/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, January 28, 2022

மஞ்சள் நகரமாம் ஈரோட்டில் இணையத்தமிழ் - தமிழ் வளர்ச்சித் துறை - முனைவர் துரை.மணிகண்டன்

 மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தில்,  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, ஜனவரி, 27,28-01-2022 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்    ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குர் முனைவர் ப. அன்புச்செழியன் இணையத்தமிழ் ஆய்வாளருக்குச் சிறப்புச்செய்தல்

28-01-2022 அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ், கணினித்தமிழ்)  என்ற தலைப்பில்  உரை வழங்கினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குர் முனைவர் ப. அன்புச்செழியன் அவர்கள் அறிமுகவுரை  வழங்கினார்.


நிகழ்வில் இயக்குர் முனைவர் ப. அன்புச்செழியன்,  புலவர் ப.ஆறுமுகம், புலவர் ப.ஆறுமுகம்,  இணையத்தமிழ் ஆய்வாளர் மணிகண்டன்

  அதனைத் தொடர்ந்து இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் கணினி தமிழின் தோற்றம் குறித்தும், இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும், இணையத்தில் தமிழ் பங்களிப்பு குறித்தும், இணையத்தில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ் வலைப்பூ உருவாக்கம் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

 பயிற்சியில்  அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.  

ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் இரா.விசுவாநாதன் மற்றும் சேலம் முன்னால் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் புலவர் ப.ஆறுமுகம் அவர்களும் உரை வழங்கினார்கள்.


0 comments: