/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, July 16, 2015

தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு

|0 comments
தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
பி. சத்திய மூர்த்தி.,
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் – 624 302

முன்னுரை:
     இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறதுஅவ்வகையில்தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
பொன்னு:
     தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.
பரமேஸ்வரன்:
       மில் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்த போது நடந்த பொது துப்பாக்கி சூட்டில் இறந்து பட்டார். இவரின் இழப்பு ஊர் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவன் இறந்தவுடன் அவன் சொர்க்கத்துக்கு செல்கிறானா, இல்லை நரகத்துக்கு செல்கிறானா, என்பது இப்பூமியிலேயே நிர்ணயிக்கப்படுகிறதுஇவன் சொர்க்கத்திற்குதான் செல்கிறான் என்பது இவ்வூர் மக்களின் பேச்சு தீர்மானித்தது. இவர் இறந்த பின்பும் இப்பூவுலகில் வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தெருவிற்கு  “தியாகி இல்லம்என்று பெயர் வைத்தனர் பரமேஸ்வரன் என்றப் பெயரை மறந்து தியாகி என்றே அழைத்தனர். இவரின் வீட்டைக்கடந்து செல்கிறபோது ஊர்மக்கள் அடைகிற ஆனந்தம் அளப்பறியது.
 காசி:
     தனது சம்சாரம் இறந்து போனப் பின்பு காவிஉடையை அணிந்து கொண்டார். திருமணம் செய்துவிட்டு விக்ரமாதித்யன் போல ஊரில் ஆறுமாதமும், புண்ணியஸ்தலமான காசியில் ஆறுமாதமும் என்று தனது வாழ்வைக் கழித்து வந்தார். குட்சியஜல்இருந்து திரும்பும் போழுது காசி மாலை தீர்த்தம் சாமி உருவங்கள் என்று வாங்கிவந்து அதைத் தன்னுடைய உறவினர்கள்ஜாதிக்காரர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு மறுபடியும் காசிக்குச் செல்வார். இப்படித்தான் இவரின் வாழ்வு ஏகாந்தமாய் ஓடிக்கொண்டிருந்தது.
ரங்கச்சாமி:
     ரங்கசாமி தறிநெய்யும் போது சீரான தளத்திற்கேற்ப கால்களை மாற்றிக் கொண்டுசின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடிஎன்று முணுமுணுத்துக் கொள்வார். அதை ராகம் போட்டுப் பாடுவதை விட இப்படி முணுமுணுப்பதுதான் அவருக்குப் பிடிக்கும் இவருடைய உடம்பானது ஒல்லியாக இருக்கும் என்று பலர் கூறுவர். மிகவும் சிரம்மப்பட்டு தன்னுடைய மகனைப்  படிக்க வைத்தார். இவருக்கு வடிகஞ்சியானது மிகவும் பிடிக்கும்.
 நாகமணி:
       அழுக்குப் புடவையுடன் இருக்கும் நாகமணி கல்யாணம் ஆகிஇருப்பது  வருடமாகியும் ரங்கசாமியை (கணவன்) விட்டுப்பிரியாமல் கணவனுக்கும், பிள்ளைக்கும்இல்லறம் அல்லது நல்லறம் அன்றுஎன்ற ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தாள். இல்லறத்தை மட்டும் பேணிக்காத்த அவள்
                  “சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
                   தாழ்ச்சி உயர்ச்சிச் சொல்லல் பாவம்”;
என்ற பாரதியின் கூற்றை மறந்துபலசாதி பலவட்டற ஜாதிஎன்று கீழ்ச்சாதி மக்களை இழிவாகப் பேசும் தன்மை கொண்டவளாக விளங்குகின்றாள்.

அருணாச்சலம்:
    பதறிய காரியம் சதறிப்போகும் என்றப் பழமொழிக்கேற்ப அருணச்சலம் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் அவசரபுத்தி உள்ளவன். இவன் நெசவாளர்களைப் பற்றி கூடினா கோ~ம் போடறகோஹ்டி என்று சொல்லுவான்அவன் போராட்டத்திற்குச் செல்லும்போது தறிநாடாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுவான் எதிரில் படும் முதலாளிகளைக் குத்தலாம் அப்படியாவது விடிவு காலம் பிறக்குமா என்று நினைத்தான் எங்களுடைய போராட்டத்திற்காக நான் தீக்குளிப்பேன் என்று காவல் துறையினர் இவனை எச்சரித்தனர். போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இவனுடைய உயிர் பிரிந்ததுமக்கள் இவனைப் பற்றி பல்வேறாக பேசினர். துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை யென்றால் தானே தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கூறியதாக மக்கள் கூறினர்.
தர்மன்:
       தர்மன் வீடானது நெசவாளர்களுக்குப் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. இவருடைய வீட்டில் எப்போதும் சீட்டாட்டம் நடந்துகொண்டே இருக்கும் தர்மன் முன்பெல்லாம் மாசம் மூணு பாவு நெய்சாச என்று கேட்பான். அதுஎன்ன மூணுபாவு முந்தியெல்லாம் மாசம் மூணு மழை பெஞ்சுதான்னு ராசா கேட்கிற கதைதா சரி அதென்ன மாசம் மூணு மழைநீதிராசாவுக்கு ஒரு மழை, பெண்ணுக்கொரு மழை, நல்லவங்களுக்கு ஒரு மழைன்னு கணக்குமாசமூணு மழை என்றால் நீதிராசாவுக்கு ஒரு மழையும் 
                நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
                புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
                நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
                எல்லோர்க்கும் பெய்யும் மழை

என ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க நல்லவர் பொருட்டு ஒருமழையும் பொய்யும் என தர்மன் கூறுகிறார். இப்பொழுது நீதிராசாவும் இல்லை நல்லவரும் இல்லை மழையும் பெய்வதில்லை என்றார்.
முடிவுரை:
இந்நாவலில் குறிப்பிடும் ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன. பொன்னு என்பவன் பகுத்தறிவு நிறைந்தவனாகக் காணப்படுகிறான். பரமேஸ்வரன் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்து தியாகி என்னும் பட்டத்தோடு இன்றும் திகழ்கிறான். ரங்கசாமிக்குப் பல்வேறு குடும்பச் சிக்கல் இருந்தாலும் தன்னுடைய மகனைப் படிக்க வைத்துச் சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கி பார்ப்பதே இவருடைய கனவாகும். நாகமணி சிறந்த குடுபத் தலைவியாக இருந்த போதிலும் மற்ற சாதியைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கம் அவளிடம் இருக்கிறது.

அருணாச்சலம் அவசர புத்தியுடையவன். ஏந்தவொரு செயலைச் செய்தாலும் அவனிடம் வேகம் மட்டுமே இருக்கும் விவேகம் இருக்காது. துர்மன் வீடானது பொழுதுபோக்கு அம்சமாக நெசவாளர்களுக்கு இருக்கிறது பல்வேறு தத்துவங்களை பேசக்கூடியவன்.    

Wednesday, July 1, 2015

தமிழ் இணையம் அறிமுகம் மற்றும் தமிழ் மென்பொருள்களின் இன்றையத் தேவைகள்

|2 comments
தமிழ் இணையம் அறிமுகம் மற்றும் தமிழ் மென்பொருள்களின் இன்றையத் தேவைகள் என்ற இரண்டு தலைப்புகளில் திருச்செங்கோடு K.S.R. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மற்றும் கணிப்பொறித்துறை மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியே பயிற்சி வழங்கினேன்.
பெண்கள் கல்லூரியில் உரை. முனவரிசையில் பேரா.குணசீலன்

முன்னதாக இருபாலர் படிக்கும் மொழிப்பாட மாணவ மாணவிகளுக்கு இணையம் என்றால் என்ன? அதன் தோற்றம் மற்றும் தமிழ்மொழியில் இணையத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் பல்வேறு தமிழ் இணையப்பக்கங்கள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
               ஆண்கள் கல்லூரியில் மொழித்துறை மாணவர்களிடம் உரை

அடுத்து உத்தமம் பணிகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக்கூறினேன். மாணவர்கள் எவ்வாறு கணிப்பொறியில் தமிழில் தட்டச்சுச் செய்வது எவ்வாறு என்றும் விளக்கிக் கூறினேன்.

அடுத்து மதியம் இரண்டு மணிக்குப் பெண்கள் கல்லூரியில் கணிப்பொறித் துறையைச் சார்ந்த மாணவிகள் 100 பேருக்குத் தமிழ் மென்பொருள் குறித்த விழிப்புனர்வை வழங்கினேன். இதுவரைக்கும் தமிழில் தோன்றிய மென்பொருள்கள் அதன் பயன்பாடுகள் மற்றும் நாம் உருவாக்கவேண்டிய தமிழ் மென்பொருள்கள் எவை?எவை அதை மாணவிகளாகிய நீங்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினேன்.

                   பேராசிரியர் கண்ணன் அவர்களுக்கு எமது நூலை வழங்கியது.


நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.குணசீலன் மற்றும் பேரா. கண்ணன் அவர்கள் உடன் இருந்தனர்.

விழா மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

Saturday, June 6, 2015

தமிழ் இணைய மாநாடு- சிங்கப்பூரில்

|0 comments
 முனைவர் துரை.மணிகண்டன்(Dr.durai.Manikanadan.)

14 வது உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் SIM பல்கலைக்கழகத்தில் மே 30,31,ஜூன் 1 -2015 மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில் சிங்கப்பூர் பிரதம அலுவலக இணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். தகவல் தொழில்நுட்பம் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்துக்களை வெளியிட  வேண்டும்,  மொழி வளர்ச்சிக்கு இத்தகைய தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது என்றார். அடுத்து  அமர்வுகளில் வந்திருந்த கட்டுரையாளர்கள் தங்களது கட்டுரைகளை வழங்கினர்.
இம்மாநாட்டில் 75 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் சிங்கப்பூர், மலேசியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பேராளர்கள் அனைவரும் இன்றைய தகவல்தொழில்நுட்பம் கொண்டு மாணவர்களுக்கு எவ்வாறு கற்றல், கற்பித்தலில் புது முயற்சியை மேற்கொள்வது என்ற பொருண்மையில் கட்டுரைகளை வழங்கினார்கள்  குறிப்பாக வலைப்பூ, முகநூல், தட்டைக்கணினி, அலைபேசி, செயலிகள், இன்னும் புது வகையான மென்பொருள்களைக் கொண்டு தமிழை இலகுவாக அங்குள்ள தமிழ் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திறனை விளக்கிக் காட்டினர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகள் பல்வேறு புதுமையான முறையில் கற்றல் கற்பித்தல் முறையை கையாண்டு விதம் பிற நாட்டாரை கவர்ந்தது எனலாம்.
இருந்தாலும் இவர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்ட செயல்முறையைத்  தொழில் நுட்ப உதவிகொண்டு பிற நாட்டுனருடன்  பகிர்ந்துகொள்ள கூடாது என்ற நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும் கூறினார்கள்.
இந்தியாவிலிருந்து சுமார் நாற்பது ஆய்வுக்கட்டுரைகள் படைக்கப்பட்டன.அவற்றில் பேங்களூரில் இருந்து  பேராசிரியர் A.G. ராமகிருஷ்ணன், சென்னையிலிருந்து திரு.திருவள்ளுவன் இலக்குவனார், பன்னிருகை வடிவேலன், அகிலன், முருக சுவாமிநாதன், ஆழி.செந்தில்நாதன்,   திருச்சியிலிருந்து முனைவர் துரை.மணிகண்டன், பேரா.கீதா, பேரா.ஷாம் தியோன்,  சிதம்பரத்திலிருந்து பேரா.காமாட்சி, மதுரையிலிருந்து பேரா. க.உமாராஜ், திண்டுக்கல்லிருந்து பேரா.சி.சிதம்பரம், கும்பகோணத்திலிருந்து பேரா.க.துரையரசன், பேரா.ரமேஷ்சாமியப்பா போன்றோர் ஆய்வுக்கட்டுரையை வழங்கினார்கள்.
இதில் துரை.மணிகண்டன் தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் தனது ஆய்வுக்கட்டுரையை வழங்கினார். இதில் வலைப்பூவின் அவசியத்தையும் வலைப்பூவின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக் குறித்தும் அதன் தாக்கம் தமிழில் எந்த அளவிற்கு உள்ளது என்றும் கூறினார். இணையத்தில் வலைப்பூவை உருவாக்குவது இலவசம். அவ்வாறு உருவாக்கி தனக்குத் தெரிந்த இலக்கண, இலக்கியக் கருத்துக்களையும் பதிவேற்றம் செய்ய இயலும் மேலும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளினால் தயார் செய்யப்பட்ட பாடத்திட்டங்களையும் வெளியிடலாம். அவ்வாறு வெளியிட்டால் உலக அளவில் இருக்கும் தமிழர்கள் பயன்பெறுவர்.

கற்றல் கற்பித்தல் முறையில் முன்னேற்றம் அடைந்துள்ள சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கும் ஆசிரியர்கள் இங்கு எங்களுக்குக் கட்டுபாடுகள் அதிகம் என்று கூறினார்கள். இருந்தாலும் அவரவர் ஒரு வலைப்பூவினைத் தொடங்கி அதில் அரசாங்கத்திற்குக் கொடுத்த பாடத்திட்டத்தைத் தவிர்த்து வேறு பாடங்களை உருவாக்கி வெளியிடுங்கள் என்று கூறினார். அவ்வாறு செய்தால் உலகம் முழுவது இருக்கும் தமிழர்களை அது சென்றைடையும் என்றார். மேலும் இணையத்தில் வலைப்பூவைத் தொடங்க எந்தக் கட்டுப்பாடுகளும், கட்டணமும் இல்லை என்பதையும் வலியுறுத்தினார். மேலும் சிங்கப்பூர் பள்ளித் தமிழ் மாணவர்களுக்கு வலைப்பூவை எவ்வாறு உருவாக்கி அதில் கருத்துகளை பதிவுசெய்வது என்ற செயல்முறைப் பயிற்சியும் வழங்கினார்.

 திரு.மயூரநாதன்
 Durai.Manikanadan


Durai.manikandan.

Monday, May 25, 2015

தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூர்

|2 comments
உத்தமம் நிறுவனத்தின் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில்   மே மாதம் 30,31 மற்றும்  ஜூன்  1 ஆம் நாட்களில் நடக்க இருக்கிறது இம் மாநாட்டில்  திருச்சியிலிருந்து முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் கீதா, முனைவர் தேவி,  பெரம்பலூரிலிருந்து முனைவர் நா. ஜானகிராமன், கும்பகோணத்திலிருந்து முனைவர் க.துரையரசன், முனைவர் ரமேஷ் திண்டுக்கல் முனைவர் சி.சிதம்பரம், மதுரையிலிருந்து முனைவர் பொ.சத்தியமூர்த்தி, முனைவர் க.உமராஜ், கிருஷ்ணகிரியிலிருந்து திரு.செல்வமுரளி ஆகியோர் கலந்துகொண்டு கட்டுரை வழங்க இருக்கின்றனர்.