தமிழ் இணையக் கழகம் சார்பாக 8 - 11-2020 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இணையவழி, இணையத்தமிழ் உரையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள் “தமிழ்க் கணினியில் புள்ளியும் ஒலியும்” என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் பார்வையற்றவர்களுக்கான மென்பொருள், வரலாறு, பயன்பாடு குறித்தும் மிக விரிவாக விளக்கம் வழங்கினார்.
குறிப்பாகப் பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்ற தொடுதிரை வசதி கொடுக்கும் பொம்மை உருவாக்க தொழிநுட்பம் குறிக்கும் பார்வையற்றவர்களுக்குக் கட்டுரையை இயந்திரமே படித்துக் காட்டும் வசதியை உருவாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் பலகுரலில் பேசுகின்ற மென்பொருள்கள் வந்துவிட்டன அது போல் தமிழில் ஒருவர் பல குரலில் பேசுவது போன்ற மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் அடுத்து இமேஜ் ஆய்வு (Image recognition) என்ற ஒன்றை தமிழில் உருவாக்க வேண்டும், கணினி தொழில்நுட்பம் கருணைத் தொழில்நுட்பமாக மாறவேண்டும் என்றார். அடுத்து தொட்டு உணரும் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தால் பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என்றும், ஒளியின் மூலம் அனைவருக்குமே நாம் மென்பொருளை உருவாக்க வேண்டும் அதனைத் தொடர்ந்து வாசனையைத் தெரிவிக்கும் மென்பொருள்களும் உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தமிழ் மாணவர்களுக்குத் தொழில்நுட்ப தமிழியல் என்ற MA பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். அவ்வாறு உருவாக்கினால் தொழில்நுட்ப அறிவைத் தமிழ் மாணவர்களுக்கு மிக விரைவாக சென்றடைய வைக்கலாம். மேலும் ஓலைச்சுவடி, கல்வெட்டு, சுருக்கெழுத்து நாம் இன்னும் விரிவுபடுத்தி புதிய மென்பொருள்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதில் கலந்துகொண்ட முனைவர் ப.சண்முகம், இரா அகிலன், சுகு பாலசுப்பிரமணியம், முனைவர் ஜானகிராமன், தகவலுழவன், பேரா.மனோகரன் போன்றோர்கள் வினாக்களைக் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டனர்.
0 comments:
Post a Comment