/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, November 20, 2018

Tamil Language and Computer Use.- இணையத்தமிழ் பயிலரங்கம்

|0 comments

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் 14-11-2018  காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்து துறைத் தலைவர் ஹெப்சி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நயினார் அவர்கள்  ஆய்வு நோக்கியதாக இருந்தது. முகநூலில் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதை நாம் தவிற்க வேண்டிய வழிமுறைகளையும் நயமாக எடுத்து விளக்கினார்கள்.  பயிற்சியின் தொடக்கமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றி வரும் முனைவர் அகிலன் அவர்கள் தமிழ் மொழிக்கான  இயற்கை மொழி ஆய்வைப் பற்றி மிக விரிவாக எடுத்து விளக்கினார். மதியம் அமர்வில் பேராசிரியர் காமாட்சி  மொழித் தொழில்நுட்பவழி கணினித்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

 இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் வலைப்பக்கம் உருவாக்குவது எப்படி என்ற பொருண்மயில் மாணவர்களுக்குப் பயிற்சிமூலம் செய்துகாட்டி பல மாணவர்களுக்கு வலைப்பூவை  உருவாக்கிக் கொடுத்து பயிற்சி வழங்கினார். 

நிகழ்வில் பேராசிரியர் குமர செல்வா அவர்கள் தனது மாணவர்களுடன் பயிற்சிக்கு வந்திருந்தார்.

பயிற்சியில் கேரளாவில் பயிலும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
  




இணையத்தமிழ் பயிற்சியில் பங்குபெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வியல் மாணவிகள்.

தமிழ்த்துறைத் தலைவர் ஹெப்சி , முனைவர் துரை.மணிகண்டன்,  பேராசிரியர் குமரசெல்வா,  பேராசிரியர் நயினார், பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், முனைவர் அகிலன். 



கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவிலுள்ள Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பில் எனது மாணவர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். நீண்டகாலத்திற்குப்பின் சந்தித்த பேரா.காமாட்சி, பேராசிரிய நண்பர்கள் துரைமணிகண்டன், நயினார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். தமிழ்த்துறைத்தலைவர் பேரா. ஹெப்சி நிகழ்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

                                                                   பேராசிரியர் நண்பர்களுடன்








இயற்கைமொழி ஆய்வு குற்த்து உரை வழ்ங்கிய முனைவர் அகிலன்.



     வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்த உரை வழங்கிய முனைவர் துரை.மணிகண்டன்.



இணையத்தமிழ்ப் பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவி..



                                        பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவர்.




சான்றிதழ் பெறும் மாணவன்.

Sunday, November 11, 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019

|1 comments



தகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே,
வணக்கம்.
உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.
உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்:
“பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.”
இம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது: “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” இவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.
நீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
இணைத்தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஆய்வுகள் அறிவுரைக்குழு

முனைவர் டான் மாரிமுத்து
தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் மு.பொன்னவைக்கோ
உதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் உலகநாயகி பழனி
செயலாளர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் ஆஷர்
எடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து
முனைவர் அலக்சாண்டர் டுபின்ஸ்கி
மாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா
முனைவர் ஜார்ஜ் ஹார்ட்
பெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா
முனைவர் ஜி. ஜான் சாமுவேல்,
தலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா
முனைவர் சாச்சா எப்ளிங்
சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
முனைவர் உல்ரிக் நிக்லஸ்
கலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி
முனைவர் வாசு அரங்கநாதன்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

தொடர்பிற்கு - https://www.icsts10.org/
நன்றி - சிகாகோ இணையம்.

Thursday, November 1, 2018

அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம்- கொடைக்கானல்

|0 comments
 அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம் கொடைக்கானலில் தமிழாய்வுத்துறையில் தமிழ் இணையப் பயிற்சி பணிமனைக்குச் 17/10/2018  புதன் கிழமைச் சென்றிருந்தேன். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் கமலி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார்.

                                     பேராசிரியர் கமலி அவர்கள்

ஐயா தாங்கள் இந்த பயிற்சி பணிமனைக்கு வந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஐயா என்றார்கள். ஐயா தாங்கள் 2012- ல் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து இணையத்தமிழ் பயிற்சியை மாணவிகளுக்கு வழங்கினீர்கள். அதனுடைய தொடர்ச்சியாக நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆறுமாதம் மற்றும் ஒரு ஆண்டு பட்டயப் பயிற்சி வகுப்பாக தமிழ் இணையத்தில் தட்டச்சு மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்பைத் தொடங்கினோம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீங்கள்தான் ஐயா என்றார்கள். நான் வியந்தே போனேன். நான் நினைத்த இலக்கை வெகுவிரைவாக செய்துகாட்டிய தமிழ்த்துறைத் தலைவர் பேரா.கமலி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன்.

         நிகழ்வில் கல்ந்துகொண்ட முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.

மேலும் தமிழாய்வுத்துறையில் பதினைந்து கணிப்பொறி உள்ளது. அவையாவும் இணைய இணைப்பைப் பெற்றுள்ளது என்பது தனிச் சிறப்பான ஒன்றாகும்.
இங்கு கல்வி பயிலும் முதுகலை மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் மாணவிகள், முனைவர்ப்பட்ட ஆய்வாளர்கள் என 50 மேற்பட்ட மாணவிகள் தமிழில் தமிழ் 99 விசைப்பலகைப் பயன்படுத்தி விரைவாக தட்டச்சு செய்தது என்னை வியக்க வைத்தது.  அதைபோன்று தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி தனது திட்டக்கட்டுரையை உருவாக்கி இருந்த விதம் தமிழை அடுத்தக் கட்டத்திற்கு இணையத்தின் வழி ஆய்வு செய்ய இருந்த மாணவிகளை நான் வெகுவேகப் பாராட்டினேன்.
திட்டக்கட்டுரையை அனைவரும் சொந்தமாக தமிழ்99 விசைப்பலகைக் கொண்டு அவரவர் தட்டச்சு செய்து உருவாக்கியது என்பது இன்னும் என்னை திகைக்கவைத்தது. இதற்குப் பேராசிரியர் கமலிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மாணவிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்.
மதியம் தமிழ் இணையம் குறித்தும் அதில் எவ்வாறு தமிழ்ப்படித்தவர்கள் வேலைவாய்ப்பை பெறுவது என்பது குறித்தும் பேசினேன். மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.