/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 23, 2023

அறிவு மேம்படுத்தலில் தமிழ் மென்பொருட்கள்- குளித்தலை அரசுக் கல்லூரியில் சிறப்புரை

|0 comments

 


குளித்தலை (ஐயர்மலை) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக 17 -03- 2023 அன்று இணையதமிழ் குறித்து மாணவர்களுக்கு உரை வழங்கினேன்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அர.ரவிச்சந்திரன்  அவர்கள் தலைமை உரையாற்றினார்.  பேராசிரியர் வைரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  அறிமுக உரையாக முனைவர் பெ. முருகானந்தம் அவர்கள் வழங்கினார்கள்.




நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் துறை தலைவர் முனைவர் ஆ. ஜெகதீசன்  அவர்கள் இன்றைய தொழில்நுட்பத்தின் பயன்கள் குறித்துச் சுறுக்கமாக வழங்கினார். நிறைவாக இணைய தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவு மேம்படுத்தழில் தமிழ் மென்பொருள்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினேன்.  இனி வரும் காலங்களில் மாணவர்களுடைய படைப்புகளை இணையம் வாயிலாக வெளியிட்டு  மாணவர்களது ஆழ்ந்த சிந்தனைகளை வெளிக்கோண்டுவர வேண்டும் என்று பேசினேன்.





நிகழ்வில் 150 மேற்பட்ட மாணவிகள் மாணவர்கள் கலந்துகொண்டு இணையத்தமிழ் குறித்த செய்திகளைத் தெரிந்துகொண்டனர்.


Saturday, March 18, 2023

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்

|0 comments

 

அனைவருக்கும் இனிய வணக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்






கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோநீ யறியும் பூவே.


Center for Development of Tamil in Engineering and Technology Anna University Chennai.

|0 comments

 

Center for Development of Tamil in  Engineering and Technology Anna University Chennai. 600 025



 தமிழ் வளர்ச்சித் துறை இயக்குரகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து இரண்டு நாட்கள்(03,04 -03-2023)  தொழில்நுட்ப தமிழ்ப் பயிலரங்கினை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்   ஆடா லவ்லஸ் அரங்கத்தில் நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் அண்ணா பல்கலைகழகத்தில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட  தமிழ் பேராசிரியர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறியியல் மாணவர்களுக்கு எவ்வாறு  தொழில்நுட்பங்களைக் கொண்டு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பொருண்மையில் நிகழ்வு நடந்தது.



இணையத்தமிழ்ப் பயன்பாடுகள் குறித்து நான் காணொலி(ளி) வழி பயிற்சி அளித்தேன். இப்பயிற்சியில் இணையத்தமிழ் வரலாறு, தமிழ் எழுத்துரு வரலாறு, தமிழ் வலைப்பதிவின் முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்ற உட் பிரிவுகளில் விளக்கம் அளித்தேன்.

இந்நிகழ்வில் அண்ணாப் பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர்.



நிகழ்வைத்  பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் பா. உமாமகேஸ்வரி அவர்கள் ஒருங்கினைப்பு செய்தார். நிகழ்வில் கணினித்தமிழ் விருதாளரும் பேரா. நா.தெய்வசுந்தரம் அவர்களும் சிறப்புரை வழங்கினார். 

மேலும் பேரா.ஜானகி, மணிகண்டன் மற்றும்  பேராசிரியர்கள் உடனிருந்தனர்.


Monday, March 13, 2023

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

|0 comments

 

தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார நிகழ்வில் பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு அலுவலர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத்தேவை விளக்கிக் கூறினேன். பயிற்சியில் கலந்துகொண்ட அலுவலர்கள் ஒவ்வொருவரும் பயிற்சியின் மூலம் தெளிவுபெற்றனர்.

1. ஒருங்குறிப் பயன்பாடு

2. தமிழ் எழுத்துரு செயலி பதிவிறக்கம் செய்தல்

3. தமிழ்99 விசைப்பலகையின் முக்கியத்துவம்

5. பல்வேறு தமிழ் எழுத்துருக்களை யூனிகோடு எழுத்துருவிற்கு மாற்றுதல்

தொடர்பான கருத்துருவில் பயற்சி வழங்கினேன்.