/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, April 22, 2014

பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்

     தமிழ் மொழிப் பாடத்திட்ட கட்டமைப்பு- இங்கிலாந்து-UK
Tamil Language – Framework
frpthFUehjgps;is (rpthgps;is) இயக்குநர்கல்வியியல் துறை,கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம்லண்டன். pillaisiva@gnail.com
Goldsmiths College, Universoty of London. UK, (Visiting Tutor) Chief Examiner Edexcel examination board- Tamil Language, Principal Examiner Cambridge Asset -  Examination board-Tamil Language

        மொழிகலாச்சார வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதை  பிரிட்டிஷ் மொழியியல் அமைப்பு அடையாளம் கண்டு  இவற்றை வருங்காலத்தில் மக்களுக்கு அடையாளம் காணடுபிக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து கொண்டனர். குழந்தைகளின் இரு மொழிஅறிவை கலாசார  அறிவு சமூக வளர்ச்சி ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை கடந்த காலங்களில் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை. அதிர்ஷ்டவசமாக சமீப காலத்தில் UK மற்றும் பல நாடுகளில் மொழியியல் ஆய்வாளர்கள்  இவற்றின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்து  கல்வி கற்பிப்போருக்கும் பெற்றொருக்கும்  இருமொழி ஆற்றல் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.  இது பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகள் பல நாடுகளில் பலர் எழுதி இருக்கிறார்கள். இரு மொழிஅறிந்த குழந்தைகளின் பள்ளிக்கூடப் பெறுபேறுகள் ஒரு மொழிதெரிந்த குழந்தைகளை விட மேலாக இருப்பதையும் அவர்களின் புரிந்துணர்வை மனப்பான்மையையும் அவர்கள் சமூகத்திற்கு  நல உதவிகனைளச் செய்வதில் ஆற்றல் படைத்தவர்கள் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.

         குழந்தைகள் ஒரு மொழியை அறிந்து கொள்வதில் நம்பிக்கையும் அதை விருத்தி செய்வதில்  ஆற்றலும் கொண்டவர்கள்.  முக்கியமாகப் பேசுவதில்  சிறிய வயதில் அவர்கள் மிக ஆர்வம் கொண்டவர்கள். வேறு பட்ட ஒலிகளைக் கேட்பதில் சந்தோஷம் அடைவார்கள். பாடல்களைக் கேட்பதில் மிக ஆர்வம் காட்டுவார்கள். இதை நடைமுறையில் நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். வீட்டில் பேசும் மொழிவேறாக இருந்தாலும் அவர்கள் வயதடைந்து பாலர் பள்ளியில் சேர்ந்ததும் அங்குள்ள மொழியை சீக்கிரமாகக் கிரகத்துக் கொள்வதில் அவர்கள் ஆற்றல் உள்ளவர்கள் ஆகிறார்கள்.  இந்த இரு மொழிஅறிவாற்றலை  மேம் படுத்த அதற்குத் திடமான ஆதரவையும் ஊக்கத்தையும்  அளித்து உதவ வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கடமை ஆகும். ஆரம்பத்தில் குழந்தைகள் தாம் அறிந்த  ஒரு மொழியின் (வீட்டில் பேசப்படும் மொழி) அமைப்புக்களை  செயல்பாடுகளையும் அறிந்திருப்பார்கள்.  இரு மொழி அறிவை ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சி அடைவதற்கு உதவுவதாக உள்ளது.
Billingualsae not two monolinguals inside one person. They own a unique combination of two languages that are both separate and integrated within the thinking system. While the two languages are visible in oproduction (e.g).speaking), in the thinking quarters of the brain, one feeds the other, one language helps the other grow. 
Baker, 200:33
         பல மொழிபேசும் ஆற்றலை மேம் படுத்துவதால் பல நன்மைகள் உண்டு என்பதை நாம் எல்லோரும் நன்றாக அறிவொம். வேறு ஒரு நாட்டிற்கு விடுமுறைக்குப் போகும் போது அந்த நாட்டின் மொழிபேசும் அளவிற்குத் தெரிந்திருந்தால்  பல வற்றை சுலபமாக நாம் சாதிக்கலாம். அது  மட்டும் இன்றி இன்று  உலகத்தில் நாட்டிற்கு இடையெ போக்குவரத்திற்கான நேரகாலம் மிகக் குறுகிக் கொண்டு வருகிறது.வெளிநாடுகளில் கலப்புத் திருமணங்கள்  பல நடைபெறுகிறது.  மக்கள் நாட்டுக்கு நாடு  வேலை வாய்ப்புக் காரணமாக குடியேறுகிறார்கள்.  அந்த நாட்டு மொழியைத் தெரிந்திருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இவற்றை நடை முறையில் நாம் காணலாம். உலகசந்தையில்   பல மொழிதெரிந்தவர்கள்  பலர் தேவைப்படுகிறார்கள்.  அவர்களது பல மொழிஅறிவும்.  கலாசார வேறுபாடுகளின் நுண்ணிய அறிவும் அந்த அந்த நாடுகளில் அவர்களுக்கு அவர்கள் தரத்தை உயர்த்துகிறது.  திடமான ஆய்வுகளின் முடிவின் பிரகாரம் இரு மொழிஅறிவு  பல நன்மைகளைச் சமூகத்திற்கும் தனிபட்டவர்களுக்கும் கொண்டு வர முடியும் என கண்டறிந்திருக்கிறார்கள்.மொழிஅறிவு  ஒரு வெற்றிடத்தில் இருந்து வரப்போவது இல்லை. முதல் மொழி அல்லது வீட்டில் பேசப்படும் மொழி (தாய்மொழி) அறிவு வீட்டில் இருந்தே பெறப்படுகிறது.  ஏனைய மொழிஅறிவை வளர்ப்பதற்கு முக்கியமாக வீட்டில் பேசப்படும் மொழியை மேம் படுத்துவதற்குக் கல்விச் சட்டங்களை அந்த அந்த நாடுகளில் உருவாக்கி வருவதொடு பிற மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கான  வசதிகளையும் செய்து கொடுத்து ஊக்கத்தையும் அளித்து  வருகிறார்கள்.  வீட்டில் பேசப்படும் மொழியை வளர்ச்சி அடையச் செய்வதற்குக்  கல்வி கற்பிப்பவர்கள்  பெற்றோர்கள்  ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது ஒன்றாகிறது. தமிழ்மொழிஅறிவை எவ்வாறு நாம் குழந்தைகளுக்கு இலகுவாக இந்த நாட்டில் UK ஏனைய மொழிகள்  கற்பிக்கும் வழிவகைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்லாம்.
There is a need to regcognise the particular benefits which competence in community languages represents for children themselves, for communities and for wider British society, and to identify ways in which their potential as linguists can best realised.
CILT, The National Centre for Languages (2005) Language Trends 2005: Community Language learning in England, Wales and Scotland. http://www.cilt.org.uk/ (Accesses 20.10.05)

         இந்த வகையில் இந்நாட்டில் இருக்கும் சமூகமொழிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும் அவற்றை அடையாளம் காண வேண்டும் என்ற அடிப்படையில்  ஒரு பொதுவான கட்டமைப்பைக் கொண்ட புதிய சமூகமொழிப் பாடத்திட்டம்  அரபு, சைனீஸ், மன்டிரன், பஞ்சாபி, உருது, தமிழ் ஆகிய மொழிகளுக்கு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தின்  CILT என்ற தேசிய மொழிஅமைப்புஸ்தாபனத்தால்  இலை உதிர் காலத்தில் இச்சமூகமொழிப்பாடத்திட்டக் கட்டமைப்பை (தமிழ்) 2006-ம் ஆண்டு வெளியிட்டார்கள்.  இது அந்த மொழிதெரிந்த அனுபவம் கொண்ட ஆசிரியர்களால்  கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வுசெய்து உருவாக்கப்பட்டது. இது கோலட்சிமித் சர்வகலாசலையில் (Golfsmiths. University of London. UK)நபீல்ட் (Nuffield Foundation) பண உதவியுடன் இச்சமூகமொழிப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

         இப்பாடத்திட்டம் இலகுவாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியவர்களால் ஏற்கக் கூடிய வகையில்  அமைக்கப்பட்டு அவர்களுக்கு இது ஒரு உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, தமது மொழியைக் கற்கும் புலம் பெயர்ந்து இங்கு வாழும் குழந்தைகளுக்கு ஒரு அடையாளத்தை உணடு பண்ணி அதை அங்கீகரிக்கும் வழி வகையிலும் இது அமைந்திருக்கிறது.  குழந்தைகளின் பேறுபேறுகளை இது அங்கீகரிக்கிறது.மேலும் இப்படத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தின்  Key Stage 3 வரையறைக்கு அமைய அமைந்துள்ளது. முன்பள்ளி. உயர் பள்ளிகளில் உள்ள ஏனைய ஐரோப்பிய மொழிப் பாடத்திட்டங்களுக்குச் சமமாக இத்தமிழ் மொழிப்பாடத்திட்டம் அமைந்துள்ளது. அத்ததோடு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கேம்பிறிஜ்அசெற் மொழி(Cambridge ASSET Language Qualification)பரீட்ஷைக்கு அமைய இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது. இது படிப்படியாக மொழிஅறிவுமுன்னேற்ற வளர்ச்சியை அடையாளம் காட்டுகிறது.  பலதரப்பட்ட பாட அமைப்புகள் வளங்கள்  முக்கிய கலாச்சார வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு ஆக்கப்பட்டது. கட்டமைப்பின் எல்லாக் கட்டத்திலும் இலக்கண வேறுபாடுகள் கவனிக்கப்பட்டுள்ளன.  அத்தோடு  கணணியை (கம்பியூட்டர்) உபயோகித்து ICTதமிழ் மொழிகற்பிக்கும் வளங்களும் வழிவகைகளும்  எல்லாக் கட்டங்களிலும் காட்டப்பட்டுள்ளது.  இக்கட்டமைப்புகள் ஒரு வழிகாட்டியே தவிர ஒரு கட்டுப்பாடுகள் உள்ளது அல்ல. பாவனையாளர்.  தமது வகுப்புகளுக்கு ஏற்றவாறு இவற்றை மாற்றி அமைத்துக் கொடுக்கலாம். வாரஇறுதியில் இங்கு நடந்து கொண்டிருக்கும் தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களுக்கு இது ஒரு கைநூல் ஆகும்.மொழிகற்பிக்கும் வழிவகைகளில் அதை ஒரு  வெற்றிகரமான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என ஒவ்வொரு கட்டமைப்பிலும் காட்டப்பட்டுள்ளது.பொதுவாக எமது தமிழ் மொழிகற்பிப்பதில் நாம் எழுத்துத் தமிழுக்கு மாத்திரம் முக்கியத்தும் கொடுத்துக் கொண்டு வந்துள்ளோம்.இக்கட்டமைப்பில் பேச்சு. கேட்டல். வாசித்தல் எழுதுதல் என நான்கு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் தமக்கு விரும்பிய பகுதியில் விரிவாக்கம் செய்து கொள்ளும் வகையில் கட்டமைப்பு ஆக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்திற்கான வளங்கள் கோல்டசிமித் கல்லூரியின் http://community.gold.ac.ukஇணைய தளத்திலும் www.cilt.org.uk  என்ற தேசிய மொழி நிலைய இணைய தளத்திலும் இருந்து இறக்கிப் பார்வையிடலாம்.
இதை நடைமுறைப்படுத்துவதற்கு

•  மொழிகற்பிப்பது பற்றிய செயற்திட்டங்கள் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக் ஊக்கப்படுத்த வேண்டும்.
  வீட்டில் பேசப்படும் மொழிபற்றி முன்பள்ளி உயர்பள்ளி நுழைவுநேர்முக சந்திப்பில் பேசப்பட வேண்டும்.தேவையானால் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கலந்துரையாடவேண:டும்.
  மாணவர்கள் இடையேஎனக்கு ஒரு மொழிகற்றுக் கொடு  போட்டி வைத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
  ஆசிரியர்கள் ஏனைய சமூக மாணவர்களால் பேசப்படும் மொழிகளுக்கு ஊக்கம் ஆர்வம் அளிக்க வேண்டும்.
  மாணவர்கள் தாம் ஆக்கிய வளங்களை ஏனைய்யோர் பார்வையிடும் வகையில்  தெரியப்படுத்த ஒழுங்குகள் செய்து கொடுக்க வேண்டும்.
  தேசிய விளையாட்டு நாட்களில் ஏனைய மொழிபேசுபவர்களை பங்கு பற்ற செய்து ஊக்குவிக்க வேண்டும்.
  நூல்நிலையங்கள்  ஏனைய தமிழ் மொழிபுத்தகங்கள் சீடிக்கள், மக்கள் பெறுவதற்கு வாய்ப்பை அளிக்க வேண்டும்.

சமூகமொழியைக் (தாய் மொழி வீட்டில் பேசப்படும் மொழி) குழந்தைகள் கேட்டறிவதற்கும் அதை அவர்கள் பேசுவதற்கும் அதில் நம்பிக்கையை உண்டு பண்ணுவதற்கும் பெற்யோர்களே முக்கியமானவர்கள் ஆகிறார்கள்.
கடந்த காலங்களில் பல சமூக பள்ளிகள். மொழிகற்பிக்கும் கல்லூரிகள். வார இறுதிப்பள்ளிகள் ஆகியவற்றில் இது பற்றி எடுத்துரைத்திருக்றோம். இங்கிலாந்து முன்பள்ளிகளில். உயர்பள்ளிகளில் மாணவர்கள் தமிழ்மொழியை ஏனைய ஐரோப்பிய மொழிகள் போல் கற்பதற்கும் இப்பாடத்திட்டம் வழிவகுத்துள்ளது. தற்போது முன்பள்ளிகளில் தமிழ்கற்பிக்கப்பட்டு கேம்பிரிஜ், எட்எக்கஷல் Edexcel;பரீட்ஷைகளுக்கு மாணவர்கள் தேறுகிறார்கள்.


0 comments: