அன்பு உறவுகளுக்கு வணக்கம். முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் எழுதிய ஊடகவியல் நூல் குறித்துதான் இந்தக் காணொலியில் காண இருக்கின்றோம்.
இவர் நிறைந்த ஆற்றல்சார் பேராசிரியர். இவருடைய இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், தமிழ் கணினி இணைய பயன்பாடுகள், ஒப்பிலக்கியம் என இணையத்தமிழ் நூல்களின் வரிசையில் தற்பொழுது ஊடகவியல் என்ற நூலை எழுதி மாணவர்களின் நலன் சார்ந்து படைத்துள்ளார்.
இந்த நூலில் ஊடக வகைகளின் இன்றியமையாமை குறித்து நுட்பமான கருத்துக்களை முதற்பகுதியில் முறையாகவும், சரியாகவும், தொகுத்தும், பகுத்தும், எளிய, இனிய நடையில் வழங்கியுள்ளார்.
அச்சு ஊடக தோற்றம், வளர்ச்சி, உள்ளடக்கம், மொழிநடை, இதழியலாளர்களின் பண்பு நலன்கள் ஆகியவற்றை இரண்டாம் பகுதியில் தெளிவாக தந்துள்ளார்.
வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு குறித்து விரிவாக மூன்றாம் பகுதியில் எடுத்துரைத்துள்ளார்.
நிறைவாக வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்ற தேவையானப் பயிற்சிகளை மிக எளிமையாக விளக்கியுள்ளார். நேர்முக வர்ணனைக்கான பயிற்சி விளக்கம் நேர்காணல் நிகழ்த்துதற்கானப் பயிற்சிகள், நிகழ்ச்சித்தொகுப்பாளர், செய்தி வாசித்தல், செய்திகள் தயாரிக்கும் பயிற்சிகள் என ஊடகவியல் துறைக்குத் தேவையான பயிறசிகள் அனைத்தையும் வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment