இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்
மதுரை காமராசர்
பல்கலைக்கழகம் தமிழியற்புலமும் - Rashtriya
Uchchatar Shiksha Abiyan – RUSA நிதி நல்கையுடன் நடத்திய தமிழ் மொழி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு என்ற தலைப்பில்
4 -4 -2022-ல் 07-04-2022 நான்கு நாட்கள் சீரும் சிறப்புமாக பல்கலைக்கழகக் கணினிக் ஆய்வுக்கூடத்தில் ( RUSA – அலுவலகத்தில்) பயிற்சித் தொடங்கியது.
இந்த பயிற்சியில்
பயிற்சியாளர்களாக இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன். முனைவர் சோபியா. முனைவர் தனசுபா. முனைவர் க. உமாராஜ், முனைவர் சிதம்பரம், முனைவர் இரா. அகிலன் ஆகியோர்
கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.
பயிற்சியின் தொடக்கமாக பல்கலைக்கழக தமிழியற்புலத் தலைவர் பேராசிரியர் இரமாராஜ பாண்டியன் தொடக்க உரை வழங்கினார்.
புலத்தலைவர் பேரா. வை.இராமராஜபாண்டியன்,
தொடந்து மக்கள் விளையாட்டுத் துறையை சார்ந்த பேராசிரியர் முனைவர் பாரி பரமேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
முனைவர் பாரிபரமேஸ்வரன்
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பேரா. பா. சங்கரேஸ்வரி, இணையத்தமிழ் ஆய்வாளர் துரைமணிகண்டன், புலத்தலைவர் பேரா. இராமராஜபாண்டியன், பாரி பரமேஸ்வரன்
நிகழ்ச்சியில் மையக்கருத்துரையாக இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து பயிற்சி காலை சரியாக 11 மணிக்குத் தொடங்கியது முதலில் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழ் வரலாறு குறித்து செய்தியை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி உரை வழங்கினார்.
தொடரந்து மதிய
அமர்வில் “இந்திய
உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி” என்ற தலைப்பில்
மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில்
இந்தியாவில் பல்வேறு மொழிகளும், இனக்குழுக்களும்
வாழ்ந்து வருகின்ற சூழலில் இணையத்தின் வழியாக உயர்கல்வியை அனைத்து வகை
மாணவர்களுக்கும் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு
இந்திய அரசாங்கம் பல்வேறு வகையான இணையவழியில் இணையதளங்கள் மூலமாக கல்வியை வழங்கி
வருகின்றன. அப்படி வழங்கிவருகின்ற இணையவழிக் கலுவியில் ‘ஸ்வயம்’ கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்து
இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும்
பயன் பெறுகின்ற வகையில் இந்த ஸ்வயம் இணைய வழி கற்றலை ஊக்குவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து ‘NAD’ என்று
அழைக்கப்படுகின்ற நேஷனல் அகடமி டெபாசிட் என்ற
இணையதளத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை மாணவர்கள் படித்த சான்றிதழ்கள் அனைத்தையும்
இந்த இணையதளத்தில் சேமித்து வைத்துள்ளனர். குறிப்பாக இனிவரும் காலங்களில்
சான்றிதழ்களில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்த இணையதளம் இந்திய அரசாங்கத்தால்
உருவாக்கப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து ‘சோத் கங்கா’ என்ற என்ற இணைய வழியில் இந்தியாவில் இதுவரை முனைவர் பட்டம் பெற்றவர்கள்
பெயர்களையும் அவர்களது படைப்புகளையும் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வேடுகளை இந்த
இணையதளத்தில் வழங்கியிருக்கின்றார்கள். இது எதிர்கால
ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
‘மின் பாடசாலை‘ என்ற இணையதளத்தின் மூலமாக பல்வேறு வகையான பள்ளிக்கூட மாணவர்களுக்குத்
தேவையான நூல்களை இங்கே நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்துச்
செல்லக்கூடியதாக இந்தத் தளம் உள்ளது.
தொடர்ந்து ‘சோத்சிந்து’ என்ற இணையதளம் மூலமாக இந்தியாவில் வெளிவருகின்ற மிகவும் முக்கியமான இதழ்களின் தொகுப்பை இந்த இணையதளத்தில் வழங்கி இருக்கின்றார்கள். இது ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு வகையில் உதவ கூடிய தளமாக இருக்கின்றது. மேலும் பதிமூன்று லட்சத்து 500 மின் நூல்கள் இந்த தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிகின்றது.
அதனைத் தொடர்ந்து பொறியியல் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக
கிராமங்கள்தோறும் இருக்கின்ற பொறியியல் மாணவர்கள் பொறியியல் படிக்கும் மாணவர்களை அடுத்த
கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்காக நாடு முழுவதும் இருக்கின்ற பொறியியல்
கல்லூரிகளை ஒன்றாக இணைத்து உயர் தொழில்நுட்பங்களில் கிராமப்புற மாணவர்கள்
பயன்பெறும் வகையில் இந்த ‘NMEIC‘ இணையதளம்
செயல்படுகின்றன.
‘மெய்நிகர் ஆய்வகம’ என்ற ஒரு இணையதளத்தின் மூலமாக கட்டுரைகள், பரிசோதனைகள், தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள், மரபுகளை
அடிப்படையாகக் கொண்ட பொருள்களைக்கொண்ட தரவுகளை இந்த தளத்தில் மத்திய அரசாங்கம்
வழங்கி இருக்கின்றன இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
தொடர்ந்து கட்டற்ற திறந்த இணைய வகுப்பு என்று
அழைக்கப்படுகின்ற ‘MOOC’
. உலகில் இருக்கின்ற யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும்
எந்த படிப்பையும் தேர்வு செய்து மிக இலகுவாக படித்து அதன் மூலம் சான்றிதழ்களைப்
பெற்றுக்கொள்ள இந்த இணையதளம் வழிவகை செய்கின்றது என்பது குறித்த விபரங்களை
முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டது.
பேராசிரியர் க.உமாராஜ்
0 comments:
Post a Comment