/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, December 19, 2021

கணித்தமிழ்ப் பேரவையும் - Tamil computing Training - இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி’ நூல் வெளியீட்டு விழாவில்

|0 comments

 

             தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - சென்னை

                                     கணித்தமிழ்ப் பேரவையும்

 தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய  கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் பயிலரங்கம்  டிசம்பர் 17, 18 - 202 1 நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதுநிலை மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களைச் சார்ந்த கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள்  பயிலரங்கில் பயிற்சிப் பெற்றார்கள் . இப்பயிலரங்கின் முதல்நாள் நிகழ்வாக காலை 11.00 மணிக்குத் தொடக்க விழா நடைப்பெற்றது.

நிகழ்வில் முனைவர் ந.பஞ்சநதம், பதிவாளர் முனைவர் மூ.சௌந்தரராஜன் 

இவ்விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்  கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.விஜயா வரவேற்புரை வழங்கினார்.

கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.விஜயா

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ந.பஞ்சநதம் அவர்கள் தலைமைத் தாங்கி குத்து விளக்கு ஏற்றி வாழ்த்தினார் .


சிறப்பு விருந்தினர்களாக முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் இரா.அகிலன் 

மாண்பமை துணைவேந்தர் முனைவர் ந.பஞ்சநதம்

அடுத்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்  இயக்குநர் முனைவர் வி.ப ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்கள் கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். அதில் இணைய வழிக் கல்வி பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமென்றும், அதற்கான முன்னெடுப்பில் அரசாங்கம் உங்களுக்குப் பேருதவி புரியும் என்றும்,  தமிழ்க்கணினித் தொடர்பான அராய்ச்சி செய்பவர்களை ஊக்குவித்து உதவித்தொகை வழங்கியும், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளுக்கும் ஒருங்குறி முறையில் தட்டச்சுப்பயிற்சி வழங்க கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மேனாள் துணை வேந்தர் முனைவர் மூ.பொன்ன வைக்கோ அவர்கள்,தன் வாழ்த்துச் செய்தியைத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்( பொ.) மற்றும் புல முதன்மையர்  முனைவர் மூ.சௌந்தரராஜன்  அவர்கள் முன்னிலையுரை ஆற்றி வாழ்த்தினார்.

                                        பதிவாளர் முனைவர் மூ.சௌந்தரராஜன் 
முனைவர் மா.கோவிந்தன் - தேர்வுக்கட்டுப்பாட்டு நெறியாளர்
                                           முனைவர் வை.பாலக்கிருஷ்ணன் 
                                            முனைவர் பா.கணேசன் 
                                                            முனைவர் சா.மணி

தொடர்ந்துப் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ.)முனைவர் மா.கோவிந்தன் , அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் முனைவர் வை.பாலக்கிருஷ்ணன் முனைவர் ப.கணேசன் ,முனைவர் நா.இராமக்கிருஷ்ணன் ,  முனைவர் சா.மணி ஆகியோர் வாழ்த்துரை நல்கினார்கள். நிகழ்ச்சியின்  இறுதியாக இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.ஷர்மிளா நன்றியுரை வழங்கினார்.


                    இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.ஷர்மிளா 

தொடக்க விழா நிறைவின் போது இணையத் தமிழ் ஆய்வாளர், முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் எழுதிய இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி என்ற நூல் பல்கலைகழகத் துணைவேந்தர் முனைவர் ந.பஞ்சநதம் அவர்கள் வெளியிட பல்கலைக்கழகத்தின் பதிவாளர்  முனைவர் மூ. சௌந்தரராஜன் மற்றும் கலைத்திட்ட வரைவு மதீப்பீட்டுத் துறைத் தலைவர் முனைவர் வை.பாலகிருஷ்ணன் அவர்களும் நூலைப் பெற்றுக் கொண்டனர். 

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி’ நூல் வெளியீட்டு விழாவில்

மேலும் இந்த நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றும் முனைவர் இரா.அகிலன் அவர்களும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியரிய பெருமக்கள் மற்றும் கணித்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கலைத்திட்ட வரைவு மதீப்பீட்டுத்துறைப் உதவிப்பேராசிரியர்  முனைவர்  கு.விஐயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தொடக்கவிழா நிகழ்வுத் தொடர்ந்து மதியம் 2-மணிக்கு நிகழ்வு தொடங்கியது

முதல் அமர்வில் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழ் வரலாறு குறித்து  உரை வழங்கினார். இதில் இணையம் முதன் முதலில் உருவாக்கிய முறையும் அது கடந்துவந்த பாதையையும் விரிவாக எடுத்து விளக்கினார். இணையத்தில் தமிழ் மென்பொருள் உருவான காலச்சூழல் குறித்தும்  இதுவரை தமிழில் உருவாகியுள்ள தமிழ் எழுத்துரு குறியாக்கம் குறித்தும் பேசப்பட்டது.

                    இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

தமிழ் கணிமைக்கு உலக தமிழ் இணைய மாநாடுகள் எவ்வாறு பங்களிப்பு செய்தன என்பது குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழகம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வாறு எளிமையாகத் தமிழைக் கற்றுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக தமிழ் இணையக் கழக இணையதளம் மூலம் புலம்பெயர் தமிழ் சமூக குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுக்  கொடுத்தது., தற்பொழுதும் கற்றுக்கொடுக்கிறது என்ற செய்தியை விளக்கினார்.

தமிழில் நாம் எவ்வாறு ஒருங்குறியில் தட்டச்சு செய்யவேண்டும் என்ற பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலமாக பயிற்சியில் கலந்துகொண்ட அனைவரும் மிகச் சிறப்பாகத் தமிழை ஒருங்குறியில் தட்டச்சு செய்த கற்றுக்கொண்டனர்.  இஃது இந்த பயிற்சியின் முதல் வெற்றியாகும்.

அதனைத் தொடர்ந்து  அமர்வு -2 இல்  முனைவர் இரா.அகிலன் அவர்கள் தமிழ் மென்பொருள் கணினிப் பயன்பாடுகள் குறித்து உரை வழங்கினார். 


                                                     முனைவர் இரா.அகிலன்

அதிலும் குறிப்பாக தரவகம் என்றால் என்ன?  தரவகத்தை எவ்வாறு உருவாக்கம் செய்ய முடியும்? இயற்கை மொழி ஆய்வு  என்றால் என்ன?  இயற்கை மொழி ஆய்வு  கருவிகள் பற்றியும் அக் கருவிகளினால் இன்றைய தமிழ் பயன்பாடு குறித்தும் தெளிவாக பங்கேற்பாளர்களுக்குத் தெளிவுப்படுத்தினார். மேலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கிய மென்பொருள்களையும் அதை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்றம் செய்முறையில விளக்கி தெளிவுப்படுத்தினார்.

18-12-2021  காலை 11 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பல்கலைக்கழக கணினி கூடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை முதல்நாள் நிகழ்வில்  எவ்வாறு தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு தட்டச்சு செய்வது? எனபதை  அவரவர் கணினியின் பதிவிறக்கம் செய்தும், தட்டச்சு செய்தும் காட்டினார்கள்.

                    பயிற்சியாளர்கள் தமிழ் வலைப்பதிவை உருவாக்கிய போது

                                 மாணவர்கள் பயிற்சியில் இருந்தபொழுது

பங்கேற்பாளர்கள் செய்முறைப் பயிற்சியைத்தொடர்ந்து  காலை மூன்றாம் அமர்வில் முனைவர் இரா.அகிலன் அவர்கள் தமிழ் மென்பொருள் உருவாக்கம் குறித்து பயிற்சி வழங்கினார்.

 இதில் தமிழ் மென்பொருட்களை உருவாக்குவதற்கு ஏதாவது அடிப்படை கணினிமொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் திறந்தமூல மென்பொருளைப் பயின்படுத்தி ஒரு தமிழ் மென்பொருளை நாம் உருவாக்கலாம் என்று குறிப்பிட்டார்.

கணினிக்கூடத்தில் மாணவர்களுக்கு இரா.அகிலன் அவர்கள் நேரடிப்பயிற்சி வழங்கியது.

அவ்வாறு உருவாக்கிய ஒரு சில தமிழ் மென்பொருள்களையும் பயிற்சியில் எடுத்துக் காட்டினார். சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி மற்றும் ஆங்கில வாக்கியங்களை தமிழில் மாற்றுவதற்கான மென்பொருள் போன்றவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

தொடரந்து அமர்வு நான்கில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

                                                இணையத்தமிழ் ஆய்வாளர்

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைய வழிக் கல்வியை இந்திய அரசாங்கம் எவ்வாறு வழங்குகிறது என்றும் கல்விதொடர்பான இணையதளங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து காட்டினார். அதில்  SWAYAM Courses, National Academic Depository (NAD), Shodhganga, e-ShodhSindhu,  provide remote-access to simulation-based Labs,  We bring you India's biggest PBL (Project Based Learning) robotics competitions, IIT Bombay, through a decade long effort in using Technology போன்ற தளங்கள் வழியாக நாம் கற்றுக்கொள்ளலாம் என்று விளக்கினார்.  தொடர்ந்து தமிழ் வலைப் பக்கங்களை எவ்வாறு நாம் உருவாக்க வேண்டும் என்று பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் தனக்கென ஒரு வலைப் பக்கத்தை உருவாக்கி கொண்டனர்.



தொடர்ந்து நிறைவு  விழாவில் நிகழ்வில் பங்கேற்றுப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் சிறப்பாக செய்முறைப் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களில் சிறந்த வலைப்பதிவை உருவாக்கி குழுவினர்களுக்கும், தமிழ் மென்பொருளை பயன்படுத்திய குழுவினல்களுக்கும், தமிழில் தட்டச்சு செய்த குழுவினர்களுக்கும் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய ஊடகவியல், தமிழ்க்கணனி இணையப்பயின்பாடுகள், இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.





 

 

 

 

 




Friday, December 10, 2021

ஊடகவியல் வினா - Media Studies - Media book

|0 comments

 


அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                                                                             

1. ஊடகம் என்றால் என்ன?

2. அச்சுப்பொறியைக் கண்டுபிடித்தவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

3. முதன்முதலில் தமிழகத்தில் அச்சு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இடம் எது? எந்த ஆண்டு?

4. மாத இதழ்களின் பெயரைக் குறிப்பிடுக.

5. வானொலியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு?

6. கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இரண்டினைக் குறிப்பிடுக.

7. கணிப்பொறி என்றால் என்ன?

8. கணிப்பொறியில் வெளியீட்டுக் கருவிகள் எவை? எவை?

9. ஊடகப் பணியாளர்களுக்குத் தேவைப்படும் பொதுத்தகுதிகள் இரண்டினைக் குறிப்பிடுக.

10. ஊடகவியல் நூலின் ஆசிரியர் யார்?

பகுதி -

ஒரு பக்க அளவில் விடை தருக.                                                                                                              

11. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான அடிப்படைத் தேவைகள் எவை?

(அல்லது)

 இதழ்களில் தலையங்கம் தயாரிக்கும் வழிமுறைகளை விவரிக்க.

12. மின் இதழ்களின் சிறப்புகளைக் கூறுக.

(அல்லது)

தேவாரம்.காம் சிறப்பியல்புகளைப் பட்டியிலிடுக.

13. அறிவிப்பாளரின் கடமையும் பொறுப்புகளையும் விவரிக்க.

(அல்லது)

வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளைக் கூறுக.

14.  இதழ்களில் நுகர்வோர் கடமைகளாக ஆசிரியர் குறிப்பிடுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

 இதழ்களில் கருத்துப்படம் இடம் பெறும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க.

15. அறிவித்தல் பணி என்றால் என்ன? விளக்கம் தருக.

(அல்லது)

கால பாகுபாட்டில் இதழ்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?

பகுதி -

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விரிவான விடை தருக.                                                                          

16. மரபு வழி ஊடகங்கள் என்றால் என்ன? அவற்றைத் தொகுத்துரைக்க.

17. தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்து ஒரு கட்டுரை வரைக.

18. கணிப்பொறியின் தலைமுறைகள் விவரிக்க.

19. ஊடகப் பணியாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துரைக்க.

20. இணைய இதழ்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதைத் தக்கச்சான்றுடன் நிறுவுக.


Media Studies - Media book

The book Journalism is divided into 5 disciplines.

The news is first and foremost embedded in the media in terms of introduction and explanation.

The impact of the media, the role of the media in communication, the actual use of electronic media is explained.

In the second sense, in the sense of magazines in print media, the origin of development magazines, the history of development, the importance of magazines, the types of magazines, their work, the structure of the magazines are better explained.

Third, radio specialties of television, its origins, development, current status, influence and radio broadcasts are summarized.

The history of the computer in the fourth sense also clearly explains the origin of the Internet.

Fifth is the training based on training for media personnel on character, intellectual, social qualifications, language training, aboriginal editorial preparation, news preparation, presentation of newscasts on radio and television, program co-ordination, interpretation of programs such as narration.


Tuesday, December 7, 2021

தமிழ் இலக்கணம் கற்பித்தலில் மீம்ஸ்களின் பங்கு

|0 comments

 05 - 12-2021 ஞாயிற்றுக்கிழமைத் தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையவழி உரையில் கணினித்தமிழ் ஆய்வாளர் திருமதி அருணா அவர்கள் ’தமிழ் இலக்கணம் கற்பித்தலில் மீம்ஸ்களின் பங்கு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். மீம்ஸ்கள் என்பது கேலி கிண்டலுக்குத்தான் பயன்படும் என்ற எண்ணத்தை மாற்றி கற்றல் கற்பித்தலுக்கும் இந்த மீம்ஸை பயனபடுத்தலாம் என்று விரிவாக இந்த காணொலியில் விளக்கியுள்ளார்.




Thursday, October 28, 2021

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் உரை.

|0 comments

 கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா  கலை & அறிவியல் கல்லூரிக் கணித்தமிழ்ப் பேரவை நடத்தும் மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - கணித்தமிழ் நுட்பங்கள் (Workshop on Student Skill Development Programme on Computing Tamil Technique) வருகிற 28.10.2021 முதல் 03.11.2021 (12-1.30 பி.ப.) வரை நிகழ உள்ளது.  இந்த நிகழ்வின் முதல் நாளில் (28.10.2021) திருச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும் இணையத்தமிழ் ஆய்வாளருமான  முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் கணித்தமிழ்ச் சான்றோர்கள் எனும் பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார்கள்.




Workshop on Student Skill Development Program on Computing Tamil Technique conducted by Sri Krishna Aditya College of Arts & Science, Coimbatore, from 28.10.2021 to 03.11.2021 (12-1.30 pm). Is. On the first day of the event (28.10.2021) Dr. Durai, Manikandan, Head, Tamil Department, Government Arts and Science College, Trichy.  made a special speech in the sense that they are Computing Tamil Achivers.






Tuesday, October 26, 2021

Online education in Indian Higher Education institution - இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

|0 comments

 இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய ‘ இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற நூலை எழுதி அமேசானில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தமிழ் - தமிழ்க்கணினி - கணித்தமிழ் - கணினித்தமிழ் - உயர்கல்வி - இணையவழிக் கற்றல் - internet tamil - computer tamil - tamil computer 


“True wisdom wards off woes, a circling fortress high; it inner

strength mans eager foes unshaken will defy”.

Kural 421

Being inhabitant of the Techno spaced knowledge era, it is necessary to learn

Science, Internet and Technology to each and every one. There are many technological

advances are available to do Higher Education today. On the NET, There are many

Websites / Blogs have been created by experts in the Field of Higher Education. This

helps the younger generation to know about the Higher Education much better. In order

to connect students and Technology, the writer of this book, Research Scholar of Tamil

Internet and Technology Dr. Durai. Manikandan took a strenuous effort of publishing

HIGHER EDUCATIONAL INSTITUTIONS ON THE WEB, with great enthusiasm

and wide perspectives on Higher Education.

As for as the style, narration, techniques in the chapterization have been

concerned, the book has been designed beautifully in its structure, contents, language

with the parameters of Nannul. It is my immense pleasure to introduce this look to the

world of Reading. The book has Eleven chapters and each chapter designed in its unique

way. The First Chapter, Historical perspective of Education through Internet the

chapter illustrates other chapters of this book. Similarly, the chapter named Virtual Lab

Simulator inspires all the readers.

Lee martin, the educationalist states that,

“Education Technology can be categorized as Hardware, software and virtual

learning these sections will help the learner to understand the computer

education thoroughly”.

The chapter Virtual Lab Simulation explains humanities such as are, Dance,

Music, Architecture, Media, Technology space science etc., As well as Engineering,

Technology, Agriculture, Animal Husbandry, Medicine etc., By accessing those web

pages/sites, one could enhance him in any field of research No doubt!. The web pages on

the net will enlighten the learner to procure more resources to their future research.

Author Dr. Durai. Manikandan has also published CD-RAM of the book for the

convenience of readers for mobile accessing. The strenuous efforts of the author over the

decades reflect in the chapters of this book. The chapters are divisioned according its

content and use.

Dr. Durai. Manikandan has also given sufficient details about MOOC, NAD,

SWAYAM, SHOTHGANGA, E.PADASALA, E. SHODH SINDHU, E. YANTRA

LAB, and NMEICT fordoing more degrees through NET. As a mark of success, the final

chapter of the book is named as JOB OPPORTUNITES ON INTERNET THE TO

TAMIL STUDENTS.

The book could be written for two main purposes respectively they are recreation

and knowledge. The book HIGHER EDUCATIONAL INSTITUTIONS ON THE WEB

provides abundant knowledge about tamil internet and so on. Similarly, the learning

could be divided in the two categories the first one to learn and the second is application

by learning. We can consider the book as application of knowledge by creating Tamil

Science Technology.

“Quality Education will add feathers to the crown of each individual

education; one may not fulfill his desires without higher education. So,

everyone needs quality education otherwise the life becomes ‘Dark’”

The writer produces best of him to the society’s enhancement. By reading, this

work the reader could enjoy the work virtually as well as attribute the writer’s

intelligence. Students those who want to learn/Internet are education through Internet can

make use of this book and enrich yourself in the field of Higher Education. I may heartily

appreciate Dr. Durai. Manikandan, for his industrious effort in bringing out book in a

grand scale for the society’s enhancement.

Thank you.

https://www.amazon.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-ebook/dp/B09BK3L23D

Friday, August 20, 2021

அகரமுதலி திட்டத்தில் கணினிக்கலைச்சொல் தொகுப்பு நிகழ்வு

|3 comments

 


முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தமிழ் ஆய்வாளர்


நிகழ்வில் கலந்துகொண்ட வல்லுநர்கள்



இணைந்ததமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன் கலைச்சொல்லை வழங்க இயக்குநர் தங்க.காமராசு பெற்றுக்கொண்டது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் 19-08- 2021 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள நகர நிருவாக வளாகத்தில்  தொடங்கியது.  மாலை 7 மணி வரை இந்தக் கூட்டம் சென்றது.  தமிழ்நாடு அரசின் அகரமுதலி திட்ட இயக்குனர் திரு தங்க. காமராசு அவர்களுடைய தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கணினி தொழில்நுட்பத்துறை வல்லுர்கள் கலந்துகொண்டு கலைச் சொற்களை உருவாக்குவதும், கணினி சார்ந்த கலைச் சொற்களைத் தொகுப்பதும்,   அதை எவ்வாறு மக்களிடமும், மற்றவர்களிடமும் கலைச்சொற்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மூன்று அடிப்படை காரணங்களை மையப்படுத்திதான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில்  கணினி தமிழ், இணையத்தமிழ், மென்பொருள் வல்லநர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள். அப்படி முன் வைத்தவர்களில் நானும் ஒருவன்.

 இந்த கணினித்தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கி தரப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கணினித்தமிழ் கலைச்சொற்களைக் குறிப்பாக அகரமுதலி திட்டத்தை மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கு எப்படி தமிழக அரசால் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் நிதி உதவி வழங்கி கணினித்தமிழ் பேரவையைத் தொடங்கியதோ அதுபோன்று இந்த அகரமுதலித் திட்ட இயக்கத்தையும் ஒவ்வொரு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் ஒரு குறைந்த அளவு நிதியை வழங்கி செயல்படுத்தினால் மிக விரைவாக இந்த அகரமுதலித் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன்.  

மேலும் அங்கே கலந்துகொள்ள வந்திருந்த 15 வல்லுர்களும் தங்களுக்குத் தெரிந்த கணினிகலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டுவரப் பனித்திருந்தார்கள். அந்த வகையில் நான் 184 கலைச்சொல்லை  அகரமுதலித் திட்ட இயக்குனர் திரு. தங்க.காமராசு  அவர்கள் வழங்கி அவருகள் பெற்றுக் கொண்டார்கள். 

இந்த நிகழ்வில் எங்களுக்கு சலிப்பு தட்டவில்லை. புதிய புதிய சொற்களையும் புதிய புதிய அறிவையும் பெற்றுக் கொண்டதைத் தவிர எந்த இடத்திலும் எனக்குச் சோர்வு தட்டவில்லை. தமிழ்மொழிக்கு  மிக ஆக்கப்பூர்வமான  செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அறிஞர்களும் பலாப்பழத்தை  உரித்துக் கொடுப்பது போன்றும், தேனை அப்படியே வாயில் ஊற்றுவது போன்றும் அவர்கள் வழங்கிய கருத்து இருந்த்து.  எனவே இந்த நிகழ்வில் கணினிக் கலைச்சொல்லாக்கதிற்கான ஒரு  முன்னெடுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதில் கலந்து கொண்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

Tuesday, July 20, 2021

10,978 காவலர் படணிகளுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

|0 comments

 

10,978 இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை பணியிடத்துக்கான உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூலை 23 ல் இருந்து தொடங்குகிறது.


Monday, July 19, 2021

போட்டோஷாப்பை எவ்வாறு திறன்பேசியில் (mobile phone) பயன்படுத்தலாம்

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோஷாப்பை எவ்வாறு திறன்பேசியில் (mobile phone) பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சியின் மூன்றாவது காணொலியைக் காணலாம்.



Saturday, July 17, 2021

தமிழில் போட்டோஷாப்பை பயன்படுத்துவது எப்படி?

|0 comments

 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோசாப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சியின் இரண்டாவது காணொலியைக் காணலாம்.



Friday, July 16, 2021

+2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு

|0 comments


 

+2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு


கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு 2020-2021 கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு செயல்முறை தேர்வு, 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மதிப்பெண் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. மேலும் இந்த மதிப்பெண்ணில் மாணவர்களுக்குத் திருப்தி இல்லை எனக் கருதும் மாணவர்களுக்குத் தனியாக பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது.


Thursday, July 15, 2021

கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோஷாப் அறிமுகம்

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோசாப் அறிமுகத்தை இந்தக் காணொலியில் காணலாம்.



Wednesday, July 14, 2021

திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் - நூலகம்.காம்

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் வழங்கிய உரையின் இறுதியில் பங்கேற்பாளர்கள் கேட்ட வினாக்களுக்கு விடை வழங்கிய விரிவான காணொலியை காணலாம்.

மணிவானதி Manivanathi youtube channel லில் அனைத்து கணினித்தமிழ் மென்பொருள் சார்ந்த காணொலிகள் பதியப்பட்டு உள்ளன. பார்த்துப் பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். அனைவரும் subscribe செய்துகொள்ளுங்கள். கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? -
https://youtu.be/v8OBUfBWGbA கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/QBggxWG2mYU மேலும் பல பயனுள்ள காணொலிகளை காண .... கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/v8OBUfBWGbA 1. பேசினாலே தட்டச்சு செய்வது எப்படி? - https://www.youtube.com/watch?v=aWBc_JG2RoM&t=251s – 2. விக்கிப்பீடியாவில் தரவுகளை(கட்டுரை) உள்ளிடு செய்வது எப்படி? - -https://youtu.be/bw5XsPGbJ8o 3. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - https://youtu.be/_TXjldbCArw 4. தமிழில் பல்வேறு யூனிகோட் எழுத்துருக்கள் - https://youtu.be/RRC19LvGK-0 5. how to choose phd thesis topics - https://youtu.be/avMWfTHycmA 6. மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை - https://youtu.be/LXDvNTb-olU

Tuesday, July 13, 2021

google forms நாம் எவ்வாறு பயன்படுத்துவது எப்படி?

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் மூன்றாம் பகுதியில் google forms நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார்.



Sunday, July 11, 2021

அரசு கலைக்கல்லூரிகளில் விரைவில் விண்ணப்பிலாம்

|0 comments


 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் சான்றிதழ்களும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் இந்த காணொலியில் காணலாம். தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில்விண்ணப்பிக்கத் தேவைப்படும் சான்றிதழ்கள் • 10 th mark sheet • HSC (11th and 12th) mark sheet • TC - மாற்றுச்சான்றிதழ் • Community certifcate – சாதிச்சான்றிதழ் • பிறப்புச் சான்றிதழ் - • இருப்பிடச் சான்று (கேரள, கர்நாடக ஆந்திர) • முதல் தலைமுறை பட்டம் பயிலும் சான்றிதழ் • ஆதார்கார்டு • வருமானச் சான்றிதழ் 150 கல்லூரிகளின் குறியீட்டு எண் இணையவழியில் பூர்த்தி செய்வது எப்படி? • Application registration • making payment • adding choices • locking choices • tentative allotment submission of allotment option இணைய முகவரி - http://tngasa.com


கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது?

|0 comments


 தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டாம் பகுதியில் கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார்.

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டாம் பகுதியில் கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார். மணிவானதி Manivanathi youtube channel லில் அனைத்து கணினித்தமிழ் மென்பொருள் சார்ந்த காணொலிகள் பதியப்பட்டு உள்ளன. பார்த்துப் பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். அனைவரும் subscribe செய்துகொள்ளுங்கள். கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/v8OBUfBWGbA மேலும் பல பயனுள்ள காணொலிகளை காண .... கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/v8OBUfBWGbA 1. பேசினாலே தட்டச்சு செய்வது எப்படி? - https://www.youtube.com/watch?v=aWBc_JG2RoM&t=251s – 2. விக்கிப்பீடியாவில் தரவுகளை(கட்டுரை) உள்ளிடு செய்வது எப்படி? - -https://youtu.be/bw5XsPGbJ8o 3. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - https://youtu.be/_TXjldbCArw 4. தமிழில் பல்வேறு யூனிகோட் எழுத்துருக்கள் - https://youtu.be/RRC19LvGK-0 5. how to choose phd thesis topics - https://youtu.be/avMWfTHycmA 6. மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை - https://youtu.be/LXDvNTb-olU 7. தமிழ் சொல்லாய்வுக் கருவி - https://youtu.be/-618XRW1PDE 8. கூகுள் ஸ்காலரில் கட்டுரைகளை இணைப்பது. - https://youtu.be/y5B6YHJ2uN4

Saturday, July 10, 2021

கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது?

|0 comments




தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் முதல் பகுதியில் கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார்.