வணக்கம் நண்பர்களே இந்த காணொலியில் நாம் தமிழ் வலைப்பதிவின் தோற்றமும் வரலாறும் அது கடந்து வந்த பாதையையும் குறித்துதான் காண இருக்கின்றோம்.
குறிப்பாக 1997ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிளாக்கர் தளம் மெல்ல நகர்ந்து தமிழில் 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டு இன்றுவரை வளர்ந்த நிலையில் உள்ளன.இதுவரை 27 ஆயிரத்து 790 தமிழ் வலைப்பதிவுகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பது தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப் பெரிய சிறப்பாகும்.
வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment