Online Education In Indian Higher Education Institution
இந்தியாவில் இணைய வழிக் கல்வி தொடர்பான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு அதன் வேகம் இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது. கரோனா ஊரடங்கு பெற்றோர்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைய வழி கல்வியை நோக்கி நகர்த்தி இருப்பது காலத்தின் கட்டாயம். கடந்த ஆண்டில் மட்டும் இணைய வழிக் கல்வி வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 2.2 டாலர் அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தமாக 1,500-க்கும் மேற்பட்ட இணையவழி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 435 நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் (2020-2021) தொடங்கப்பட்டவையாகும்.
நாம் இன்று இணைய வழிக் கல்வியைப் பள்ளி, கல்லூரி கல்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் போது அது சமீபத்தில் முளைத்ததாக தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளாகவே கற்பித்தல் என்பது மிகப் பெரும் சந்தையாக மாறியிருக்கிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக யூடியூப் சேனலை குறிப்பிடலாம். ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும், எப்படி செய்யக்கூடாது என்ற கற்பிக்க கூடியவையாக இருப்பதை நம்மால் காணமுடிகிறது. எப்படி சமைக்கவேண்டும்? எப்படி உடுத்தவேண்டும்? எப்படி தூங்க வேண்டும்? எப்படி வண்டிகளைப் பழுது பார்க்கவேண்டும்? என அனைத்தையும் அங்கு கற்பிக்கப்படுகின்றன.
இன்று பல்வேறு
திறன் வாய்ந்த துறைசார் நிபுணர்கள் தங்கள் அனுபவங்களை சந்தைப் பண்டமாக
மாற்றுகிறார்கள். இதன்
தொடர்ச்சியாகவே பள்ளிக்கல்வி பாடங்களும் சந்தை பண்டங்களாக மாறியிருக்கின்றன.
இன்று இந்தியாவில் இணைய
வசதி 24 சதவீத
குடும்பங்களிலும், கணினி
வசதி 11 சதவீத
குடும்பங்களில் மட்டுமே இருக்கிறது. இந்த கரோனா ஊரடங்கு நாட்களில்
பள்ளிகள் இணையவழி வகுப்புகளுக்கு மாறிய போதும் திறன்பேசி,
இணைய வசதி இல்லாமல் கிராமப்புற மாணவர்கள் கடும் நெருக்கடியை எதிர் கொண்டனர்.
இதனைப் போக்கும் விதமாக இந்திய அரசாங்கம் பல்வேறு இணையதளங்கள் வழி மாணவர்களுக்கு
கல்வியை வழங்க முன்வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு
‘இணையத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்நூல் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு இந்திய மாணவர்கள் இலகுவாகவும், விரைவாகவும் விலையில்லாமல் படிப்பதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது என்பதை விரிவாக விளக்க முற்படுகிறது.
குறிப்பாக இன்றைய 21 ஆம் நூற்றாண்டை அறிவியல் வளர்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மிக முக்கியமானதாக கருதப்படுவது இணையம் ஆகும்.
அந்த வகையில் உலக அளவில் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் கல்வியைக் கொண்டு செல்வதற்காக பல்வேறு வகையான அணுகுமுறைகளை ஒவ்வொரு பல்கலைக்கழகம் செய்து வருகின்றன. தங்கள் நாட்டு குழந்தைகளுக்கு இலவசமாகவும் அல்லது குறைந்த நிதி ஆதாரங்களைப் பெற்று இணையவழியில் வழங்கி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மொழிகளும், இனக்குழுக்களும் வாழ்ந்து வருகின்ற சூழலில் இணையத்தின் வழியாக உயர்கல்வியை அனைத்து வகை மாணவர்களுக்கும் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கம் பல்வேறு வகையான இணையவழியில் இணையதளங்கள் மூலமாக கல்வியை வழங்கி வருகின்றன. அப்படி வழங்கிவருகின்ற இணையவழிக் கலுவியில் ‘ஸ்வயம்’ கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்து இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும் பயன் பெறுகின்ற வகையில் இந்த ஸ்வயம் இணைய வழி கற்றலை ஊக்குவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து ‘NAD’ என்று அழைக்கப்படுகின்ற நேஷனல் அகடமி டெபாசிட் என்ற இணையதளத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை மாணவர்கள் படித்த சான்றிதழ்கள் அனைத்தையும் இந்த இணையதளத்தில் சேமித்து வைத்துள்ளனர். குறிப்பாக இனிவரும் காலங்களில் சான்றிதழ்களில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்த இணையதளம் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து ‘சோத் கங்கா’ என்ற என்ற இணைய வழியில் இந்தியாவில் இதுவரை முனைவர் பட்டம் பெற்றவர்கள் பெயர்களையும் அவர்களது படைப்புகளையும் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வேடுகளை இந்த இணையதளத்தில் வழங்கியிருக்கின்றார்கள். இது எதிர்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
‘மின் பாடசாலை‘ என்ற இணையதளத்தின் மூலமாக பல்வேறு வகையான பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான நூல்களை இங்கே நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடியதாக இந்தத் தளம் உள்ளது.
தொடர்ந்து ‘சோத்சிந்து’ என்ற இணையதளம் மூலமாக இந்தியாவில் வெளிவருகின்ற மிகவும் முக்கியமான இதழ்களின் தொகுப்பை இந்த இணையதளத்தில் வழங்கி இருக்கின்றார்கள். இது ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு வகையில் உதவ கூடிய தளமாக இருக்கின்றது. மேலும் பதிமூன்று லட்சத்து 500 மின் நூல்கள் இந்த தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிகின்றது அதனைத் தொடர்ந்து பொறியியல் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கிராமங்கள்தோறும் இருக்கின்ற பொறியியல் மாணவர்கள் பொறியியல் படிக்கும் மாணவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்காக நாடு முழுவதும் இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளை ஒன்றாக இணைத்து உயர் தொழில்நுட்பங்களில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ‘NMEIC‘ இணையதளம் செயல்படுகின்றன.
அதேபோன்று இயந்திர மனிதனை உருவாக்குவதற்காக அதன் மூலமாக புதிய தொழில்நுட்ப அறிவை பொறியியல் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் மின்னணு இயந்திர அமைப்பு முனையம் ஒன்றை இந்திய அரசாங்கம் தொடங்கி அதை இணைய வழியில் வழங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக புதிய தொழில்நுட்பமான இயந்திர மனிதன் படிப்பை மிக இலகுவாக அனைவரும் பெற்று பயன் அடைய இந்த இணையதளம் பயன்படுகின்றன.
‘மெய்நிகர் ஆய்வகம’ என்ற ஒரு இணையதளத்தின் மூலமாக கட்டுரைகள், பரிசோதனைகள், தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள், மரபுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள்களைக்கொண்ட தரவுகளை இந்த தளத்தில் மத்திய அரசாங்கம் வழங்கி இருக்கின்றன இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
தொடர்ந்து கட்டற்ற திறந்த இணைய வகுப்பு என்று அழைக்கப்படுகின்ற ‘MOOC’ . உலகில் இருக்கின்ற யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எந்த படிப்பையும் தேர்வு செய்து மிக இலகுவாக படித்து அதன் மூலம் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் இணையதளம் வழிவகை செய்கின்றது.
கணினித்தமிழைப் படிக்கின்ற மாணவர்களுக்கு என்ன? என்ன? வேலைவாய்ப்புகள் இருக்கின்ற என்பதைப் பற்றிய விளக்கம் கணினித்தமிழும் வேலைவாய்ப்புகளும் என்ற கட்டுரை விவரிக்கிறது.
எனவே இணையதளங்களில் இந்திய உயர்கல்வி எந்த அளவிற்கு
இன்று வளர்ந்து நிற்கின்றது என்பதை ஒரு முன்னோட்டமாக வழங்கியிருக்கின்றது இந்நூல். . இந்த நூலுக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மூன்று மொழிகளில் அணிந்துரை
வழங்கி பிறப்பித்துள்ள முனைவர் இரா. சின்னப்பன் அவர்களுக்கு
என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று இந்தநூல் நூல்வடிவம்
பெறுவதற்கும் எனக்கு உதவிய என் நண்பர்களுக்கும் என் குடும்ப நண்பர்களுக்கும் எனது
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்கள்
தவிர என் பள்ளிக்கல்லூரி காலங்களில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அப்பா சோனாபீனா
பிச்சை முத்துராஜா அவர்களுக்கும் அண்ணன் மொ.குமார் முத்துராஜா
அவர்களுக்கும் என் நன்றிகள்.
Online Education In Indian Higher Education Institution
முனைவர் துரை.மணிகண்டன்
இணையத்தமிழ் ஆய்வாளர்
9486265886.