தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 65 - ஆம் நிகழ்வில் தேதி: 25- 04- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றும் திரு. பரதன் தியாகலிங்கம் அவர்கள் " மொசில்லா தமிழ்ப் பொதுகுரல் திட்டப் பங்களிப்பு” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரையின் காணொலி.தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு 61 நிகழ்வு 21- 03- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 க்கு ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி நூலகர் திரு. வெ. சிங்காரவேலு அவர்கள் "இணையவழி நூலகங்களின் பயன்பாடுகள் “ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்கிய காணொலி
அரசு கலை அறிவியல் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு
ஸ்ரீரங்கம்
வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-27
பருவம் முன் மாதிரி தேர்வு - 2021
தாள்: தொல்காப்பியம்
– பொருளதிகாரம் 16LCCLT15
காலம்; 3 மணி மதிப்பெண்: 75
ஓரிரு வரிகளில் விடை அளிக்க 10 * 2= 20
1. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் இருவரை குறிப்பிடுக
2. உரிப்பொருள் என்றால் என்ன?
3. "இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்"- இதில் இருவகை பிரிவு எது?
4. பாடாண்திணை எத்திணைக்குக புறமாக அமைந்துள்ளது?
5. படை இயங்கு அரவம் என்றால் என்ன?
6. கற்பு என்றால் என்ன? விளக்குக.
7.தலைவனும் தலைவியும் சந்திக்கும் குரு இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
8. இளமைப் பெயர்களை குறிப்பிடுக.
9. உவம உருபுகள் எவை? எவை?
10. மெய்ப்பாடுகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க 5 * 5 =25
11. பாடாண் திணையின் உட்பிரிவு துறைகளை விளக்குக.
அல்லது
பிரிவில் தலைமகன் கூற்று நிகழும் இடங்களை சுட்டுக.
12. ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் அதன் பாகுபாடுகளையும் எடுத்துரைக்க.
அல்லது
உரிப்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.
13. களவு காலத்தில் தோழியின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
அல்லது
கற்புக் காலத்தில் தலைவியின் செயல்பாடுகளைத் தொகுத்துரைக்க.
14. உள்ளுறை உவமம் என்றால் என்ன? அதன் வகைகளை கூறி விளக்குக.
அல்லது
முதல் அவத்தை மெய்ப்பாடுகளின் பண்புகளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது யாது?
15. உவம உறுப்புகளின் நிலை கலன்களை கூறி விளக்குக.
அல்லது
பெண்பாற் பெயர்களின்
வகைகளைக் கூறி
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
கட்டுரை வடிவில் விடையளிக்க 3 * 10 = 30
16. புறத்திணையில் கூறப்பட்ட போர் மரபுகளை எடுத்துரைக்க.
17. அகத்திணையில் உணரப்படும் பண்டைய பண்பாடுகளைத் தக்கச் சான்றுடன் நிறுவுக.
18. தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகை மெய்ப்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19. பரிணாம வளர்ச்சியிக்கு மரபியல் கூறும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
20. தமிழ் மரபிற்கு ஏற்ப களவியல், கற்பியல் அமைந்திருக்கின்றனவா? என்பதை ஆய்க.
அரசு கலை அறிவியல் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு
ஸ்ரீரங்கம்
வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-27
பருவம் முன் மாதிரி தேர்வு - 2021
தாள்: தமிழ் இலக்கிய வரலாறு
– 16LACLT2
காலம்; 3 மணி மதிப்பெண்: 75
ஓரிரு வரிகளில்
விடை அளிக்க 10 * 2= 20
1. சங்கங்கள் இருந்ததற்கான சான்றுகள் இரண்டினை தருக.
2. தொல்காப்பியம் யாருடைய அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகநூல்கள் எத்தனை?
4. திரிகடுகம் எத்தனை மருந்து பொருள்களால் ஆனது?
5. பக்தி இலக்கிய காலத்தை யாருடைய காலமாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்?
6. மாணிக்கவாசகர் பாடிய நூல்கள் எவை? எவை?
7. நன்னூல் எந்த மொழிக்கான இலக்கண நூலாக விளங்குகிறது?
8. ஐஞ்சிறு காப்பியங்கள் எவை?
9. தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?
10. புதுமைப்பித்தன்
சிறுகதைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க 5
* 5 =25
11. மூன்று சங்கங்கள் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகளைக் குறிப்பிடுக.
அல்லது
தொல்காப்பிய அமைப்பு முறையை குறிப்பிடுக
12. திருக்குறளின் தனித்தன்மையை விவரிக்க
அல்லது
பழமொழி நானூறு சிறப்புகளை எடுத்துரைக்க.
13. சைவ மதத்தின் பண்புகளைக் குறிப்பிடுக
அல்லது
வைணவ மதத்தின் மாண்புகளை எடுத்துரைக்க.
14. முக்கூடற்பள்ளு குறிப்பிடும் நெல் வகைகளை கூறுக.
அல்லது
திரு.வி.க.வின் தமிழ்த் தொண்டு குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
15. பாரதியாரின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்க.
அல்லது
பாரதிதாசனின்
தமிழ்ப் பற்றை ஆய்க.
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
கட்டுரை வடிவில் விடையளிக்க 3 * 10 = 30
16. தமிழ்மொழியின் சிறப்பியல்புகளை விவரிக்க.
17. சங்ககாலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலமே என்பதை நிறுவுக.
18. தமிழர்கள் அறக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கியபோக்கை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழி ஆய்க.
19. சைவசமய குறவர்களின் பக்தி திரத்தை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க
20. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஒரு கட்டுரை வரைக