The Tamil Journal “ – நிறுவனர் திரு.சுகு பாலசுப்ரமணியன்,   ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தானையக்கத்துறைப் (Automation unit) அன்பர்களும் பங்களிப்பு செய்தார்கள்.

மேலும், இந்த  இணையப் பயிலரங்க நிகழ்வைத் திறம்பட நடத்திய நிகழ்வின் ஒருங்கினைப்பாளர் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப. சண்முகம் அவர்கள் இறுதியாக  நன்றியுரை வழங்கினார்.

உரை வழங்கிய காணொலி தொடுப்பு கீழே

1.     https://youtu.be/VY3oDOSEmZo - இணையத்தில் தமிழ் மொழி கற்றலும் கற்பித்தலும்

2.     https://youtu.be/gzmMBXGq90Q -  தகவலுழவன்

3.     https://youtu.be/Ms7dKJi1gJ8 -  information technology in tamil

4.     https://youtu.be/P82mveHv3RY - சிவாப்பிள்ளை

5.     https://youtu.be/BW64yvjd2V0 -  தொடக்கவிழா

நாளிதழ் செய்திகள்

தினமணி - 


தினமலர்








information technology in tamil - Dr Durai. Manikandan

|0 comments

 

ஸ்ரீமத்


ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கிய இணையத்தில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” என்ற தலைப்பில் அக்டோபர் 08, 2020 -ல் நடைபெற்ற இணையவழி உரையில். இணையத்தமிழ் ஆய்வாளர், தமிழ் இணையக் கழகத்தில் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள்  information technology in tamil என்ற தலைப்பில் வழங்கிய உரை.


Nhm writer, tmail internet, tamil Wikipedia, tamilbloger, tamil groups, tamil facebook, tamilfount, internet, www,#duraimanikandan, #manikandan, infitt, உத்தமம், srimad andavan arts and science college, tamil internet academy, srimad andavan arts college, srimad andavan science college, மணிவானதி, தமிழ் இணையக்கழகம், துரை மணிகண்டன், மணிகண்டன்,


Sunday, October 11, 2020

முனைவர் சீதாலட்சுமி - இணையத்தில் தமிழ் மொழி கற்றலும் கற்பித்தலும்

|0 comments

 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கிய இணையத்தில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” என்ற தலைப்பில் அக்டோபர் 09, 2020 -ல் நடைபெற்ற இணையவழி உரையில். சிங்கப்பூர் நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சீதாலட்சுமி அவர்கள் வழங்கிய உரை.



Teaching and Learning of Tamil Language and Internet, Teaching and Learning,  Tamil Language Learning, Tamil Language in TeachingLearning, education communication, education cultures, education communities, virtual reality in the classroom, virtual reality in stem education, ict in education, #சீதாலெட்சுமி, #pro seethe lakshmi, tamil internet academy, மணிவானதி, தமிழ் இணையக் கழகம், srimad andavan arts and science college, இணையவகுப்பறை, இணைநவழிக்கற்றல், இணையவழி கற்பித்தல்,